Friday, March 28, 2014

உலகக்கிண்ணம் 2014

அமெரிக்கா
ஜேர்மனி,  போத்துகல் ஆகியவற்றுடன் அமெரிக்கா, கானா ஆகியனவும் குழு ''ஜி'யில் உள்ளன. வடஅமெரிக்காவிலிருந்து அமெரிக்கா தகுதிபெற்றது. ஆபிரிக்கா  கண்டத்திலிருந்து கானா தகுதிபெற்றது. 2010ஆம் ஆண்டு  உலகக்கிண்ணப் போட்டியின் கால் இறுதியில் அமெரிக்காவும், கானாவும் சந்தித்தன.  பரபரப்பான போட்டி சமநிலையில் முடிந்ததனால் பெனால்டி மூலம் வெற்றிபெற்ற கானா அரை இறுதிப் போட்டியில் விளையாடத் தகுதிபெற்றது.
                                          அமெரிக்கா
அன்ரிகுவா அன்ட்  பார்படாஸ், கௌதமாலா,  ஜமேக்கா ஆகியவற்றுடன் மூன்றாவது தகுதிகாண் போட்டியில் குழு ''ஏ'யில்  விளையாடிய அமெரிக்கா நான்கு போட்டிகளில் வெற்றிபெற்றது.  ஒரு போட்டியைச் சமப்படுத்தி ஒரு போட்டியில் தோல்வியடைந்து  13 புள்ளிகளுடன் நான்காவது சுற்றுக்குத் தகுதிபெற்றது. அமெரிக்கா 11 கோல்கள் அடித்தது. அமெரிக்காவுக்கு   எதிராக நான்கு  கோல்கள் அடிக்கப்பட்டன. கிளின்ட் டெம்சி எட்டு கோல்களும், ஜோஸ் அஸ்ரிடேவின் நான்கு கோல்களும்  அடித்தனர்.
ஹொண்டூராஸ், கொஸ்ராரிகா, மெக்ஸிகோ, ஜமாசியா, பனாமா ஆகியவற்றுடன் குழு ''ஏ'யில் விளையாடிய அமெரிக்கா ஏழு போட்டிகளில் வெற்றிபெற்று ஒரு போட்டியைச் சமப்படுத்தி இரண்டு போட்டிகளில் தோல்வியடைந்து  13 புள்ளிகளுடன் முதலிடம் பிடித்து பிரேஸிலுக்குச் செல்வதை உறுதிப்படுத்தியது.
ஹொண்டூராஸுடனான முதலாவது போட்டியில் அமெரிக்கா தோல்வியடைந்ததும் பயிற்சியாளரின் மீது  கடுமையான விமர்சனம் எழுந்தது. அப்போது பரீட்சார்த்தமான முயற்சியைக் கைவிட்டு அனுபவம் உள்ள வீரர்களை   விளையாடுவதற்கு அனுமதித்தார். அமெரிக்காவுக்கு எதிராக 25 மஞ்சள் அட்டைகள் காட்டப்பட்டன.

ஜோர் கன்கிரிஸ்மான் அமெரிக்காவின் பயிற்சியாளராக உள்ளார்.   உலகக்கிண்ணம் வென்ற ஜேர்மனி அணியின் வீரர் இவர். 80 சர்வதேச போட்டிகளில் 38 கோல்கள் அடித்துள்ளார். மத்தியகள வீரரான  கிளின்ட்டெம்சி அணித்தலைவராக உள்ளார்.
கடந்த ஐந்து வருடங்களில் 50 கோல்கள் அடித்துள்ளார்.  மைக்கல் பிரட்லி அமெரிக்க அணியில் நம்பிக்கை நட்சத்திரமாக உள்ளார். அமெரிக்க  அணியின் முன்னாள் பயிற்சியாளராக  பொப்பின் மகன். மிகத் துரிதமாக பந்தை கையாளும் இவரை ரோம் கழகம்  ஒன்று 3.5 மில்லியன் டொலருக்கு ஒப்பந்தம்  செய்துள்ளது.  82 சர்வதேச போட்டிகளில் விளையாடி உள்ளார்.
ஜோன் புரூக்ஸ், ரிம் யஹாவாடி பிரட் ஸான் கமரோன், பிரெக்  யஐகா மயூர் எட்யூ ஆகியோர் ஐரோப்பியக் கழகங்களுக்கு  விளையாடும் வீரர்களாவர்.  ஜோன் ஹக்ர கிளாடியோ,  ரெயான் பிர்ரெ#ன் மக்பினரட் ஆகியோர் முன்னாள் வீரர்களாவர்.  1930ஆம் ஆண்டு முதல் முதலாக உலகக்கிண்ணப் போட்டியில் விளையாடிய அமெரிக்கா 10ஆவது முறையாக உலகக்கிண்ண உதைபந்தாட்டப் போட்டியில்   விளையாடுவதற்காகுத் தகுதிபெற்றுள்ளது.
2010ஆம் ஆண்டு குழு ''சி'யில் இங்கிலாந்து, ஸ்லோவேனியா, அல்ஜிரியா ஆகியவற்றுடன் விளையாடியது. ஒரு போட்டியில் வெற்றிபெற்று இரண்டு போட்டிகளைச் சமப்படுத்தியது.  புள்ளி அடிப்படையில்  முதலிடம் பிடித்து கால் இறுதியில் கானாவிடம் தோல்வியடைந்து வெளியேறியது. 

கானா
             கானா                                           உலகக்கிண்ணப் போட்டியில் விளையாடுவதற்காக ஆபிரிக்காவிலிருந்து தகுதிபெற்ற நாடு கானா.  உலகக்கிண்ண உதைபந்தாட்டப் போட்டியில் விளையாடுவதற்காக பிளேஓவ் போட்டி வரை காத்திருந்தது கானா.
லெசோகோ, ஸாம்பியா, சூடான் ஆகிய நாடுகளுடன் குழு ''டி'யில் விளையாடிய கானா  ஐந்து போட்டிகளில் வெற்றிபெற்று ஒரு போட்டியில் தோல்வியடைந்து 24 புள்ளிகளைப்  பெற்றது.  கானா 18 கோல்கள் அடித்தது. எதிராக மூன்று கோல்கள் அடிக்கப்பட்டன. லெசோகோவுக்கு எதிராக 7-!0 கோல் கணக்கிலும், சூடானுக்கு எதிராக 40 கோல் கணக்கிலும் வெற்றிபெற்றது.
உலகக்கிண்ண  உதைபந்தாட்டப் போட்டியில் விளையாடுவதற்கான தகுதியைப் பெறும் பிளேஓப் போட்டியில் கானாவும் எகிப்தும்  மோதின.  முதலாவது போட்டியில் 61 என்ற கோல் கணக்கில் வெற்றிபெற்ற கானா நம்பிக்கையுடன் இரண்டாவது போட்டியை எதிர்கொண்டது. இரண்டாவது  போட்டியில் 21 கோல் கணக்கில்   தோல்வியடைந்தது.  இரண்டு நாடுகளும்  தலா ஒரு போட்டியில் வெற்றிபெற்றாலும் இரண்டு போட்டிகளிலும் கானா ஏழு கோல்களும் எகிப்து மூன்று கோல்களும் அடித்தன. அதிக கோல்கள்  அடித்த  கானா பிரேஸில் பயணத்தை உறுதிசெய்தது.
அஸமோ கயன் ஆறு கோல்களும் சுல்லி முன்தாரி, அப்துல்வரிஸ் ஆகியோர் தலா மூன்று கோல்களும் அடித்தனர்.  கானாவுக்கு எதிராக 14 மஞ்சள் அட்டைகளும், ஒரு சிவப்பு  அட்டையும் காட்டப்பட்டன.
ஜேம்ஸ் கெவிஸ் அப்பாச்சி கானா அணியின் பயிற்சியாளராக உள்ளார். அஸமோ கயன் அணித்தலைவராக உள்ளார். 2010ஆம் ஆண்டு அரை இறுதிப் போட்டியில் இவர் அடித்த பெனால்ரி கோல் ஆகவில்லை. கெவின்பிரின்ஸ்,  மைக்கல் எஸைன், சுல்லிமுன்தா ஆகியோர் நம்பிக்கை தரும் வீரர்களாவர்.  அபெடிபீலே,  சாமுவல் குபோர்,  இப்றாஹிம் சன்டே ஆகியோர் முன்னாள் வீரர்களாவர்.
2006ஆம் ஆண்டு முதல் முதலாக உலகக்கிண்ணப் போட்டியில் விளையாடியது. 2010ஆம் ஆண்டு அரை இறுதியில்  உருகு வேயிடம்  பெனால்ரியில் தோல்வியடைந்தது.
ரமணி 
சுடர் ஒளி 23/03/14

No comments: