Monday, November 7, 2022

ரோஹித்தின் குட்டி ரசிகருக்கு 6.5 லட்சம் ரூபா அபராதம்


 மெல்போர்ன் ட் மைதானத்தில் ரி20 உலகக்  கிண்ணத் தொடரின் சூப்பர் 12 சுற்றின் கடைசி ஆட்டம் மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்ற முடிந்தது. ஸிம்பாப்ப்வேகு எதிராக விளையாடியைந்திய     71 ஓட்டகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

  இந்த போட்டியின் போது ரோகித் சர்மாவின் ரசிகர் ஒருவர் மெல்போர்ன் மைதானத்திற்குள் அத்துமீறி நுழைந்த விவகாரம் தற்போது இணையத்தில் வீடியோவாகவும், செய்திகளாகவும் ரசிகர்கள் மத்தியில் அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.  இந்திய அணி  வெற்றிக்கு அருகில் சென்றபோது போட்டி சிறிது நேரம் போட்டி தடைப்பட்டது. தொலைக்காட்சிகளிலும் இதுகுறித்த எந்த ஒரு விவரமும் ஒளிபரப்பப்படவில்லை.

ஆனால் அந்த நேரத்தின் போது ரோகித் சர்மாவின் ரசிகர் ஒருவர் மைதானத்திற்குள் அத்துமீறி நுழைந்தார்.   மிகவும் இளம் வயதே ஆன ரசிகர் ஒருவர் மெல்போர்ன் கிரிக்கெட் மைதான அதிகாரிகளை மீறி ரோகித் சர்மாவை பார்க்க கையில் இந்திய கொடியுடன் அவரை நோக்கி ஓடினார். அவரை பின்தொடர்ந்த பாதுகாபு  அதிகாரிகள் அவரை பிடித்து மைதானத்தில் இருந்து வெளியே இழுத்துச் செல்ல முற்பட்டனர். அப்போது பாதுகாப்பு அதிகாரிகளிடம் ரோஹித் சர்மா அந்த ரசிகரை அடிக்க வேண்டாம், திட்டவும் வேண்டாம் அவரை பாதுகாப்பாக வெளியே கொண்டு செல்லுங்கள் என்று கூறினார். முஹமது ஷமியும் பாதுகாப்பு அதிகாரியிடம் அவரை பாதுகாப்பாக கொண்டு செல்லுங்கள் வேறு ஏதும் செய்ய வேண்டாம் என்று கேட்டுக் கொண்டார். அப்படி அவர்கள் கூட்டிக்கொண்டு போகும்போதே ரசிகரை நோக்கி ரோஹித் சர்மா சில வார்த்தைகளையும் பேசினார்.

அந்த சிறு வயது ரசிகருக்கு இந்திய மதிப்பில் 6.5 லட்சம் அபராதம் விதித்து மெல்போன் கிரிக்கெட் வாரியம் நடவடிக்கை எடுத்துள்ளது. அதற்கு காரணம் யாதெனில் உலகக் கோப்பை போன்ற பெரிய தொடரில் வீரர்களின் பாதுகாப்பு மற்றும் தனிப்பட்ட பாதுகாப்பு என அனைத்துமே முக்கியம். அதனால் மைதானங்களில் அத்துமீறி நுழைப்பவர்கள், விதிமுறைகளை பின்பற்றாதவர்கள் என பல்வேறு கட்டுப்பாடுகள் நிர்ணயிக்கப்பட்ட வேளையில் அந்த பாதுகாப்பு கட்டுப்பாடுகளை மீறியதற்காக அந்த ரசிகருக்கு ரூபாய் 6.5 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.


No comments: