Tuesday, September 17, 2024

இந்திய கிறிக்கெற் வீரர்களுக்கு கம்பீர் வைத்த செல்லப்பெயர்

இந்திய அணி வீரர் விராட் கோலிக்கு ராஜக்களின் ராஜா என்ற புனைப்பெயரை வைத்துள்ளார் இந்திய அணியின் பயிற்சியாளர் கவுதம் கம்பீர்.

 இலங்கையில் விளையாடிய  இந்திய கிரிக்கெட் அணி  சூர்யகுமார் யாதவ் தலைமையிலான இந்திய ரி20 அணி தொடரை கைப்பற்றியது. ஆனால் ரோஹித் ஷர்மா தலைமையிலான இந்திய ஒரு நாள் அணி முன்பு எப்போதும் இல்லாத அளவிற்கு மோசமான தோல்வியை சந்தித்தது. இச்சூழலில் தான் இந்திய அணி பங்களாதேஷுக்கு  எதிரான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட உள்ளது.

முதல் டெஸ்ட் போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் செப்டம்பர் 19 ஆம் திகதி தொடங்க உள்ளது கவுதம் கம்பீர் தேர்ந்தெடுக்கப்பட்ட பின் இந்திய அணி விளையாட உள்ள முதல் டெஸ்ட் இது என்பதால் எதிர்பார்ப்பு அதிகம் இருக்கிறது. இச்சூழலில் தான் இந்திய அணி வீரர்களின் புனைப் பெயர்கள் குறித்து கம்பீர் பேசியிருக்கிறார். அந்தவகையில் எந்த வீரர்களுக்கு அவர் என்ன பெயர் வைத்திருக்கிறார் என்பதை இந்த தொகுப்பில் பார்ப்போம்:

பாட்ஷா - யுவராஜ் சிங்

தபாங் - சச்சின் டெண்டுல்கர்

கிலாடி - ஜஸ்ப்ரித் பும்ரா

மிஸ்டர் பெர்ஃபெக்ஷனிஸ்ட் - ராகுல் டிராவிட்

கப்பர் - ஷிகர் தவான்

புலி - சௌரவ் கங்குலி

ஷாஹேன்ஷா (ராஜாக்களின் ராஜா) - விராட் கோலி

ஐபிஎல் தொடரின் போது விராட் கோலிக்கும் கம்பீருக்கும் கருத்து மோதல் ஏற்பட்டது. இதனைத்தொடர்ந்து கம்பீரை ரசிகர்கள் பார்க்கும் போது எல்லாம் கோலி பெயரை சொல்லி குரல் எழுப்புவது வடிக்கையாக இருந்தது. இதனிடையே இந்த ஆண்டு நடைபெற்ற ஐபிஎல்  போட்டியில்நைட் ரைடர்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் ஒரு போட்டியில் விளையாடின.

அப்போது தங்களது பழைய பகையெல்லாம் மறந்து கம்பீரும் ,விராட் கோலியும் சகஜமாக பேசி சிரித்தனர். இது தொடர்பான புகைப்படங்களும் சமூக வலைதளங்களில் வெளியாகி இருவருக்குமான சண்டை முற்றுப்பெற்றது. இந்த நிலையில் தான் விராட் கோலியை ராஜக்களின் ராஜா என்று கவுதம் கம்பீர் புனைபெயர் வைத்து அழைத்துள்ளார்.

No comments: