Monday, January 2, 2017

ஜெயலலிதாவின் மரண மர்மமுடிச்சு அவிழ்வது எப்போது?

 
தமிழக அரசியலில் மட்டுமல்லாது இந்திய மத்திய அரசியலிலும் ஆதிக்கம்  செலுத்தியவர் ஜெயலலிதா.அவரது வாழ்க்கையும் அரசியலும் புரியாத புதிராக  இருந்தது  அவர் வாழ்ந்த போயஸ்கார்டனில் என்ன நடக்கிறதென்பது வெளி உலகத்துக்குத் தெரிவதில்லை.அரசியலில் நிரந்தர நண்பனும் இல்லை எதிரியும் இல்லை என்பது அவரது தாரக மந்திரம் யாரும் எதிர்பார்க்காத நேரத்தில்  திடீரென‌முடிவெடுப்பார். யாரும் எதிர்பார்த்திராத நேரத்தில் திடீரென‌ இறந்துவிட்டார்.

உடல்நிலை பாதிக்கப்பட்ட ஜெயலலிதா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதை அறிந்த அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத் தொண்டர்கள் அதிர்ச்சியடைந்தனர். இரண்டு நாட்களில் வீட்டுக்குத் திரும்பிவிடுவார் என அறிவிக்கப்பட்டதும் சற்று ஆறுதலடைந்தனர். இங்கிலாந்தின் சிறப்பு வைத்தியரும் டில்லி எய்ம்ஸ் வைத்தியர்களும் ஜெயலலிதாவுக்கு சிகிச்சையளிக்க அப்பலோவுக்கு சென்றதால் தொண்டர்கள் கலக்கமடைந்தனர்.ஜெயலலிதா சிரிக்கிறார், உரையாடுகிறார், ரீவி பார்க்கிறார்,என்ற தகவல்கள் வெளியானதும் கலக்கம் கலைந்தது. ஜெயலலிதா விரைவில் வீட்டுக்குத் திரும்புவர் என்ற அறிக்கை வெளியானதும் தொண்டர்கள் குதூகலமடைந்தனர்.டிசம்பர் .4ஆம் திகதி அந்திசாயும் நேரம் ஜெயலலிதா இறந்துவிட்டதாக செய்தி வெளியானதும் தொண்டர்கள் ஆவேசமானார்கள். அச் செய்தி வதந்தி என அப்பலோ  அறிவித்ததும் அமைதி நிலவியதுமறுநாள் விடிந்ததும் ஜெயலலிதா இறந்த செய்தி இடிபோல் விழுந்தது. 

 உடல்நிலை பதிக்கப்பட்ட ஜெயலலிதா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நாள் முதல் அவர் இறந்து உடல் அடக்கம் செய்யப்பட நாள் வரை நடைபெற்ற முன்னுக்குப் பின் முரணான செய்திகளைக் கோர்த்துப் பார்க்கும்போது அவரது  மரணத்தில் மர்மம் இருப்பதாக  சமூக வலைத்தளங்கள் செய்தி வெளியிட்டன. அப்போது அவற்றை யாரும் பெரிதாகக் கணக்கெடுக்கவில்லை. ஜெயலலிதாவின் மரணத்தில் பொது மக்களைப் போல் எனக்கும் சந்தேகம் இருக்கிறது. எனது முன்னிலையில் விசாரணை நடைபெற்றால் பிணத்தைத் தோண்டுவதற்கு உத்தரவிடுவேன் என உயர் நீதி மன்ற நீதிபதி தெரிவித்ததால் ஜெயலலிதாவின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக பலரும் வெளிப்படையாக அறிவிக்கின்றனர்.
சென்னை அருப்பாக்கத்தைச் சேர்ந்த பி.ஜே.ஜோசப் என்னும் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத் தொண்டனுக்கு ஜெயலலிதாவின் மரணத்தில் சந்தேகம் ஏற்பட்டதால் சென்னை உயர் நீதி மன்றத்தில் பொது நல வழக்கு ஒன்றைத் தாக்கல் செய்தார்.அவர் நீதி மன்றத்தில் சமர்ப்பித்த மனுவில் பின் வருமாறு தெரிவித்துள்ளார்.

