Friday, June 14, 2024

விஜய்க்கு ஆதரவாக சீமான் தடம் மாறும் தமிழக அரசியல்களம்

  தமிழக அரசியலில் அசைக்க முடியாத தலைவராக மிளிர்கிறார் ஸ்டாலின்.  ஜெயலலிதா, கருணாநிதி ஆகியோரின் மறைவுக்குப் பின்னர் தமிழக அரசியலில் வெற்றிடம் ஏற்பட்டுள்ளது எனபலரும் விமர்சித்தனர்.  அந்த விமர்சன ஜாம்பவான்களின் முகத்தில் கரியைப் பூசி தன்னிகரில்லாத் தலைவன் என ஸ்டாலின் நிரூபித்துள்ளார்.

வலுவான கூட்டணி அமைப்பதே  இன்றைய இந்திய அரசியல்கள நிலையாகும். நாடாளுமன்றத் தேர்தலின் போது தமிழகத்தில் ஸ்டாலினின் தலமிமையிலான  கூட்டணி 100 சத வீத வெற்றியைப் பெற்று  எதிர்க் கட்சிகளை சிதறடித்துள்ளது. மத்தியில் 10 வருடங்கள் ஆட்சி  செய்த மோடியின் தலைமையிலான பாஜக அருதிப் பெரும்பான்மையைப் பெறவில்லை.

ஸ்டலினின் தலைமையைக்கு ஆப்பு வைப்பதர்கு பலர்  முயன்றனர். எந்த முயற்சியும் கைகூடவில்லை.  ரஜினி வந்தால் தமிழக அரசியலில் கோலோச்சுவார் எனக் கூறப்பட்டது. அறிக்கை அரசியலுடன் ரஜினி ஆன்மீகப்பயணம் சென்றுவிட்டார். மோடியும், அமித்ஷாவும் ரஜினிக்குத் தூது விட்டார்கள். யாரிடமும்  பிடிபடாமல் ரஜினி நழுவிவிட்டார்.

 ஜெயலலித ஆட்சியில் இருக்கும் போது நடிகர் கமல், விஜய் ஆகியோரின் படங்களுக்கு சிக்கல் ஏற்பட்டது. விஜயின் படங்களில்  இருந்த அரசியல் வச்னங்களும், பஞ்ச் டயலக்குகளும் ஜெயலலிதவுக்கு எச்சரிக்கை விடுத்தன. தீவிர அமைகாத்த விஜய் ரசிகர் மன்றத்தை வலுப்படுத்தினார். விஜயின் ரசிகர்கள்  உள்ளூராட்சித் தேர்தல்களில் போட்டியிட்டு  வெற்றி பெற்றனர். நடிகர் என்றபோர்வையைத் தூக்கி எறிந்து விட்டு அரசியல்வாதி உடை அணிந்தார் விஜய். விஜய் ஆரம்பித்த அரசியல் கட்சி தமிழகத்தில் பேசு பொருளாகியது.

 நாடளுமன்றத் தேர்தலில் விஜயின் கட்சி போட்டியிடும் என அனைவரும்  எதிர்பார்த்தபோது 2026 ஆம் ஆண்டு தமிழக சட்டமன்றத் தேர்தல்தான் இலக்கு என விஜய்  அறிவித்தார்.விஜயை வளைப்பதற்கு பாஜக  மேற்கொண்ட முயற்சிகள் தோல்வியடைந்தன. வருமான வரிச் சோதனைகளால் விஜய்க்கு தொல்லை கொடுக்கப்பட்டது.  அதற்கும் விஜய் அமைதி காத்தார்.

விஜய் அரசியல் கட்சி அரம்பித்த போது  பலத்த வரவேற்பளித்தவர் சீமான்.வெளிநாட்டுக்கார்  இறக்குமதி, லியோ பட சார்ச்சைகளின்  போது விஜய்க்கு ஆதரவாக சீமான் குரல் கொடுத்தார்.   2026 ஆம் ஆண்டு தமிழக சட்டமன்றத் தேர்தலின் போது  விஜயும், சீமானும் இணயப் போவதாக செய்திகள்  வெளியாகி உள்ளன.

நாம் தமிழர் கட்சியும், விஜயின் தமிழக வெற்றி கழகமும் , சீமானின் நாம் தமிழர் கட்சியும் இணைந்து போட்டியிட வாய்ப்புள்ளதாக பரபரப்பு தகவல் ஒன்று இணையத்தில் பறந்து கொண்டிருக்கிறது.  சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிட போவதாக விஜய் ஏற்கனவே அறிவித்திருக்கிறார்.  ஆனால், களத்தில் நிற்பது பெரும்பாலும் இளைஞர்கள், அதிலும் புதியவர்களாக உள்ளனர். எனவே, அனுபவம் வாய்ந்த பலரையும் தன்னுடைய அரசியல் பயணத்துக்கு துணையாக சேர்த்து கொள்ளலாம் என்று விஜய் தரப்பில் யோசனை மேற்கொள்ளப்பட்டிருக்கிறதாம்.  விஜயின் அரசியல் கட்சியில் சேர்வதற்கு  பல நடிகர்களும், அரசியல்வாதிகளும்  தயாராக  இருக்கிறார்கள்.யாரச் சேர்ப்பது, யாரைத் தவிர்ப்பது என்ற ஆலோசனை விஜய் தரப்பில் நடைபெறுகிறது.

 சீமான் போன்ற சீனியர்களை பக்கத்தில்   வைத்து கொண்டால், கட்சிக்கு பலமாக இருக்கும் என்றும் யோசனை தெரிவிக்கப்பட்டு வருகிறதாம். சீமானிடம் ஏற்கனவே 8 சதவீத வாக்குகள் உள்ளன.. இதில் விஜய்யின் புதிய வாக்காளர்கள் இணையும்போது, தமிழக அரசியல் களத்தில் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும் என்றும், இந்த மாற்றம்   திராவிடக் கட்சிகளுக்கு மாற்றாக அமையும் என்றும் கணக்கு போடுகிறார்களாம்.

  சீமான் ,விஜய் இருவருமே வலிமை நிறைந்தவர்கள் என்பதால், எப்படியும் 25 சதவிதத்துக்கு மேல் வாக்குகளை பெறமுடியும் என்று நினைக்கிறார்களாம். ஆனால், இதற்கெல்லாம் சீமான் ஒப்புக் கொள்வாரா என்று தெரியாது. ஒவ்வொருமுறையும் தேர்தலின்போதும், சீமான் இந்த முறை கூட்டணி வைக்கக்கூடும் என்பார்கள்,.. ஆனால், கடைசி நேரத்தில் "சிங்கம் சிங்கிளாகத்தான் வரும்" என்று அறிவித்துவிட்டு போய்விடுவார் சீமான்.

 2019 தேர்தலின்போதும் இப்படித்தான் மக்கள் நீதி மய்யம் கமலுடன் இணைந்து சீமான் தேர்தலை சந்திப்பார் என்றெல்லாம் சலசலப்பு ஓடியது..கமல் மீது சீமான் மிகுந்த மதிப்பு வைத்திருப்பதால், எப்படியும் அவருடன் இணைந்து தேர்தலை சந்திக்க விருப்பம் தெரிவிப்பார் என்றெல்லாம் சொன்னார்கள். ஆனால் வழக்கம்போல், தனித்து போட்டி என்று அறிவித்தார் சீமான். எத்தனை முறை தேர்தலில் போட்டியிட்டு மண்ணை கவ்வினாலும், தனித்து போட்டி என்பதிலேயே   சீமான் உறுதியாக இருப்பதை கவனிக்க முடிகிறது.. அப்படியிருக்கும்போது, விஜய்யுடன் இணைவாரா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

  ஆனால், திராவிட கட்சிகளுடனும், தேசிய கட்சிகளுடனும் கூட்டணி இல்லை என்று விஜய் ஏற்கனவே தெரிவித்திருப்பதால், நிச்சயம் சீமானுடன் இணைவார் என்கிறார்கள் அவரது ஆதரவாளர்கள்.

  ஒருமுறை செய்தியாளர்கள் சீமானிடம், விஜய்யின் அரசியல் வருகை குறித்து கருத்து கேட்டிருந்தார்கள்.

 அதற்கு சீமான், "எம்ஜிஆரே கட்சி தொடங்க பயந்தார். திமுகவில் இருந்து விலகிவிட்டு என்ன செய்வதென்று அவருக்கு தெரியல.. அதுக்கப்பறம் சரி, நடத்திதான் பார்ப்போமே என்று கட்சி தொடங்கிவிட்டார். உடனே எம்ஜிஆரை பார்த்து என்டிஆர் ஆரம்பித்தார். ஆனால் சிரஞ்சீவி, பவன் ஆனால் சிரஞ்சீவி, பவன் கல்யாணால் அது முடியவில்லை.  நின்று சண்டை செய்ய வேண்டும். தம்பி விஜய்யின் கனவு வெல்ல வாழ்த்துகிறேன். என் அன்பிற்குரிய தம்பி என்பதால் ஒரு அளவுக்கு மேல் என்னால் பேச முடியாது" என்றார் சீமான்.

 அப்படியானால், பாஜகவுக்கு ஆதரவான நிலைப்பாட்டை விஜய் எடுத்தால் நீங்கள் ஆதரவு தருவீர்களா? என்று செய்தியாளர்கள் கேட்டார்கள்.. அதற்கு சீமான், "தமிழக வெற்றி கழகம் என்ற பெயர் நன்றாக இருக்கிறது. வரவேற்கிறேன். கட்சி பெயரில் திராவிடம் என்று இல்லாததே பெரிய மாறுதல் தானே? பாஜகவை ஆதரிக்கும் முடிவை விஜய் எடுக்கமாட்டார்" என்று பதிலளித்திருந்தார் சீமான்.

2026ல் தளபதியின் வருகையால் கொடியும் கோட்டையும் நொடியில் மாறும் என்று மதுரை விஜய் ரசிகர்கள் கலக்கல்  போஸ்டர் ஒட்டியுள்ளனர்.

  2024ம் கல்வியாண்டில் 10 மற்றும் 12ம் வகுப்பு பொதுத் தேர்வில் முதலிடம் பிடித்த மாணவர்களுக்கு பரிசு வழங்க தமிழக வெற்றிக்  கழகம் சார்பில் நடிகர் விஜய் திட்டமிட்டு செயல்பட்டு வருகிறார். கடந்த ஆண்டில் மாணவிகள் அதிக நேரம் காத்திருக்கும் சூழ்நிலை உருவானது. இதனை தவிர்க்க இந்த ஆண்டு பரிசு வழங்கும் விழாவை இரண்டு கட்டங்களாக நடத்த தமிழக வெற்றி கழகம் ஏற்பாடு செய்துள்ளது.

முதல் கட்ட பரிசு வழங்கும் விழா வரும் ஜூன் 28ஆம் திகதி 21 மாவட்ட மாணவிகளுக்கு வழங்கப்படவுள்ளது. இதனை அடுத்து இரண்டாம் கட்டமாக ஜூன் மூன்றாம் திகதி 19 மாவட்ட மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட உள்ளது. இதற்கான அறிவிப்பை தமிழக வெற்றிக்கழக வெளியிட்டுள்ளது.

 தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய்யின் பிறந்த நாள் ஜூன் 22ம்திகதி.இது விஜய்யின் 50வது பிறந்த நாள் ஆகும். இந்த நாளை சிறப்பாக கொண்டாடும் விதமாக அவரது ரசிகர்கள் ஏழை எளிய மக்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகள் மரக்கன்றுகள் வழங்கி கொண்டாட ஏற்பாடுகளை செய்து வருகின்றனர். நடிகர் விஜய்யின் பிறந்த நாளை முன்னிட்டு தமிழகத்தில் விஜய் ரசிகர்கள் பலவிதமான போஸ்டர்களை அடித்து ஒட்டி, தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில், மதுரையில் உள்ள விஜய் ரசிகர்கள் போஸ்டர் ஓட்டியுள்ளனர். அதில், 2026ல் தளபதியின் வருகையால் கொடியும், கோட்டையும் நொடியில் மாறும் என்ற வாசகம் அடங்கிய போஸ்டரில் தந்தை சந்திரசேகருடன் இணைந்து நடந்து வருவது போன்று போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளது. இந்த  போஸ்டர் மதுரை மாவட்ட தளபதி ரசிகர்கள் சார்பாக ஒட்டப்பட்டுள்ளது. இந்தப்  போஸ்டர்   மதுரையைக் கலக்கி உள்லது.

தமிழக அரசியலில் பலமான கூட்டணி தேவை தனித்துப் போட்டியிடும் சீமானிக் கட்சி எதிரணிக் கட்சிகளின்  வாக்கு வங்கியைச் சிதறடிக்கிறது. இது வரை நடந்த  தேர்தல்களில் சீமானின் கட்சி  வேட்பாளர்கள்  கட்டுப் பணத்தை இழந்து நான்காம், ஐந்தாம் இடங்களுக்குத் தள்ளப்பட்டனர்.  தோல்வியைப் பற்றி சீமான் கவலைப் படுவதில்லை.

 ஆனால், விஜயின் நிலை அப்படிப்பட்டதல்ல. களத்தில் இறங்கினால் வெற்றி பெற வேண்டும். விஜய் தோல்வியடைந்தால் கலாய்ப்பதற்கு பலர் காத்திருக்கின்றனர்.

 தமிழக சட்ட மன்றத் தேர்தலுக்கு இன்னமும்  இரண்டு வருடங்கள்  இருக்கின்றன. அதுவரை இது போன்ற பரபரப்பான செய்திகள்  பஞ்சமில்லாமல்   வெளியாவதைத் தடுக்க முடியாது.

No comments: