Sunday, September 15, 2024

தமிழகத்தைப் புரட்டிப்போட விஜய் வகுக்கும் அரசியல் வியூகம்

தமிழ் சினிமாவில் அதி உச்சத்தில் இருக்கும் நடிகர் விஜய் அரசியலில் களம்  இறங்குவது  முடிவாகிவிட்டது. தனது ரசிகர்கள் கட்சித் தொண்டர்களாக  மாறுவார்கள் என்ற நம்பிக்கையில் அரசியல் கட்சியை தேர்தல் திணைக்கள‌த்தில் பதிவு செய்துள்ளார்.

விஜய் ஆரம்பித்துள்ள புதிய கட்சியான தமிழக வெற்றி கழகத்தின் உட்கட்டமைப்பு பணிகள், நிர்வாகிகள் நியமனம், கொடி அறிமுகம், உள்ளிட்ட பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வந்தது. இதனைத் தொடர்ந்து தமிழக வெற்றி கழகத்தின் முதல் மாநாடு விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் வரும் 23ஆம் திகதி நடத்த அக்கட்சி திட்டமிட்டது.  இதற்காக கடந்த மாதம் மாநாடு நடத்த  தமிழக அரசிடம் முறையாக அனுமதி கேட்கப்பட்டிருந்தது.

பதுகாப்பு சம்பந்தமான  வழமையான  கேள்விக்கொத்து விஜயின் கட்சி நிவாகிகளிடம் கொடுக்கப்பட்டது. இந்த நிலையில் விஜயின் கட்சி மாநாட்டுக்கு திராவிட முன்னேற்றக் கழகம் அனுமதி கொடுக்க மறுப்பதாக தமிழக பாரதீய ஜனதாக் கட்சிப் பிரமுகர்கள்  குற்றம் சாட்டினர். இந்த இழுபறியில்   கட்சியின் மாநாடு  அடுத்த மாதம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

விஜயின் கட்சிக் கொள்கை  என்ன‌?,  இலட்சியம் என்ன?, கோட்பாடு என்ன? என எவருக்கும் தெரியாது. கட்சியின்  பிரமாண்டமான மாநாட்டில் விஜய் அறிவிப்பார் எனச் சொல்லப்பட்டுள்ளது. அவற்றைப் பற்றித் தெளிவாகத் தெரிந்த  பின்னரே  விஜய் எப்படிப் பயணிக்கப் போகிறார் என  அரசியல் அரங்குகுத் தெரிய வரும்.

விஜய் தொடங்கிய அரசியல் கட்சியால்  பெரிய கட்சிகள் கலக்கத்தில் உள்ளதாக சிலர் விமர்சனம் செய்கிறார்கள்.அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்துடன் விஜய் சேரப்போவதாகவும் வதந்தி பரவியது.சசிகலாவின் காலில் விழுந்து முதலமைச்சர் பதவியைப் பெற்ற எடப்பாடி அவரைத் தூக்கி எறிந்தார்.  முதலமைச்சர் கனவில் எடப்பாடி வாழ்கிறார். தமிழகத்தின் அடுத்த முதலமைச்சர் விஜய் என அவரது ரசிகர்கள் சபதம் செய்துள்ளனர். ஆகையால் அந்தக் கூட்டணி ஆரம்பத்திலேயே  புசுபிசுத்துவிட்டது.

விஜயுடன் கூட்டணி சேர சீமான் ஆர்வமாக  உள்ளார். தம்பியுடன் கைகோர்க்கப் போவதாக வெளிப்படையாக சீமான் அறிவித்தார்.  விஜயகாந்தின் மனைவி பிரேமலதாவுக்கும் விஜயின் கட்சியுடன்  சேர  ஆசை உள்ளது. பாரதீய ஜனதா மிகுந்த எதிர் பார்ப்புடன்  உள்ளது.தற்போதைக்கு யாருடனும் சேர விஜய் தயாராக  இல்லை. ஆனால்,  கூட்டணி இல்லாமல் அரசியலில் பிரகாசிக்க முடியாது என்பதையும் விஜய் அறிவார்.

திராவிட முன்னேற்றச்க் கழகம், அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்,காங்கிரஸ், பாரதீய ஜனதா  போன்ற கட்சிகளுக்கு வாக்களிக்க விரும்பாதவர்கள் சீமானை ஆதரிக்கிறார்கள். அந்த வாக்காளர்கள் விஜயை நோக்கித் திரும்பும் சாத்தியம்  உள்ளது.  விஜயைச் சுற்றி ரசிகர் பட்டாளம்  உள்ளது.  அந்தப் பட்டாளம் வாக்காளர்களாக மாறுவார்கள் என்பதை  உறுதிப்படுத்த முடியாது. எம்.ஜி.ஆரின் ரசிகர்களும், என்.டி ராமராவின் ரசிகர்களும் தாம் விரும்பிய நடிகர்களை  முதலமைச்சர் க‌திரையில் இருத்தி அழகு  பார்த்தார்கள். விஜயின் ரசிகர்களுக்கு அப்படி ஒரு சந்தர்ப்பம்  கிடைப்பது அபூர்வம்.

விஜய்க்கு அடுத்தபடியாக கட்சியின் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் மட்டுமே தெரிந்த முகமாக  இருக்கிறார். அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் முன்னாள் அமைச்சர்கள் நால்வர் விஜயின் கட்சி  மாநாட்டு மேடையில் ஏறுவார்கள் என செய்திகள் கசிந்துள்ளன. வட தமிழ்நாட்டு அரசியலில் மிக முக்கியமானவராக ஒரு காலத்தில் திகழ்ந்த செஞ்சி ராமச்சந்திரனை தனது கட்சிக்கு வருமாறு விஜய் அழைப்பு விடுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அனேகமாக அவர் அவைத் தலைவராக நியமிக்கப்படக் கூடும் என்றும் சொல்லப்படுகிறது. 

 இப்போது வரை இது விஜய் கட்சி என்று பலராலும் சொல்லப்படுகிறது. அதேபோல கட்சி முழுவதும் விஜய் ரசிகர்கள்தான் நிறைந்துள்ளனர். ரசிகர்களை மட்டுமே வைத்துக் கொண்டு பெரிதாக சாதிக்க முடியாது. தொண்டர்கள் தேவை.அதை விஜய்யும் உணர்ந்துள்ளார். அந்தக் கட்டமைப்பை உருவாக்க அனுபவம் வாய்ந்த அரசியல் தலைவர்களால்தான் முடியும். அதாவது சிறந்த வழி நடத்தல் தேவைப்படும்.

புஸ்ஸி ஆனந்த் மட்டுமே தற்போது விஜய் கட்சியில் அனுபவம் வாய்ந்த ஒரு அரசியல் தலைவராக இருக்கிறார். அவரைத் தவிர்த்துப் பார்த்தால்  பெரிய தலைவர்கள் யாரும் இல்லை. இதனால் கட்சியின் கட்டமைப்பை வலுப்படுத்த விஜய் திட்டமிட்டுள்ளார். அதில் முதல் நடவடிக்கையாக கட்சியில் மூத்த தலைவர் ஒருவரை சேர்த்து கட்சிக்கு தனி இமேஜை உருவாக்க அவர் திட்டமிட்டுள்ளார். அவரது திட்டத்தின் முதல் படிதான் செஞ்சி ராமச்சந்திரன் என்று சொல்கிறார்கள்.

விழுப்புரம் மாவட்டம் ஆவியூர் கிராமத்தைச் சேர்ந்தவர் செஞ்சி ராமச்சந்திரன். பழுத்த அரசியல்வாதி. திமுகவில் நீண்ட காலம் இருந்தவர். பின்னர் வைகோ மதிமுகவைத் தொடங்கியபோது அதில் இணைந்து செயல்பட்டார்.

அதன் பின்னர் 2014ம் ஆண்டு அதிமுகவில் இணைந்தார். ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு இவரும் அமைதியாகி விட்டார். இப்போது கிட்டத்தட்ட அரசியலில் மறக்கப்பட்ட ஒரு தலைவராக இருந்து வருகிறார். லோக்சபா எம்பியாக இருந்தபோது மறைந்த வாஜ்பாய் அமைச்சரவையில் இணை அமைச்சராக பதவி வகித்தவர் செஞ்சி ராமச்சந்திரன்.

செஞ்சி ராமச்சந்திரன் நீண்ட கால அரசியல் அனுபவம் கொண்ட, அரசியல் நீக்கு போக்குகள் தெரிந்த, திறமையான, தொண்டர்களை கட்டியணைத்துக் கொண்டு செல்லக் கூடிய ஒரு தலைவர். குறிப்பாக வன்னியர் சமுதாயத்தைச் சேர்ந்தவர். இவை அனைத்தும் தமிழக வெற்றிக் கழகத்திற்கு வந்து சேர்ந்தால் அது கட்சிக்கு மிகப் பெரிய பூஸ்ட்டாக அமையும் என்பது விஜய்யின் கணக்கு.

வடக்கில்தான் மிகப்பெரிய வாக்கு வங்கியாக வன்னியர் சமுதாய மக்கள் உள்ளனர். இவர்கள் ஏற்கனவே பாமக, தேமுதிக என பிரிந்து நிற்கிறார்கள். இதில் தேமுதிக வசம் உள்ள வாக்குகளை தன் பக்கம் இழுக்கும் முகமாகவே தனது கோட் படத்தில் விஜயகாந்த்தை கொண்டு வந்தார் விஜய் என்றும் ஒரு பேச்சு உள்ளது. விஜயகாந்த் அபிமானிகள் தன் பக்கம் ஈஸியாக வந்து விடுவார்கள் என்ற நம்பிக்கையும் விஜய்க்கு உள்ளது. தேமுதிகவும் கூட விஜய்க்கு சாதகமாகவே உள்ளது. ஆரம்பத்தில் தேமுதிகவை கூட்டணியில் சேர்க்கவும் கூட விஜய் தயங்க மாட்டார் என்றும் கணக்கிடப்படுகிறது. 

விஜயகாந்த் கூட ஆரம்பத்தில் பாமகவின் வாக்கு வங்கியைத்தான் பதம் பார்த்தார். யாரும் இதை எதிர்பார்க்கவில்லை. பாமக வாக்கு வங்கியிலிருந்து பலரும் பிரிந்து தேமுதிக பக்கம் வந்தனர். இப்போது வரை அவர்கள் தேமுதிகவுக்கு விசுவாசமாக உள்ளனர். அதே பாணியில் தானும் வளர விஜய் தீர்மானித்துள்ளதாக தெரிகிறது. அதன் பொருட்டே செஞ்சி ராமச்சந்திரனை அவர் முடிவு செய்திருப்பதாக சொல்கிறார்கள். இதிலும் கூட விஜயகாந்த் பாணியைத்தான் கையில் எடுத்துள்ளார் விஜய்

செஞ்சி ராமச்சந்திரனைத்  தொடர்ந்து மேலும் பல அனுபவம் வாய்ந்த அரசியல்வாதிகள் கட்சியில் இணைவார்கள் என்று தெரிகிறது. ஏற்கனவே திமுக மற்றும் அதிமுகவில் அதிருப்தியில் உள்ள பல மூத்த தலைவர்கள், முன்னாள் அமைச்சர்கள் தவெகவில் இணைய விஜய்க்கு கோரிக்கை வைத்துள்ளதாக தகவல்கள் உள்ளன. இவை எல்லாமே  மாநாட்டின்போது தெரிய வரும் என்றும் சொல்லப்படுகிறது. தன்னுடன் பயணிக்கப் போகும் தலைவர்களுடன் மாநாட்டு  மேடையில் விஜய் தோன்றுவார் என்றும் சொல்லப்படுகிறது.

