தமிழ்த்திரை உலகில் நடைகை புஷ்பலதா அதிர்ஷ்டம் இலாதவர் என்ருதான் சொல்ல வேண்டும். ஒரு சில படங்களில் கதாநாயகியாக நடித்துள்ளார். பெரும்பாலும் இரண்டாஅவ்து நாயகியாகவே வலம் வந்தார். தங்கை வேடத்துக்கு மிகப் பொருத்தமான நடிகையாகத் திகழ்ந்தார்.
நடிப்புத் திறனிலும் குறை சொல்ல முடியாதவர். ஒரு
சில படங்களைத் தவிர்த்துப் பெரும்பாலான படங்களில் இரண்டாவது நாயகி அல்லது அக்காள்,
அண்ணி, தங்கை இப்படியான வேடங்களே அவருக்கு அளிக்கப்பட்டது புரியாத புதிர். நாட்டியம்
கற்றுத் தேறிய கோயமுத்தூர் பொண்ணு கோயமுத்தூரில் பிறந்து வளர்ந்த பெண். 6 பெண் மக்கள்,
2 ஆண் பிள்ளைகள் என எட்டு குழந்தைகளைக் கொண்ட மிகப் பெரிய கத்தோலிக்கக் கிறித்தவக்
குடும்பத்தில் ஐந்தாவது பெண்ணாகப் பிறந்தவர்.
7 வயது குழந்தை புஷ்பலதாவும் மிகச் சூட்டிகையாக நாட்டியத்தைக்
கற்றுத் தேர்ந்தார். நோஞ்சான் உடலும் வெகுவேகமாகத் தேறியது. அக்காலகட்டத்தில் இறுக்கமான
சூழலைக் கொண்ட குடும்ப உறவுகளுக்கு மத்தியில், பெண் குழந்தையை நாட்டியம் கற்க அனுப்பியது
உறவினர்களிடையே பெரும் புரளிப் பேச்சாக மாறியது. குடும்பப் பெண்கள் நாட்டியம் கற்பதும்
ஆடுவதும் கௌரவமானதல்ல என்ற கருத்து ஆழமாக வேரூன்றி இருந்ததால், உறவினர்கள் இவர்கள்
குடும்பத்தைத் தங்கள் உறவிலிருந்து முற்றிலுமாகத் துண்டித்துக் கொண்டார்கள்.
9 வயதில் நாட்டிய அரங்கேற்றமும் நிகழ்ந்த்து. புஷ்பலதாவின் வாழ்க்கையை அடுத்தக்கட்டப் பாய்ச்சலுக்கு நகர்த்துவதில் உதவியாகவும் உறுதுணையாகவும் இருந்தவர் அந்தக் கால நாடக நடிகைகளில் ஒருவரும் ஹார்மோனியக் கலைஞருமான பி.எஸ். ரத்னாபாய். வீட்டுக்கு அருகிலேயே இருந்த அவருக்குக் குழந்தைகள் இல்லை என்பதால், புஷ்பலதா மீது மிகுந்த வாஞ்சையும் அன்பும் கொண்டவராக இருந்தார்., பெரும்பாலான நேரங்களை அவர் வீட்டிலேயே கழித்தார் புஷ்பலதா.
அங்கிருந்தான் நாடகத்துறை சார்ந்தவர்களுடன் பழக்கமும்
அவருக்கு ஏற்பட்டது. ‘ஐந்து பெண் பெற்றால் அரசனும் ஆண்டி’ என்ற சொல்லாடலுக்கு ஏற்ப
தந்தையாரின் நிதி நிலையும் ஆட்டம் கண்டது. குடும்பம் வறுமையின் பிடியில் சிக்கியது.
அதனால், பத்து வயதிலிருந்தே நாட்டிமும் நாடகமும் புஷ்பலதாவுக்கு வாழ்க்கைத் தேவையாக
ஆனது. எம்.ஜி.ஆர். நாடக மன்றத்துடன் ஏற்பட்ட தொடர்பு அவருக்கு எம்.ஜி.ஆரின் பல நாடகங்களில்
நடிப்பதற்கு உதவியாகவும் உறுதுணையாகவும் இருந்தது. அது திரையுலகை நோக்கியும் மெல்ல
நகர்த்திச் சென்றது.
மந்திரிகுமாரி’ படத்தில் கள்ளர் கூட்டத் தலைவனாக,
பிரதான வில்லனாக நடித்த எஸ்.ஏ.நடராஜன், கோவையைச் சேர்ந்தவர். தங்கள் ஊர்ப் பெண் என்ற
பாசத்திலும் புஷ்பலதாவை நாடகங்களில் பார்த்திருந்ததாலும் அவரது திறமை மீது இருந்த நம்பிக்கையிலும்
தான் சொந்தமாகத் தயாரித்து இயக்கிய ‘நல்ல தங்கை’ படத்தில் ஒரு சிறு வேடத்தில் நடிப்பதற்கு
வாய்ப்பளித்தார். 1955ல் ’நல்ல தங்கை’ படத்தில் குழந்தை முகம் மாறாத தோற்றத்தில் பதின்பருவச்
சிறுமியாக பாவாடை, தாவணி அணிந்த சிறு பெண்ணாக அறிமுகமானார் புஷ்பலதா.
இரண்டும்கெட்டான் வயதாக இருந்ததால் சினிமாவில் தொடர்ந்து
வாய்ப்புகள் இல்லை. நாடகங்களிலும் நாட்டியத்திலும் மட்டுமே கவனம் செலுத்தி வந்தார்.
அதன் பின் பல ஆண்டுகள் கழித்து அழகு கொஞ்சும் இளம் பெண்ணாக ‘செங்கோட்டை சிங்கம்’ படத்தின்
மூலம் அறிமுகமானார்.
புஷ்பலதா ஏற்று நடித்த படங்களிலும் மிகவும் கண்டிப்பும்
கறாரும் நிறைந்தவராக, பொறுப்புணர்வு மிக்க பெண்ணாகப் பல படங்களில் தோன்றியிருக்கிறார்.
‘கை கொடுத்த தெய்வம்’ படத்தில் குடும்பத்தின் கடைக்குட்டிப் பெண் சகுந்தலா (புஷ்பலதா).
மூத்த அக்காள் கோகிலா (சாவித்திரி), படித்தவள் என்றாலும் உலகம் அறியாத வெகுளிப்பெண்.
இளம் பெண்ணுக்கே உரிய எந்தப் பண்பு நலன்களையும் கடைப்பிடிக்கத் தெரியாதவள். அதனால்
சமூகத்தில் அவளுக்கு ஏற்படும் கெட்ட பெயரையும் அபவாதத்தையும் சேர்த்தே சுமக்கிறாள்.
‘பார் மகளே பார்’ படத்தில் வசதியான வீட்டுப் பெண்களேயானாலும்
கண்டிப்பு மிக்க தந்தைக்குக் கட்டுப்பட்டு நடக்கக் கூடியவர்களாக சந்திராவும் காந்தாவும் (விஜயகுமாரியும் புஷ்பலதாவும்). மூத்த பெண் சந்திரா
அப்பாவைப் பார்த்து பயந்து நடுங்க, இளைய மகள் காந்தா, நியாயமான காரணங்களுக்காக அப்பாவிடம்
துணிச்சலுடன் எதிர்த்துப் பேசும் குணமுள்ளவள்; அதே நேரம் சுயமரியாதை மிக்கவளும் கூட
‘வெட்கமாய் இருக்குதடி, இந்த வேலவர் செய்திடும் வேலை எல்லாமே’ என்ற பாடலுக்கு இருவரும்
இணைந்து பரத நாட்டியம் ஆடி இருக்கிறார்கள்.
புஷ்பலதா முறையாக பரதம் பயின்றவர். விஜயகுமாரிக்கு
நாட்டியம் பரிச்சயம் இல்லாதது. ஆனால், அந்தப்
பாடல் காட்சியைப் பாருங்கள் இருவருமே மிகச் சிறப்பாக ஆடியிருப்பார்கள். விஜயகுமாரி
பலமுறை ஒத்திகை பார்த்து ஆட, எந்த ஒத்திகைக்கும் வராமலே மிக எளிதாக ஆடி விட்டார் புஷ்பலதா
என்று இந்தப் படம் பற்றிய தன் நினைவுகளையும் அனுபவங்களையும் பகிர்ந்து கொண்டார் நடிகை
விஜயகுமாரி.
விஜயகுமாரி - புஷ்பலதா இருவரும் பல படங்களில் இணைந்து
சகோதரிகளாக, உற்ற தோழிகளாக, அண்ணி - நாத்தனார் உறவில் என நடித்திருக்கிறார்கள். அசப்பில்
உடன் பிறந்த சகோதரிகள் போன்றே தோற்றம் கொண்டவர்கள் இவர்கள். இருவரும் கோயமுத்தூர் காரர்கள்.
இருவரும் இணைந்து நடித்த பல பாடல்கள் மிகப் பெரும் ஹிட் பாடல்கள். ‘தூது சொல்ல ஒரு
தோழி இல்லை என துயர் கொண்டாயோ தலைவி’, ‘அவள் மெல்லச் சிரித்தாள் ஒன்று சொல்ல நினைத்தாள்’,
‘கட்டித் தங்க ராஜாவுக்குக் காலை நேரம் கல்யாணம்’ போன்ற பாடல்களைச் சொல்லலாம்.
நானும் ஒரு பெண்’ படத்தில் அறிமுகமான ஏ.வி.எம் ராஜனுடன்
இணைந்து அப்படத்தில் நடித்தார். அப்படத்தில் நடிக்கும்போது ஏற்பட்ட அறிமுகம், அதைத்
தொடர்ந்து இருவருக்குள்ளும் ஏற்பட்ட ஈர்ப்பு நாளடைவில் காதலாக மாறியது. புதுக்கோட்டையைச்
சொந்த ஊராகக் கொண்ட சண்முக சுந்தரம் என்ற ஏ.வி.எம். ராஜன், ஏற்கனவே திருமணமானவர். புஷ்பலதா
மீது கொண்ட தீவிர காதல் 1964 ல் திருமணத்தில் முடிந்தது. திரையுலகில் இம்மாதிரியான
காதலும் முதல் மனைவியின் ஒப்புதலுடன் இரண்டாவதாக வேறொரு பெண்ணைத் திருமணம் செய்து கொள்வதும்
வாடிக்கை என்பதா? சாபக்கேடு என்பதா? இவர்களின் காதலுக்கு சாட்சியாக இரண்டு மகள்கள்.
* எம்.ஜி.ஆரின் கண் பார்வையற்ற தங்கையாக ‘எங்கள் தங்கம்’ படத்தில் நடித்தார்.
* சிவாஜிக்கு மகளாக பல படங்களில் நடித்தவர். அதே
சிவாஜி கணேசனை வளர்த்து ஆளாக்கும் தாதியாகவும் ‘வசந்த மாளிகை’ படத்தில் நடித்தார்.
குறைந்த நேரமே தோன்றினாலும், கருணை பொங்கும் கண்களுடன் ஒரு இளம் விதவையாக, அன்பே உருவாகத்
தோன்றுவார். அன்பு செலுத்துவதாலேயே ஜமீன்தாரிணியால் (சாந்தகுமாரி) துப்பாக்கியால் சுடப்பட்டு
உயிர் துறப்பார். அந்தக் கொலையை நேரில் பார்க்கும் சிறுவன் வளர்ந்த பின்னும் தாய் மீது
பிடிப்பற்றவனாக பெரும் குடிகாரனாக மாறுவான்.
* ஜெமினி கணேசனுடன் இணையாக ‘ராமு’ படத்தில் கொஞ்ச
நேரமே தோன்றினாலும் அவர்கள் இருவருக்குமான ‘பச்சை மரம் ஒன்று; இச்சைக்கிளி ரெண்டு’
பாடல் பெரும் வெற்றி பெற்றது.
* முத்துராமன், கல்யாண் குமார், சிவகுமார் என பலருடனும்
இணைந்து நடித்தவர்.
* கவிஞர் கண்ணதாசனின் தயாரிப்பில் வெளியான, ‘தாயே
உனக்காக’ படத்தில் சிவகுமாருக்கு ஜோடி. போர் முனையிலிருந்து விடுமுறையில் திரும்பி
வரும் வீரனாக சிவகுமாரும் அவரது காதலியாக புஷ்பலதாவும் நடித்திருந்தனர். இப்படம்
‘Bஅல்லட் ஒf அ ஸொல்டிஎர்” என்ற ஒரு ரஷ்யப் படத்தின் தமிழ் வடிவம். வீட்டில் சித்தியின்
கொடுமை தாங்காமல் வீட்டை விட்டுக் கிளம்பும் கதாநாயகி, ஒவ்வோர் இடமாகச் சென்று சேர்வதும்
மீள்வதுமாக இருப்பார். நட்புக்காக பெரும்பாலான நட்சத்திரங்கள் நடித்திருந்தபோதும் அந்தப்
படம் சரியாகப் போகவில்லை.
* ‘கவிதா’ என்றொரு படம் 60களில் வெளியானது. அதில்
இளம் துப்பறிவாளராக பல்வேறு வேடங்களில் நம்பியாருடன் இணைந்து சாகசங்கள் செய்வார்.
70களிலேயே அம்மா வேடங்களுக்கு வந்தவர். பின்னர் கொடுமைக்கார மாமியார் வேடங்களையும் அவர் ஏற்கத் தயங்கவில்லை. புஷ்பலதாவைப் பொறுத்த வரை கதாநாயகியாக நடித்த படங்கள் என்பது மிகவும் குறைவு. ஆனால், துடுக்குத்தனமும் துணிச்சலும் நிறைந்த பெண்ணாகப் பல படங்களில் நடித்திருக்கிறார். திரையுலக வாழ்வின் இறுதிக் காலத்தில் தெலுங்கிலும் ஏராளமான படங்களில் அம்மா வேடங்களை ஏற்றார்.
No comments:
Post a Comment