பரிஸ் பாராலிம்பிக்கில் இங்கிலாந்தைச் சேர்ந்த ஜோடி கிரின்ஹாம் எனும் வில்வித்தை வீராங்கனை 7 மாத கருவை சுமந்தவாறு, வெண்கலப் பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளார். ஜோடி கிரின்ஹாம்:
ஆகஸ்ட் 31 அன்று மகளிர் பிரிவில் நடைபெற்ற வெண்கலப் பதக்கப் போட்டியில், கிரேட் பிரிட்டனின் ஃபோப் பேட்டர்சன் பென்னுக்கு எதிராக ஜோடி கிரீன்ஹாம் விளையாடினார். அதில் 142-141 என்ற கணக்கில் வெற்றி பெற்றார். டோக்கியோ பாராலிம்பிக்ஸில் தோல்வியுற்ற ஃபோப் பேட்டர்சன் பைன், இந்த முறை தங்கப் பதக்கம் வென்றார் என்பது நினைவுகூறத்தக்கது.
ஜோடி கிரீன்ஹாம் கர்ப்பமாக இருந்தபோது பராலிம்பிக்கில் பதக்கம் வென்ற முதல் பாரா-தடகள வீராங்கனை ஆனார். அவர் சுமார் 28 வாரங்கள் அதாவது 7 மாத கர்ப்பிணியாக இருந்தார். இருப்பினும் பராலிம்பிக் போட்டியில் கலந்து கொண்டு பதக்கம் வென்று வரலாற்றின் பக்கங்களில் தனது பெயரைப் பதிந்துள்ளார்.
ஜோடி கிரின்ஹாமின் இடது கையில் ஊனம் இருப்பது குறிப்பிடத்தக்கது. அவள் வலது கையால் அம்பை எய்கிறார். அதுமட்டுமின்றி கலப்பு அணி கூட்டு வில்வித்தையின் காலிறுதிப் போட்டிக்கும் அவர் முன்னேறியுள்ளார்.
பதக்கத்தைக் கைவிட்டவர் காதலியைக் கரம் பிடித்தார்
இத்தாலிய ஓட்டப்பந்தய வீரர் அலெஸாண்ட்ரோ ஒசோலா பராலிம்பிக் பதக்கத்தை தவறவிட்டிருக்கலாம், ஆனால் ஸ்டேட் டியில் ஆயிரக்கணக்கான ரசிகர்கள் முன்னிலையில் அவரது காதலி திருமணத்தை ஏற்றுக்கொண்ட பிறகு மகிழ்ச்சியடைந்தார்.
ஒசோலா T63 100 மீற்றர் இறுதிப் போட்டிக்கு தகுதி பெறத் தவறிய போதிலும், அவர் தனது காதலியான அரியன்னாவிடம் ஓடிச்சென்று தன்னைத் திருமணம் செய்து கொள்ளுமாறு கேட்டுக் கொண்டார். .
2015 ஆம் ஆண்டில் மோட்டார் சைக்கிள் விபத்துக்குப் பிறகு ஒசோலா தனது இடது காலின் பெரும்பகுதியை இழந்தார், இது அவரது முதல் மனைவியை இறந்ததால் வாழ்க்கையில்
"இருள்" சூழ்ந்தது.
போட்டி முடிந்த்தும் காதலியிடன் சென்று மோதிரத்தைக் கொடுத்து என்னைத் திருமணம் செய்கிறாயா எனக் கெட்டார். முதலில் அதிர்ச்சியடைந்து அவரைப் பைத்தியம் எனக் கூறிய காதலி பின்னர் மோட்திரத்தை வாங்கினார்.
200வது பரா தடகள தங்கத்தை வென்றது சீனா
ஸ்டேட் டி பிரான்ஸில் செவ்வாய்க்கிழமை நடந்த பெண்களுக்கான ஷாட் புட் F43 இறுதிப் போட்டியில் Zou Lijuan வென்று, தனது இரண்டாவது தங்கப் பதக்கத்தை வென்றார்., 1984 ஆம் ஆண்டு பராலிம்பிக்ஸில் முதல் வெற்றிக்குப் பிறகு, சீனாவின் 200-வது பாரா தடகள தங்கத்தை ப் பெற்றது.
"எனக்காக ஒரு தங்கப் பதக்கம் வென்றதை விட இது எனக்கு மகிழ்ச்சி அளிக்கிறது," என்று Zou கூறினார். "இந்த குறிப்பிடத்தக்க சாதனை, மாற்றுத்திறனாளிகள் மீதான அரசாங்கத்தின் அக்கறை மற்றும் விளையாட்டு வீரர்களின் விடாமுயற்சிக்கு காரணமாகும்." என்றார்.
சீன நீச்சல் அணி லா டிஃபென்ஸ் அரங்கில் 6 பந்தயங்களில் நான்கு தங்கம், நான்கு வெள்ளி மற்றும் மூன்று வெண்கலங்களை வென்று பிரகாசித்தது. அவர்கள் ஆண்களுக்கான 50மீ பேக்ஸ்ட்ரோக் S5 இறுதிப் போட்டியில் பதக்கங்களை வென்றது.
No comments:
Post a Comment