 தமிழக வெற்றிக் கழகம் பதிவு செய்யப்பட்ட ஒரு கட்சி.   இதுதான் தற்போதைய நிலை. வரும் தேர்தல்களில் தவெக போட்டியிட்டு தேர்தல் ஆணையம் நிர்ணயித்துள்ள வாக்கு சதவீதத்தைப் பெறும்போதுதான் அக்கட்சிக்கு அங்கீகரிக்கப்பட்ட மாநிலக் கட்சி அந்தஸ்து கிடைக்கும்.

தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்து விட்டுத்தான் தேர்தலில் போட்டியிட வேண்டும் என்பது அவசியம் இல்லை. யார் வேண்டுமானாலும் தேர்தலில் போட்டியிடலாம். ஆனால் அரசியல் கட்சியாக தங்களை அறிவித்துக் கொண்டோர் மற்றும் மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தின் 4-ஏ பிரிவின் கீழ் உள்ள சலுகைகளை பெற விரும்புவோர் தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்துதான் போட்டியிட வேண்டும்.

ஒரு கட்சியை தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்யும்போது அவர்களுக்கு பல்வேறு வகையான சலுகைகள் கிடைக்கும். முக்கியமாக சின்னம். இப்படி பதிவு செய்து போட்டியிடும் கட்சிகளுக்கு, தேர்தல் சின்னம் ஒதுக்கீட்டின்போது சுயேச்சைகளை விட முன்னுரிமை கிடைக்கும்.  மேலும் அங்கீகரிக்கப்பட்ட மாநிலக் கட்சியாக அல்லது தேசிய கட்சியாக மாறும்போது அவர்களுக்கு அரசு வானொலி மற்றும் தொலைக்காட்சியில் பிரச்சாரம் செய்யவும் வாய்ப்பு கிடைக்கும்.

மக்கள் நீதி மய்யம், புதிய தமிழகம்,  தமிழக மக்கள் முன்னேற்றக் கழகம்,தேசிய முற்போக்குத் திராவிட கழகம்,மதிமுக,இந்திய ஜனநாயகக் கட்சி,இந்திய தேசிய லீக்,அமமுக,கொங்கு நாடு முன்னேற்றக் கழகம்  உட்பட 33 கட்சிகள் பதியப்படாமல்  உள்ளன.

ரமணி   

   15/9/24

ஒரே அணியில் பும்ரா, பாபர், ரோஹித், கோலி, அப்ரிடி

பும்ரா, பாபர், ரோஹித், கோலி, அப்ரிடி ஒரே அணியில்

18 வருடங்களின்  பின்னர் நடக்கபோகும் சம்பவம்

 

கிறிக்கெற்றில் முத்தரப்பு தொடர்களை பார்ப்பதே அரிதாகி விட்டது. முன்பெல்லாம் இந்தியாபாகிஸ்தான்அவுஸ்திரேலியா போன்ற 3 அணிகள் பங்கேற்கும் முத்தரப்பு தொடர் அடிக்கடி நடக்கும். மேலும் உலகஆசிய லெவன், ஆப்பிரிக்காஆசிய லெவன் போன்ற கனவு சர்வதேச போட்டிகளும் இப்போதெல்லாம் நடைபெறுவது அரிதினும் அரிதாகி விட்டது.

 கடைசியாக ஆசிய மற்றும் ஆப்பிரிக்கா கண்டத்தைச் சேர்ந்த சிறந்த லெவன் அணிகள் மோதிய தொடர் 2005 மற்றும் 2007 ஆகிய வருடங்களில் ஆப்ஃரோஆசிய கோப்பை என்ற பெயரில் நடைபெற்றது. அந்த தொடரில் ஆசிய அணியில் இந்தியா, பாகிஸ்தான், இலங்கை நாடுகளைச் சேர்ந்த சேவாக், சங்கக்காரா, டோனி, அஃப்ரிடி, இன்சமாம் போன்ற சிறந்த வீரர்கள் இடம் பிடித்திருந்தனர்.

அதே போல ஆப்ஃரோ அணியில் தென் ஆப்பிரிக்கா, ஸிம்பாப்பே, கென்யா நாடுகளைச் சேர்ந்த சிறந்த வீரர்கள் விளையாடினர். மிகவும் வெற்றிகரமாக நடைபெற்ற அந்தத் தொடர் 2008 மும்பை தாக்குதலால் அப்படியே நிறுத்தப்பட்டது. ஏனெனில் அந்த தாக்குதலால் இந்தியாபாகிஸ்தான் நாடுகளுக்கிடையே எல்லை பிரச்சினை ஏற்பட்டது. அதனால் இந்தியாபாகிஸ்தான் வீரர்கள் சேர்ந்து விளையாடுவதில் சிக்கல் ஏற்பட்டது. இந்நிலையில் ஆப்ஃரோஆசிய கோப்பையை 2025ஆம் ஆண்டு மீண்டும் நடத்துவதற்கு முயற்சிகளை எடுத்து வருவதாக ஆப்பிரிக்கன் கிரிக்கெட் அசோசியேசன் தலைவர் சாமோட் தாமோதர் தெரிவித்துள்ளார். குறிப்பாக ஐசிசி புதிய தலைவராக இந்தியாவின் ஜெய் ஷா வரும் டிசம்பர் மாதம் பொறுப்பேற்க உள்ளார். எனவே புதிய தலைவராக பொறுப்பேற்றதும் அவரிடம் இது பற்றி பேச உள்ளதாக தாமோதர் கூறியுள்ளார்.

இது பற்றி ஃபோர்ப்ஸ் இணையத்தில் அவர் பேசியுள்ளது பின்வருமாறு. “தனிப்பட்ட முறையில் அது நடக்காதது எனக்கு வேதனையளிக்கிறது. ஏசிஏ போதுமான வேகம் இல்லை. ஆனால் அதை மீண்டும் கொண்டுவர பார்க்கிறோம். அதை நடத்ததற்காக எங்களது உறுப்பினர்கள் வருந்துகிறார்கள். அது ஆப்பிரிக்காவால் தள்ளப்பட வேண்டும்என்று கூறினார்.

ஒருவேளை அந்தத் தொடர் 18 வருடத்திற்கு பின் மீண்டும் நடத்தப்பட்டால் விராட் கோலி, ரோஹித் சர்மா, பாபர் அசாம், ஜஸ்ப்ரித் பும்ரா, ஷாஹீன் அப்ரிடி போன்ற இந்தியாபாகிஸ்தானை சேர்ந்த நட்சத்திர வீரர்கள் ஒன்றாக சேர்ந்து விளையாடுவார்கள். கடைசியாக நடைபெற்ற 2007 ஆப்ஃரோஆசிய கோப்பையின் ஒரு போட்டியில் எம்எஸ் டோனி 1 பவுண்டரி 5 சிக்சருடன் 139 ரன்கள் குவித்தது குறிப்பிடத்தக்கது.

ரமணி

15/9/24

Saturday, September 7, 2024

வயிற்றில் சிசு கையில் பதக்கம் கிரின்ஹாம் சாதனை

 பரிஸ் பாராலிம்பிக்கில்  இங்கிலாந்தைச் சேர்ந்த ஜோடி கிரின்ஹாம் எனும் வில்வித்தை வீராங்கனை 7 மாத கருவை சுமந்தவாறு, வெண்கலப்  பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளார்ஜோடி கிரின்ஹாம்:

ஆகஸ்ட் 31 அன்று மகளிர் பிரிவில் நடைபெற்ற வெண்கலப் பதக்கப் போட்டியில், கிரேட் பிரிட்டனின் ஃபோப் பேட்டர்சன் பென்னுக்கு எதிராக ஜோடி கிரீன்ஹாம் விளையாடினார். அதில் 142-141 என்ற கணக்கில் வெற்றி பெற்றார். டோக்கியோ பாராலிம்பிக்ஸில் தோல்வியுற்ற ஃபோப் பேட்டர்சன் பைன், இந்த முறை தங்கப் பதக்கம் வென்றார் என்பது நினைவுகூறத்தக்கது.

ஜோடி கிரீன்ஹாம் கர்ப்பமாக இருந்தபோது பராலிம்பிக்கில் பதக்கம் வென்ற முதல் பாரா-தடகள வீராங்கனை ஆனார். அவர் சுமார் 28 வாரங்கள் அதாவது 7 மாத கர்ப்பிணியாக இருந்தார். இருப்பினும் பராலிம்பிக் போட்டியில் கலந்து கொண்டு பதக்கம் வென்று வரலாற்றின் பக்கங்களில் தனது பெயரைப் பதிந்துள்ளார்.

ஜோடி கிரின்ஹாமின் இடது கையில் ஊனம் இருப்பது குறிப்பிடத்தக்கது. அவள் வலது கையால் அம்பை எய்கிறார். அதுமட்டுமின்றி கலப்பு அணி கூட்டு வில்வித்தையின் காலிறுதிப் போட்டிக்கும் அவர் முன்னேறியுள்ளார்.

                               பதக்கத்தைக் கைவிட்டவர் காதலியைக் கரம் பிடித்தார்


  இத்தாலிய ஓட்டப்பந்தய வீரர் அலெஸாண்ட்ரோ ஒசோலா பராலிம்பிக் பதக்கத்தை தவறவிட்டிருக்கலாம், ஆனால் ஸ்டேட் டியில் ஆயிரக்கணக்கான ரசிகர்கள் முன்னிலையில் அவரது காதலி  திருமணத்தை ஏற்றுக்கொண்ட பிறகு  மகிழ்ச்சியடைந்தார்.

ஒசோலா T63 100 மீற்றர் இறுதிப் போட்டிக்கு தகுதி பெறத் தவறிய போதிலும், அவர் தனது காதலியான அரியன்னாவிடம் ஓடிச்சென்று தன்னைத் திருமணம் செய்து கொள்ளுமாறு கேட்டுக் கொண்டார். .

2015 ஆம் ஆண்டில் மோட்டார் சைக்கிள் விபத்துக்குப் பிறகு ஒசோலா தனது இடது காலின் பெரும்பகுதியை இழந்தார், இது அவரது முதல் மனைவியை இறந்ததால் வாழ்க்கையில்  "இருள்" சூழ்ந்தது.

 போட்டி முடிந்த்தும் காதலியிடன் சென்று மோதிரத்தைக் கொடுத்து என்னைத் திருமணம் செய்கிறாயா எனக் கெட்டார். முதலில் அதிர்ச்சியடைந்து அவரைப் பைத்தியம் எனக் கூறிய காதலி பின்னர் மோட்திரத்தை வாங்கினார்.

                                200வது பரா தடகள தங்கத்தை வென்றது சீனா


 ஸ்டேட் டி பிரான்ஸில்  செவ்வாய்க்கிழமை நடந்த பெண்களுக்கான ஷாட் புட் F43 இறுதிப் போட்டியில் Zou Lijuan வென்று, தனது இரண்டாவது தங்கப் பதக்கத்தை வென்றார்., 1984 ஆம் ஆண்டு பராலிம்பிக்ஸில் முதல் வெற்றிக்குப் பிறகு, சீனாவின் 200-வது பாரா தடகள தங்கத்தை ப் பெற்றது.

"எனக்காக ஒரு தங்கப் பதக்கம் வென்றதை விட இது எனக்கு மகிழ்ச்சி அளிக்கிறது," என்று Zou கூறினார். "இந்த குறிப்பிடத்தக்க சாதனை, மாற்றுத்திறனாளிகள் மீதான அரசாங்கத்தின் அக்கறை மற்றும் விளையாட்டு வீரர்களின் விடாமுயற்சிக்கு காரணமாகும்." என்றார்.

சீன நீச்சல் அணி லா டிஃபென்ஸ் அரங்கில் 6 பந்தயங்களில் நான்கு தங்கம், நான்கு வெள்ளி மற்றும் மூன்று வெண்கலங்களை வென்று பிரகாசித்தது. அவர்கள் ஆண்களுக்கான 50மீ பேக்ஸ்ட்ரோக் S5 இறுதிப் போட்டியில் பதக்கங்களை   வென்றது.