இந்தியாவின்
பட்மிண்டன் நட்சத்திரம் நித்தேஷ் குமார் விராட் கோலியை தன்னுடைய ரோல் மொடல் என்று அண்மையில் கூறி இருந்தார். இச்சூழலில் தான் தங்கப்பதக்கத்திற்கான
பட்மிண்டன் போட்டி நடைபெற்றது. விறுவிறுப்பான இந்த போட்டியில் நித்தேஷ் குமார் தங்க பதக்கத்தை வென்று அசத்தினார்.
இந்த
போட்டியின் போது தான் இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலியின் பெயர் பரிஸில் ஒலித்திருக்கிறது. நித்தேஷ்
குமார் விறுவிறுப்பாக விளையாடிக்கொண்டிருந்த போது போட்டியை வர்ணனை செய்யும் வர்ணனையாளர் விராட் கோலியை பற்றி பெருமையாக பேசி இருக்கிறார்.
அதில்,"அவரது ஹீரோ, விராட் கோலி, முன்னாள் இந்திய அணிக்கு கப்டனாக இருந்த அற்புதமான இந்திய கிரிக்கெட் வீரர். இந்தியாவில் பெரும்பாலான மக்கள் விராட் கோலியை ஒரு விளையாட்டு ஹீரோவாகக் கொண்டுள்ளனர் என்று நான் நினைக்கிறேன்," என்று வர்ணனையாளர் வீடியோவில் கூறினார். இந்த வீடியோ தான் சமூக வலைதளங்களில் தற்போது வைரலாகி வருகிறது
No comments:
Post a Comment