தமிழக
சட்ட மன்ற எதிர்க்
கட்சித் தலைவர் பதவியை
ஓ. பன்னீர்ச்செல்வம் விரும்பிய போதிலும்
எடப்பாடியின் சதுரங்க வேட்டைக்கு ஈடு கொடுக்க முடியாமல்
கைவிட்டுப் போனது.
2021 சட்டமன்றத் தேர்தலில்,
தனிப்பெரும்பான்மை பலத்துடன் வெற்றிபெற்ற திராவிட முன்னேற்றக் கழகம் ஆட்சியைக்
கைப்பற்றியது. 65 தொகுதிகளில் வெற்றிபெற்று இரண்டாம் இடம்பிடித்த அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்துக்கு எதிர்க்கட்சி
அந்தஸ்து கிடைத்தது. சட்டசபை
'எதிர்க்கட்சித் தலைவர் யார்' என்பதை
முடிவுசெய்வதற்காகக் கடந்த 7ம் திகதி தலைமை
அலுவலகத்தில் அந்தக் கட்சியின் எம்.எல்.ஏ-க்கள்
கூடினார்கள். ஆனால், கட்சியின் ஒருங்கிணைப்பாளரான
ஓ.பன்னீர்செல்வம், இணை
ஒருங்கிணைப்பாளரான எடப்பாடிபழனிசாமி இருவருமே 'எதிர்க்கட்சித் தலைவர்' பொறுப்புக்காக மல்யுத்தம்
நடத்தியதையடுத்து, கூட்டத்தில் கூச்சல் குழப்பமே நீடித்தது.
இதையடுத்து எந்தவொரு முடிவும் எட்டப்படாமலேயே கூட்டம் 10ம் திகதிக்கு தள்ளிவைக்கப்பட்டது.
மே 11 அன்று புதிய சட்டமன்றம் கூட்டப்படவிருப்பதை முன்னிட்டு, மிகுந்த பரபரப்பும் எதிர்பார்ப்புக்கும் இடையே மே 10, காலை 9:30 மணிக்கு ராயப்பேட்டையில் உள்ள தலைமை அலுவலகத்தில் இ.பி.எஸ் - ஓ.பி.எஸ் தலைமையில் அ.தி.முக எம்.எல்.ஏ-க்கள் கூட்டம் மறுபடியும் கூட்டப்பட்டது. கிட்டத்தட்ட மூன்று மணி நேரத்துக்குப் பிறகு, 'எதிர்க்கட்சித் தலைவராக எடப்பாடி பழனிசாமி தேர்ந்தெடுக்கப்பட்டார்' என்ற அறிவிப்பு அதிகாரபூர்வமாக வெளியிடப்பட்டுள்ளது.
பலத்த போட்டிக்கிடையில் வாய்ப்பைப் பறிகொடுத்துவிட்ட விரக்தியில் இருந்துவரும் ஓ.பி.எஸ் தரப்பு ஆதரவாளர்கள், ``அம்மாவால் முதல்வராக அடையாளம் காணப்பட்டவர் அண்ணன் ஓ.பி.எஸ். அவர்மீது அம்மா வைத்திருந்த நம்பிக்கையினாலேயே இரு முறை முதல்வராகும் பொறுப்பை வழங்கினார். ஓ.பி.எஸ்-ஸும் அந்த நம்பிக்கையைக் கடைசிவரைக் காப்பாற்றினார். அதன் அடிப்படையில்தான் அம்மா மறைவுக்குப் பிறகும் அவரையே முதல்வராக கட்சி தேர்ந்தெடுத்தது. அதுமட்டுமல்ல... அம்மா உயிரோடு இருந்த காலகட்டத்திலேயே நிதியமைச்சராக திறம்பட பணியாற்றி, பலமுறை பட்ஜெட் தாக்கல் செய்தவர், அவை முன்னவர் என அவருக்கான தகுதிகள் ஆயிரம்.
கடந்த வருடம், கட்சியில் யார் முதல்வர் வேட்பாளர் என்ற கேள்வி எழுந்தபோது, தனிப்பட்ட தன் நலனை முன்னிறுத்தி முடிவெடுக்காமல், கட்சியின் நலனை கருத்தில்கொண்டு முடிவெடுத்தவர் அண்ணன் ஓ.பி.எஸ். அதாவது, கட்சியின் ஒருங்கிணைப்பாளர் என்ற உயரிய பதவியில் இருந்துவந்தாலும்கூட, 'எடப்பாடி பழனிசாமியே கட்சியின் முதல்வர் வேட்பாளர்' என்று பெருந்தன்மையோடு அறிவித்தார். ஆனால், எடப்பாடி பழனிசாமியோ, 'எதிர்க்கட்சி வேட்பாளர்' என்ற அந்தஸ்தைக்கூட அண்ணனுக்காக விட்டுத்தர மறுத்துவிட்டார் என குமுறுகின்றனர்.
அண்ணா
திராவிட முன்னேற்றக் கழக
கடிதத் தலைப்பில் பன்னீர்ச்செல்வம்
அறிக்கை வெளியிடுகிறார். எதிர்க் கட்சித் தலைவர் பழனிச்சாமி தனியாளாக
அறிக்கை வெளியிடுகிறார்.
இரட்டைத்தலைமை வேறு வேறு பக்கமாக செயற்படுகிறது.
இருவருக்குமான தொடர்புகள் அறுந்துள்ளன. கட்சித்
தலைமையைக் கைப்பற்றுவதிலேயே இருவரும் அக்கறை காட்டுகிறார்கள்.
இந்தச் சந்தடியில் சசிகலா மூக்கை நுழைத்துள்ளார். கட்சி ஆதர்வாளர் ஒருவருடன் சசிகலா பேசிய ஒலிப்பதிவு பொது வெளியில் பகிரங்கப்படுத்தப்பட்டுள்ளது.
கொரோனா முடிந்ததும் அரசியலுக்கு வருவேன் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தை சீரமைப்பேன்
எனப் பொருள்பட சசிகலா பேசியுள்ளார்.
சசிகலாவின் அனுமதில் இல்லாமல்
ஒலிப்பதிவு வெளியாகி
இருக்க முடியாது.
பழனிச்சாமி ஏற்பாடு செய்த மாவட்ட செயலாளர் கூட்டத்தில் ஒன்பது பேர் மட்டும் கலந்துகொன்டனர். இதனால் பழனிச்சாமை அதிர்ச்சியடைந்துள்ளார். கட்சித் தலைமையைக் கைப்பற்றும் போட்டியில் சசிகலா இன்னமும் உயிர்ப்புடன் இருக்கிறார்.
No comments:
Post a Comment