இந்தியா – நியூஸிலாந்து அணிகளுக்கு இடையே இந்தோரில் நடைபெற்ற மூன்ராஅவ்து ஒருநாள் போட்டியில் 83 பந்துகளில் சதத்தை எட்டியதன் மூலம், ஒருநாள் கிரிக்கெட்டில் தனது இரண்டாவது அதிவேக சதத்தை ரோகித் சர்மா செய்தார். இந்திய அணியில் தொடக்க வீரர்களான கப்டன் ரோகித் – கில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். இந்த ஜோடி 20212 0 ஓட்டங்கள் எடுத்தனர். மேலும், இருவருமே சதம் விளாசி மிரட்டினர். ரோகித் 101 ஓட்டங்களிலும், கில் 112ஓட்டங்களிலும் ஆட்டமிழந்தனர்.
இந்த போட்டியில் தனது தரமான ஆட்டத்தை
வெளிப்படுத்திய இந்திய கப்டன் ரோகித் சர்மா மூன்று வருடங்களின்
பின்னர்சதம் அடித்து மிரட்டினார் ரோகித் கடைசியாக 2020 ஆம்
ஆண்டு ஜனவரி 19 ஆம் திகதி பெங்களூரில் உள்ள எம். சின்னசாமி
ஸ்டேடியத்தில் அவுஸ்திரேலியாவுக்கு எதிராக ஒருநாள் போட்டியில் சதம் அடித்திருந்தார்.
அதன்பின்னர் தற்போது தான் அவர் 3 ஆண்டுகளுக்குப்பிறகு தனது 30-வது ஒருநாள் சதத்தை
விளாசி இருக்கிறார்.
இந்த அபார சதம் மூலம் ரோகித், அவுஸ்திரேலியாவின்
முன்னாள் கப்டன் ரிக்கி பொண்டிங்கின் மூன்றாவது அதிக சதங்களை சமன் செய்தார்.
மேலும், தொடக்க ஆட்டக்காரராக ஒருநாள் கிரிக்கெட்டில் இரண்டாவது அதிக சதங்கள்
அடித்த சனத் ஜெயசூர்யாவை (28 சதம்) சமன் செய்தார்
இதே இந்தூரில் உள்ள ஹோல்கர் கிரிக்கெட்
ஸ்டேடியத்தில் டிசம்பர் 2017ல், இலங்கைக்கு எதிராக வெறும் 35 பந்துகளில் தனது
அதிவேக ரி20 சதத்தையும்
ரோகித்பதிவு செய்தார்.ரோகித் 83
பந்துகளில் சதத்தை எட்டியதன் மூலம், ஒருநாள் கிரிக்கெட்டில் தனது இரண்டாவது அதிவேக
சதத்தை பதிவு செய்தார். மொத்தமாக 85 பந்துகளை எதிர்கொண்டு இருந்த ரோகித் 6
சிக்ஸர்கள் 9 பவுண்டரிகளை தெறிக்கவிட்டு 101 ஓட்டங்கள் குவித்து ஆட்டமிழந்தார்.
ஒருநாள் கிரிக்கெட்டில் அதிக சதம் அடித்த
வீரர்கள்.
சச்சின் டெண்டுல்கர் – 452 இன்னிங்ஸில் – 49
சதங்கள்
விராட் கோலி – 261 இன்னிங்ஸில் – 46 சதங்கள்
ரோகித் சர்மா – 30 சதங்கள் – 234 இன்னிங்ஸ்
ரிக்கி பொண்டிங் 365 இன்னிங்ஸ்களில் – 30
சதங்கள்
சனத் ஜயசூர்யா – 433 இன்னிங்ஸ்களில் – 28
சதங்கள்
No comments:
Post a Comment