அவுஸ்திரேலியா நியூஸிலாந்து ஆகியவற்றுக்கிடையே நடைபெற்ற உலகக்கிண்ண இறுதிப்போட்டியில் அவுஸ்திரேலியா சம்பியனானது. பெரும் எதிர்பார்ப்பை
உண்சுபண்ணிய இறுதிப்போட்டியில் நியூஸிலாந்து போராடமல் தோல்வியடைந்தது.
உலக கோப்பை அரங்கில், ஆஸ்திரேலிய அணியை அசைக்க முடியவில்லை. நேற்றைய பைனலில் நியூசிலாந்தை 7 விக்கெட் வித்தியாசத்தில் சுலபமாக வீழ்த்தியது. இதன் மூலம் 5வது முறையாக உலக சாம்பியன் பட்டம் வென்று சாதனை படைத்தது.
மெல்போர்னில் நேற்று நடந்த 11வது உலக கோப்பை தொடரின் பைனலில், ஆஸ்திரேலியா, நியூசிலாந்து அணிகள் மோதின. ‘டாஸ்’ வென்ற நியூசிலாந்து கேப்டன் பிரண்டன் மெக்கலம், ‘பேட்டிங்’ தேர்வு செய்தார்.
‘டாப்–ஆர்டர்’ ஏமாற்றம்:
ஆஸ்திரேலிய அணியின் மிரட்டல் பந்துவீச்சில் நியூசிலாந்து அணி அதிர்ந்தது. ஸ்டார்க் வீசிய முதல் ஓவரின் 3வது பந்தில் பிரண்டன் மெக்கலம் (0) போல்டானார். பைனலில் விளையாடுகிறோம் என்ற எண்ணமே இல்லாமல் மற்றவர்களும் ஏமாற்றினர். மார்டின் கப்டில் (15), மேக்ஸ்வெல் ‘சுழலில்’ சிக்கினார். ஜான்சன் ‘வேகத்தில்’ வில்லியம்சன் (12) நடையை கட்டினார். இதையடுத்து 12.2 ஓவரில் 3 விக்கெட்டுக்கு 39 ரன்கள் எடுத்து திணறியது.
ஆறுதல் ஜோடி:
பின் இணைந்த ராஸ் டெய்லர், கிராண்ட் எலியட் ஜோடி போராடியது. இவர்கள், ஒன்று, இரண்டாக ரன் சேர்த்தனர். எலியட், ஒருநாள் அரங்கில் 9வது அரைசதத்தை பதிவு செய்தார். நான்காவது விக்கெட்டுக்கு 111 ரன்கள் சேர்த்த போது, 36வது ஓவரை வீசிய ஜேம்ஸ் பால்க்னர் இரட்டை ‘அடி’ கொடுத்தார். இந்த ஓவரின் முதல் பந்தில் ராஸ் டெய்லர் (40) அவுட்டாக, 3வது பந்தில் கோரி ஆண்டர்சன் (0) போல்டானார்.
விக்கெட் ‘மடமட’:
ஸ்டார்க் ‘வேகத்தில்’ ரான்கி (0) அவுட்டானார். தனது கடைசி சர்வதேச போட்டியில் விளையாடிய டேனியல் வெட்டோரி (9), ஜான்சன் பந்தில் வெளியேறினார். தனிநபராக போராடிய எலியட் (83) ஆறுதல் தந்தார். ஜான்சன் பந்தை சிக்சருக்கு அனுப்பிய டிம் சவுத்தீ (11),
‘ரன்–அவுட்’ ஆனார்.
நியூசிலாந்து அணி, 45 ஓவரில் 183 ரன்களுக்கு ‘ஆல்–அவுட்’ ஆனது. பவுல்ட் (0) அவுட்டாகாமல் இருந்தார். ஆஸ்திரேலியா சார்பில் பால்க்னர், ஜான்சன் தலா 3, ஸ்டார்க் 2, மேக்ஸ்வெல் ஒரு விக்கெட் கைப்பற்றினர்.
கிளார்க் அபாரம்:
போகிற போக்கில் எட்டும் இலக்கை விரட்டிய ஆஸ்திரேலிய அணிக்கு ஆரோன் பின்ச் (0) ஏமாற்றினார். டிம் சவுத்தீ வீசிய 5வது ஓவரில் ‘ஹாட்ரிக்’ பவுண்டரி விளாசிய டேவிட் வார்னர் (45) நல்ல அடித்தளம் அமைத்தார். பின் இணைந்த ஸ்டீவ் ஸ்மித், கேப்டன் மைக்கேல் கிளார்க் ஜோடி நியூசிலாந்து பந்துவீச்சை சிதறடித்தது. இருவரும் அரைசதம் கடந்தனர். கடைசி ஒருநாள் போட்டியில் பங்கேற்ற கிளார்க், சவுத்தீ வீசிய 31வது ஓவரில் தொடர்ச்சியாக 4 பவுண்டரி அடித்தார். மூன்றாவது விக்கெட்டுக்கு 112 ரன்கள் சேர்த்த போது, கிளார்க் (74) அவுட்டானார். ஹென்ரி பந்தை பவுண்டரிக்கு விரட்டிய ஸ்மித், வெற்றியை உறுதி செய்தார்.
சுவாரஸ்யம் இல்லை: ஆஸ்திரேலிய அணி 33.1 ஓவரில் 3 விக்கெட்டுக்கு 186 ரன்கள் எடுத்து எளிதாக வெற்றி பெற, பைனல் சுவாரஸ்யம் இல்லாமல் முடிந்தது. ஸ்மித் (56), வாட்சன் (2) அவுட்டாகாமல் இருந்தனர். நியூசிலாந்து சார்பில் ஹென்ரி 2, பவுல்ட் ஒரு விக்கெட் வீழ்த்தினர். ஆட்டநாயகன் விருதை ஆஸ்திரேலியாவின் ஜேம்ஸ் பால்க்னர் வென்றார். தொடர் நாயகன் விருதை, ஆஸ்திரேலிய வீரர் ஸ்டார்க் பெற்றார்.
‘உலக நாயகன்’
கடந்த 1987ல் இந்தியா, 1999ல் இங்கிலாந்து, 2003ல் தென் ஆப்ரிக்கா, 2007ல் வெஸ்ட் இண்டீஸ், 2015ல் ஆஸ்திரேலியா என உலகின் பல்வேறு பகுதிகளில் நடந்த உலக கோப்பை தொடரில் சாம்பியன் பட்டம் வென்ற ஒரே அணி என்ற சாதனை படைத்தது ஆஸ்திரேலியா.
* தவிர, சொந்த மண்ணில் நடந்த உலக கோப்பையில் சாம்பியன் பட்டம் வென்ற இரண்டாவது அணி என்ற பெருமை பெற்றது. கடந்த 2011ல் இந்திய அணி, சொந்த மண்ணில் கோப்பை வென்றது.
நான்காவது கேப்டன்
ஆஸ்திரேலியாவுக்கு உலக கோப்பை வென்று தந்த 4வது கேப்டன் என்ற பெருமை பெற்றார் மைக்கேல் கிளார்க். இதற்கு முன், ஆலன் பார்டர்
(1987), ஸ்டீவ் வாக் (1999), ரிக்கி பாண்டிங் (2003, 2007) தலைமையிலான ஆஸ்திரேலிய அணி உலக சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது.
7
இதுவரை நடந்த 11 உலக கோப்பை பைனலில், 7 முறை (1975,
79, 83, 99, 2003, 2011, 2015) ‘டாஸ்’ வென்ற அணி தோல்வியை சந்தித்தது. நான்கு முறை (1987,
1992, 1996, 2007) வெற்றி பெற்றன.
‘டக்–அவுட்’ சோகம்
இம்முறை அதிக முறை ‘டக்–அவுட்’ ஆனவர்கள் பட்டியலில் ஐக்கிய அரபு எமிரேட்சின் (யு.ஏ.இ.,) கிருஷ்ண சந்திரன் முதலிடம் பிடித்தார். இவர், 5 போட்டியில் 3 முறை ஒரு ரன் கூட எடுக்காமல் ஆட்டமிழந்தார். ஆஸ்திரேலியாவின் மிட்சல் ஸ்டார்க், இங்கிலாந்தின் இயான் மார்கன், வெஸ்ட் இண்டீசின் ராம்தின், இலங்கையின் தில்ஷன் உள்ளிட்டோர் தலா 2 முறை ‘டக்–அவுட்’ ஆனார்கள்.
ஹாடின் ‘டாப்’
அதிக விக்கெட் வீழ்ச்சிக்கு வித்திட்ட விக்கெட் கீப்பர்கள் பட்டியலில், ஆஸ்திரேலியாவின் பிராட் ஹாடின் முதலிடம் பிடித்தார். இவர், 8 போட்டியில் 16 முறை விக்கெட் வீழ்ச்சிக்கு காரணமாக இருந்தார். இவரை அடுத்து இந்தியாவின் தோனி (15), வெஸ்ட் இண்டீசின் ராம்தின் (13), நியூசிலாந்தின் ரான்கி (13) ஆகியோர் அதிக விக்கெட் வீழ்ச்சிக்கு வித்திட்டனர்.
9
அதிக ‘கேட்ச்’ பிடித்த வீரருக்கான பட்டியலில் தென் ஆப்ரிக்காவின் ரூசோவ் முதலிடத்தை கைப்பற்றினார். இவர், 6 போட்டியில் 9 ‘கேட்ச்’ பிடித்தார். இந்தியாவின் உமேஷ் யாதவ் (8), இங்கிலாந்தின் ஜோ ரூட் (7), ஷிகர் தவான் (7) உள்ளிட்டோரும் பீல்டிங்கில் அசத்தினர்.
‘ஸ்டார்’ ஸ்டார்க்
இம்முறை சிறந்த வீரருக்கான தொடர் நாயகன் விருதை ஆஸ்திரேலியாவின் மிட்சல் ஸ்டார்க் வென்றார். இவர், 8 போட்டியில் 22 விக்கெட் கைப்பற்றி, அதிக விக்கெட் வீழ்த்தியவருக்கான பட்டியலில் முதலிடம் பிடித்தார். இதன்மூலம் உலக கோப்பை வரலாற்றில் தொடர் நாயகன் விருது வென்ற இரண்டாவது ஆஸ்திரேலிய வீரரானார். கடந்த 2007ல் ஆஸ்திரேலியாவின் மெக்ராத் (26 விக்.,) இவ்விருது வென்றார்.
இரண்டு ‘ஹாட்ரிக்’
இம்முறை இரண்டு பவுலர்கள் ‘ஹாட்ரிக்’ சாதனை படைத்தனர். ஆஸ்திரேலியாவுக்கு எதிரான லீக் போட்டியில் இங்கிலாந்தின் ஸ்டீவன் பின், இலங்கைக்கு எதிரான காலிறுதியில் தென் ஆப்ரிக்காவின் டுமினி, இம்மைல்கல்லை எட்டினர்.
* இதுவரை, உலக கோப்பை அரங்கில் 9 முறை ‘ஹாட்ரிக்’ சாதனை படைக்கப்பட்டுள்ளது. இதில் இலங்கையின் லசித் மலிங்கா இரண்டு முறை (2007,
2011) இந்த இலக்கை எட்டினார்.
64
வெஸ்ட் இண்டீசுக்கு எதிராக சிட்னியில் நடந்த போட்டியில் தென் ஆப்ரிக்காவின் டிவிலியர்ஸ் 162 ரன்கள் எடுத்தார். இதில், 64 பந்துகளில் 150 ரன்களை எட்டிய இவர், ஒருநாள் அரங்கில் அதிவேக 150 ரன்கள் எடுத்த வீரர் என்ற சாதனை படைத்தார்.
18
இங்கிலாந்துக்கு எதிரான லீக் போட்டியில் 18 பந்தில் அரைசதமடித்த நியூசிலாந்தின் பிரண்டன் மெக்கலம், உலக கோப்பை அரங்கில் அதிவேக அரைசதமடித்த வீரர் என்ற பெருமை பெற்றார். இதற்கு முன், 2007ல் கனடாவுக்கு எதிராக இவர், 20 பந்தில் அரைசதத்தை பதிவு செய்தது சாதனையாக இருந்தது.
0
நியூசிலாந்தின் பிரண்டன் மெக்கலம் (0), உலக கோப்பை பைனலில் ‘டக்–அவுட்’ ஆன முதல் கேப்டன் ஆனார். கடந்த 1983ல் இந்தியாவுக்கு எதிரான பைனலில், வெஸ்ட் இண்டீசின் கிளைவ் லாய்டு, குறைந்தபட்சமாக 8 ரன்னில் ஆட்டமிழந்தார்.
400
ஆஸ்திரேலியா, நியூசிலாந்து அணிகள் மோதிய பைனல், உலக கோப்பை அரங்கின் 400வது போட்டியாக அமைந்தது. இதுவரை 3646 ஒருநாள் போட்டிகள் நடந்துள்ளன.
1
உலக கோப்பை தொடரில் வீரராகவும், அம்பயராகவும் செயல்பட்ட பெருமையை இலங்கையின் தர்மசேனா பெற்றார். கடந்த 1996ல் நடந்த உலக கோப்பையில் இலங்கை அணிக்காக விளையாடிய இவர், இம்முறை அம்பயராக பணியாற்றினார்.
37
அதிக வயதில் (37 ஆண்டு, 157 நாட்கள்) உலக கோப்பை பைனலில் விளையாடிய ஆஸ்திரேலிய வீரர் என்ற பெருமையை பிராட் ஹாடின் பெற்றார். இதற்கு முன், 2007ல் நடந்த பைனலில் மெக்ராத் (37 ஆண்டு, 78 நாட்கள்) விளையாடினார்.
417
இம்முறை ஒரு இன்னிங்சில் அதிக ரன்கள் எடுத்த அணிகளுக்கான பட்டியலில் ஆஸ்திரேலியா முதலிடம் பிடித்தது. பெர்த்தில் நடந்த ஆப்கானிஸ்தானுக்கு எதிரான லீக் போட்டியில் ஆஸ்திரேலிய அணி 417 ரன்கள் குவித்தது. இதனையடுத்து, அயர்லாந்து (411 ரன்), வெஸ்ட் இண்டீஸ் (408) அணிகளுக்கு எதிரான லீக் போட்டிகளில் தென் ஆப்ரிக்க அணி 400 ரன்களுக்கு மேல் எடுத்தது.
38
உலக கோப்பை தொடரில் இம்முறை மொத்தம் 38 சதங்கள் பதிவாகின. இது, மற்ற உலக கோப்பை தொடர்களை காட்டிலும் அதிகம். இதற்கு முன், கடந்த 2011ல் நடந்த தொடரில் 24 சதங்கள் அடிக்கப்பட்டன. கடந்த 1979ல் நடந்த தொடரில் 2 சதம் மட்டுமே அடிக்கப்பட்டது. கடந்த 1975ல் நடந்த முதலாவது உலக கோப்பை தொடரில் 6 சதமடிக்கப்பட்டது. அதன்பின் கடந்த 1979ல் 2,
1983ல் 8, 1987ல் 11, 1992ல் 8, 1996ல் 16, 1999ல் 11, 2003ல் 21, 2007ல் 20, 2011ல் 24 சதங்கள் பதிவாகின. இங்கிலாந்தின் டென்னிஸ் அமிஸ், உலக கோப்பையில் முதல் சதமடித்த வீரர் என்ற பெருமை பெற்றார்.
8
இலங்கை சார்பில் இம்முறை அதிகபட்சமாக 8 சதம் பதிவானது. தென் ஆப்ரிக்கா (5 சதம்), இந்தியா (5) சார்பில் அதிக சதமடிக்கப்பட்டன. ஆஸ்திரேலியா (4), வெஸ்ட் இண்டீஸ் (3), நியூசிலாந்து (2), வங்கதேசம் (2), இங்கிலாந்து (2), அயர்லாந்து (2), ஜிம்பாப்வே (2), பாகிஸ்தான் (1), ஐக்கிய அரபு எமிரேட்ஸ் (1), ஸ்காட்லாந்து (1) அணிகள் சார்பிலும் சதமடிக்கப்பட்டன.
4
அதிக சதமடித்தவர்கள் பட்டியலில் இலங்கையின் சங்ககரா (4
சதம்) முதலிடம் பிடித்தார். இலங்கையின் தில்ஷன், இந்தியாவின் ஷிகர் தவான், ஜிம்பாப்வேயின் பிரண்டன் டெய்லர், வங்கதேசத்தின் மகமதுல்லா, நியூசிலாந்தின் மார்டின் கப்டில் தலா 2 சதமடித்தனர். ஆஸ்திரேலியாவின் பின்ச், வார்னர், மேக்ஸ்வெல், ஸ்டீவ் ஸ்மித், தென் ஆப்ரிக்காவின் மில்லர், டிவிலியர்ஸ், இந்தியாவின் கோஹ்லி, ரெய்னா, ரோகித் சர்மா உள்ளிட்டோர் தலா ஒரு சதமடித்தனர்
கலக்கல் கப்டில்
இம்முறை அதிக ரன்கள் எடுத்தவர்கள் பட்டியலில், நியூசிலாந்தின் மார்டின் கப்டில் முதலிடம் பிடித்தார். இவர், 9 போட்டியில் 2 சதம், ஒரு அரைசதம் உட்பட 547 ரன்கள் எடுத்தார். இரண்டாவது இடத்தை இலங்கையின் சங்ககரா (541 ரன், 7 போட்டி) கைப்பற்றினார். இந்தியா சார்பில் ஷிகர் தவான் (412 ரன், 8 போட்டி) முதலிடத்தை கைப்பற்றினார்.
ஸ்டார்க் மிரட்டல்
அதிக விக்கெட் கைப்பற்றியவர்கள் பட்டியலில் ஆஸ்திரேலியாவின் ஸ்டார்க்(8 போட்டி, 22 விக்.,) முதலிடம் பிடித்தார். அடுத்த இடங்களில் நியூசிலாந்தின் பவுல்ட் (9 போட்டி, 22 விக்.,), இந்தியாவின் உமேஷ் (8 போட்டி, 18 விக்.,), முகமது ஷமி (7 போட்டி, 17 விக்.,) உள்ளனர்.
‘183’
பைனலுக்கும் 183 ரன்களுக்கும் ஒருவித தொடர்பு உள்ளது. 1983ல் லார்ட்சில் நடந்த உலக கோப்பை பைனலில் கபில்தேவ் தலைமையிலான இந்திய அணி 54.4 ஓவரில் 183 ரன்கள் எடுத்தது. இந்த இலக்கை விரட்டிய வெஸ்ட் இண்டீஸ் அணி 52 ஓவரில் 140 ரன்களுக்கு சுருண்டது. 43 ரன்களில் வென்ற இந்தியா முதல் கோப்பை வென்றது. நேற்று நியூசிலாந்து பவுலர்கள் சொதப்பியதால், பழைய வரலாறு திரும்பவில்லை.
463
இம்முறை, மொத்தம் 463 சிக்சர் அடிக்கப்பட்டன. இதில் அதிகபட்சமாக வெஸ்ட் இண்டீசின் கிறிஸ் கெய்ல் 26 சிக்சர் அடித்தார். தென் ஆப்ரிக்காவின் டிவிலியர்ஸ் (21), நியூசிலாந்தின் பிரண்டன் மெக்கலம் (17), மார்டின் கப்டில் (16) உள்ளிட்டோரும் சிக்சர் மழை பொழிந்தனர்.
* வெஸ்ட் இண்டீஸ் சார்பில் 68 சிக்சர் பதிவானது.
2169
லீக் சுற்று முதல் பைனல் வரை மொத்தம் 2169 பவுண்டரிகள் அடிக்கப்பட்டன. இதில் அதிகபட்சமாக நியூசிலாந்தின் மார்டின் கப்டில், 58 பவுண்டரி விளாசினார். இலங்கையின் சங்ககரா (57), இந்தியாவின் ஷிகர் தவான் (48), இலங்கையின் தில்ஷன் (47), நியூசிலாந்தின் பிரண்டன் மெக்கலம் (44) ஆகியோரும் பவுண்டரி அடித்தனர்.
* நியூசிலாந்து, ஆஸ்திரேலியா சார்பில் தலா 216 பவுண்டரிகள் அடிக்கப்பட்டன.
237
ஒரு இன்னிங்சில் அதிக ரன்கள் எடுத்த வீரர்கள் பட்டியலில் நியூசிலாந்தின் மார்டின் கப்டில் முதலிடம் பிடித்தார். இவர், வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான போட்டியில் 237 ரன்கள் எடுத்தார். இதன்மூலம் உலக கோப்பை வரலாற்றில், ஒரு இன்னிங்சில் அதிக ரன்கள் எடுத்த வீரர் என்ற சாதனை படைத்தார்.
215
ஜிம்பாப்வே அணிக்கு எதிராக 215 ரன்கள் எடுத்த வெஸ்ட் இண்டீசின் கிறிஸ் கெய்ல், உலக கோப்பை வரலாற்றில் இரட்டை சதமடித்த முதல் வீரர் என்ற சாதனை படைத்தார்.
4
வங்கதேசம்
(105*), இங்கிலாந்து (117), ஆஸ்திரேலியா (104),
ஸ்காட்லாந்து (124) அணிகளுக்கு எதிராக அசத்திய இலங்கையின் சங்ககரா, ஒருநாள் மற்றும் உலக கோப்பை வரலாற்றில் தொடர்ச்சியாக 4 சதமடித்த முதல் வீரர் என்ற புதிய வரலாறு படைத்தார்.
நன்றி தினமலர்
No comments:
Post a Comment