ஜேர்மனி |
ஜேர்மனி, போர்த்துக்கல், கானா, அமெரிக்கா ஆகிய நாடுகள் குழு ஜி பிரிவில் உள்ளன. ஜேர்மனி, போர்த்துக்கல் ஆகியன ஐரோப்பி யாவிலிருந்தும், ஆபிரிக்காவிலிருந்து கானாவும், வட அமெரிக்காவிலிருந்து அமெரிக்காவும் இக்குழு வில் இடம்படித்துள்ளன.
மிகப்பலமான அணிகளில் ஒன்றாக ஜேர்மனி விளங்குகிறது. ஜேர்மனி தரவரிசையில் இரண்டாவது இடத்தில் உள்ளது. போத்துகல் ஓர் இடம் முன்னேறி நான்காவது இடத்தில் உள்ளது. அமெரிக்கா ஓர் இடம் முன்னேறி 13ஆவது இடத்திலும், கானா 13இடங்கள் கீழிறங்கி 3ஆவது இடத்திலும் உள்ளன.
ஜேர்மனி
ஜேர்மனிக்கு எதிராக விளையாடும் நாடுகளின் பட்டியலைப் பார்த்ததும் ஜேர்மனிய ரசிகர்கள் மிகுந்த மகிழ்ச்சியடைந்துள்ளனர். மிக இலகுவாக ஜேர்மனி இரண்டாவது சுற்றுக்குச் சென்றுவிடும் என்பதில் அசைக்க முடியாத நம்பிக்கை உள்ளது.
பரோஸ் தீவுகள், ஒஸ்ரியா, அயர்லாந்து, சுவீடன், கஸகஸ்தான் ஆகிய நாடுகளுடன் குழு சீ பிரிவில் ஜேர்மனி போட்டியிட்டது. ஒன்பது போட்டிகளில் வெற்றிபெற்று ஒரு போட்டியைச் சமப்படுத்தி 25 புள்ளிகளுடன் முதலிடம் பிடித்து உலகக்கிண்ணப் போட்டியில் விளையாடுவதற்குத் தகுதி பெற்றது. ஜேர்மனி, 36 கோல்கள் அடித்தது. எதிராக ஒன்பது கோல்கள் அடிக்கப்பட்டன. அவற்றில் ஏழு கோல்களை சுவீடன் அடித்தது. ஜேர்மனிக்கு எதிராக 16 மஞ்சள் அட்டைகள் காண்பக்கப்பட்டன.
அயர்லாந்துக்கு எதிராக 6-0 கோல்கணக்கில் வெற்றிபெற்றது. சுவீடனுக்கு எதிரான முதலாவது போட்டியில் இரு நாடுகளும் தலா நான்கு கோல்கள் அடித்ததால் சமநிலையில் முடிந்தது. இரண்டாவது போட்டியில் 5-3 என்ற கோல் கணக்கில் ஜேர்மனி வெற்றி பெற்றது. ஐரோப்பாக் கண்டத்தில் அதிக கோல்கள் அடித்து சாதனை செய்துள் ளது ஜேர்மனி.
மூன்று முறை சம்பயனானது. மூன்று முறை இறுதிப்போட்டியில் விளையாடி தோல்வியடைந்தது. 82, 86ஆம் ஆண்டுகளில் இறுதிப்போட்டியில் விளையாடி தோல்வியடைந்து 90ஆம் ஆண்டு சம்பியனானது. 86ஆம் ஆண்டு ஆர்ஜென்ரீனாவிடம் தோல்வியடைந் தது. 90ஆம் ஆண்டு ஆர்ஜென்ரீனாவை வீழ்த்தி சம்பியனானது. தொடர்ந்து மூன்று முறை இறுதிப் போட்டியில் விளையாடி சாதனைப் படைத்தது.
2006ஆம் ஆண்டும், 2010ஆம் ஆண்டும் அரை இறுதிவரை முன்னேறி மூன்றாம் இடத்தைப் படித்தது. 99 போட்டிகளில் விளையாடி 222 கோல்கள் அடித்தது.
ஜோசிம்லோ, அணியின் பயிற்சியாளராக உள்ளார். முன்னாள் பயிற்சியாளரான கிலிஸ்மானுக்கு உதவியா ளராக இருந்தவர். பெயன் மூனிச்சின் வீரரான பிலிப்லெஹாம் தலைமை வகிக்கிறார். பயிற்சியாளரும், அணித் தலைவரும் கடந்த இரண்டு உலகக் கிண்ணப் போட்டிகளில் பங்குபற்றியவர்கள். மனுவல் நெயர் கோல் கீப்பராக இருப்பது அணிக்கு கூடுதல் பலமாக உள்ளது. பிலிப்லெகானுடன், செஸ்மர் பஸ்ரியன், ஒஸில், தோமஸ் முல்லர். இவர் கடந்த உலகக் கிண்ணப் போட்டியில் இளம் வீரராகத் தெரிவா னார். மைக்ரோ ரியூஸ், ரொனி குரூஸ், கெஸ்ரிஜீப் ஆகியோர் இருப்பது எதிரணிக்குச் சவாலானது. மெசுல் ஒஸில் 8 கோல்களும், ரியூஸ் 6 கோல்களும் அடித்துள்ளனர்.
கிரேட் முல்லர், லொகார் மத்யூஸ் ஆகியோர் முன்னாள் வீரர்களாவர். 1934ஆம் ஆண்டு முதல் முதலாக உலகக்கிண்ணப் போட்டியில் விளையாடிய ஜேர்மனி, 18ஆவது தடவையாக உலகக்கிண்ணப் போட்டியில் விளையாடுவதற்குத் தகுதி பெற்றுள்ளது. 1930 ஆம் ஆண்டு தகுதி பெறவில்லை. இரண்டாவது உலக யுத்தம் காரணமாக 1950ஆம் ஆண்டு ஜேர்மனி தடை செய்யப் பட்டது.
2010ஆம் ஆண்டு உலகக் கிண்ணப் போட்டியில் குழு டி யில் ஜேர்மனி, கானா, அவுஸ்திரேலியா, சேர்பியா ஆகியன மோதின. இரண்டு வெற்றிகளை யும், ஒரு தோல்வியையும் சந்தித்த ஜேர்மனி, ஆறு புள்ளி களுடன் முதலிடம் படித்து இரண்டாவது சுற்றுக்குத் தெரி வாகியது. இரண்டாவது சுற்றில் இங்கிலாந்துக்கு எதிரான போட்டி யில் 4-0 என்ற கோல் கணக்கில் வெற்றிபெற்று கால் இறுதிக்கு முன்னேறியது. கால் இறுதியில் ஆர்ஜென்ரீனாவுடன் மோதி 4-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று அரை இறுதிக்கு முன்னேறியது. அரை இறுதியில் 0-1 என்ற கோல் கணக்கில் ஸ்பெய் னுடன் விளையாடி தோல்விய டைந்தது. அரை இறுதியில் தோல்வியடைந்த ஜேர்மனி, உருகுவே ஆகிய வற்றுக்கிடையே யான போட்டியில் 3-1 என்ற கோல் கணக்கில் வெற்றிபெற்று மூன்றாம் இடம் படித்தது.
இந்தக் குழுவில் இரண்டாம் இடம் பிடித்த கானா, கால் இறுதியில் 1-0 என்ற கோல் கணக்கில் ஸ்பெயினிடம் தோல்வியடைந்தது. ஜேர்மனி, கானா ஆகிய இரண்டு நாடுகளும் இந்த முறையும் ஒரே குழுவில் உள்ளன. கடந்த முறை இரு நாடுகளையும் வீழ்த்திய ஸ்பெய்ன் சம்பிய னானது
போத்துகல்
கிறிஸ்ரியானி ரொனால்டோ என்ற தனி ஒரு வீரருக்காகவே இலட்சக்கணக்காக ரசிகர்கள் போத்துகல் அணியை விரும்புகிறார்கள். ஐரோப்பாக் கண்டத்திலிருந்து பளே ஓவ் மூலம் கடைசியாகத் தகுதிபெற்ற நாடு. சுவீடனுக்கும், போத்துகலுக்கும் இடையேயான பிளே ஓவ்போட் ரொனால்டோவுக்கும், இப்றாஹி மிவோவிச்சுக்கும் இடையேயான பலப்பரீட்சை யாகவே நடந்தது.
ரொனால்டோ, இப்றாஹிமிவோவிச் ஆகிய இருவரும் ரசிகர்களைத் திருப்திப்படுத்தினார்கள். முதல் போட்டியில் ரொனால்டோ ஒரு கோல் அடித்தார். இரண்டாவது போட்டியில் ரொஙனால் டோ மூன்று கோல்களும், இப்றாஹிமிவோவிச் இரண்டு கோல்களும் அடித்தனர். 2010ஆம் ஆண்டு உலகக் கிண்ணப் போட்டியிலும் பொஸ்னியாவுடன் பளே ஓவ் போட்டியில் வெற்றிபெற்றுத்தான் போத்துகல் தகுதி பெற்றது. இக்குழுவில் இருந்து இரண்டாவது சுற்றுக்கு முன்னேறும் சந்தர்ப்பம் உள்ளது.
லெஸ்ஹம் பேர்க், அஸபைசான், ரஷ்யா, அயர்லாந்து, இஸ்ரேல், போத்துகல் ஆகிய குழு எப் ல் விளையாடின. ஆறு போட்டிகளில் வெற்றிபெற்று மூன்று போட்டிகளைச் சமப்படுத்தி ஒரு போட்டியில் தோல்வி யடைந்து 21 புள்ளிகளுடன் இரண்டாவது இடம் பிடித்தது. போத்துகலுக்கு எதிராக 11 மஞ்சள் அட்டைகள் காட்டப்பட்டன. போத்துகல் 20 கோல்கள் அடித்தது. எதிராக ஒன்பது கோல்கள் அடிக்கப் பட்டன. ரொனால்டோ எட்டு கோல்களும், கோலாஸ் அகஸ்ரின் ஆறு கோல்களும் அடித்தனர்.
பாலோபென்ரோ பயிற்சியாளராக உள் ளார். முன்னாள் மத்தியகள, பன்கள வீர ரான இவர், அணியின் வெற்றிக்கு பங்காற்றியுள் ளார். கிறிஸ்ரியானி ரொனால்டோ தலைவராக உள்ளார். பெபே, புருனோ அல்விஸ், பபயோ கொசன்ரோ ஆகியோர் பலமான வீரர்களாவர்.
1966ஆம் ஆண்டு முதல்முதல் உலகக் கிண்ணப் போட்டியில் விளையாடிய போத்து கல் ஆறாவது முயாக உலகக்கிண்ணப் போட்டியில் விளையாடத் தகுதிபெற்றுள்ளது.
ரமணி
சுடர் ஒளி 16/03/14
No comments:
Post a Comment