Monday, January 26, 2015

பலப்பரீட்சைக்குத்தயாராகும் தமிழகம்

தமிழக அரசியல் கட்சிகள் தமது பலத்தை வெளிப்படுத்தும் களமாக ஸ்ரீ ரங்கம் இடைத் தேர்த்தல்  பரிணமித்துள்ளது. தமிழ‌க முதல்வரின் தொகுதி என்ற சிறப்பைப் பெற்ற  ஸ்ரீ ரங்கம் தொகுதி நீதிமன்றத் தீர்ப்பினால் அவ‌மான‌ப்ப‌ட்ட‌து . வருமானத்துக்கு மீறிய சொத்துக்குவித்த வழகில் ஜெயலலிதா குற்றவாளி என தீர்ப்பளிக்கப்பட்டதனால்  ஜெயலலிதாவின் பதவி பறிக்கப்பட்டு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டது.
திராவிட முன்னேற்றக் கழகம்  முந்திக் கொண்டு தனது வேட்பாளரை அறிவித்தது.  க‌ட‌ந்த‌ ச‌ட்ட‌ ச‌பைத் தேர்த‌லில் ஜெய‌ல‌லிதாவை எதிர்த்து போட்டியிட்டு தோல்வியடைந்த என்.ஆனந்தை மீண்டும் களத்தில் நிறுத்தி உள்ளது திராவிட முன்னேற்ற கழகம். ஜெயலலிதா  105,328   வாக்குகள் பெற்றார் .ஆனந்த்  63,480  வாக்குகள் பெற்றார்.

திராவிட முன்னேற்றக்கழகத்தினுள் குழப்பங்கள் பல இருந்தாலும் தேர்தல் என்றால் ஒற்றுமையாகி விடுவார்கள் என்ற எண்ணத்தில் கருணாநிதி  தன‌து கட்சி வேட்பாளரை முந்திக்கொண்டு அறிவித்துள்ளார்.  அழகிரி ஒருபக்கத்தில் இருக்கிறார். கனிமொழி இரன்டு பக்க‌மும் தலையைக்காட்டியபடி உள்ளார். புதியவர்களின் நியமனங்கள் புதுத்தெம்பைக் கொடுக்கும் என கருணாநிதி எதிர்பார்க்கிறார். தமிழக சட்டசபைத்தேர்தலிலும் இந்திய நாடாளுமன்றத்தேர்தலிலும் அடைந்த தோல்வியை ஈடுகட்ட வேண்டும் என ஸ்டாலின் நினைக்கிறார்.

அண்ணாதிராவிட முன்னேற்றக்கழகத்துடன் நேரடிப்போட்டியில் மோதத்தயாராகும் கருணாநிதி தோழமைக்கட்சிகளின் ஆதரவை எதிர் பார்க்கிறார். வெளியே நிற்கும் திருமாவளவனுக்கு தூது விட்டுள்ளார். கருணாநிதியின் வேண்டுகோளை பரிசீலிக்க வேண்டும் என  ராமதாஸ் கருத்துக் கூறி உள்ளார்.  திருமாவ‌ள‌வ‌னும் ராம‌தாஸும் ஆத‌ர‌வுத‌ருவார்க‌ள் என்ற‌ ந‌ம்பிக்கை க‌ருணாநிதியிட‌ம் உள்ள‌து.
காங்கிர‌ஸ் அர‌சை வீட்டுக்கு அனுப்ப‌வேண்டும் என துடியாக‌த்துடித்த‌  வைகோ பார‌தீய‌ ஜ‌ன‌தாக்க‌ட்சியுட‌ன் கூட்ட‌ணிசேர்ந்தார். பார‌தீய‌ ஜ‌ன‌தாக் க‌ட்சி ஆட்சிபீட‌ம் ஏறிய‌தும் வைகோவின் கோரிக்கைக‌ள் புற‌க்கணிக்க‌ப்ப‌ட்ட‌ன‌. ரோச‌க்கார‌ வைகோ கூட்ட‌ணியில் இருந்து வெளியேறினார். ம‌க‌ன் அன்பும‌ணிக்கு அமைச்சுப்ப‌த‌வி கிடைக்கும் என‌ எதிர்பார்த்து ஏமாந்த‌ ராம‌தாஸ் கூட்ட‌ணியிலிருந்து மூட்டைக‌ட்டினார்.
பாரதீய ஜனதாக்கட்சியின் மாநில துணைத்தலைவர் அக்கட்சியின் சார்பில் ஸ்ரீரங்கம் தொகுதியில் போட்டியிடுகிறார். மாக்சிஸ்ட் கொம்யூனிஸ்ட் கட்சியும் களத்தில் இறங்கி உள்ளது.
பார‌தீய‌ ஜ‌ன‌தாக்க‌ட்சியின் ஆட்சிக்கு  ஆத‌ர‌வு தெரிவித்த‌வ‌ர்க‌ளில் ஒருவ‌ரான‌ விஜ‌ய‌காந்த் வெறுப்பில் இருக்கிறார்.த‌மிழ‌க‌த்துக்கு விஜ‌ய‌ம் செய்த‌ அமித் ஷா விஜ‌காந்தை ஏறெடுத்தும் பார்க்க‌வில்லை.

த‌‌மிழ‌க‌த்தில் மூன்றாவ‌து ச‌க்தியாக‌‌ தான் இருப்ப‌தை வெளிப்ப‌டுத்த‌வேன்டிய‌  தேவை இருப்ப‌த‌னால் இடைத்தேர்த‌லில் விஜ‌ய‌காந்த்‌ த‌ன‌து வேட்பாள‌ரை க‌ள‌ம் இற‌க்கும் சாத்திய‌க்கூறு உள்ள‌து.தோல்வி உறுதி என்றாலும் தேர்த‌லைச் ச‌ந்திப்ப‌தில் விஜ‌காந்துக்கு ஆர்வ‌ம் அதிக‌ம்.


காங்கிர‌ஸ் க‌ட்சி அமைதியாக‌ உள்ள‌து. ஜி.கே.வாச‌ன் வெளியேறிய‌த‌னால்  காங்கிர‌ஸின்  ப‌ல‌ம் ச‌ற்று குறைந்துள்ள‌து.த‌லைமை ஆணையிட்டால் தேர்த‌லில்போட்டியிட‌ த‌யார் என குஷ்பு அறிவித்துள்ளார். திராவிட‌ முன்னேற்ற‌க் க‌ழக‌த்தில் ப‌ர‌ப‌ர‌ப்பு அரசிய‌ல் ந‌ட‌த்திய‌ குஷ்பு  அண்மையில் காங்கிர‌ஸ் க‌ட்சியில் இணந்தார்.குஷ்புவுக்கு கோயில்க‌ட்டிய‌ திருச்சிதான் அவ‌ருக்கு செருப்பு மாலைஅணிந்த‌து.காங்கிர‌ஸ் க‌ட்சி இடைத்தேர்த‌லில்போட்டியிடாது ஒதுங்கி திராவிட‌ முன்னேற்றக் க‌ழ‌க‌த்துக்கு வ‌ழிவிடும் சூழ்நிலை உள்ள‌து.


 இடைத்தேர்த‌லில் ஆளும்க‌ட்சி வெற்றி பெறுவ‌து வ‌ழ‌மையான‌து. ஆனால் திருச்சி இடைத்தேர்த‌ல் அண்ணா திராவிட‌ முன்னேற்ற‌க்க‌ழ‌க‌த்துக்கு நெருப்பாற்றைக்க‌டக்கும் ப‌த‌ற்ற‌ நிலையைத்தோற்றுவித்துள்ள‌து.


அண்ணா திராவிட முன்னேற்றக்கழக ஆட்சியின் போது திருச்சிமேற்கு,சங்கரன்கோயில்,புதுக்கோட்டை,ஏற்காடு,பண்டிருட்டி,ஆலந்தூர் ஆகிய தொகுதிகளில் இடைத்தேர்தல்கள் நடைபெற்றன. அனைத்திலும் அண்ணா திராவிட முன்னேற்றக்கழகம் வெற்றிபெற்றது. அப்போது அதிக பெரும்பான்மையுடன் வெற்றிபெறவேண்டும் என ஜெயலலிதா அறைகூவல் விடுத்தார். அவரின் அறைகூவலை செவிமடுத்த தொண்டர்கள் மிகுந்த உற்சாகத்துடன்  வெற்றியைத்தேடிக்கொடுத்தனர்.

முதல்வர் தொகுதி என அடையாளமிடப்பட்ட திருச்சியில் எஸ்.வளர்மதியை வேட்பாளராக அறிவித்த ஜெயலலிதா அவ்ருடன் இணைந்து நிற்கும் படத்தை வெளியிட்டு தொண்டர்களை உற்சாகப்படுத்தி உள்ளார். வருமானத்துக்கு அதிகமான சொத்துக் குவித்த வழக்கில் தண்டனை பெற்ற ஜெயலலிதா யாரையும் சந்திக்காது எங்கேயும் வெளியில் செல்லாது தனிமையில் இருந்தார்.

இடைத்தேர்தலில் வெற்றி பெற்று அந்த வெற்றியை அவருக்கு சமர்ப்பணம் செய்ய வேண்டும் என  அண்ணா திராவிட முன்னேற்றக்கழகத் தலைவர்களும் தொண்டர்களும் விரும்புகின்றனர். ஆனால் பிர‌மாண்ட‌மான‌ முறை‌யில் வெற்றிபெற‌க்கூடாது என்ப‌தில் க‌வ‌ன‌மாக‌ உள்ள‌ன‌ர். ஜெய‌ல‌லிதா பெற்ற‌ வாக்குக‌ளைவிட‌ அதிக‌ வாக்குக‌ளைப் பெற்றால் அவ‌ரின் புகழுக்கு க‌ள‌ங்க‌ம் எற்ப‌டும் என்ப‌து அவ‌ர்க‌ளின் எண்ண‌ம். திருச்சியில் பெற‌ப்போகும் வெற்றி குறைந்த‌ மேல‌திக‌ வாக்குக‌ளால் பெற‌ப்ப‌ட‌ வேண்டும் என‌வும் அவ‌ர்க‌ள் விரும்புகின்ற‌ன‌ர். ஜெயலலிதா பெற்ற‌ வாக்குக‌ளைவிட‌ அதிக‌ப்ப‌டியான‌ வாக்குக‌ளைப்பெற்றால் அவ‌ரின் எதிர்கால‌ அர‌சிய‌லுக்கு பாதிப்பு வ‌ரும் என்ப‌தையும் அவ‌ர்க‌ள் க‌ண‌க்கிட்டுள்ள‌ன‌ர்.

நீதிம‌ன்ற‌த்தால் குற்ற‌வாளி என‌ தீர்ப்பு வ‌ழ‌ங்க‌ப்ப‌ட்ட‌ ஜெய‌ல‌லிதாவை ம‌த்திய‌ நிதி அமைச்ச‌ர் அருண் ஜேட்லி ச‌ந்தித்த‌து அர‌சிய‌லில் அதிர்ச்சியைத்தோற்றுவித்துள்ள‌து.இத‌ற்குமுன்ன‌ரும்  ச‌ட்ட‌ அமைச்ச‌ராக‌ இருநத‌ ர‌விச‌ங்க‌ர் பிர‌சாத் ச‌ந்தித்த‌தும் அப்போது விம‌ர்ச‌ன‌ம் செய்ய‌ப்ப‌ட்ட‌து.காங்கிர‌ஸ் க‌ட்சி ஆட்சியில் இருந்த‌போது நிதி அமைச்ச‌ராக‌ இருந்த‌ ய‌ஷ்வ‌ந்த் சின்ஹாவை ஜெய‌ல‌லிதா ச‌ந்தித்த‌போது வ‌ருமான‌ வ‌ரி வ‌ழ‌க்குக்கு ப‌ரிந்துரைக் க‌டித‌ம் கேட்ட‌தாக‌ அவ‌ர் த‌ன‌து சுய‌ ச‌ரிதையிலெழுதி உள்ளார்.

வ‌ருமான‌ வ‌ரிக‌ட்டாத‌ வ‌ழ‌க்கு ச‌ம‌ர‌ச‌ம் செய்ய‌ப்ப‌ட்டு விட்ட‌து. பெங்க‌ளூரில் ந‌ட‌க்கும் சொத்து குவிப்பு வ‌ழ‌க்கு திசைதிரும்புமா என்ற‌ எதிர்பார்ப்பு எழுந்துள்ள‌து. ப்ர்ர‌தீய‌ ஜ‌ன‌தாக் க‌ட்சி பெரும்பான்மையுட‌ன் ஆட்சி செய்தாலும்  முக்கிய‌மான‌ ம‌சோதாக்க‌ளை நிற‌வேற்றுவ‌த‌ற்குரிய‌ ப‌ல‌ம் இல்லை. பார‌தீய‌ ஜ‌ன‌தாக் க‌ட்சிக்கு நாடாளும‌ன்ற‌த்தில் பெரும்பான்மை இருந்தாலும் மேல் ச‌பையில் பெரும்பான்மை இல்லை.இர‌ண்டு ச‌பைக‌ளிலும் எதிர்ப்பு இன்றி ம‌சோதா நிறைவேற்ற‌ப்ப‌ட்டால்தான் அமுலாக்க‌முடியும்.  அண்ணா திராவிட முன்னேற்றக்கழகத்துக்கு நாடாளு ம‌ன்ற‌த்தில் 39 உறுப்பின‌ர்க‌ளும் மேல்ச‌பையில் 11 உறுப்பின‌ர்க‌ளும் உள்ள‌ன‌ர். ஆகையினால் பார‌தீய‌ ஜ‌ன‌தாக் க‌ட்சிக்கு  ஜெய‌ல‌லிதாவின் த‌ய‌வு தேவைப்ப‌டுகிற‌து.

த‌மிழ‌க‌த்தின் அடுத்த‌ முத‌ல்வ‌ர் க‌ன‌வில் இருக்கும் விஜ‌ய‌காந்தும் அன்பும‌ ணியும் அமைதியாக‌ இருக்கின்ற‌ன‌ர். த‌மிழ‌க‌ ஆட்சியைப்பிடிக்க‌ க‌ங்க‌ண‌ம் கட்டி இருக்கும் பார‌தீய‌ ஜ‌ன‌தாக்க‌ட்சி அமைதியாக‌ உள்ள‌து.திராவிட‌ முன்னேற்ற‌க்க‌ழ‌க‌மும் அண்ணா திராவிட‌ முன்னேற்ற‌க்க‌ழ‌க‌மும் திருச்சியில் த‌ம‌து  ப‌ல‌த்தைக்காட்ட‌ த‌யாராகிவிட்ட‌ன‌.

No comments: