Tuesday, October 17, 2023

தெரிந்த சினிமா தெரியாதா சங்கதி -83


   தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி ஆகிய மொழித் திரைப் படங்களில் நடித்து  ரசிகர்களின் மனதில் இடம்  பிடித்தவர்  எஅஜசுலோசனா.

  . தெலுங்கைத் தாய்மொழியாகக் கொண்டாலும், படித்தது வளர்ந்தது, நடித்தது எல்லாமே தமிழகத்தில் தான். இவரது தாய்க்கு நடனம், இசையில் நல்ல ஆர்வம் இருந்ததால் 8வயதிலேயே ராஜசுலோசனாவுக்கு வாய்ப்பாட்டு, வயலின், சப்தஸ்வரம் என கற்றுக்கொடுத்தார்.

கதாநாயகி, குணசித்திரம், நகைச்சுவை, வில்லி பாத்திரங்களில் நடித்து  முத்திரை பதித்தவர். இரண்டாவது, மூன்றாவது கதாநாயகியானாலும் தனி முத்திரை பதித்து  ரசிகர்களைக் கவர்ந்தவர்.  கதாநாயகனுக்கு இணையான வில்லியாக நடித்து மிரட்டியவர்.

எம்ஜிஆர், சிவாஜி, தெலுங்கில் என்டிஆர், கன்னடத்தில் ராஜ்குமார் என அனைத்து முன்னணி நட்சத்திரங்களுடனும் நடித்து தனது யதார்த்தமான அபார நடிப்பை வெளிப்படுத்தினார்.

1950களில் நடிக்க வந்த நடுத்தரக்குடும்பத்தைச் சேர்ந்த நடிகை. இனிமையான குரலும், மென்மையாகப் பேசவும் தெரிந்த நடிகை. அவர் பேசும் வசனங்களே இதற்கு சாட்சி. ஆந்திர மாநிலம் விஜயவாடாவில் 15.8.1935ல் பிள்ளையார்சட்டி பக்தவச்சலம் நாயுடு, தேவகி தம்பதியருக்கு மகளாகப் பிறந்தார். தந்தை பக்தவச்சலம் வெள்ளைக்காரன் காலத்தில் சென்னையில் ரயில்வேத்துறையில் பணிபுரிந்தார். பெற்றோர் இட்ட பெயர் ராஜீவ லோசனா. மழலை மொழியில் பள்ளியில் இவர் தன் பெயரை ராஜசுலோசனா என சொல்லவே அதுவே பெயரானது.

திரைப்படங்களில் திருவிதாங்கூர் சகோதரிகள் லலிதா, பத்மினி இருவரும் ஆடுவதைப் பார்த்து தானும் அவர்களைப் போலவே நடனம் ஆட வேண்டும் என்ற எண்ணம் சிறுவயதிலேயே வளர்ந்தது. இதை அவரது பெற்றோரிடம் சொல்லவே மகளின் விருப்பத்திற்கு மறுப்பு சொல்லாமல் நாட்டியமும் கற்றுக்கொடுக்க ஏற்பாடு செய்தனர்.

திருவல்லிக்கேணியில் லலிதா என்பவரிடம் நாட்டியத்திற்கான ஆரம்பப் பாடத்தைக் கற்றார். பத்மினி, வைஜெயந்திமாலாவை உருவாக்கிய கே..தண்டபாணியிடம் பரதநாட்டியம் கற்றார். குச்சுப்புடி, கதகளி நடனங்களையும் அந்தந்த வல்லுநர்களிடம் கற்றுத் தேர்ந்தார்.

ராஜசுலோசனாவின் முதல் பரத நாட்டிய நிகழ்வு உச்ச நீதிமன்ற நீதியரசர் பி.எல். வெங்கட்ராமஅய்யர் தலைமையில் நடந்தது. ராஜசுலோசனாவுடன் நடனம் பயின்ற மற்றொரு மாணவி, நடிகைதாம்பரம் லலிதா.’ எம்.சி. சி. மைதானத்தில் லலிதா நாட்டியக் குழுவினரின் நிகழ்ச்சி. நடன மாது ஒருவர் வரவில்லை. ராஜசுலோசனா தன் தோழிக்குக் கால் கொடுத்தார். பாம்பாட்டியாகவும் , கிருஷ்ணராகவும் ஆடிப் பாடினார்.

அதை நேரில் கண்டு ரசித்தவர் கன்னட சினிமா இயக்குநர் சின்ஹா. ராஜசுலோசனாவை நடிக்கக் கூப்பிட்டார். வீட்டில் எதிர்ப்பு அணிவகுத்தது. ஆருடம் பார்த்தனர் பெற்றோர். ‘ஒப்பனை ஒளி வீசத் திரையில் மின்னுவார்என்றே அத்தனை பண்டிதரும் அடித்துச் சொன்னார்கள். ராஜசுலோசனாவின் முதல் படம் ஹொன்னப்ப பாகவதர்-பண்டரிபாய் நடிக்க, கன்னடத்தில்குணசாகரிஎனவும், தமிழில்சத்தியசோனைஎனவும் தயாரானது. மிகச் சிறிய வேடம். நடனம் ஆடவும் முடிந்தது

  1952ல் வந்த பராசக்தி படத்திலேயே ராஜசுலோசனா சிவாஜியின் தங்கை கல்யாணியாக நடிக்க வேண்டிய வாய்ப்பு கிட்டியது. ஆனால் அந்த சமயத்தில் அவர் கர்ப்பவதியாக இருந்ததால் அந்த வாய்ப்பு ஸ்ரீரஞ்சனிக்கு கொடுக்கப்பட்டது.

 .பி.நாகராஜன் இயக்கத்தில் வெளியான நால்வர் படத்தில் ராஜசுலோசனா அறிமுகமானார்.  தொடர்ந்து மாங்கல்யம், பெண்ணரசி ஆகிய படங்கள் ராஜசுலோசனாவை ரசிகர்கள் அனைவரும்; கவரும் வகையில் வெளியானது.1955ல் வெளியான பெண்ணரசி படத்தில் ஒரு நாட்டின் அரசியல் நிர்வாகத்திற்குள் ஊடுருவி நாட்டின் அமைதியைக் குலைத்துவிடும் நாட்டியக்காரி ஜீவாவாக பேர் சொல்லும்படியான கதாபாத்திரத்தில் நடித்து இருந்தார்.

1955ல் வெளியான டி.ஆர்.ராமண்ணா இயக்கத்தில் வெளியான குலேபாகாவலியில் தன் வசீகரிக்கும் சிரிப்பாலும், சொக்க வைக்கும் பார்வையாலும் ரசிகர்களை இருக்கையை விட்டு எழ முடியாதவாறு கட்டிப்போட்டுள்ளார் டி.ஆர்.ராஜகுமாரி. அவருடன் காந்தக்கண்ணழகி ஜி.பரலட்சுமி நடித்துள்ளார்.

வில்லியாகவும், பி.எஸ்.வீரப்பாவுக்கு ஜோடியாகவும் நடித்திருந்தார். படத்தில் .வி.சரோஜா, சூரியகலா என இரு கதாநாயகிகள் இருந்தும் நாட்டியக்காரி ஜீவாவின் நடனத்தில் தான் ரசிகர்கள் அனைவருமே சொக்கிப்போனார்கள்.அப்போது அவரை நேரில் பார்த்துவிட வேண்டும் என அவரது வீட்டு வாசலில் ரசிகர்கள் வந்து குவிந்துள்ளனர். மர்மவீரன், அறிஞர் அண்ணாவின் ரங்கோன் ராதா, எம்ஜிஆருடன் குலேபாகவாலி ஆகிய படங்களிலும் நடித்தார். சிவாஜியுடன் அம்பிகாவதி படத்தில் நடித்தார்.

டி.ஆர். ராமண்ணாவின்குலேபகாவலியில் ராஜசுலோசனா முதன்முதலாக எம்.ஜி.ஆருடன் நடித்தார். ராஜசுலோசனா ஆடிப் பாடியஎன் ஆசையும் உன் நேசமும் ரத்த பாசமும்’ ‘குலேபகாவலியைக் கூடுதல் குஷிப்படுத்தியது. அதன் வெற்றியைத் தொடர்ந்து ராஜசுலோசனா இல்லாமல் சினிமாவே வராது என்ற நிலை.

1959 பொங்கல் வெளியீடுதை பிறந்தால் வழி பிறக்கும்’. ஓஹோவென்று ஓடிற்று. ராஜசுலோசனாவை மேலும் பிரபலமாக்கியது. ‘அமுதும் தேனும் எதற்குஇரவுகளை சாஸ்வதமாக இனிக்கச் செய்கிறது. அண்ணாவின்நல்லவன் வாழ்வான்திரைப்படத்தில் கவிஞர் வாலி எம்.ஜி.ஆருக்கு எழுதிய முதல் பாடலில் (சிரிக்கின்றாள் இன்று சிரிக்கின்றாள்) ஆடிப்பாடும் வாய்ப்பு ராஜசுலோசனாவுக்குக் கிடைத்தது. அதன் மற்றொரு டூயட்டானகுற்றால அருவியிலே குளித்ததைப் போல் இருக்குதாபட்டிதொட்டிகளிலும் பட்டையைக் கிளப்பியது

எம்.ஜி.ஆர். ஜோடியாக ராஜசுலோசனா நடித்த படம்    நல்லவன் வாழ்வான்படம். மிக  குருகிய காலத்தில் எடுக்கப்பட்ட படம்.  படத்தின் ரிலீஸ் தேதியை அறிவித்துவிட்டார்கள். இரவு பகலாகப் படப்பிடிப்பு நடந்தது. நாள் முழுவதும் நடித்த அலுப்பு, விடியும் வரை தொடர்ந்தது.

பொலிஸ்  ராஜசுலோசனாவைத்  துரத்தும் காட்சியில் நிஜமாகவே மயங்கி விழுந்துவிட்டார். அவர்  கண் விழித்தபோது கையில் ஆவி பறக்கும் சூடான காபியுடன், முகத்தில் கவலையுடன்  எம்.ஜி.ஆர். நின்றார்.   

அடுத்து   டூயட் ஒன்று படமாவதற்காகக் காத்திருந்தது. முடியுமா...’ என  டைரக்டர் கேட்டதற்கு  ராஜ சுலோசனா ஓமெனத்தலயாட்டினார். எம்.ஜி.ஆர் தலையிட்டு  அன்ரு பாடல் காட்சியை   எடுக்க வேண்டாம் என்றார்.

ராஜசுலோசனாவுக்கு குணவதி - அடாவடிப் பெண் என இரு வேடங்களில்கவிதாபடத்தில் நடிக்கும் வாய்ப்பை வழங்கியது மாடர்ன் தியேட்டர்ஸ்.

அதற்கு முக்கிய காரணம், அவர்களது 100 நாள் படமானகைதி கண்ணாயிரம்’. அதில் ராஜசுலோசனா இடம் பெற்றகொஞ்சிக் கொஞ்சிப் பேசி மதி மயக்கும்பாடல் பெற்ற வரவேற்பு.

படித்தால் மட்டும் போதுமா’- வெற்றிச் சித்திரத்தில் நடிகர் திலகத்தின் மனைவியாக ராஜசுலோசனாவின் குணச்சித்திர நடிப்பு கொடிகட்டிப் பறந்தது.

சிவாஜி குடித்துவிட்டு வந்து ராஜசுலோசனாவிடம்,

நான் கவிஞனுமில்லை நல்ல ரசிகனுமில்லை’ - என்று உள்ளக் குமுறலை உதடுகளில் உயிரூட்டிப் பாடி நடித்திருப்பார்.

பெரிசுகள் இன்னமும் தங்கள் இதயத்தில் பச்சை குத்திக்கொண்ட காட்சி அது!

இதயக்கனியில் ராஜசுலோசனா ஏற்ற கொள்ளைக் கூட்டத் தலைவி வேடம் எவரும் எதிர்பாராதது.

ஜேம்ஸ்பாண்ட் ஜெய்யுடன் ராஜசுலோசனா மோதியதுணிவே துணைஎமர்ஜென்ஸி காலத்தில் வசூலில் முரசு கொட்டியது. ரஜினியுடன் ராஜசுலோசனா நடித்தகாயத்ரிபரபரப்பாக ஓடியது.

ராஜசுலோசனாவின் கடைசி தமிழ்ப் படம் வெள்ளிவிழா கொண்டாடிய டி.ராஜேந்தரின்எங்க வீட்டு வேலன்’.

தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி என்று ஐந்து மொழிகளிலும் சொந்தக் குரலில் பேசி நடித்தவர் ராஜசுலோசனா.

பிரபல தெலுங்கு டைரக்டர் சி.எஸ். ராவ் - ராஜசுலோசனாவின் கணவர். இந்தியத் திரை உலகிலேயே தேவி,  என்று இரட்டைப் பெண் குழந்தைகளை ஈன்ற ஒரே நட்சத்திரத் தாய் ராஜசுலோசனா!

தண்டபாணிபிள்ளையின் மாணவியாக நடனக் கலையைப் பரிபூரணமாகக் கற்றவர். ஆந்திரத்தின்குச்சுப்புடிஉயர்வடைய ராஜசுலோசனாவின் பாதங்கள் பாடுபட்டன.

எழுபதுகளுக்குப் பின்னர் தெலுங்கிலும் தமிழிலும் முகம் சுளிக்கும் விதத்தில் ராஜசுலோசனா நடித்ததாகக் குற்றச்சாட்டு எழுந்தது. ஆயினும் சக கலைஞர்களால்நல்ல மனுஷி!’ என்று பாராட்டப்பட்டவரும் அவரே!

அண்ணா, மு.கருணாநிதி, எம்.ஜி.ஆர்., என்.டி. ராமாராவ், ஜெயலலிதா என்று ஐந்து முதல்வர்களுடனும் பணியாற்றியவர் ராஜசுலோசனா

No comments: