Saturday, August 28, 2021

கந்தக பூமியான காபூல் விமான நிலையம்

 ஆப்கானிஸ்தானில்  இருந்து படையினரும்  பொது  மக்களும்  வெளியேறும்  காபூல்  விமான  நிலையத்துக்கு  வெளியே அடுத்தடுத்து  தற்கொலைத்  தாக்குதல், குண்டு வெடிப்பு ,துப்பாக்கிப்  பிரயோகம்  என்பன  நடைபெற்றதால் 13  அமெரிக்க  விரர்கள் உட்பட   150 பேர்  கொல்லப்பட்டனர். 1500 க்கும்  மேற்பட்டோர்  காயமடைந்தனர். இறந்தவர்களில அமெரிக்காவின்  11 கடற்படையினர் மற்றும் ஒரு கடற்படை மருத்துவர் என்று அமெரிக்க அதிகாரிகள் ஆரம்பத்தில் கூறினர். மற்றொரு சேவை உறுப்பினர் மணிநேரங்களுக்குப் பிறகு இறந்தார்

ஆப்கானிஸ்தானில் மருத்துவமனைகளை இயக்கும் இத்தாலிய தொண்டு நிறுவனமான எமர்ஜென்சி, விமான நிலைய தாக்குதலில் குறைந்தது 60 நோயாளிகள் காயமடைந்ததாகவும், அவர்கள் வந்தபோது இறந்த 10 பேரைத் தவிர்த்துள்ளதாகவும் கூறியுள்ளது.

பென்டகன் செய்தித் தொடர்பாளர் ஜான் கிர்பி கூறுகையில், விமான நிலைய அபே கேட்  நுழைவாயிலுக்கு அருகிலும்,, மற்றொன்று ஹோட்டலுக்கு சற்று தொலைவில் நடந்ததாகவும் தெரிவித்தார்.

தலிபான்களிலின்  பொறுப்பில்  ஆப்கானிஸ்தான் சென்ற பின்னர்  நடைபெற்ற  முதலாவது  தாக்குதலால் உலகம் அதிர்ச்சியடைந்துள்ளது. ஆப்கானில்  நிலைகொண்டிருந்த  படையினரும், ஆவ்ர்களுக்கு  உதவியவர்களும், தலிபான்களின்  ஆட்சியில்  அங்கு வாழ விரும்பாதவர்களும்  வெளியேறிக் கொண்டிருக்கிறார்கள்.

ஆப்கானை விட்டு  வெளியேறுவதற்கு  இன்னமும்  மூன்று  நாட்கள்  மட்டுமே  உள்ளது. அதற்கிடையில்ல் அங்குள்ள  அனைவரையும்  வெளியேற்றுவது  இயலாத  காரியம். அக்கல்க்கெடுவை  நீடிக்க  தலிபான்கள்  விரும்பவில்லை. தலிபான்கள்  உதவி   உதவ  வேன்டும் என  அமெரிக்க  ஜனாதிபதி  வேண்டுகோள் விடுத்துள்ளார்.

காபூல்  விமானநிலையம்  தாக்கப்படலாம் என  அமெரிக்க  உளவுத்துறை  ஏற்கெனவே எச்சரிக்கை  விடுத்திருந்தது. விமானக்கள் அனைத்தும் மிக  பாதுகாப்பாக தரை  இறங்கி,  மெலெழுந்தன.  ஏவுகணை  மூலம் தாக்குதல் நடத்தப்படலாம் என்ற  அச்சம் நிலவியது. யாரும் எதிர் பாராத  வகையில்   தற்கொலைத் தாக்குதல், துப்பாக்கிப் பிரயோகம் என்பன நடந்துள்ளன. ஆப்கானிஸ்தான்  இப்போது  தலிபான்களின் கட்டுப்பாட்டில்  உள்ளது. ஆப்கானில் எதுவித  பயங்கரவாத  நடவடிக்கைக்கும் இடமளிக்கப்படமாட்டாது  என  தலிபான்கள்  உறுதியளித்திருந்தனர். இஸ்லாமிக் ஸ்டேட் குழு அதன் அமாக் செய்தி சேனலில் கொலைகளுக்கு பொறுப்பேற்றது. ஆப்கானிஸ்தானில் உள்ள ஐஎஸ் அமைப்பு தலிபான்களை விட மிகவும் தீவிரமானது தலிபான்களுக்கும் ஐஎஸ் அமைப்புக்கும்  எட்டாப்பொருத்தம். அவர்களை  அடக்க  வேண்டிய  பொறுப்பு  தலிபான்களுக்கு  உள்ளது.

ஓகஸ்ட்  31  ஆம் திகதிக்கும்  பின்னரும்ம் அமெரிக்கப் படைகள்  ஆப்கானிஸ்தானி  இருக்க  வேன்டும். தலிபான்களுக்கும்  அம்ரிக்காவுக்கும் இடையில் முரண்பாடு  ஏற்பட  வேண்டுமென்ற  நோக்கத்திலும் தாக்குதல் நடைபெற்றிருக்கலாம். இந்தத் தாக்குதலை கடுமையாகக்  கண்டித்த அமெரிக்க  ஜனாதிபதி  ஜோ பிடன், தாக்குதல் நடத்தியவர்கலைத்  தேடி  அழிக்கப்போவதாக  சூழுரைத்துள்ளார்.

வெளியேற்றத்தை மேற்பார்வையிடும் அமெரிக்க ஜெனரல், இந்த தாக்குதல்கள்  வெளியேற்றுவதை   தடுக்காது என்றும், விமானங்கள் வெளியேறுவது தொடர்கிறது என்றும் கூறினார். அமெரிக்க மத்திய கட்டளையின் தலைவர் ஜெனரல் பிராங்க் மெக்கன்சி, விமான நிலையத்தில் அதிக அளவு பாதுகாப்பு இருப்பதாகவும், மாற்று வழிகள் பயன்படுத்தப்படுவதாகவும் கூறினார். ஏறக்குறைய 5,000 பேர்  காத்திருக்கின்றனர் என்றார்.

தாக்குதலினால் பொது மக்களை வெளியேற்றும் பணிகளை நிறுத்த மாட்டோம் என்று அமெரிக்கா அறிவித்துள்ளது. இந்த குண்டுவெடிப்புக்கு, இந்தியா, அமெரிக்கா, பிரிட்டன் உள்ளிட்ட பல நாடுகள் கண்டனங்களை பதிவு செய்துள்ளனர். இதனிடையே தாக்குதல் நடைபெற்றதும் உடனடியாக அமெரிக்க அதிபர் ஜோ பிடன், ஆலோசனை கூட்டம் நடத்தினர். அப்போது அவர் இந்த தாக்குதலுக்கு அமெரிக்கா பதிலடி கொடுக்கும், தாக்குதல் நடத்தியவர்கள் உரிய விலை கொடுக்க வேண்டி வரும் என்று தெரிவித்துள்ளார்.


இந்த தாக்குதலுக்கு ஐஎஸ்ஐஎஸ்-கே தீவிரவாத அமைப்பு பொறுப்பேற்றுள்ளது. ஐஎஸ்ஐஎஸ்-கே அமைப்பு வெளியிட்டுள்ள தகவலின்படி அமெரிக்க ராணுவத்திற்கு மொழிபெயர்ப்பு உதவி செய்தவர்களை குறிவைத்து இந்த தாக்குதல் நடத்தப்பட்டதாக கூறப்பட்டிருக்கிறது. அமெரிக்கா மற்றும் இந்திய உளவு அமைப்புகளுக்கும் இது தாக்குதலில் ஈடுபட்டது ஐஎஸ் அமைப்புதான் என்ற தகவல் வந்துள்ளதாக கூறப்படுகிறது. இந்த தாக்குதலுக்கு பிறகு காபூல் நகரில் பதட்டமான சூழ்நிலை நிலவி வருகிறது.

ஐஎஸ்ஐஎஸ்-கே என அழைக்கப்படும் ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகள் இந்த தற்கொலைப் படைத் தாக்குதலை நடத்தியதாகக் கூறியுள்ளனர். ஆனால் இதை உறுதி செய்ய இதுவரை ஆதாரங்கள் கிடைக்கவில்லை. ஐஎஸ்ஐஎஸ்-கோரசன் என்பது சிரியா மற்றும் ஈராக்கில் தோன்றிய ஐஎஸ்ஐஎஸ் பயங்கரவாதக் குழுவின் மற்றொரு பிரிவாகும். ஆப்கானிஸ்தான் மற்றும் பாகிஸ்தானை உள்ளடக்கிய பகுதிகளில் இவை செயல்படுகின்றன. கே என்பதற்கு, "கோரசன்." என்பது பொருளாகும். இஸ்லாமிக் ஸ்டேட் கோராசன் மாகாணம் என்பது இதன் முழு அர்த்தம்.

மனித வெடிகுண்டு தாக்குதலுக்கு மூளையாகச் செயல்பட்ட பயங்கரவாதியை, அமெரிக்க ராணுவம், 'ட்ரோன்' எனப்படும் ஆளில்லா குட்டி விமானம் வாயிலாக குண்டு வீசிக் கொலை செய்து, தன் சபதத்தை நிறைவேற்றியுள்ளது

 இது குறித்து அமெரிக்க ராணுவ செய்தி தொடர்பாளர், ப்டன் பில் அர்பன் கூறியதாவது:காபூல் விமான நிலைய தாக்குதலுக்கு மூளையாகச் செயல்பட்ட பயங்கரவாதி, ஆப்கனில் உள்ள நங்கர்ஹர் மாகாணத்தில் பதுங்கி இருப்பதாக தகவல் கிடைத்தது.

இதையடுத்து, ஆளில்லா குட்டி விமானம் வாயிலாக நடத்தப்பட்ட குண்டு வீச்சில் அந்த பயங்கரவாதி உயிரிழந்தான். பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் இந்த தாக்குதல் நடத்தப்பட்டது என்றார்.

அமெரிக்காவுக்கும் தலிபான்களுக்கும் இடையேயான போர்  முடிவுக்கு  வந்துள்ளது.ஆனால்,  அமெரிக்காவுக்கும்  வேறு  தீவிரவாத  குழுகளுக்கும் இடையேயான போர் தொடர்வதையே  காபூல்  தாக்குதல் வெளிப்படுத்தியுள்ளது. இப்படியான தாக்குதல்களைத்  தடுப்பதற்கு  தலிபான்கள்  அமெரிக்காவுடன்  இணைந்து  செயற்பட  வேண்டும். இல்லையேல். மீண்டும்  தலிபான்களுக்கு எதிராக  அமெரிக்கா  போராடும்  நிலை  ஏற்படும்.


No comments: