பழையன
கழிதலும் புதியன புகுதலும் எனப் பொதுவாகச்
சொல்வார்கள்.ஒரு வருடம் முடிவடைந்து புதிய வருடம் ஆரம்பிக்கும்போது விடை பெற்ற ஆண்டு
விட்டுச் சென்ற வடுக்களை மறக்க முடியாது.
2024 ஆம் ஆண்டில் உலகளாவிய அரசியலில் பல முக்கியமான
சம்பவங்கள், திருப்பங்கள் நடந்துள்ளன. காஸா
போர் இன்னமும் முடிவுக்கு வரவில்லை. உயிரைழப்பு,சொத்துசேதம், இடப்பெயர்வு என்பன காஸாவைக்
கலங்கடிக்கின்றன. பங்களாதேஷ்,ஈராக் நாட்டுத் தலைவர்கள் தாய்நாட்டில் இருந்து விரட்டப்பட்டார்கள். தனது நாட்டு எதிரிகள் அனைவரையும் இஸ்ரேல் போட்டுத்தள்ளியது.சிலநாடுகளின்
ஆட்சி கவிழ்க்கப்பட்டது.
லெபனானின்
மீது தாக்குதல் நடத்திய இஸ்ரேல்
இஸ்ரேல், ஹமாஸ் ஆகியவற்றுக்கிடையேயான போரில் ஹமாஸுக்கு உதவிய லெபனனின் மீது இஸ்ரேல் மோசமான தாக்குதல்களை நடத்தியது. அதில் உச்சக்கட்டமாக பொஸ்பரஸ் குண்டுகளை இஸ்ரேல் வீசியதாகக் குற்றம் சாட்டப்பட்டது. வெள்ளை பாஸ்பரஸ் மக்களையும் பொருட்களையும் எரிக்கும் தீயை உருவாக்கும் திறன் கொண்டது. நொடியில் தீயை இது உருவாக்கும். அதேபோல் நச்சுவாய்ந்த புகையை வெளியிட்டு கடுமையான பின்விளைவுகளை ஏற்படுத்தும். உடனடியாக மரணத்தை கொடுக்காமல் சில நாட்களுக்கு கடுமையாக பாதிப்புகளை ஏற்படுத்தி மரணத்தை உண்டாக்கும் திறன் கொண்டது. பூச்சு கொல்லியாக இது பயன்படுத்தப்படும் இதை குண்டாக மாற்றி பயன்படுத்தும்போது அது உயிரை கொடுமைப்படுத்தி கொல்லக்கூடியது.
ஜேர்மனியில்
ஆட்சி கவிழ்ந்தது
ஜேர்மனிய பாராளுமன்றத்தில் ஜனாதிபதி ஓலாஃப் ஸ்கோல்ஸ்க்கு எதிரான நடந்தநம்பிக்கை வாக்கெடுப்பில் தோல்வியடைந்ததால்
ஜேர்மனி அரசாங்கம் கவிழ்ந்தது. பிரான்ஸ் அரசு கவிழ்ந்த சில நாட்களில் ஜேர்மனி அரசு
கவிழ்ந்துள்ளது. ஐரோப்பா நாடுகள் அண்டை நாடுகள் இடையே இந்த விவாகரங்கள் தொடர் பதற்றத்தை
ஏற்படுத்தி உள்ளது.
போது வேண்டுமானாலும் போர் செய்ய வாய்ப்பு உள்ளதாக தகவல்கள் வருகின்றன. சீன அதிபர் ஜி ஜின்பிங் இது தொடர்பாக எச்சரிக்கை விடுத்துள்ளார். சீனா நாட்டு படைவீரர்கள் போருக்கு தயாராக இருக்க வேண்டும்.தைவானைச் சுற்றி சீனா பெரிய அளவிலான ராணுவப் பயிற்சிகளை நடத்தி வரும் நிலையில்தான்.. போர் நடத்த தயாராக இருங்கள். போர் வந்தால் அதை எதிர்கொள்ள தயாராக இருங்கள். உங்ளின் பலத்தை உறுதி செய்து கொள்ளுங்கள். உங்களின் போர் புரியும் திறனை உறுதி செய்து கொள்ளுங்கள் என்று சீன அதிபர் ஜி ஜின்பிங் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இந்தியா, கனடா உறவில் விரிசல்
இந்தியாவால் தேடப்படும் நபரான சீக்கியத் தலைவர் ஹர்தீப் சிங்
நிஜ்ஜார் கடந்த ஜூனில் கனடாவில் சுட்டுக்கொல்லப்பட்டார். இந்தச் சம்பவத்தின் பின்னணியில் இந்திய அரசாங்கம் இருக்கலாம் என பிரதமர்
ஜஸ்டின் ட்ரூடோ தெரிவித்தார்.
சீக்கியத் தலைவரை இந்தியர்கள் நடத்தி இருக்கலாம்.
கொலைக்கு பின்னணியில் அவர்களே முக்கியமாக காரணமாக இருக்கலாம். இந்தியாவின் ஏஜெண்டுகள்
மூலம் கொலை நடந்து இருக்கலாம் என்று தனது நாட்டு பாதுகாப்பு ஆலோசகர்கள் தன்னிடம் கூறியதாக
ட்ரூ டோ தெரிவித்துள்ளார்.
இதை
தனது நாட்டின் தேசிய பாதுகாப்பு அதிகாரிகள் நம்புவதற்கு காரணங்கள் இருப்பதாக அவர் கூறியுள்ளார்.
கனடா மண்ணில் ஒரு கனடா குடிமகனைக் கொல்வதில் வெளிநாட்டு அரசாங்கத்தின் எந்தவொரு தலையீடும்
இருப்பதாக உறுதியானால் அது கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்தும். இது நமது இறையாண்மையில்
மேற்கொள்ளப்படும் ஏற்றுக்கொள்ள முடியாத மீறலாகும். சுதந்திரமான, திறந்த மற்றும் ஜனநாயக
சமூகங்களின் அடிப்படை விதிகளுக்கு முரணானது. இந்த நடவடிக்கையை நாங்கள் கண்டிக்கிறோம்
என்றுள்ளார்.
அந்தக் கொலைக்கும் தமக்கும் தொடர்பு இல்லை என இந்தியா தெரிவித்ததை கனடா நம்பத் தயாராக இல்லை.
கேள்விக்குறியான
கனடா பிரதமரின் எதிர்காலம்
கனடாவில் அரசியல் சிக்கல் ஏற்பட்டு உள்ளது. அங்கே
கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ பதவி விலகுவதற்கான வாய்ப்புகள் ஏற்பட்டு உள்ளது. உட்கட்சி
பிரச்சனை, மசோதாக்களை நிறைவேற்ற முடியாதது, சில நிதி பிரச்சனைகள் காரணமாக ஜஸ்டின் பதவி
விலகுவது குறித்து ஆலோசித்து வருவதாக கூறப்படுகிறது. ட்ரூடோ ஏப்ரல் மாதத்திற்கு முன்பு
இராஜினாமா செய்ய 80% வாய்ப்பு உள்ளது. அவர் ராஜினாமா செய்ய வேண்டும் என்று கனடிய தலைவர்கள்
மற்றும் அவரது சொந்த கட்சியினரிடையே கருத்துக்கள் தீவிரமாக வைக்கப்பட்டு வருகின்றன.
நிதியமைச்சர் கிறிஸ்டியா ஃப்ரீலாண்ட் திடீரென இராஜினாமா செய்ததைத் தொடர்ந்து அங்கே நிதி நிர்வாகம் தொடங்கி கடன் பிரச்சனை வரை பல விஷயங்கள் தீவிரம் அடைந்து உள்ளது. இப்படிப்பட்ட நிலையில்தான் அடுத்த சில வாரங்களில் இதனால் ஜஸ்டின் இராஜினாமா செய்யலாம். கனடாவின் துணைப் பிரதமரும் நிதி அமைச்சருமான கிறிஸ்டியா ஃப்ரீலேண்ட், நாட்டின் எதிர்காலம் குறித்து ட்ரூடோவுடன் ஆலோசனை செய்ததில்.. ஏற்பட்ட கருத்து வேறுபாடுகள், நிதி நிலைமையில் நிலவும் சிக்கல்கள் காரணமாக தனது ராஜினாமாவை அறிவித்தார். அவரது ராஜினாமா கடிதத்தில், ட்ரூடோ மீது மறைமுகமாக குற்றச்சாட்டுகளை வைத்து உள்ளார்
இஸ்ரேலை
மிரட்டிய ஹமாஸ் தலைவர் கொலை
ஹமாஸ் படையின் தலைவராக இருந்த யாஹ்யா சின்வார் இஸ்ரேல்
நடத்திய தாக்குதலில் கொல்லப்பட்டார். ஒரு கட்டிடத்தில் பதுங்கி இருந்த ஹமாஸ் படை அங்கிருந்த
3 பேர் இஸ்ரேல் வீரர்களை நோக்கித் தாக்குதல் நடத்தினர். இதையடுத்து இஸ்ரேல் ராணுவம்
அங்கு ட்ரோன் தாக்குதல் நடத்தியது. இதில் ஹமாஸ் படையின் தலைவரான சின்வார் அங்குக் கொல்லப்பட்டார்.
பலமுறை குறிவைக்கப்பட்டு தப்பியவர் சின்வார்.
உயிர்களைக் காவு வாங்கிய போர்
இஸ்ரேல் - ஹமாஸ் இடையிலான மோதல் உச்சம் அடைந்தது.
ஹமாஸுக்கு எதிரான இஸ்ரேலின் தாக்குதல் காஸாவுக்கு
வெளியே ஈரான்,லெபனான், ஏமன் ஆகிய நாடுகளுக்கும்
விரிவடைந்தது.
No comments:
Post a Comment