திராவிட முன்னேற்றக் கழகத்தை மிரட்டிய காங்கிரஸ் அடிபணிந்தது.
சபதத்தைக்
கைவிட்டு தினகரனுடன் கைகோர்த்த எடப்பாடி
தனிமரமானார்
முன்னாள் முதல்வர் பன்னீர்ச்செல்வம்
மதில்மேல்
பூனையாக காத்திருக்கும்பிரேமலதா
மாம்பழத்துக்காக சண்டையிடும் அப்பாவும், மகனும்
தமிழக
சட்டமன்றத் தேர்தல் அறிவிப்பு விரைவில் வெளியாகும் நிலையில் அரசியல்களம் சூடு பிடிக்கத்
தொடங்கி உள்ளது. தேர்தலுக்கு முன்னர் பலமான கூட்டணி அமைப்பதில் பெரிய கட்சிகள் அதீத
ஆர்வம் காட்டுகின்றன. தமிழகத்தி மிகப்ப்பெரும் சக்தியாக உருவெடுக்கும் எனக் கணிக்கப்பட்ட விஜயை, முக்கிய
கட்சிகளும், சிறிய கட்சிகளும் புறக்கணித்துள்ளன.
விஜயை முன்னிறுத்தை திராவிட முன்னேற்றக் கழகத்துடன் பேரம்
பேசலாம் எனக் கணக்குப் போட்ட காங்கிரஸ் கட்சி,
அடிபணிந்து விட்டது. 100 தொகுதிகள்
,துணை முதலமைச்சர் பதவி என விஜய் ஆசைகாட்டியும், டெல்லி மேலிடம் இணங்கவில்லை.
தமிழக
காங்கிரஸ்காரகள் சிலர் பதவி ஆசையால் விஜயின் வலையில் சிக்கினார்கள். விஜயுடன் கூட்டுச்
சேர்ந்தால் அணை மாநிலங்களான தெலுங்கானா, கர்நாடகம் ஆகியவற்றில் உள்ள விஜய் ரசிகர்களின்
ஆதரவைப் பெற்று அங்கும் ஆட்சியில் பங்கேற்கலாம் எனக் கருதினார்கள்.
காங்கிரஸ்
கூட்டணி டெல்லியில் நேற்று அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி (ஏ.ஐ.சி.சி.) தலைவர் மல்லிகார்ஜுன
கார்கே தலைமையில் ராகுலின் முன்னிலையில்நடந்த
முக்கிய கூட்டத்தில், தமிழக காங்கிரஸ் தலைவர்கள், ஆளும் தி.மு.க.வுடன் தேர்தல் கூட்டணி
தொடர விரும்புவதாகத் தெளிவுபடுத்தினர். 2026 சட்டப்பேரவைத் தேர்தலில் தி.மு.க.வுக்குத்
தனிப்பெரும்பான்மை கிடைக்காதபட்சத்தில் மட்டுமே அமைச்சர் பதவிகளைக் கோரும் என்று முடிவு
எடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
திமுக கூட்டணியை உடைத்தால், அதன் தாக்கம் தமிழ்நாட்டோடு நிற்காது. தேசிய எதிர்க்கட்சிகளின் 'இந்தியா' கூட்டணி முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தி, இந்திய அரசியலின் அடிப்படைகளையே மாற்றிவிடும் என்று காங்கிரஸ் தேசிய தலைமை அஞ்சுவதாக கூறப்டுகிறது. திமுக வெளியேறினால், மம்தா பானர்ஜி, தேஜஸ்வி யாதவ், சரத் பவார் இந்தியா கூட்டணியில் நீடிப்பது சந்தேகமே. அவர்களுக்கு இக்கூட்டணி வெறும் தேர்தல் கணக்கீடு, உணர்வுபூர்வமானது அல்ல. தெற்கின் முக்கிய தூணான திமுகவை இழப்பதை அவர்கள் விரும்பமாட்டார்கள்.
'இந்தியா'
கூட்டணியில் உள்ள பிராந்தியக் கட்சிகள் கூட்டாக வென்ற சுமார் 100 தொகுதிகளுக்கு , அடுத்த
தேர்தலில் சிக்கல் ஏற்படும். ஒருங்கிணைப்பு இல்லாததால் வாக்குகள் பிளவுபட்டு, மும்முனைப்
போட்டிகள் உருவாகி, எதிர்க்கட்சி அரசியல் விரைவாகச் சிதறிவிடும். தமிழ்நாட்டில் காங்கிரஸுக்கு
இதன் தாக்கம் மிகவும் கடுமையானதாக இருக்கும். திமுகவின் ஆதரவின்றி, தற்போதுள்ள காங்கிரஸ்
எம்.பி.க்கள் யாரும் மீண்டும் பாராளுமன்றத்துக்குச் செல்ல முடியாது. . இந்தக் கூட்டணி வெறும் கூடுதல் பலம் அல்ல, அதுவே
காங்கிரஸின் உயிர்நாடி. இந்திய அரசியலில், கூட்டணிகள் என்பது உயிர்வாழும் கட்டமைப்புகள்.
ஒரு முக்கிய தூண் அகற்றப்பட்டால், முழு கூரையும் இடிந்து விழும் அபாயம் உள்ளது.
பன்னீர்ச்செல்வம்,சசிகலா,தினகரன்
ஆகிய மூவரையும் கட்சியில் சேர்க்க மாட்டேன் எனச் சபதம் செய்த எடப்பாடி தற்போது தினகரனை செங்கம்பளம் விரித்து வரவேற்றுள்ளார்.வெளியே போன
அண்ணா திராவிட வாக்குகள் திரும்பவும் கிடைக்கும்.
இதைத் தவிர எடப்பாடிக்கு எந்த இலாபமும் இல்லை.தினகரனுக்கு
அதிர்ஷ்டம் அடித்துள்ளது. ஏழு தொகுதிகலும் ஒரு எம் பி பதவியும் கொடுக்கப்படும் என தினகரனுக்கு
உறுதியளிக்கப்பட்டுள்ளதாம். துரோகத்திற்கான நோபல் பரிசை கொடுத்தால், அதனை எடப்பாடி
பழனிசாமிக்கு கொடுக்க வேண்டும் என்று டிடிவி தினகரன் சில வாரங்களுக்கு முன் விமர்சித்திருந்தார்.
அதிமுக தலைமையிலான என்டிஏ கூட்டணியில் அமமுக இணைந்துள்ளது என்ற அறிவிப்பை வெளியிட்ட தினகரன் ,மத்திய அமைச்சர் பியூஷ் கோயலை சந்தித்தார். அதிமுகவுடன் இருப்பது பங்காளி சண்டை மட்டும்தான் என்றும், விட்டுக் கொடுப்பவர்கள் கெட்டுப் போவதில்லை என்றும் கூறி இருந்தார். ஆனாலும் எடப்பாடி பழனிசாமியுடன் டிடிவி தினகரன் சந்திப்பு நடத்தாதது பேசுபொருளாகி இருக்கிறது. இந்த நிலையில் எடப்பாடி பழனிசாமி டிடிவி தினகரனை வரவேற்று ஒரு பதிவை வெளியிட்டுள்ளார்.
தினகரன்
சட்டசபை உறுப்பினராவார். அவரின் கட்சியைச் சேர்தவர்களில் ஒருவர் அல்லது. இரண்டு பேர் சிலவேளை வெற்றி பெறலாம்.
சட்டசபை உறுப்பினர் பதவியை இராஜினாமாச் செய்து விட்டு தினகரன் எம்பியாவார். அப்போது
நடக்கும் தேர்தலில் சில வேளை அந்தத்தொகுதி திமுகவின் கைக்குப் போகலாம். ஊழல் வழக்குகளில்
சிக்கிய தினகரன் பாரதீய ஜனதாவின் கொள்கைப்படி
இப்போது புனிதனாகி விட்டார்.
மாவட்டம் ஒரத்தநாடு சட்டமன்றத் தொகுதி எம்.எல்.ஏ.
வைத்திலிங்கம், ஆலங்குளம் தொகுதி உறுப்பினர்
மனோஜ் பாண்டியன் ஆகிய இருவரும் இராஜிநாமாச்
செய்து விட்டு திமுகவில் இணைந்தார்கள். இவர்கள்
இருவரும் பன்னீரின் தீவிர ஆதர்வாளர்கள்.
அதிமுகவில்
இருந்து வெளியேற்றப்பட்ட முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன், தனது கோபிசெட்டிப்பாளையம்
சட்டமன்ற உறுப்பினர் பதவியை இராஜினாமா செய்த. பின்னர், தவெக தலைவர் நடிகர் விஜய் முன்னிலையில்,
அவரது கட்சியில் இணைந்தார்.
,
வால்பாறை தொகுதியின் அதிமுக எம்.எல்.ஏ. அமுல் கந்தசாமி கடந்த ஆண்டு ஜூன் மாதம் காலமானார். சேந்தமங்கலம் தொகுதி எம்.எல்.ஏ. பொன்னுசாமி கடந்த
ஆண்டு அக்டோபர் மாதம் மறைந்தார். இந்த இரண்டு தொகுதிகளும் ஏற்கனவே காலியாக இருந்த நிலையில்,
தற்போது இராஜினாமாக்கள் காரணமாக காலியான தொகுதிகளின் எண்ணிக்கை ஐந்தாக உயர்ந்துள்ளது.
இதனால்
அதிமுகவின் வாக்கு வங்கியில் சரிவு ஏற்பட்டுள்ளது. கூட இருந்தவர்கள் வெளியேறியதாலும்,
பாரதீய ஜனதா கைவிட்டதாலும் பன்னீர்ச்செல்வம்
தனிமரமாக இருக்கிறார். எடப்பாடியை எதிர்ப்பவர்கள்
கட்சியை விட்டு வெளியேறிவிஜயுடன் இணைவார்கள் என செங்கோட்டியன் சொன்னார். அங்கிருந்து வெளியேறுவதாகத் தெரியவில்லை.
தேர்தல்
திகதி இன்னமும் அரிவிக்கப்படவில்லை தேர்தல் விஞ்ஞாபனத்தை எடப்பாடி வெளியிட்டுள்ளார்.
பெண்களுக்கு இலவச பஸ் பயணம் மக்கள் மத்தியின்
வெற்றி பெற்றதால் ஆண்களுக்கும் இலவச பஸ் பயணம் என அறிவித்துள்ளார்.
ஆட்சியைக்
கைப்பறுவதற்காக அதிமுக வியூகம் அமைத்து வருகிறது. இந்த நிலையில், அதிமுக பொதுச் செயலாளர்
எடப்பாடி பழனிசாமி தனது முதற்கட்ட தேர்தல் வாக்குறுதியை அறிவித்துள்ளார்.
,
சமூகத்தில் பொருளாதார சமநிலையை உருவாக்கிட, குலவிளக்கு திட்டத்தின் மூலம் அனைத்து குடும்ப
அட்டைதாரர்களுக்கும், ஒவ்வொரு மாதமும் உதவித் தொகையாக ரூபாய் 2,000 வழங்கப்படும். இத்தொகை
குடும்பத் தலைவியின் வங்கிக் கணக்கில் செலுத்தப்படும். திமுக 1500 ரூபா வழங்குகிறது.
நகரப்
பஸ்களில் பயணம் செய்யும் ஆண்களுக்கு கட்டணமில்லா
பயணத் திட்டம் செயல்படுத்தப்படும். திமுகவால் அறிமுகப்படுத்தப்பட்ட ஏற்கெனவே நடைமுறையில் இருக்கும், நகரபஸ்களில் பயணம் செய்யும் மகளிருக்கான கட்டணமில்லா பேருந்து
பயணத் திட்டம் தொடர்ந்து செயல்படுத்தப்படும்.
ஒரே குடும்பத்தில் வசிக்கும் பட்டியலின மக்கள், அவர்களுடைய
மகன்கள் திருமணமாகி தனிக்குடித்தனம் செல்கின்றபோது, அரசே இடம் வாங்கி, அவர்களுக்கு
கான்கிரீட் வீடுகள் கட்டித் தரப்படும். கலைஞர் வீட்டுத்திட்டத்தை திமுக நடைமுறைப்படுத்தி
வருகிறது.
100
நாட்கள் வேலைவாய்ப்புத் திட்டம் 125 நாட்களாக உயர்த்தப்படும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.
கிராமப்புறங்களின் வளர்ச்சிக்கான இத்திட்டம், 150 நாட்கள் வேலைவாய்ப்புத் திட்டமாக
உயர்த்தப்படும்.
அம்மா
இருசக்கர வாகனம் வழங்கும் திட்டம் மூலம் மகளிருக்கு ரூ. 25,000 மானியத்துடன், 5 லட்சம்
மகளிருக்கு அம்மா இருசக்கர வாகனங்கள் வழங்கப்படும் என எடப்பாடி பழனிசாமி ஐந்து வாக்குறுதிகளை
அளித்துள்ளார்.
'அம்மா
இல்லம் திட்டம்' மூலம், கிராமப்புறங்களில் குடியிருப்பதற்கு சொந்த வீடு இல்லாதவர்களுக்கு,
அரசே இடம் வாங்கி கான்கிரீட் வீடுகள் கட்டித் தரப்படும். அதேபோல், நகரப் பகுதிகளில்
சொந்த வீடு இல்லாதவர்களுக்கு, அரசே இடம் வாங்கி அடுக்குமாடி வீடுகள் கட்டி 'அம்மா இல்லம்
திட்டம்' மூலம் விலையில்லாமல் வழங்கப்படும்.
பிரேமலதா
வழக்கம் போல எந்த முடிவையும் எடுக்காது காத்திருக்கிறார்.
காங்கிரஸ் வெளியேறினால், பிரேமலதாவை உள்ளே கோண்டுவரும் முடிவில் ஸ்டலின் இருந்தார். காங்கிரஸை சமாளிக்க
வேணை இருப்பதால் ஸ்டாலினின் பார்வையில்
இருந்து பிரேமலதா வெளியேறிவிட்டார். எடப்பாடியின் முடிவுக்கு பிரேமலத காத்திருக்கிறார்.
பிரேமலதா விரும்புவதை எடப்பாஅடி கொடுக்காவிட்டால், அவரது கார் விஜயின் பனையூருக்குச்
செல்லும்.
பாட்டாளி
மக்கள் கட்சியை அப்பாவும், மகனும் பிரித்துவிட்டார்கள்.
கட்சியின் சின்னமான மாம்பழத்துக்கு இருவரும் உரிமைகோருகிறார்கள். தமிழகத்தின் அடுத்த
முதலமைச்சர் என்ற கோதாவில் இருந்து வெளியேறிய அன்புமணி எடப்பாடியிடம் சரணடைந்து விட்டார். ஸ்டாலினுடன் சேர்வதற்கான நாளை எதிர் பார்த்திருக்கிறார் ராமதாஸ்.
தேர்தல்
திகதி அறிவிக்கப்பட்ட பின்னர் தமிழக தேர்தல் களம் இதை விடச்சூடாக இருக்கும் என்கிறார்கள் அரசியல் விமர்சகர்கள்.
ரமணி
25/1/26


No comments:
Post a Comment