Tuesday, March 21, 2017

இரட்டை இலைக்காக மல்லுக்கட்டும் அ.தி.மு.க நிர்வாகிகள்

அரசியல் சாணக்கியரான கருணாநிதியால் வீழ்த்த முடியாத அண்ணா திராவிட முன்னேற்றக்  கழகத்தை சசிகலாவின் மன்னார்குடிக் குடும்பம் சிதறடித்துள்ளது. சசிகலாவின் பின்னால் இருக்கும் தமிழக சட்டமன்ற உறுப்பினர்களால் தமிழக அரசு இயந்திரம் இயங்குகிறது. ஜெயலலிதாவின் விசுவாசியான பன்னீர்ச்செல்வத்தின் தலைமையில் உள்ளவர்கள் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்துக்கு உரிமை கோருகிறார்கள்.ஜெயலலிதாவின்  மறைவினால் காலியான ஆர்.கே. நகர் இடைத்தேர்தல் அடுத்த மாதம் 12 ஆம் திகதி நடைபெற உள்ளது.


ஆர்.கே. நகர் என சுருக்கமாக அழைக்கப்படும் டாக்டர் ராதாகிருஷ்ணன்நகர் தொகுதி அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் கோட்டை. இத் தொகுதியில் நடைபெற்ற தமிழக சட்டசபைத் தேர்தல்களில் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் ஏழு முறை வெற்றி பெற்றது. திராவிட முன்னேற்றக் கழகம்,காங்கிரஸ் ஆகியன தலா இரண்டு முறை வெற்றி பெற்றன. ஆர்.கே.நகரில் ஜெயலலிதா போட்டியிட்டபோது முதல்வரின் தொகுதி என்ற அந்தஸ்தைப் பெற்றது.ஆகையினால் இரண்டு முறையும் அதி கூடிய வாக்கு வித்தியாசத்தினால் வெற்றி பெற்றார்.
அரசியல் தலைவரின் மறைவின் பின்னர் நடைபெறும் இடைத் தேர்தலில் அனுதாப அலை உருவாகும். ஆர். கே. நகரின் அப்படி ஒரு அலை இல்லை.ஜெயலலிதாவின்  மரணம் பற்றிய சந்தேகம் அங்கே வலிமை பெறப்போகிறது. ஜெயலலிதா இறந்ததும் அவசர அவசரமாகசெயற்பட்ட உடன் பிறவா சகோதரி சசிகலா ஜெயலலிதாவின் வீடு,ஜெயலலிதாவின் அறை,ஜெயலலிதாவின் கார் ,ஜெயலலிதா அமர்ந்தா  இருக்கை போன்றவற்றைக் கைப்பற்றினார்.  சசிகலா சிறைக்குப் போனதும் அவரது குடும்ப உறுப்பினரான தினகரன் அவற்றைக் கையகப்படுத்தினார்.


உண்மையான  அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தை அடையாளம் காணும் களமாக ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் அமையப்போகிறது. சசிகலாவின் அணியின் சார்பில் தினகரன் போட்டியிடுகிறார். பன்னீரின் அணிசார்பாக மதுசூதனன் களம் இறங்கி உள்ளார். ஜெயலலிதாவின் அடையான அட்டையுடன் அவருடைய அண்ணன் மகள் தீபா  ஆர்.கே.நகரில் வலம் வருகிறார். மேலோட்டமாகப் பார்த்தால் அண்ணா திராவிட முன்னேற்றக் கழக வாக்குகள்  மூன்று பிரிவுகளாக இருப்பது போலத் தோன்றுகிறது. அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் தீவிர விசுவாசிகள் நான்காவது பிரிவாக உள்ளனர். அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தைத் தவிர வேறு அரசியல் கட்சிகளுக்கு வாக்களிக்க விரும்பாத இவர்கள் தமது கட்சியின்   வேட்பாளரில் விருப்பம் இல்லை என்பதை வெளிக்காட்ட நோட்டோவுக்கு வாக்களிப்பார்கள்.

ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் போட்டியிடும் தினகரன்,மதுசூதனன்,தீபா ஆகிய மூவரும் அண்ணா திராவிட முன்னேற்றக் கழக வாக்குகளைப் பிரிக்கப்போகிறார்கள்.  மருது கணேஷ் எனும் கழகத்தின் அடிமட்டத் தொண்டரை திராவிட முன்னேற்றக் கழகம் தனது வேட்பாளராக அறிவித்துள்ளது. கடந்த தேர்தல்களின் போது இரண்டாவது இடத்தைப் பிடித்த திராவிட முன்னேற்றக் கழகம் வெற்றி பெறும் நம்பிக்கையில் இருக்கிறது. விஜயகாந்தின் கட்சி மதிவாணனையும் பாரதீய ஜனதாக் கட்சி கங்கை அமரனையும் வேட்பாளராக அறிவித்துள்ளன.

மதுசூதனன், தினகரன் ஆகிய இருவரும் இரட்டை இலைச்சின்னத்தை எதிர் பார்க்கிறார்கள்.அண்ணா திராவிட முன்னேற்றக்கழக விதிகளின் பிரமாணப்படி கழகப் பொதுச்செயலாளராக சசிகலா நியமிக்கப் படவில்லை என பன்னீர்ச்செல்வத்தின் அணி தேர்தல் ஆணையத்தில் புகார் செய்துள்ளது.  கழகப் பொதுச்செயலாளர்தான்  வேட்பு மனுவில் கையெழுத்திட வேண்டும்    என்பது அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் விதி.தமிழகம்,புதுவை,ஆந்திரா,கேரளா,அந்தமான் நிக்கோபார் தீவுகள் ஆகியமாநிலங்களில் உள்ள அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்   தொண்டர்கள் வாக்களித்து பொதுச்செயலாளரைத் தெரிவு செய்ய வேண்டும் என எம்.ஜி.ஆர் காலத்திலே தெட்டத்தெளிவாக எழுதப்பட்டுள்ளது.அண்ணா திராவிட முன்னேற்றக் கழகச் செயலாளராக சசிகலா தேர்வு செய்யப்படவில்லை. நியமனம் செய்யப்படுள்ளார் எனும் குற்றச்சாட்டை தேர்தல் இணையம் ஏற்றுக்கொண்டால் சசிகலாவின் கையில் இருந்து இரட்டை இலைச்சின்னம் பறிபோய்விடும்.
ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் இரட்டை இலைச்சின்னத்தில் போட்டியிடப்போவதாக மதுசூதனும் தினகரனும் அறிவித்துள்ளனர். இரட்டை இரட்டை இலைச்சின்னம் தீவை இல்லை எனக் கூறிவந்த தீபா இப்போது யார்ட்டை இலைச்சின்னத்துக்கு உரிமை கோர உள்ளதாக அறிவித்துள்ளார். தீபாவுக்கும் இரட்டை இலைச்சின்னத்துக்கும் எதுவித தொடர்பும் இல்லை என்பது வெளிப்படை. மதுசூதன்,தினகரன் ஆகியவர்களின் வெற்றி இரட்டை இலைச்சின்னத்தில்  தான் தங்கி உள்ளது. தேர்தல் வாரியத்தின்  முடிவுதான் அவர்களின் தலைவிதியைத் தீர்மானிக்கப்போகிறது.


ஸ்டாலின்,பன்னீர்ச்செல்வம், தினகரன் ஆகிய மூவரின் தலைமையிலான முதல் தேர்தல் இது  என்பதால் அவர்களின் எதிர்கால வெற்றிப் படிக்கட்டாக இத் தேர்தல் நோக்கப்படுகிறது. தினகரனைத் தோற்கடிப்பதில் பன்னீர் தரப்பு முனைப்பாக உள்ளது. தினகரன் வெற்றி பெற்றால் எடப்பாடியின் பதவிக்கு ஆபத்து.  ஆகையால் தினகரனைத் தோற்கடிப்பதற்கான உள்ளடி வேலைகள் கழகத்தின் உள்ளேயே நடைபெறும். அந்நிய செலாவணி மோசடியில் குற்றப்பணம் கட்டியதால் போட்டியிட முடியாது என்ற வதம் ஒருபக்கத்தில் உள்ளது. அக் குற்றத்தில் இருந்து தப்புவதற்காக தான் சிங்கப்பூர் பிரஜை என தினகரன் சொன்னது அவருக்கு எதிராக உள்ளது. அண்ணா திராவிட முன்னேற்றக் கழக உறுப்பினர் அல்லாத ஒருவர் அந்தக் கட்சி சார்பில் எப்படிப் போட்டியிட முடியும் என்ற கேள்விக்கு பதில் கிடைக்கவில்லை.

அண்ணா திராவிட முன்னேற்றக் கழக வாக்கு சிதறிக்கிடக்கிறது. ஆர்.கே. நகருக்கு அறிமுகம் இல்லாதவர் தினகரன். போயஸ்கார்டனில் இருந்து விரட்டப்பட்ட தினகரனை கடைசிவரை ஜெயலலிதா மன்னிக்கவில்லை.தினகரன் இடைத் தேர்தலில் போட்டியிடுவதை அவரது அணியில் உள்ளவர்கள் மனப்புர்வமாக ஒப்புக்கொள்ளவில்லை. கடையாக நடைபெற்ற தேர்தல்களில் ஆர்.கே. நகர் மக்கள் ஜெயலலிதாவுக்கு வாக்களித்தனர். ஜெயலலிதாவுக்கு வாக்களித்தவர்கள் தினகரனுக்கு வாக்களிப்பார்கள் என்பதை உறுதியயாகச் சொல்ல முடியாது. இத்தனை எதிர்ப்புகளுக்கு மத்தியிலும் ஐம்பதாயிரம் வாக்கு வித்தியாசத்தில் நான் வெற்றி பெறுவேன் என தினகரன் பேட்டியளித்துள்ளார். அவருடைய பேட்டியின் பின்னணியில் பணப் பட்டுவாடா இருக்குகோமோ என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
திராவிட முன்னேற்றக் கழக வேட்பாளர் மருது கணேஷ் [வயது 42] மாதிரியைப் பிறப்பிடமாகக்கொண்ட இவர் தற்போது ஆர்.கே. நகரில் வசிக்கிறார்.   இவரது குடும்பம் திராவிட முன்னேற்றக் கழகத்தை சேர்ந்தது. 15 வயது முதல் அரசியலில் ஈடுபடுகிறார். பி,காம்,பி.எல் .எம்.ஏ படிதட இவர் பத்திரிகையாளராக்கப் பணிபுரிகிறார். திராவிட முன்னேற்றக் கழகத்தின் வாக்கும்  இத் தொகுதியில் இரண்டு முறை வெற்றி பெற்ற சேகர் பாபுவின் ஆதரவும் மருது கணேஷுக்கு இருக்கிறது. புதியவரை கட்சியின் அடிமட்டத் தொண்டனை  வேட்பாளராக களம் இறக்க வேண்டும் என்ற ஸ்டாலினின் விருப்பத்தால் மருது கணேஷின் பக்கம் அதிர்ஷ்டக் கற்று விசிகாற்று வீசியது..


பன்னீர்ச்செல்வத்தின் அணி சார்பில் மதுசூதனன் போட்டியிடுகிறார். 77 வயதான இவர் ஆந்திர மாநிலம் நெல்லூர் மாவட்ட காவளியைச் சேர்ந்தவர். பழைய வண்ணாரப்பேட்டையில் தற்போது வசிகிறார். எஸ்.எஸ்.எல்.சி படித்த இவருக்கு  56 வருட அரசியல் அனுபவம் உள்ளது.முன்னாள் அமைச்சரான இவர்  ஆர்.கே. நகரில் முன்பு போட்டியிட்டு வெற்றி பெற்றது. எம்.ஜி.ஆரின் விசுவாசி என்பன  இவரின் பலமாக உள்ளது. ஜெயலலிதாவின் மரணத்துக்கான நீதி கேட்கும் போராட்டம் ஜெயலலிதாவின் விசுவாசிகளையும் கவரும் என்பதில் சந்தேகம் இல்லை.மன்னர் குடியைச் சேர்ந்த தினகரன் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் முன்னாள் சட்ட மன்ற உறுப்பினர் என்ற தகுதியுடன் தேர்தலில் போட்டியிடுகிறார்.

ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்துக்கு அக்கினிப் பரீட்சியாக  இருக்கப்போகிறது.
வர்மா.

No comments: