Thursday, March 20, 2014

ஸ்பெய்ன் 1982

அதிக அணிகள் , அதிக பார்வையாளர்கள் புதிய முறை என்பவற்றுடன் ஸ்பெய்ல் 1982ஆம் ஆண்டு நடைபெற்ற உலகக் கிண்ணப் போட்டி களைகட்டியது. ஜூன் மாதம் 13ஆம் ஆண்டு முதல் ஜூலை 11ஆம் திகதி வரை நடந்த உலகக்கிண்ண உதைபந்தாட்டப் போட்டியில் 24 நாடுகள் பங்கு பற்றின. 14 கோல்கள் அடிக்கப்பட்டன. 2109 23 பேர் பார்வையிட்டு புதிய சாதனை படைத்தனர். 109 நாடுகள் தகுதிகாண் போட்டியில் பங்குபற்றின. நெதர்லாந்தும், மெக்ஸிகோவும் தகுதிபெறவில்லை. அல்ஜீரியா கமரூன், யஹாண்டுராஸ், குவைத் , நியூஸிலாந்து ஆகியன உலகக்கிண்ணப் போட்டியில் விளையாடத் தகுதி பெற்றன.
அரை இறுதிப் போட்டியிலும், இறுதிப் போட்டியிலும் பெனால்ரி மூலம் வெற்றி பெறும் அணி முடிவு செய்யப்பட்டது. 24 நாடுகளும் ஆறு பரிவுகளாகப்  பரிக்கப்பட்டன. ஒரு பரிவில் தலா நான்கு நாடுகள் இடம்பெற்றன.
குழு 1இல் போலாந்து, இத்தாலி, கமரூன், பெரு ஆகியன போட்டியிட்டன. முதலிடம் பெற்ற போலாந்து இரண்டாவது சுற்றுக்குத் தெரிவானது. இத்தாலி, கமரூன் ஆகியன விளையாடிய மூன்று போட்டிகளும் சமநிலையில் முடிவடைந்தன. இரண்டும்  சமமான புள்ளிகளைப் பெற்றன. அதிக கோல்கள் அடித்த இத்தாலி அடுத்தடுத்த சுற்றுக்குத் தெரிவானது.
குழு 2இல் ஜேர்மனி, ஒஸ்ரியா, அல்ஜீரியா, சிலி ஆகியன  விளையாடின. இத்தாலி மூன்று போட்டிகளில் தோல்வியடைந்து நான்காவது இடம்பிடித்தது.  மே.ஜேர்மனி , ஒஸ்ரியா, அல்ஜீரியத ஆகிய மூன்நு நாடுகளும் மூன்று போட்டிகளில்  விளையாடின.மூன்று நாடு களும் இரண்டு போட்டிகளில் வெற்றிபெற்று ஒரு போட்டியில் தோல்வியடைந்தன. மூன்று நாடுகளும்  தலா நான்கு புள்ளிகளைப் பெற்றன. ஆறு கோல்கள் அடித்த ஜேர்மனி முதல் அணியாக இரண்டாவது சுற்றுக்குத் தெரிவானது.  அல்ஜீரியா ஐந்து கோல்களும்   ஒஸ்ரியா மூன்று கோல்களும் அடித்தன.  அல்ஜீரியாவுக்கு எதிராக ஐந்து கோல்கள் அடிககப்பட்டதால் ஒஸ்ரியா இரண்ஙடவது சுற்றுக்குத் தெரிவானது.
  பெல்ஜியம், ஆர்ஜென்ரீனா  , ஹங்கேரி, எல்சல்வடோர்  ஆகியன குழு 3இல் விளையாடின. எல்சல்வடோருக்கு எதிராக 10-1 என்ற  அதிக கோல்கள் அடித்து  ஹங்கேரி சாதனை படைத்தது.
இங்கிலாந்து, பிரான்ஸ், செக்கஸ்லோ வியா, குவைத் ஆகியன குழு 4இலும், நெதர் லாந்து, ஸ்பெய்ன்,யூகஸ்லோவியா, ஹொண்டுராஸ் ஆகியன  குழு 5இலும், பிரேஸில், ரஷ்யா, ஸ்பெய்ன் நியூஸிலாந்து  ஆகியன  குழு 6இலும் விளையாடின. சோவியத்ரஷ்யா, ஸ்பெய்ன் ஆகியன சமபுள்ளிகளைப் பெற்றன. அதிக கோல் அடித்த ஸ்பெய்ன் அடுத்த சுற்றுக்குத் தெரிவாகினது.
போலந்து, சோவியத்ரஷ்யா,பெல்ஜியம் ஆகியவற்றுக்கிடையேயான போட்டியில் போலாந்தும், சோவியத்ரஷ்யாவும்  சமபுள்ளிகளைப் பெற்றதனால் அதிக புள்ளிகளைப் பெற்ற போலந்து அரை இறுதிக்குத் தெரிவானது.
ஜேர்மனி, இங்கிலாந்து, ஸ்பெய்ன் ஆகியன  2ஆவது குழுவிலும், இத்தாலி, பிரேஸில், ஆர்ஜென்ரீனா ஆகியன குழு 3இலும், பிரான்ஸ், ஒஸ்ரியா, நெதர்லாந்து ஆகியன  குழு 4இலும் விளையாடின.
போலந்து, பிரான்ஸ், இத்தாலி, மே. ஜேர்மனி ஆகிய நான்கு ஐரோப்பிய நாடுகளும் அரை இறுதியில் மோதின. போலந்துக்கு எதிரான போட்டியில் 2-0 என்ற கோல் கணக்கில் வெற்றிபெற்ற இத்தாலி இறுதிப் போட்டியில் விளையாடத் தகுதி பெற்றது.  ஜேர்மனி, பிரான்ஸ் ஆகியவற்றுக்கிடையேயான போட்டி சமநிலையில் முடிவடைந்ததனால் பெனால்ரி யின் மூலம்  5-4 என்ற கோல் கணக்கில் ஜேர்மனி இறுதிப்போட்டியில்  விளையாடத் தகுதிபெற்றது.
1934/ 38  ஆம் ஆண்டுகளில்  சம்பியனான இத்தாலியும் 1954ஆம் ஆண்டு சம்பியனான மே.ஜேர்மனியும் இறுதிப்போட்டியில் சந்தித்தன. 1966ஆம் ஆண்டு ஜேர்மனியும், 1990ஆம் ஆண்டு இத்தாலியும் இறுதிப் போட்டிவரை முன்னேறி சம்பியன் கிண்ணத்தைத் தவறவிடடன. பரபரப்பான போட்டியில் 3-1 என்ற கோல் கணக்கில் இத்தாலி வெற்றி பெற்றது. 40 வயதான  இத்தாலிய கப்டன் டினோ ஸ்பி சம்பியன் கிண்ணத்தை உயர்த்திப்பிடித்தார். 3-2 என்ற கோல் கணக்கில் பிரான்ஸை வீழ்த்திய போலந்த் மூன்றாம் இடம்பிடித்தது.
இத்தாலிய வீரரான ரோஸி கோல்டன் ஷூ விருதைப் பெற்றார்.
பிரான்ஸுக்கு எதிரான போட்டியில் குவைத் விளையாடியபோது நடுவர் தவறு செய்ததாகக் கூறி குவைத்தின்  உதைபந்தாட்ட சங்கத்தின் தலைவரான  மன்னர் பஹாஹ் மைதானத் தினுள்சென்று நடுவருடன் தர்க்கப்பட்டார். அவரின் கட்டளைப்படி குவைத் வெளியேறிய தால் பிரான்ஸ்  வெறறி பெற்றதாக அறிவிக்கப் பட்டது. இச்சம்பவத்தின் காரணமாக பஹாத்துக்கு 14அயிரம் டொலர் தண்டப்பணமாகச் செலுத்தினார். 
 அல்ஜிரியா அணித்தலைவராக செயற்பட்ட  சலாட் அசாட்டை இஸ்லாமிய அடிப்படைவாதி என கருதிய அல்ஜிரியா தூக்குத் தண்டனை வதித்தது.

ரமணி 
சுடர் ஒளி 16/03/14

No comments: