நியூசிலாந்துக்கு எதிராக நாக்பூரில் நடந்த முதல் ரி20 போட்டியில் 48 ஓட்டங்கள் வித்தியாசத்தில் இந்தியா வென்றது. அபிஷேக் ஷர்மா 84 ஓட்டங்கள் அடித்தார்.
சர்வதேசம், உள்ளூர் , ஐபிஎல்
ஆகிய அனைத்து விதமான ரி20 தொடர்களில் அபிஷேக்
ஷர்மா 2898 பந்துகளில் 5000 ஓட்டங்கள் கடந்துள்ளார். ரி 20 கிறிக்கெற்றில் பந்துகள் அடிப்படையில் வேகமாக 5000 ஓட்டங்கள் அடித்த வீரர் என்ற ஆண்ட்ரே ரசல்
சாதனையை உடைத்துள்ள அவர் புதிய உலக
சாதனை படைத்துள்ளார்.
1. அபிஷேக்
சர்மா (இந்தியா): 2895*
2. ஆண்ட்ரே
ரசல் ( மேற்கு இந்தியா): 2942
3. டிம்
டேவிட் (அவுஸ்திரேலியா): 3117
4. வில்
ஜேக்ஸ் (இங்கிலாந்து): 3196
5. கிளன்
மேக்ஸ்வெல் (அவுஸ்திரேலியா):
நியூசிலாந்துக்கு
எதிராக நடைபெற்ற ஒரு ரி20 போட்டியில்
2வது அதிக (8) சிக்ஸர்கள் அடித்த வீரர் கைரன் பொல்லார்ட் சாதனையையும் அபிஷேக் ஷர்மா சமன் செய்துள்ளார்.
2020ஆம் ஆண்டு ஆக்லாந்து மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் நியூசிலாந்துக்கு எதிராக வெஸ்ட் இண்டீஸ்க்காக பொல்லார்ட்டும் 8 சிக்ஸர்கள் அடித்துள்ளார். 2012 ஹமில்டன் போட்டியில் நியூசிலாந்துக்கு எதிராக தென்னாப்பிரிக்காவின் ரிச்சர்ட் லெவி 13 சிக்சர்கள் அடித்து முதலிடத்தில் இருக்கிறார்.
இந்த
போட்டியின் போது தான் சந்தித்த
22-வது பந்தில் அவர் அரைசதம் கடந்து
அசத்தினார். இதன் மூலம் சர்வதேச
ரி20 போட்டிகளில் 25 பந்துகளுக்கு குறைவாக அதிக முறை அரைசதம்
எடுத்த சர்வதேச வீரர் என்ற சாதனையை நிகழ்த்தியுள்ளார்.
முன்னதாக
பிலிப் சால்ட், சூரியகுமார் யாதவ், எவின் லூயிஸ் ஆகியோர் 25 பந்துகளுக்கு குறைவாக ஏழு முறை அரைசதம்
கடந்துள்ளனர். அவர் 22 பந்துகளில் அரைசதம் அடித்ததன் மூலம் எட்டாவது முறையாக ரி20 போட்டிகளில் 25 பந்துகளுக்கும்
குறைவாக அரைசதம் அடித்து மாபெரும் சாதனை ஒன்றை நிகழ்த்தியுள்ளார்.

No comments:
Post a Comment