அன்பு,அறிவுத்திறன்,போட்டி,வாழ்த்து,பொழுதுபோக்கு
ஆகிய அம்சங்களுடன் மகளிர்தின சிறப்பிதழாக மார்ச்மாத ஒளி அரசி மலர்ந்துள்ளது.
'பெண்கல்
வியாபாரப்பண்டமல்ல பேணிப்பாதுகாக வேண்டிய பொக்கிஷம்' என்கிறார்
இம்மாத இல்லத்தரசியான கலாபூஷணம் நூருல் அயில் நஜ்முல்.
'பிரச்சினைகளுக்கு அஞ்சமாட்டேன் தீர்ப்பதற்கு முயற்சி செய்வேன்' என்கிறார்
இம்மாத மங்கையான யாழ். வேம்படி மகளிர்
கல்லூரி அதிபர் திருமதி சு.
வேணுகா.தும்பளையில் இயங்கும் வலிந்துதவு சமூக சேவை அமைப்பின்
செயற்பாடுகள் பற்றி விபரிக்கிறார் த.
பருத்திதாசன்.
சேவை செய்வதையே நோக்கமாகக்கொண்டு வாழும் சுதேச மருத்துவர்
உமாபதி ஸ்ரீசங்கரின் சேவை பற்றிய சிறப்புக்கண்ணோட்டம்,உயர் கல்விகற்கும் மாணவியை
அதிபரும் ஆசிரியைகளும் சந்தேகப்பட்டதனால் கல்வியைத்தொடர முடியாது தவிக்கும் மாணவியின் உண்மைக்கதை, அப்பாவின் மிதிவண்டி குறும்பட விமர்சனம்,குழந்தை வளர்ப்பில் தந்தையின் கடமை என்பன் சிறப்பம்சமாக உள்ளன.
ரொமான்ஸ்
ரகசியங்கள், பட்டுச்சேலை பரிசாகப்பெறும்
கட்டுரை, மகளிர் சிறப்புக்கதை,
மறைந்த எழுத்தார்
திக்கம் சிவயோகமலரின்
நினைவுகள்,டாக்டர்
எஸ்.அருள்ராமலிங்கம் தரும் பெண்களுக்கான
மருத்துவக்குறிப்புகள்,காதலி
தேடிக்கொடுத்த மனைவி[தொடர்கதை],இரண்டு காதுகளும்
ஒரு வாயும் கிடைத்திருப்பதன் காரணம் பற்றி
வெற்றியாளர் ரொபின் ஷர்மா தரும்
விளக்கம்,சிறுவர்பகுதி போன்ற
பல சுவையான
அம்சங்கள் மார்ச்மாத
ஒளி அரசியில் உள்ளன.
'தாமரையின் உயரம் எவ்வளவு' என்ற குட்டிக்கதையின் மூலம்
நாம் உயர வேன்டிய
அவசியத்தை ஒளி அரசியின் ஆசிரியத்தலையங்கல்
தெளிவுபடுத்தி உள்ளது. நீரின் உயரம் அதிகரிக்க அதிகரிக்க
தமரையின்
உயரமும் அதிகரிக்கும்.
ஊர்மிளா
சுடர் ஒளி
09/03/14
No comments:
Post a Comment