அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் 10 வருட ஆட்சியை அகற்றுவதற்கு ஸ்டாலின் கையில் எடுத ஆயுதங்களில் கமிஷன் - கலெக்ஷன் – கரெப்ஷன் என்ற சொற்தொடரும் அடக்கம். திராவிட முன்னேற்றக் கழகம் ஆட்சிபீடம் ஏரினால் ஊழல் செய்த அமைச்சர்கள் சிறைக்குச் செல்வார்கள் என ஸ்டாலின் பிரசாரம் செய்தார்.
கடந்த பத்தாண்டுக்கால அண்ணா திராவிட முன்னேற்றக் கழக் ஆட்சியின் போது
, முதல்வர் உள்ளிட்ட அன்றைய ஆட்சியாளர்களுக்கு எதிராக ஏராளமான ஊழல் குற்றச்சாட்டுகளை
திராவிட முன்னேற்றக் கழகம் கிளப்பியது. உள்ளாட்சித்
துறை பிளீச்சிங் பவுடர் வாங்கியது முதல் நெடுஞ்சாலைத்துறை டெண்டர் விட்டது வரை பல்லாயிரம்
கோடி ரூபாய் அளவுக்கான ஊழல் புகார்கள் அடுக்கப்பட்டன.
ஊழல் அமைச்சர்கள் பதவி விலக
வேண்டுமென்று கோரி மாநிலம் முழுவதும் திராவிட முன்னேற்றக் கழகம் போராட்டங்களை நடத்தியது. 2020 டிசம்பரில், ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்தைச்
சந்தித்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி உட்பட 8 அமைச்சர்கள் மீது 97 பக்கங்கள் கொண்ட
புகார் மனுவை ஸ்டாலின் அளித்தார்.
அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்துக்கு எதிரான ஊழல் புகார்களை கூட்டணிக் கட்சிகளான பாரதீய ஜனதாக்கட்சியும், பாட்டாளி மக்கள் கட்சியும் முன்வைத்து அதிர்ச்சியளித்தன. ஊழல் இல்லாத இந்தியா எனக் கூறும் பாரதீய ஜனதாத் தலைவர்கள் ஊழல் கட்சியுடன் கூட்டணி வைக்கும் அரசியலைப் புரிந்துகொள்ள முடியவில்லை.
திராவிட முன்னேற்றக் கழகம் ஆட்சிக்கு வந்தவுடன், முன்னாள் அமைச்சர்களுக்கு
எதிராக லஞ்ச ஒழிப்பு பொலிஸ் ஜூலையில் நடவடிக்கையைத்
தொடங்கியது. முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் வீடு உட்பட 20 இடங்களில் சோதனை
நடைபெற்றது. அந்த நடவடிக்கை, அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியது. அடுத்ததாக, ஓகஸ்ட்
மாதம் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணியின் வீடு உள்ளிட்ட 60 இடங்களில் லஞ்ச ஒழிப்பு
போலீஸார் 12 மணி நேரம் சோதனை நடத்தினர். அடுத்து, செப்டம்பர் மாதம் கே.சி.வீரமணி, ஒக்டோபர்
மாதம் சி.விஜயபாஸ்கர், டிசம்பர் மாதம் தங்கமணி, ஜனவரி மாதம் கே.பி.அன்பழகன் என மாதம்
ஒருவர் வீதம் லஞ்ச ஒழிப்பு பொலிஸாரின் சோதனை நடைபெற்றது. எம்.ஆர்.விஜயபாஸ்கர் மற்றும்
எஸ்.பி.வேலுமணி இடங்களில் சோதனை நடந்தபோது இருந்த பரபரப்பும் முக்கியத்துவமும், தற்போது
கே.பி.அன்பழகன் வீட்டில் நடந்த சோதனையின்போது இல்லை.
சோதனைகள், விசாரணைகள் தொடங்கப்பட்டு ஆறு மாதங்கள்
ஆகியும் இவர்கள் கைது செய்யப்படவில்லை. வேலுமணி வீட்டில் சோதனை நடைபெற இருக்கு தகவல்
அவருக்கு முன்பே தெரிந்து விட்டது. அதனால் அடுத்த சோதனைகளை மிகவும் இரகசியமாக வைக்கப்பட்டன.
முன்னாள் அமைசர் ராஜேந்திர பாலாஜி விரட்டிப் பிடிக்கப்பட்டார். அவர் இப்போது பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார். ஆட்சியாளர்களின்
ஊழலுக்குத் துணைபுரிந்த அதிகாரிகள்மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாதது ஏன் என்ற
கேள்வியும் இப்போது முக்கியமாக எழுந்திருக்கிறது.
லஞ்ச ஒழிப்புத்துறையின் ரெய்டு நடவடிக்கை குறித்து அறப்போர் இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் ஜெயராம் வெங்கடேசன், “ஓ.பன்னீர்செல்வம், எஸ்.பி.வேலுமணி உள்ளிட்ட அமைச்சர்கள் மீது 14 புகார்களை ஆதாரங்களுடன் லஞ்ச ஒழிப்புத்துறையிடம் நாங்கள் அளித்தோம். அவற்றின் மீது முந்தைய அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. தற்போது முன்னாள் அமைச்சர்கள் 6 பேர் மீது எஃப்.ஐ.ஆர் பதிவுசெய்யப்பட்டிருக்கிறது. இது வரவேற்கத்தக்கது” என்று கூறினார். அவரிடம், “மாதம் ஓர் அமைச்சர் என்று ரெய்டு போவதையும், அதிகாரிகள்மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாததையும் எப்படிப் பார்க்கிறீர்கள்?” என்று கேட்டபோது, “அனைத்துப் புகார்கள்மீதும் ஒரே நேரத்தில் நடவடிக்கை எடுக்கும் அளவுக்கு அதிகாரிகள், ஊழியர்கள், தொழில்நுட்ப நிபுணர்கள், சட்ட வல்லுநர்கள், ஆடிட்டர்கள் ஆகியோரைக் கொண்ட கட்டமைப்பு லஞ்ச ஒழிப்புத்துறையிடம் போதுமான அளவு இல்லை. அதிகாரிகள்மீது நடவடிக்கை எடுப்பதற்கான சுதந்திரம் லஞ்ச ஒழிப்புத்துறைக்கு இருப்பதாகத் தெரியவில்லை. மேலும், கடந்த ஆட்சியில் ஊழல் செய்த ஐ.ஏ.எஸ் அதிகாரிகள், குரூப் ஏ மற்றும் குரூப் பி அதிகாரிகளை தற்போதைய அரசு பாதுகாக்கிறது என்றுதான் பார்க்கிறோம்” என்றார் அவர்.
ஊழல் வழக்கில் யாரையும் உடனடியாகக்
கைது செய்ய வேண்டும் என்ற அவசியம் கிடையாது. 1996-ல் ஜெயலலிதா மீதும் பல அமைச்சர்கள்
மீதும் வழக்குகள் போடப்பட்டன. ஆனால், யாரையும் உடனே கைது செய்யவில்லை. ஜெயலலிதாவைக்
கைது செய்ததுகூட நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில்தான். நினைத்தவுடன் ஒருவர் மீது நடவடிக்கை
எடுத்துவிட முடியாது. சட்ட நடைமுறைகள் இப்படித்தான் இருக்கின்றன. அ.தி.மு.க முன்னாள்
அமைச்சர்களுக்கு நிச்சயம் தண்டனை பெற்றுத்தருவோம். ஊழல் அதிகாரிகள் மீதான நடவடிக்கைகளைப்
பொறுத்தவரையில், அதற்கும் சில சட்ட நடைமுறைகள் உள்ளன என ஹிராவிட முன்னேற்றக் கழகத்தின்
சார்பில் விளக்கமளிக்கப்பட்டுள்ளது.
அமைச்சர்கள், அரசு அதிகாரிகள்
மீதான ஊழல் புகார்களை விசாரிப்பதற்கான லோக் ஆயுக்தாவைத் தமிழகத்தில் உரிய முறையில்
ஏற்படுத்தி, அதன் கீழ் லஞ்ச ஒழிப்புத்துறையைக் கொண்டுவந்துவிட்டால், ஊழல் புகார்களையெல்லாம்
அவர்கள் பார்த்துக்கொள்வார்கள். ஆனால், 2014-க்குள் ஏற்படுத்தியிருக்க வேண்டிய லோக்
ஆயுக்தாவை, 2018-ல்தான் தமிழகத்தில் கொண்டுவந்தார்கள். அதன்பிறகு, அது என்ன ஆனது என்றே
தெரியவில்லை. “லோக் ஆயுக்தாவைச் செயல்பட வைப்போம்” என்பது தி.மு.க-வின் முக்கியமான தேர்தல்
வாக்குறுதி. 75 சதவிகிதமான தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றிவிட்டோம் என்று பெருமைப்படும்
முதல்வர் ஸ்டாலின், லோக் ஆயுக்தாவை எப்போது செயல்பட வைப்பார் என்ற கேள்வியும் எழுப்பப்படுகிறது.
முன்னாள் அமைச்சர்களின் வீடுகள்,அலுவலகங்கள்,
அவர்களது உறவினர்கள், நண்பர்களின் இடங்களிலும் சோதனைகள் நடைபெற்றன. சோதனையின் பின்னர்
வழக்கம் போல ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாக இலஞ்ச ஒழிப்புத் துறையினர் அறிக்கைகள் வெளியிட்டனர். குற்றம் சாட்டப்பட்ட அமைச்சர்கள் சட்டப்படி குற்றச்
சாட்டுகளைச் சந்திப்போம் என சிரித்தவாறு பேட்டியளித்தனர்.
வழக்கை எப்படி இழுத்தடிக்கலாம், எப்படித் தாமதப் படுத்தலாம் எனபதை முன்னாள் அமைச்சர்கள் அறிவார்கள். நீதிமன்றத் தீர்ப்பின் பின்னரும் அப்பீல் செய்யும் வாய்ப்பு உள்ளது. ஆகையால் இது இப்போதைக்கு முடியும் விவகாரமல்ல.
No comments:
Post a Comment