இந்தியா , தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையேயான மூன்றாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டி நேற்று விசாகப்பட்டினம் மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் முதலில் விளையாடிய தென்னாப்பிரிக்கா இந்திய அணியின் சிறப்பான பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் 47.5 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 270 ஓட்டங்களை மட்டுமே குவித்தது. தென்னாப்பிரிக்க அணி சார்பாக அதிகபட்சமாக குவிண்டன் டி காக் 106 , பவுமா 48 ஓட்டங்களையும் குவித்தனர்.
271 ஓட்டங்கள்
அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய
இந்திய அணி தென்னாப்பிரிக்க அணியின்
பந்துவீச்சை மிகச்சிறப்பாக எதிர்கொண்டு 39.5 ஓவர்களில் 1 விக்கெட்டை மட்டும் இழந்து 271 ஓட்டங்கள் குவித்து 9 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
அதோடு 3 போட்டிகள் கொண்ட இந்த ஒருநாள் தொடரை
இரண்டுக்கு ஒன்று (2-1) என்ற கணக்கில் கைப்பற்றி
அசத்தியது.
இந்த
போட்டியில் இந்திய அணி சார்பாக துவக்க
வீரராக விளையாடிய யாஷஸ்வி ஜெய்ஸ்வால் தனது 23 ஆவது வயதிலேயே 3 விதமாக
சர்வதேச கிரிக்கெட் போட்டிகளையும் சேர்த்து 6 ஆவது இந்திய வீரராக
மாபெரும் சாதனையை நிகழ்த்தி அசத்தியுள்ளார்.
இந்த
மூன்றாவது ஒருநாள் போட்டியில் இந்திய அணி சார்பாக துவக்க
வீரராக களமிறங்கிய ஜெய்ஸ்வால் 121 பந்துகளை எதிர்கொண்டு 12 பவுண்டரி மற்றும் 2 சிக்ஸர் என ஆட்டமிழக்காமல் 116 ஓட்டங்களை குவித்து
ஆட்டநாயகன் விருதினை வென்று அசத்தியிருந்தார். இந்த போட்டியில் அவர்
அடித்த சதம் அவரது முதல்
ஒருநாள் சதமாக பதிவாகியது. ஏற்கனவே இந்திய அணிக்காக சர்வதேச டெஸ்ட் போட்டிகள்,ரி20 போட்டிகளில் சதமடித்துள்ள
ஜெய்ஸ்வால் நேற்று ஒருநாள் போட்டியிலும் சதமடித்து 3 வகையான போட்டிகளிலும் சதமடித்த 6 ஆவது இந்திய வீரராக
23 வயதிலேயே அபார சாதனையை நிகழ்த்தி
அசத்தியுள்ளார்.
இந்திய அணிக்காக 3 விதமான போட்டிகளிலும் சதமடித்த இந்திய வீரர்களாக விராட் கோலி, ரோஹித் சர்மா, சுப்மன் கில், கே.எல் ராகுல்,
சுரேஷ் ரெய்னா ஆகிய 5 வீரர்கள் சாதனை நிகழ்த்தியிருந்தனர். இவ்வேளையில் 6 ஆவது இந்திய வீரராக
யாஷஸ்வி ஜெய்ஸ்வால் இந்த பட்டியலில் இணைந்துள்ளார்
.

No comments:
Post a Comment