Tuesday, January 27, 2026

சூடு பிடிக்கும் தமிழக அரசியல் கட்சிமாறும் தலைவர்கள்


 திராவிட முன்னேற்றக் கழகத்தை மிரட்டிய காங்கிரஸ் அடிபணிந்தது.

சபதத்தைக்  கைவிட்டு தினகரனுடன் கைகோர்த்த எடப்பாடி

தனிமரமானார் முன்னாள் முதல்வர் பன்னீர்ச்செல்வம்

மதில்மேல் பூனையாக காத்திருக்கும்பிரேமலதா

மாம்பழத்துக்காக சண்டையிடும் அப்பாவும், மகனும் 

தமிழக சட்டமன்றத் தேர்தல் அறிவிப்பு விரைவில் வெளியாகும் நிலையில் அரசியல்களம் சூடு பிடிக்கத் தொடங்கி உள்ளது. தேர்தலுக்கு முன்னர் பலமான கூட்டணி அமைப்பதில் பெரிய கட்சிகள் அதீத ஆர்வம் காட்டுகின்றன. தமிழகத்தி மிகப்ப்பெரும் சக்தியாக  உருவெடுக்கும் எனக் கணிக்கப்பட்ட விஜயை, முக்கிய கட்சிகளும், சிறிய கட்சிகளும்  புறக்கணித்துள்ளன.

விஜயை  முன்னிறுத்தை திராவிட முன்னேற்றக் கழகத்துடன் பேரம் பேசலாம் எனக் கணக்குப் போட்ட காங்கிரஸ் கட்சி,  அடிபணிந்து விட்டது.  100 தொகுதிகள் ,துணை முதலமைச்சர் பதவி என விஜய் ஆசைகாட்டியும், டெல்லி மேலிடம் இணங்கவில்லை.

தமிழக காங்கிரஸ்காரகள் சிலர் பதவி ஆசையால் விஜயின் வலையில் சிக்கினார்கள். விஜயுடன் கூட்டுச் சேர்ந்தால் அணை மாநிலங்களான தெலுங்கானா, கர்நாடகம் ஆகியவற்றில் உள்ள விஜய் ரசிகர்களின் ஆதரவைப் பெற்று அங்கும் ஆட்சியில் பங்கேற்கலாம் எனக் கருதினார்கள்.

காங்கிரஸ் கூட்டணி டெல்லியில் நேற்று அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி (ஏ.ஐ.சி.சி.) தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தலைமையில்  ராகுலின் முன்னிலையில்நடந்த முக்கிய கூட்டத்தில், தமிழக காங்கிரஸ் தலைவர்கள், ஆளும் தி.மு.க.வுடன் தேர்தல் கூட்டணி தொடர விரும்புவதாகத் தெளிவுபடுத்தினர். 2026 சட்டப்பேரவைத் தேர்தலில் தி.மு.க.வுக்குத் தனிப்பெரும்பான்மை கிடைக்காதபட்சத்தில் மட்டுமே அமைச்சர் பதவிகளைக் கோரும் என்று முடிவு எடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

திமுக கூட்டணியை உடைத்தால், அதன் தாக்கம் தமிழ்நாட்டோடு நிற்காது. தேசிய எதிர்க்கட்சிகளின் 'இந்தியா' கூட்டணி முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தி, இந்திய அரசியலின் அடிப்படைகளையே மாற்றிவிடும் என்று காங்கிரஸ் தேசிய தலைமை அஞ்சுவதாக கூறப்டுகிறது. திமுக வெளியேறினால், மம்தா பானர்ஜி, தேஜஸ்வி யாதவ், சரத் பவார் இந்தியா கூட்டணியில் நீடிப்பது சந்தேகமே. அவர்களுக்கு இக்கூட்டணி வெறும் தேர்தல் கணக்கீடு, உணர்வுபூர்வமானது அல்ல. தெற்கின் முக்கிய தூணான திமுகவை இழப்பதை அவர்கள் விரும்பமாட்டார்கள்.

'இந்தியா' கூட்டணியில் உள்ள பிராந்தியக் கட்சிகள் கூட்டாக வென்ற சுமார் 100 தொகுதிகளுக்கு , அடுத்த தேர்தலில் சிக்கல் ஏற்படும். ஒருங்கிணைப்பு இல்லாததால் வாக்குகள் பிளவுபட்டு, மும்முனைப் போட்டிகள் உருவாகி, எதிர்க்கட்சி அரசியல் விரைவாகச் சிதறிவிடும். தமிழ்நாட்டில் காங்கிரஸுக்கு இதன் தாக்கம் மிகவும் கடுமையானதாக இருக்கும். திமுகவின் ஆதரவின்றி, தற்போதுள்ள காங்கிரஸ் எம்.பி.க்கள் யாரும் மீண்டும் பாராளுமன்றத்துக்குச் செல்ல முடியாது.  . இந்தக் கூட்டணி வெறும் கூடுதல் பலம் அல்ல, அதுவே காங்கிரஸின் உயிர்நாடி. இந்திய அரசியலில், கூட்டணிகள் என்பது உயிர்வாழும் கட்டமைப்புகள். ஒரு முக்கிய தூண் அகற்றப்பட்டால், முழு கூரையும் இடிந்து விழும் அபாயம் உள்ளது.

பன்னீர்ச்செல்வம்,சசிகலா,தினகரன் ஆகிய மூவரையும் கட்சியில் சேர்க்க மாட்டேன் எனச் சபதம் செய்த எடப்பாடி தற்போது தினகரனை  செங்கம்பளம் விரித்து வரவேற்றுள்ளார்.வெளியே போன அண்ணா திராவிட வாக்குகள் திரும்பவும்  கிடைக்கும். இதைத் தவிர  எடப்பாடிக்கு எந்த இலாபமும் இல்லை.தினகரனுக்கு அதிர்ஷ்டம் அடித்துள்ளது. ஏழு தொகுதிகலும் ஒரு எம் பி பதவியும் கொடுக்கப்படும் என தினகரனுக்கு உறுதியளிக்கப்பட்டுள்ளதாம். துரோகத்திற்கான நோபல் பரிசை கொடுத்தால், அதனை எடப்பாடி பழனிசாமிக்கு கொடுக்க வேண்டும் என்று டிடிவி தினகரன் சில வாரங்களுக்கு முன் விமர்சித்திருந்தார்.

அதிமுக தலைமையிலான என்டிஏ கூட்டணியில் அமமுக இணைந்துள்ளது என்ற  அறிவிப்பை வெளியிட்ட தினகரன் ,மத்திய அமைச்சர் பியூஷ் கோயலை   சந்தித்தார்.   அதிமுகவுடன் இருப்பது பங்காளி சண்டை மட்டும்தான் என்றும், விட்டுக் கொடுப்பவர்கள் கெட்டுப் போவதில்லை என்றும் கூறி இருந்தார். ஆனாலும் எடப்பாடி பழனிசாமியுடன் டிடிவி தினகரன் சந்திப்பு நடத்தாதது பேசுபொருளாகி இருக்கிறது. இந்த நிலையில் எடப்பாடி பழனிசாமி டிடிவி தினகரனை வரவேற்று ஒரு பதிவை வெளியிட்டுள்ளார். 

தினகரன் சட்டசபை உறுப்பினராவார். அவரின் கட்சியைச் சேர்தவர்களில்  ஒருவர் அல்லது. இரண்டு பேர் சிலவேளை வெற்றி பெறலாம். சட்டசபை உறுப்பினர் பதவியை இராஜினாமாச் செய்து விட்டு தினகரன் எம்பியாவார். அப்போது நடக்கும் தேர்தலில் சில வேளை அந்தத்தொகுதி திமுகவின் கைக்குப் போகலாம். ஊழல் வழக்குகளில் சிக்கிய தினகரன்  பாரதீய ஜனதாவின் கொள்கைப்படி இப்போது புனிதனாகி விட்டார்.

 மாவட்டம் ஒரத்தநாடு சட்டமன்றத் தொகுதி எம்.எல்.ஏ. வைத்திலிங்கம், ஆலங்குளம் தொகுதி உறுப்பினர்  மனோஜ் பாண்டியன் ஆகிய இருவரும்  இராஜிநாமாச் செய்து விட்டு திமுகவில் இணைந்தார்கள். இவர்கள்  இருவரும்  பன்னீரின் தீவிர ஆதர்வாளர்கள்.

அதிமுகவில் இருந்து வெளியேற்றப்பட்ட முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன், தனது கோபிசெட்டிப்பாளையம் சட்டமன்ற உறுப்பினர் பதவியை இராஜினாமா செய்த. பின்னர், தவெக தலைவர் நடிகர் விஜய் முன்னிலையில், அவரது கட்சியில் இணைந்தார்.

, வால்பாறை தொகுதியின் அதிமுக எம்.எல்.ஏ. அமுல் கந்தசாமி கடந்த ஆண்டு ஜூன் மாதம் காலமானார்.  சேந்தமங்கலம் தொகுதி எம்.எல்.ஏ. பொன்னுசாமி கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் மறைந்தார். இந்த இரண்டு தொகுதிகளும் ஏற்கனவே காலியாக இருந்த நிலையில், தற்போது இராஜினாமாக்கள் காரணமாக காலியான தொகுதிகளின் எண்ணிக்கை ஐந்தாக உயர்ந்துள்ளது.

இதனால் அதிமுகவின் வாக்கு வங்கியில் சரிவு ஏற்பட்டுள்ளது. கூட இருந்தவர்கள் வெளியேறியதாலும், பாரதீய ஜனதா கைவிட்டதாலும்  பன்னீர்ச்செல்வம் தனிமரமாக இருக்கிறார்.  எடப்பாடியை எதிர்ப்பவர்கள் கட்சியை விட்டு வெளியேறிவிஜயுடன் இணைவார்கள் என செங்கோட்டியன் சொன்னார். அங்கிருந்து  வெளியேறுவதாகத் தெரியவில்லை.

தேர்தல் திகதி இன்னமும் அரிவிக்கப்படவில்லை தேர்தல் விஞ்ஞாபனத்தை எடப்பாடி வெளியிட்டுள்ளார். பெண்களுக்கு இலவச பஸ் பயணம்  மக்கள் மத்தியின் வெற்றி பெற்றதால் ஆண்களுக்கும் இலவச பஸ் பயணம் என அறிவித்துள்ளார்.

ஆட்சியைக் கைப்பறுவதற்காக அதிமுக வியூகம் அமைத்து வருகிறது. இந்த நிலையில், அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தனது முதற்கட்ட தேர்தல் வாக்குறுதியை அறிவித்துள்ளார்.

, சமூகத்தில் பொருளாதார சமநிலையை உருவாக்கிட, குலவிளக்கு திட்டத்தின் மூலம் அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும், ஒவ்வொரு மாதமும் உதவித் தொகையாக ரூபாய் 2,000 வழங்கப்படும். இத்தொகை குடும்பத் தலைவியின் வங்கிக் கணக்கில் செலுத்தப்படும். திமுக 1500 ரூபா வழங்குகிறது.

நகரப் பஸ்களில் பயணம் செய்யும் ஆண்களுக்கு கட்டணமில்லா   பயணத் திட்டம் செயல்படுத்தப்படும். திமுகவால் அறிமுகப்படுத்தப்பட்ட  ஏற்கெனவே நடைமுறையில் இருக்கும், நகரபஸ்களில்  பயணம் செய்யும் மகளிருக்கான கட்டணமில்லா பேருந்து பயணத் திட்டம் தொடர்ந்து செயல்படுத்தப்படும்.

 ஒரே குடும்பத்தில் வசிக்கும் பட்டியலின மக்கள், அவர்களுடைய மகன்கள் திருமணமாகி தனிக்குடித்தனம் செல்கின்றபோது, அரசே இடம் வாங்கி, அவர்களுக்கு கான்கிரீட் வீடுகள் கட்டித் தரப்படும். கலைஞர் வீட்டுத்திட்டத்தை திமுக நடைமுறைப்படுத்தி வருகிறது.

100 நாட்கள் வேலைவாய்ப்புத் திட்டம் 125 நாட்களாக உயர்த்தப்படும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. கிராமப்புறங்களின் வளர்ச்சிக்கான இத்திட்டம், 150 நாட்கள் வேலைவாய்ப்புத் திட்டமாக உயர்த்தப்படும்.

அம்மா இருசக்கர வாகனம் வழங்கும் திட்டம் மூலம் மகளிருக்கு ரூ. 25,000 மானியத்துடன், 5 லட்சம் மகளிருக்கு அம்மா இருசக்கர வாகனங்கள் வழங்கப்படும் என எடப்பாடி பழனிசாமி ஐந்து வாக்குறுதிகளை அளித்துள்ளார்.

'அம்மா இல்லம் திட்டம்' மூலம், கிராமப்புறங்களில் குடியிருப்பதற்கு சொந்த வீடு இல்லாதவர்களுக்கு, அரசே இடம் வாங்கி கான்கிரீட் வீடுகள் கட்டித் தரப்படும். அதேபோல், நகரப் பகுதிகளில் சொந்த வீடு இல்லாதவர்களுக்கு, அரசே இடம் வாங்கி அடுக்குமாடி வீடுகள் கட்டி 'அம்மா இல்லம் திட்டம்' மூலம் விலையில்லாமல் வழங்கப்படும்.

பிரேமலதா வழக்கம் போல எந்த முடிவையும் எடுக்காது  காத்திருக்கிறார். காங்கிரஸ் வெளியேறினால், பிரேமலதாவை உள்ளே கோண்டுவரும் முடிவில்  ஸ்டலின் இருந்தார். காங்கிரஸை  சமாளிக்க  வேணை இருப்பதால்  ஸ்டாலினின் பார்வையில் இருந்து பிரேமலதா வெளியேறிவிட்டார். எடப்பாடியின் முடிவுக்கு பிரேமலத காத்திருக்கிறார். பிரேமலதா விரும்புவதை எடப்பாஅடி கொடுக்காவிட்டால், அவரது கார் விஜயின் பனையூருக்குச் செல்லும்.

பாட்டாளி மக்கள் கட்சியை அப்பாவும், மகனும்  பிரித்துவிட்டார்கள். கட்சியின் சின்னமான மாம்பழத்துக்கு இருவரும் உரிமைகோருகிறார்கள். தமிழகத்தின் அடுத்த முதலமைச்சர் என்ற  கோதாவில் இருந்து  வெளியேறிய அன்புமணி எடப்பாடியிடம்  ச‌ரணடைந்து விட்டார்.   ஸ்டாலினுடன் சேர்வதற்கான நாளை எதிர் பார்த்திருக்கிறார்  ராமதாஸ்.

தேர்தல் திகதி அறிவிக்கப்பட்ட பின்னர் தமிழக தேர்தல் களம்   இதை விடச்சூடாக இருக்கும்  என்கிறார்கள் அரசியல் விமர்சகர்கள்.

 

ரமணி

25/1/26 

 

ஒலிம்பிக் கொப்பரைகளுக்கான வடிவமைப்பு வெளியிடப்பட்டது


 மிலானோ கோர்டினா 2026 இன் அனுரசரணையரான ஃபின்காண்டியேரியுடனான கூட்டாண்மை மூலம் உருவாக்கப்பட்ட இந்த கொப்பரைகள் மார்கோ பாலிச், லிடா காஸ்டெல்லி  , பாவ்லோ ஃபான்டின் ஆகியோரின்  உழைப்பாகும்.. வாழ்க்கை, ஆற்றல் மற்றும் புதுப்பித்தலின் முதன்மை ஆதாரமாகவும், தொடர்ச்சி மற்றும் மறுபிறப்பின் உலகளாவிய சின்னமாகவும் சூரியனுக்கு அவர்கள் மரியாதை செலுத்துகிறார்கள்.

இந்த வடிவமைப்பு இத்தாலிய கலைஞர் டா வின்சி ,அவரது முடிச்சுகளால் ஈர்க்கப்பட்டது, இது இயற்கைக்கும் மனித புத்தி கூர்மைக்கும் இடையிலான நல்லிணக்கத்தைக் குறிக்கிறது. மறுமலர்ச்சி காலத்தின் மிகவும் பிரபலமான கலைஞர்களில் ஒருவருக்கும் மிலனுடனான அவரது வரலாற்று தொடர்புக்கும் அஞ்சலி, அவரது டியூக், லுடோவிகோ ஸ்ஃபோர்ஸா, டா வின்சியின் குருவாகவும் ஆதரவாளராகவும் இருந்தார்.

வலிமையான மற்றும் இலகுவான பொருட்களில் ஒன்றான விமான அலுமினியத்தால் ஆன இந்த கொப்பரைகள், திறப்பு ,மூடுதல் இயக்கத்தை உருவாக்கும் மாறும் கட்டமைப்புகளாகும், இது காலத்தின் தொடர்ச்சிக்கும் பகல் ,இரவுக்கு இடையிலான இயற்கையான மாற்றத்திற்கும் சாட்சியமளிக்கிறது. விரிவடைந்து சுருங்க வடிவமைக்கப்பட்ட அவை, ஒரு கலசத்தைப் போல, ஒலிம்பிக் சுடரின் விலைமதிப்பற்ற தன்மையை வெளிப்படுத்தி பாதுகாக்கின்றன.

இந்த அமைப்பு மாறி வடிவவியலைக் கொண்டுள்ளது, மூடியிருக்கும் போது 3.1 மீற்ற‌ரிலிருந்து திறந்திருக்கும் போது 4.5 மீற்ற‌ராக விரிவடையும் விட்டம் கொண்டது. சிக்கலான இயந்திர அமைப்பு 244 பிவோட் புள்ளிகள் மற்றும் 1,440 கூறுகளை ஒருங்கிணைக்கிறது, அவை ஊசிகள் மற்றும் தாங்கு உருளைகளில் பொருத்தப்பட்டுள்ளன. அதன் மையத்தில், சுடர் ஒரு கண்ணாடி மற்றும் உலோக கொள்கலனில் மூடப்பட்டிருக்கும் மற்றும் நிலையான இயற்கை விளைவுகளைப் பயன்படுத்துகிறது: பொருள் வீழ்ச்சி இல்லை, குறைந்த ஒலி தாக்கம், குறைந்தபட்ச புகை உமிழ்வு மற்றும் பொதுமக்களுடன் தொடர்பு கொள்ளும் சூழல்களுக்கு முழுமையான பாதுகாப்பானது.

  

பொல்லார்ட் சாதனை சமன் ரசல் சாதனை உடைப்பு அபிஷேக் சர்மா புதிய சாதனை


   நியூசிலாந்துக்கு எதிராக  நாக்பூரில் நடந்த   முதல்  ரி20 போட்டியில்   48 ஓட்டங்கள் வித்தியாசத்தில் இந்தியா  வென்றது.   அபிஷேக் ஷர்மா 84 ஓட்டங்கள் அடித்தார்.

  சர்வதேசம், உள்ளூர்  , ஐபிஎல் ஆகிய அனைத்து விதமான ரி20 தொடர்களில் அபிஷேக் ஷர்மா 2898 பந்துகளில் 5000 ஓட்டங்கள் கடந்துள்ளார். ரி 20 கிறிக்கெற்றில் பந்துகள் அடிப்படையில் வேகமாக 5000 ஓட்டங்கள் அடித்த வீரர் என்ற ஆண்ட்ரே ரசல் சாதனையை உடைத்துள்ள அவர் புதிய உலக சாதனை படைத்துள்ளார்.

1. அபிஷேக் சர்மா (இந்தியா): 2895*

2. ஆண்ட்ரே ரசல் ( மேற்கு இந்தியா): 2942

3. டிம் டேவிட் (அவுஸ்திரேலியா): 3117

4. வில் ஜேக்ஸ் (இங்கிலாந்து): 3196

5. கிளன் மேக்ஸ்வெல் (அவுஸ்திரேலியா):

 நியூசிலாந்துக்கு எதிராக நடைபெற்ற ஒரு ரி20 போட்டியில் 2வது அதிக (8) சிக்ஸர்கள் அடித்த வீரர் கைரன் பொல்லார்ட் சாதனையையும் அபிஷேக் ஷர்மா சமன் செய்துள்ளார்.  2020ஆம் ஆண்டு ஆக்லாந்து மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் நியூசிலாந்துக்கு எதிராக வெஸ்ட் இண்டீஸ்க்காக பொல்லார்ட்டும் 8 சிக்ஸர்கள் அடித்துள்ளார். 2012 ஹமில்டன் போட்டியில் நியூசிலாந்துக்கு எதிராக தென்னாப்பிரிக்காவின் ரிச்சர்ட் லெவி 13 சிக்சர்கள் அடித்து முதலிடத்தில் இருக்கிறார்.

இந்த போட்டியின் போது தான் சந்தித்த 22-வது பந்தில் அவர் அரைசதம் கடந்து அசத்தினார். இதன் மூலம் சர்வதேச ரி20 போட்டிகளில் 25 பந்துகளுக்கு குறைவாக அதிக முறை அரைசதம் எடுத்த சர்வதேச வீரர் என்ற சாதனையை நிகழ்த்தியுள்ளார்.

 முன்னதாக பிலிப் சால்ட், சூரியகுமார் யாதவ், எவின் லூயிஸ் ஆகியோர் 25 பந்துகளுக்கு குறைவாக ஏழு முறை அரைசதம் கடந்துள்ளனர். அவர் 22 பந்துகளில் அரைசதம் அடித்ததன் மூலம் எட்டாவது முறையாக ரி20 போட்டிகளில் 25 பந்துகளுக்கும் குறைவாக அரைசதம் அடித்து மாபெரும் சாதனை ஒன்றை நிகழ்த்தியுள்ளார்.

  

Friday, January 16, 2026

தலையிடி கொடுக்கும் தமிழக காங்கிரஸ் பொறுமை காக்கும் ஸ்டாலின்


 

அரசியல் பேசும் ஜனநாயகன், பராசக்தி ஆகிய படங்களால் தமிழக அரசியல் சூடாகி உள்ளது.

திமுகவின் பிரசார திரைப்படமான பராசக்தியை எதிர்க்கிறது காங்கிரஸ். பராசக்திக்கு வலுச் சேர்க்கிறது பாரதீய ஜனதா 

திராவிட முன்னேற்றக் கழகம் மிக வலுவாக இருப்பதாகஅரசியல் விமர்சகர்கள் அடிக்கடி  சொல்லி வந்தர்கள். இப்போது அந்தக் கூட்டணிகுள்  ஓட்டை விழும் கரியங்கள் நடைபெறுகின்றன. 2021 ஆம் ஆண்டுமுதல் பலமான கூட்டணியாக இருக்கிறது.விஜய் கட்சி ஆரம்பித்தபோதும் கூட்டணிக்குள் சலசலப்பு எழவில்லை. அதிக தொகுதிகளைப் பெறுவதற்காக தமிழக காங்கிரஸ்காரர்கள் அவ்வப்போது சலசலப்பை ஏற்படுத்துவது வழமையானது. டில்லியில் இருந்து உத்தரவு வந்ததும் அவர்கள் வாயைப் பொத்திக் கொள்வர்கள்.

ஆனால், இம்முறை டில்லித் தலைவர்கள் தமது திருவிளையாடலை ஆரம்பித்துள்ளார்கள். கனன்றுகொண்டிருக்கும் பிரச்சனையை தமிழகத்தலைவர்கள்  ஊதிப் பெரிதாக்குகிறார்கள். கூட்டணியில் இருகும் கட்சிகள் எழுப்பும் சாதாரண  பிரச்சனைதான் இப்போது விஸ்வரூபம் எடுத்துள்ளது. ஆட்சியில் பங்கு வேண்டும். முகியமான அமைச்சரவை வேண்டும், துணை முதல்வர் பதவி வேண்டும்  போன்ற கோஷங்களை காங்கிரஸ் கட்சி எழுப்புகிறது.ராகுலின் நெருங்கிய சகாக்களான . சோடங்கர், பிரவீண் சக்ரவர்த்தி போன்றவர்கள் கூட்டணி ஆட்சிக்குக் குரல் கொடுக்கிறார்கள்.இது ராகுலுகுத் தெரியாமல் நடக்க வாய்ப்பு இல்லை. கூட்டணி ஆட்சி என்ற  கோஷத்தை காங்கிரஸ் எம்பி மாணிக்கம் தாகூர் வலுவாகத் தூக்கிப் பிடிக்கிறார். காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரான .சிதம்பரம் இந்த விஷயத்தில்  காங்கிரஸ்தலைவர்களின் கருத்துக்கு எதிராக  இருக்கிறார்.

விஜயின் பனையூர் அலுவலகத்துக்கு  காங்கிரஸ் பிரமுகரான பிரவீன் சககரவர்த்தி சென்ற போது  திராவிட முன்னேற்றக் கழகம் உஷாரானது. டில்லித் த்லைவர்கள் அதனைச் சமாளித்து விட்டார்கள். கூட்டணிக்கு வரும் கட்சிகளுக்கு ஆட்சியில் பங்கு,துணை முதல்வர் பதவி, அதிக தொகுதிகள் என விஜய்  பேச்சு வார்த்தைக் கதவை மிக அகலமாகத் திறந்து வைத்துள்ளார். விஜயின் அறிவிப்பால் தமிழகக் காங்கிரஸ் பிளவு பட்டுள்ளது. அதிக தொகுதி, ஆட்சியில் பங்கு  என்ற மாய மந்திரம், தமிழக காங்கிரஸ் தலைவர்களை ஆட்டம் காண வைத்துள்ளது. விஜயை வைத்து  அதிக தொகுதிகளைக் கேட்பதுதான் காங்கிரஸின் அஸ்திரமாக  இருந்திருக்க வேண்டும். பதவி ஆசையால்  தமிழக காங்கிரஸ் தலைவர்கள் விஜயின் பக்கம் சாயத்தொடங்கி விட்டார்கள். தெலுங்கானாவில்  விஜய் ரசிக்ர்கள் இருப்பதாக் தமிழகத்தில் விஜயுடன் கூட்டணி சேருமாறு  அந்த மாநிலத் தலைவர்கள் டெல்லிக்கு நெருக்கடி கொடுக்கிறார்கள். தமிழகத்தில் விஜயுடன் காங்கிரஸ் சேஎர்ந்தால் தெலுங்கானாவில் தாம் வெற்றி பெறலாம் ந்ன அந்த மாநிலத் தலைவர்கள் கணக்குப் போடுகிறார்கள்.தெலுங்கானாவின் கோருக்கையைப் பரிசீலிக்க வேண்டிய நிலையில் ராகுல் இருக்கிறார்.

திராவிட முன்னேற்றக் கழகத்தில் இருந்து  காங்கிரஸ் வெளியேறினால் இரண்டு கட்சிகளுக்கும் இழப்பு ஏற்படும்அதனால், காங்கிரஸ் கட்சிக்கு மிகப் பெரிய இழப்பு ஏற்படும். திராவிட முன்னேற்றக் கழகத்துக்குரிய வாக்குகளை காங்கிரஸ் பிரிக்கலாமே தவிர எதிர் பார்க்கும் வெற்றி அதற்குக் கிடைக்கப்போவதில்லை.

கூட்டணியில் இருந்து காங்கிரஸ் வெளியேறினால் அதனால் ஏற்படும் வாக்கு இழப்பை நிவர்த்தி செய்யும் திட்டத்தை ஸ்டாலின் வைத்திருக்கிறார். திராவிட முன்னேற்றக் கழகத்துடன் சேர விரும்பும் பிரேமலதாவை காத்திருக்க வைத்துள்ளது திராவிட முன்னேற்றக் கழகம். அதுமட்டுமல்லாது விடுதலைச் சிறுத்தைகளுக்கும், கொம்யூனிஸ்ட் கட்சிகளுக்கும் அதிக தொகுதிகளைக் கொடுக்கும் எண்ணமும் ஸ்டாலினிடம் இருக்கிறது.

 விஜய்யின் 'ஜனநாயகன்' திரைப்படத்திற்கு ஆதரவாக காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி வெளியிட்டுள்ள பதிவு, தமிழக அரசியலில் பெரும் விவாதத்தை கிளப்பியுள்ளது. இது வெறும் மக்கள் தொடர்பிற்காக மட்டும் அல்லாமல், வரவிருக்கும் சட்டமன்றத் தேர்தலுக்கான கூட்டணி மாற்றங்கள் மற்றும் தொண்டர்களின் மனநிலையை நோக்கமாகக் கொண்ட ஒரு சிக்னலாகவே அரசியல் நிபுணர்களால் பார்க்கப்படுகிறது.

நீலகிரி மாவட்டம் கூடலூரில் உள்ள செயின்ட் தாமஸ் ஆங்கில மேல்நிலைப் பாடசாலையின் பொன்விழா கொண்டாட்டத்தில் பங்கேற்பதற்காக தமிழகம் வருவதற்கு முன்னதாக, ராகுல் காந்தி தனது ‘X’ தளத்தில்  "ஜனநாயகன் திரைப்படத்தைத் தடுக்க தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சகம் முயற்சிப்பது தமிழ் கலாச்சாரத்தின் மீதான தாக்குதலாகும். மோடி அவர்களே, தமிழ் மக்களின் குரலை ஒடுக்குவதில் நீங்கள் ஒருபோதும் வெற்றி பெற மாட்டீர்கள்," என்று   குறிப்பிட்டுள்ளார்.

தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கு முன்னதாக, காங்கிரஸில் உள்ள ஒரு பிரிவினர் தமிழக வெற்றிக் கழகத்துடன்    தேர்தல் கூட்டணி கொள்ள விரும்புவதாக நிலவும் யூகங்களுக்கு மத்தியில் இந்த பதிவு வந்துள்ளது. ராகுல் காந்தியைத் தொடர்ந்து, தமிழக காங்கிரஸ் எம்.பி-க்கள் மாணிக் தாகூர், ஜோதிமணி , அகில இந்திய புரொபஷனல் காங்கிரஸ் தலைவர் பிரவீன் சக்ரவர்த்தி ஆகியோரும் படத்திற்கு ஆதரவாகவும், படத்திற்கு முட்டுக்கட்டை போடுவதாகக் கூறி தணிக்கை சபையை விமர்சித்தும் பதிவுகளை வெளியிட்டுள்ளனர்.

கரூர் நெரிசல் சம்பவத்திற்குப் பிறகு பிரவீன் சக்ரவர்த்தி விஜய்யைச் சந்தித்ததாக வெளியான செய்திகள், இவ்விரு கட்சிகளுக்கும் இடையே இரகசியப் பேச்சுவார்த்தை நடப்பதாகக் கூறப்படும் வதந்திகளுக்கு வலு சேர்த்தன. அதே நேரத்தில், காங்கிரஸின் ஒரு பகுதியினர் தமிழகத்தில் அதிகாரப் பகிர்வு ,கூடுதல் தொகுதிகளை  ஒதுக்கக் கோரி குரல் எழுப்பி வருகின்றனர்.

 இத்தனை களேபரங்களுக்கு மத்தியில் காங்கிரஸ் தலைமை ஆளும் திமுகவுடனான கூட்டணியைத் தொடர்வதில் உறுதியாக இருப்பதாகத் தெரிகிறது.   தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் மூத்த தலைவர் ஒருவர் கூறுகையில், "கூட்டணி மற்றும் தொகுதிப் பங்கீடு குறித்து எங்களது குழு ஏற்கனவே முதல்வர் ஸ்டாலினைச் சந்தித்துள்ளது. கட்சியில் வெவ்வேறு கருத்துக்கள் இருந்தாலும், இறுதி முடிவை தேசிய தலைமைதான் எடுக்கும்," என்றார். விருதுநகர் எம்.பி மாணிக் தாகூர் இது குறித்து கூறுகையில், "ராகுல் காந்தியின் பதிவு மத்திய நிறுவனங்கள் தவறாகப் பயன்படுத்தப்படுவதை எதிர்த்தே வெளியிடப்பட்டது. நாங்கள் இன்னும் திமுக கூட்டணியில் தான் உறுதியாக இருக்கிறோம்," எனத் தெளிவுபடுத்தினார்.

சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய பிரவீன் சக்ரவர்த்தி, இந்தப் பதிவு தமிழ் கலாசாரம் பாரம்பரியம் என்பனவற்றைப்  பாதுகாப்பது தொடர்பானது மட்டுமே தவிர, இதில் தேர்தல் அரசியல் ஏதுமில்லை என்று கூறினார். இப்போதைக்கு காங்கிரஸ்கட்சி கூட்டணியில் இருந்து வெளியேறாது என்ற செய்தியால் திராவிட முன்னேற்றக் கழகம் நிம்மதியடைந்துள்ளது.

மத்திய இணை அமைச்சர் எல். முருகனின் டெல்லி இல்லத்தில் நடைபெற்ற பொங்கல் விழாவில் பிரதமர் நரேந்திர மோடி சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டார். இந்த விழாவில் தமிழகத்தைச் சேர்ந்த பாரதிய ஜனதா கட்சித் தலைவர்களுடன், ‘பராசக்தி’ படத்தின் நடிகர்கள் சிவகார்த்திகேயன், ரவி மோகன் ஆகியோருடன் இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் உள்ளிட்டோர் பங்கேற்றது  அரசியலாகி உள்ளது.

ஹிந்தித் திணிப்புக்கு எதிராக வெளியாகியுள்ள பராசக்தி படக்குழுவினருக்குப் பிரதமர் நரேந்திர மோடி தரப்பில் இருந்து அழைப்பு விடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது. தமிழகத்தில் மோடி அரசு ஹிந்தியைத் திணிப்பதாக குற்றச் சாட்டு எழுந்துள்ள நிலையில் ஹிந்தி எதிர்ப்புப் ப்டமான பராஅசக்தியை மோடி ஆதரிப்பதும் அரசியல்தான்.

தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் நடித்த ஜனநாயகனுக்கு ஆதரவாக மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி  குரல் கொடுத்த   மறுநாளே பிரதமர் மோடி கலந்துகொண்ட நிகழ்ச்சியில், பராசக்தி படக் குழுவினர் பங்கேற்றது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஹிந்தி எதிர்ப்புப் போராட்டத்தை அடுத்த தலை முறைக்குக் கடத்துவதற்காக  உதயநிதியின் தயாஅரிப்பில் வெளியான படம்அராசக்தி. அந்தக் காலத்தில் காங்கிரஸ் கட்சியால் தமிழகத்தில் அரங்கேற்றப் பட்ட அரசியல் பழிவாங்கல்களை பராசக்தி படம் கூறுகிறது. காங்கிரஸ் கட்சி எதிர்க்கு  படத்தை பாரதீய ஜனதா  பாராட்டுகிறது.

தமிழ்க சட்டமன்றத் தேர்தல் நெருங்குகையில் இன்னும் பல அதிரடிகள் அரங்கேறும் வாய்ப்பு பிரகாசமாக உள்ளது.

 

ரமணி

18/1/26

 

அடக்கு முறைக்கு எதிராக ஈரானைத் திணறடிக்கும் அரபுப் புரட்சி

ஈரானிய மக்களைக் காப்பாற்ற ட்ரம்பிடம் கோரிக்கை விடுத்த பட்டத்து இளவரசர். 

  ஈரனியப் புரட்சி அரபு நாடுகளைப் பாதிக்கும் அபாயம் உள்ளது.

அமெரிக்காவுக்கு எதிரான மன நிலையில்  அரபு நாடுகள் உள்ளன.

 

இரட்டை இலக்க பணவீக்கம், ஈரான் நாணயத்தின் தொடர் மதிப்பிழப்பு, வேலைவாய்ப்பின்மை  பொருளாதார காரணங்களால்  மிகவும் பாதிக்கப்பட்ட மக்கள் அரசுக்கு எதிராக வீதிகளில் இறங்கிப் போராடத் தொடங்கி உள்ளனர். போராட்டக் காரர்களை அடக்குவதற்கு ஈரான் அரசாங்கம்  தனது சக்தியைப் பிரயோகிக்கிறது.

  இதனால் ஈரான் முழுவதும் அசாதாரண நிலை உருவாகியுள்ளது.  கடந்த டிசம்பர்  28 ஆம் திகதி  ஆரம்பமான அரசுக்கு எதிரான போராட்டங்கள் வலுப்பெறான.அரசுத் தலைவர் அயதுல்லா கொமெனிக்கு எதிராக மக்கள் வீதிகளில் இறாங்கிப் போராடத் தொடங்கிவிட்டனர். சுமார் 30 க்கும் மேற்பட்ட  மாகாணங்களில் 100 க்கும் அதிகமான  நகரங்களில் தீவிரமான போராட்டங்கள் நடை பெறூகின்றன.போராட்டங்களை அடக்குவதற்கு இராணுவம் களம்  இறக்கப்பட்டுள்ளது. சில இடங்களில் வன்முறைகள் ந‌டைபெற்றன. கடந்த வியாழக்கிழமைவரை சுமார்  3,500 பேர் பலியாகினர். 10 ஆயிரத்துக்கும் அதிகமானவர்கள் கைது செய்யப்பட்டனர்.

1979 ஆம் ஆண்டு ஈரானியப் புரட்சியின் மூலம் மன்னராட்சி முடிவுக்குக் கொண்டு வரப்பட்டு இஸ்லாமியத் தலைவரின் கையில் ஆட்சி ஒப்படைக்கப்பட்டது. மீண்டும் ஒரு புரட்சி  ஈரானில்  ஆரம்பமாகி உள்ளது.

ஈரானில் நடைபெறும் போராட்டத்தை அமெரிக்கா உன்னிப்பாகக் கவனித்துக் கொண்டு இருக்கிறது. போராட்டக் காரர்களுக்கு  ட்ரம்ப்  ஆதரவு தெரிவித்துள்ளார்.  போராடுபவர்களைக் கொல்லக்கூடாது. கைது செய்பவர்களுக்குத் தூக்குத் தண்டனை விதிக்கக்கூடாது என ட்ரம்ப் அறிவித்துள்ளார்.

தனது நாட்டு உள் விவகாரத்தில்  ட்ரம்ப் மூக்கை நுழைப்பதை ஈரான் விரும்பவில்லை.  ஈரான்  ஊடகம்  ட்ரம்புக்கு மிரட்டல் விடுத்துள்ளது.   கடந்த 2024-ம் ஆண்டு பிரசார கூட்டத்தின் போது    ட்ரம்ப் மீது நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில், அவர் காதில் குண்டு உரசிச் சென்று காயமடைந்தார். அந்த புகைப்படத்தை வெளியிட்ட ஈரான் அரசு ஊடகம், ‘இந்த முறை தோட்டாக்கள் இலக்கை தவற விடாது என்று கூறியதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த சம்பவம் பெரும் பரபரப்பையும், சர்ச்சையையும் ஏற்படுத்தியுள்ளது.

1979ல் ஏற்பட்ட புரட்சி போல் ஈரானில் அயதுல்லா அலி கமேனியின் பதவிக்கு சிக்கல் ஏற்படலாம் என்று கூட கருதப்படுகிறது. இதனை உணர்ந்த அரசு போராட்டத்தை கட்டுப்படுத்த இண்டர்நெட் சேவை துண்டிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தான்  அமெரிக்காவில் வசிக்கும் ஈரான் பட்டத்து இளவரசரான ரெசா பஹ்லவி  டொனால்ட்  ட்ர‌ம்பிடம் உதவி கேட்டுள்ளார். இந்த ரெசா பஹ்லவி தான் மக்கள் போராட்டத்துக்கு முக்கிய காரணம் என்று கூறப்படுகிறது. இவர் ஈரானின் அயதுல்லா கமேனிக்கு எதிரான நிலைப்பாடு கொண்டவர்.


ரெசா பஹ்லவி ஈரான் நாட்டை ஆட்சி செய்த கடைசி மன்னரின் மகன் ஆவார். கடந்த 1925 முதல் 1979ம் ஆண்டு வரையிலான காலக்கட்டத்தில் ஈரானில் ஆட்சி புரிந்த வம்சத்தின் பெயர் பஹ்லவி. கடந்த 1979ம் ஆண்டு மன்னராட்சிக்கு எதிராக புரட்சி வெடித்தது. அப்போது ஈரானை ஆட்சி செய்த மன்னர் பெயர் முகமது ரெசா பஹ்லவி. இவர் அமெரிக்காவின் கைப்பாவையாக செயல்பட்டார் எனக் குற்றம் சாட்டப்பட்டு  தூக்கி எறியப்பட்டார்.

1979 ஆம் ஆண்டு இஸ்லாமிய அமைப்பினர் மன்னராட்சிக்கு எதிராக போராட்டம் நடத்தினர். மன்னராட்சி முடிவுக்கு வந்தது. இதையடுத்து முகமது ரெசா பஹ்லவியின் குடும்பத்தினர் அமெரிக்கா சென்றனர். அதன்பிறகு தான் ஈரானின் உயர்மட்ட தலைவராக அயதுல்லா ருஹோல்லா கொமேனி பொறுப்பேற்றார். இவரது மறைவுக்கு பிறகு அயதுல்லா அலி கமேனி அந்த பொறுப்பில் உள்ளார். ஈரானின் கடைசி மன்னரான முகமது ரெசா பஹ்லவியின் மகன் ரெசா பஹ்லவி தான் தற்போது ட்ரம்பிடம் உதவி கேட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஈரான் - திரண்டு வந்து மக்கள் போராட்டம் முந்தைய போராட்டங்களைப் போலல்லாமல், இந்த இயக்கம் ஒரு குறிப்பிட்ட குழுவுக்குள் மட்டுமே இல்லை. தொழிலாளர்கள், மாணவர்கள், கடைக்காரர்கள், பொதுமக்கள் எனப் பல தரப்பினரும் பங்கேற்கின்றனர்.

 பொருளாதாரக் கோரிக்கைகளிலிருந்து அரசியல் அமைப்பை நேரடியாக விமர்சிக்கும் நிலைக்கு மாறியுள்ளன. ஈரானில் போராட்டங்கள் நீடித்து வரும் நிலையில், அதன் ஆட்சி கவிழ்ந்தால் என்ன நடக்கும் என்ற உலகளாவிய கேள்வி எழுகிறது. இதன் தாக்கம் ஈரானின் எல்லைகளைக் கடந்து, ஈரான் ஆதரிக்கும் அல்லது செல்வாக்கு செலுத்தும் பல நாடுகள் மற்றும் குழுக்களையும் பாதிக்கும்.

இஸ்லாமிய அரசாங்கங்கள், தங்கள் நாடுகளிலும் இதே போன்ற போராட்டங்கள் ஏற்படும் என்ற அச்சத்தில் ஈரானை உன்னிப்பாகக் கவனிக்கின்றன. ஒரு நபர் ஆட்சிகள், தேர்தல் இல்லாமல் நடக்கும் ஆட்சிகள் கலக்கமடைந்துள்ளன.

ஷியா பெரும்பான்மை நாடுகளில் அரசியல் குழப்பம், தலைமைத்துவப் போட்டி இதனால் எழலாம். வெளிநாடுகளில் ஷியா அமைப்புகள் மீதான ஈரானின் மத செல்வாக்கு பலவீனமடையும். மத ஆட்சியை மக்கள் கவிழ்க்க முடியும் முடியும் என்ற எண்ணம், அரசியல் ரீதியாக பெரிய புரட்சிகளை, பிரச்சனைகளை ஏற்படுத்தும். ஈரான் ஆதரவுக் குழுக்களில் தாக்கம்  ஹிஸ்புல்லா, ஹவுதிகள், ஈராக்கிய போராளிக் குழுக்கள் போன்ற ஈரானின் ஆதரவுப் பிரிவுகள் நிதியும் , ஆயுதங்களும்   தொடர்ந்து  கிடைக்க முடியாத நிலை ஏற்படலாம். இந்த நிலையில் இஸ்ரேலின் கை ஓங்கலாம். இஸ்ரேலை எதிர்த்துப் போராடும் குழுக்கள் பலவீனமடையலாம். ஏமன், சிரியா, லெபனான், ஈராக் போன்ற நாடுகளின் நிலையில் மாற்றமடையலாம்.

 ஈரான் தலைநகர் தெஹ்ரானில் அரசுக்கு எதிரான போராட்டங்கள் திங்கள்கிழமை முதல் மெல்ல மெல்ல குறைந்து வருவதாக தகவல் வெளியாகி வருகிறது.  கடந்த 10 ஆம் திகதி சனிக்கிழமை கைது செய்யப்பட்ட 26 வயது இளைஞர் எர்ஃபான் சோல்டானி-க்கு மரண தண்டனை விதிக்கப்பட்டதாக வெளியான அறிக்கைகளை ஈரான் நீதித்துறை மறுத்துள்ளது. இதை ஈரான் நீதித்துறை இந்த மறுப்பை அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளது. போராட்டம் குறைய இதுவும் முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது.


  பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, கட்டாரில் உள்ள அல் உதெய்த் விமானப்படை தளத்தில் இருந்து சில  இராணுவப் பணியாளர்களை வெளியேற  அமெரிக்கா அறிவுறுத்தியுள்ளது. இதற்கு முன்பு, ஈரானின் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தினால், அண்டை நாடுகளில் உள்ள அமெரிக்க ராணுவ தளங்களை குறிவைப்போம் என்று ஈரான் எச்சரிக்கை விடுத்திருந்தது.

ஈரானில் நடைபெறும் மக்கள் போராட்டங்களுக்கு மத்தியில் அமெரிக்கா இராணுவ தாக்குதல் நடத்த திட்டமிட்டு வருவது ஒட்டுமொத்த வளைகுடா நாடுகளின் அமைதியை கெடுக்கும் விஷயமாக உள்ளது. இந்த நிலையில் அமெரிக்காவின் இந்த முயற்சிக்கு முட்டுக்கட்டை போடும் வகையில் வளைகுடா நாடுகள் அடுத்தடுத்து முக்கிய அறிவிப்புகளை வெளியிடுகின்றன.  கடந்த வெள்ளிக்கிழமை சவூதி முக்கியமான அறிவிப்பு இன்றை வெளியிட்டுள்ளது.  ஈரான் நாட்டை தாக்க நினைத்தால் அமெரிக்க விமானங்களுக்கு சவூதி வான்பரப்பு, ராணுவ தளங்களை பயன்படுத்த அனுமதிக்க மாட்டோம் என்று சவூதி அரேபியா தெளிவாகவும், திட்டவட்டமாகவும் தெரிவித்துள்ளது. இதை சவுதி அரேபியா அரசு தரப்பில் அமெரிக்காவுக்கும், ஈரானுக்கும் தனது நிலைப்பாட்டை அதிகாரப்பூர்வமார தெரிவித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இது மத்திய கிழக்கில் புதிய பதற்றத்தை உருவாக்கியுள்ளது.  ஈரானின் மீது தாக்குதல் நடத்தக் கூடாது என கட்டாரும், ஓமானும்  இணைந்து வலியுறுத்தியுள்ளன. ரஷ்யாவும் சீனாவும் ஈரானுக்கு ஆதரவாகக் களத்தில் குதித்துள்ளன.

  இவற்றை எல்லாம்  மீறி ட்ரம்ப் என்ன செய்யப்போகிறார் என்பதை  அறிய உலகம் ஆவலாக உள்ளது.

 2010  ஆண்டுகளில்  துனிஷியா, சிரியா, எகிப்து என்று பல அரபு நாடுகள் வரிசையாக கவிழ்ந்தன‌. இதை அரபு புரட்சி என்பார்கள். அப்படித்தான் ஈரான் போராட்டத்தால் அரபு புரட்சி 2.0 என்று சொல்கிறார்கள். ஈரானில் அமைதி ஏற்பட்டால்தான்  உலக நாடுகளில் அமைதி ஏற்படும். 

வர்மா

18,1,26