பும்ரா,
பாபர், ரோஹித், கோலி, அப்ரிடி ஒரே அணியில்
18 வருடங்களின் பின்னர்
நடக்கபோகும் சம்பவம்
கிறிக்கெற்றில்
முத்தரப்பு தொடர்களை பார்ப்பதே அரிதாகி விட்டது. முன்பெல்லாம் இந்தியா – பாகிஸ்தான் – அவுஸ்திரேலியா போன்ற 3 அணிகள் பங்கேற்கும் முத்தரப்பு தொடர் அடிக்கடி நடக்கும். மேலும் உலக – ஆசிய லெவன், ஆப்பிரிக்கா – ஆசிய லெவன் போன்ற கனவு சர்வதேச போட்டிகளும் இப்போதெல்லாம் நடைபெறுவது அரிதினும் அரிதாகி விட்டது.
கடைசியாக
ஆசிய மற்றும் ஆப்பிரிக்கா கண்டத்தைச் சேர்ந்த சிறந்த லெவன் அணிகள் மோதிய தொடர் 2005 மற்றும் 2007 ஆகிய வருடங்களில் ஆப்ஃரோ – ஆசிய கோப்பை என்ற பெயரில் நடைபெற்றது. அந்த தொடரில் ஆசிய அணியில் இந்தியா, பாகிஸ்தான், இலங்கை நாடுகளைச் சேர்ந்த சேவாக், சங்கக்காரா, டோனி, அஃப்ரிடி, இன்சமாம் போன்ற சிறந்த வீரர்கள் இடம் பிடித்திருந்தனர்.
அதே
போல ஆப்ஃரோ அணியில் தென் ஆப்பிரிக்கா, ஸிம்பாப்பே, கென்யா நாடுகளைச் சேர்ந்த சிறந்த வீரர்கள் விளையாடினர். மிகவும் வெற்றிகரமாக நடைபெற்ற அந்தத் தொடர் 2008 மும்பை தாக்குதலால் அப்படியே நிறுத்தப்பட்டது. ஏனெனில் அந்த தாக்குதலால் இந்தியா – பாகிஸ்தான் நாடுகளுக்கிடையே எல்லை பிரச்சினை ஏற்பட்டது. அதனால் இந்தியா – பாகிஸ்தான் வீரர்கள் சேர்ந்து விளையாடுவதில் சிக்கல் ஏற்பட்டது. இந்நிலையில் ஆப்ஃரோ – ஆசிய கோப்பையை 2025ஆம் ஆண்டு மீண்டும் நடத்துவதற்கு முயற்சிகளை எடுத்து வருவதாக ஆப்பிரிக்கன் கிரிக்கெட் அசோசியேசன் தலைவர் சாமோட் தாமோதர் தெரிவித்துள்ளார். குறிப்பாக ஐசிசி புதிய தலைவராக இந்தியாவின் ஜெய் ஷா வரும் டிசம்பர்
மாதம் பொறுப்பேற்க உள்ளார். எனவே புதிய தலைவராக பொறுப்பேற்றதும் அவரிடம் இது பற்றி பேச உள்ளதாக தாமோதர் கூறியுள்ளார்.
இது
பற்றி ஃபோர்ப்ஸ் இணையத்தில் அவர் பேசியுள்ளது பின்வருமாறு. “தனிப்பட்ட முறையில் அது நடக்காதது எனக்கு வேதனையளிக்கிறது. ஏசிஏ போதுமான வேகம் இல்லை. ஆனால் அதை மீண்டும் கொண்டுவர பார்க்கிறோம். அதை நடத்ததற்காக எங்களது உறுப்பினர்கள் வருந்துகிறார்கள். அது ஆப்பிரிக்காவால் தள்ளப்பட வேண்டும்” என்று கூறினார்.
ஒருவேளை
அந்தத் தொடர் 18 வருடத்திற்கு பின் மீண்டும் நடத்தப்பட்டால் விராட் கோலி, ரோஹித் சர்மா, பாபர் அசாம், ஜஸ்ப்ரித் பும்ரா, ஷாஹீன் அப்ரிடி போன்ற இந்தியா – பாகிஸ்தானை சேர்ந்த நட்சத்திர வீரர்கள் ஒன்றாக சேர்ந்து விளையாடுவார்கள். கடைசியாக நடைபெற்ற 2007 ஆப்ஃரோ – ஆசிய கோப்பையின் ஒரு போட்டியில் எம்எஸ் டோனி 1 பவுண்டரி 5 சிக்சருடன் 139 ரன்கள் குவித்தது குறிப்பிடத்தக்கது.
ரமணி
15/9/24
No comments:
Post a Comment