தமிழக சட்ட மன்றத் தேர்தல் முடிந்து நான்கு மாதங்களில் உடல் நிலை பாதிக்கப்பட்ட ஜெயலலிதா கடந்த செப்ரெம்பர் மாதம் 22 ஆம் திகதி சென்னை அப்பலோ வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். காய்ச்சல் ,நீர்ச்சத்துக் குறைவு காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இரண்டு தினங்களில் அவர் வீட்டுக்குத் திரும்பிவிடுவார் என அறிவிக்கப்பட்டது. 24  ஆம் திகதி மேலதிக சிகிச்சைக்காக ஜெயலலிதாவை  இலண்டனுக்குக் கொண்டு செல்லப்போவதாக செய்திகள் வெளியாகின அப்பலோ அவற்றை மறுத்து அவை எல்லாம் வதந்தி என்றது
.
ஜெயலலிதாவுக்கு வழங்கப்படும் வைத்திய அறிக்கையை வெளியிட்டு வதந்திக்கு முற்றுப்புள்ளி வைக்குமாறு கருணாநிதி கேட்டுக்கொண்டார்..அது தேவையற்றது என பண்டிருட்டி ராமச்சந்திரன் அறிவித்தார்.. ஜெயலலிதாவுக்கு சிகிச்சையளிக்கப்படும் படத்தை வெளியிடுமாறு பல தரப்பில் இருந்து கோரிக்கை விடுக்கப்பட்டபோது அது அவசியமில்லை என அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் மறுப்புத் தெரிவித்தது. இங்கிலாந்தில் இருந்து வருகை தந்த சிரேஷ்ட வைத்திய நிபுணர் ஜெயலலிதாவைப்  பார்வையிட்டார். எய்ம்ஸ் மருத்துவர் குழு ஜெயலலிதாவுக்கு சிகிச்சையளித்தது. இரண்டு நாட்களில் ஜெயலலிதா வீட்டுக்குத் திரும்புவார் என அப்பலோ அறிவித்தது. அந்த இரண்டு நாட்களுக்கிடையில் ஜெயலலிதா இறந்து விட்டார்.

ஜெயலலிதாவின் இரண்டு கால்களும் அகற்றப்பட்டுள்ளதாக ஒரு தகவல் வெளியாகி உள்ளது. மேலும் உடலை பதப்படுத்தியுள்ளார்கள்.. எதற்காக உடல் பதப்படுத்தப்பட்டது என்பதற்கான எந்த விளக்கமும் கொடுக்கப்படவில்லை.எனவே ஜெயலலிதாவின் மரணத்தில்  சந்தேகம் உள்ளது. நேதாஜி சுபாஷ் சந்திரபோஸில்  மரணத்தில் சந்தேகம் இருப்பதாகத் தொடரப்பட்ட வழக்கை விசாரித்த கொல்கட்டா உயர் நீதி மன்றம் ஒய்வு பெற்ற நீதிபதி தலைமையில் விசாரணைக் கமிசன் அமைக்க உத்தரவிட்டது.   அதேபோல் மிகப்பரிய தலைவரான ஜெயலலிதாவின் மரணம் பற்றி விசாரிக்க ஒய்வு பெற்ற மூன்று நீதிபதிகள்  தலைமையில் விசாரணைக் கமிஷம் அமைக்க உத்தரவிட வேண்டும் அவருக்கு வழங்கப்பட்ட சிகிச்சை பற்றிய விபரம் அப்பலோவிடம் இருந்து பெற்று பாதுகாக்க வேண்டும். என அந்தமனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


நீதிமன்றம் விடுமுறை காலமென்பதால்நீதிபதிகள் எஸ்.வைத்தியநாதன், வி.பார்த்திபன்  ஆகியோர் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. அப்போது அரசு தரப்பில் அட்வகேட் ஜெனரல் முத்துகுமாரசாமி,மத்திய அராசு சார்பில் மதனகோபால்ராவ்,மனுதாரர் சார்பில்   மூத்த வழக்கறிஞர் கே.எம்.விஜயன் ஆகியோர் ஆஜராகினர்.
அப்போது நீதிபதி எஸ்.வைத்தியநாதன் கருத்துத் தெரிவிக்கையில்  "ஒவ்வொரு குடிமகனுக்கும் வாழ்வதற்கான அடிப்படை  உரிமையை  அரசியல் சட்டம் வழங்கி பாதுகாக்கிறது.ஜெயலலிதா எப்படி இறந்தார் என்பதை மக்கள் அறிய வேண்டும்.ஜெயலலிதாவின் சாவில் மர்மம் உள்ளது என்பதை யார் வேண்டுமானாலும் கேட்கலாம்.ஜெயலலிதாவின் சாவில் பொதுமக்கள் சந்தேகப்படுகின்றனர். தனிப்பட்ட முறையில் எனக்கும் சந்தேகம் உள்ளது". என்றார்.இந்த வழக்கு விசாரணை அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் 9   ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட இருக்கிறது.
நீதிபதியின் கருத்தின்  பிற்பாடு ஜெயலலிதாவின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக பலரும் வெளிப்படையாகக் கருத்துத் தெரிவிக்கின்றனர். நோயாளி ஒருவரை  உறவினர்கள் நண்பர்கள் பார்வையிடுவதால் உளவியல் ரீதியாக அவர் தெம்படைவர் என்பார்கள். தன்னை யாரும் எளிதில் நெருங்கிவிடது பாதுகாப்பு வளையம் ஒன்றை ஜெயலலிதா  வைத்திருந்தார். அப்படிப்பட்ட ஜெயலலிதாவை மற்றவர்களிடம் இருந்து பிரித்து வைத்திருந்தது யார் என்ற கேள்விக்கு இதுவரை விடை கிடைக்கவில்லை.

ஜெயலலிதா சுகமடைந்து விட்டார். வைத்தியசாலையில் இருந்து வீட்டுக்குத் திரும்பும் நாளை அவர்தான் முடிவு செய்ய  வேண்டும் என அப்பலோவின் தலைமை வைத்தியர் பிரதாப் ரெட்டி பலமுறை தெரிவித்தார்.  ஜெயலலிதாவுக்கு மாரடைப்பு அல்லது ஹடியக் அரஸ்ட் வரவேண்டிய ஏதுநிலை இல்லை என்றே பிரதாப் ரெட்டி தெரிவித்துள்ளார். இது எப்படி நடந்ததெனத் தெரியவில்லை என்கிறார்.

ஜெயலலிதாவுக்கு கறுப்புப்பூனை பாதுகாப்பு வழங்கப்பட்டிருந்தது. வைத்தியசாலைக்கு ஜெயலலிதாவைக் கொண்டு சென்றபோது அவர்களும் கூடச் சென்றர்களா. ஜெயலிதாவின் உடல் நிலை பற்றிய அறிக்கையை அவர்கள் தினமும் தமது தலைமையகத்துக்கு அறிக்கை சமர்ப்பித்தர்களா என்ற சந்தேகத்தை எதிர்க்கட்சித்  தலைவர் ஸ்டாலின் கிளப்பி உள்ளார். ஜெயலலிதாவை நிழல் போல்  பாதுகாத்த அவர்கள் எங்கே போனார்கள். வைத்திய சாலையில் அவர்கள் பாதுகாப்பு வழங்கினார்கள் இல்லையா இல்லை என்றால்    யாருடைய உத்தரவின் பேரில் அவர்கள் விலக்கப்பட்டர்கள்.

ஜெயலலிதாவின் உடல் அவசர அவசரமாக அடக்கம் செய்யப்பட்டது. அவரது கன்னத்தில் இருக்கும் நான்கு புள்ளிகள் எழுப்பும் சந்தேகத்துக்கும் விடை கிடைக்கவில்லை. நீண்ட நாட்கள் உடல் கெடாது இருப்பதற்காக செய்யப்பட்ட எம்பாம் அடையாளமே அது என்கிறார்கள். ஜெயலலிதாவுக்கு அஞ்சலி செலுத்த இலட்சக்கணக்கான தொண்டர்கள் குவிந்தனர். ஜெயலலிதாவின் உடலுக்கருகில் செல்ல யாருக்கும் அனுமதி வழங்கப்படவில்லை.வி.ஐ.பிக்களுக்கு அனுமதி வழங்கி தொண்டர்களைத் தடுத்த அந்த மர்மக் கரம் எது

ஜெயலலிதாவால் வீட்டை விட்டுத் துரத்தப்பட்டவர்கள் ஜெயலலிதாவின் உடலைச்சுற்றி பாதுகாப்பாக நின்றார்கள். ஜெயலலிதா இறந்ததும் அவர்களை வீட்டுக்குள் அனுமதித்ததுயார் என்பது புரியாத புதிராக உள்ளது. ஜெயலலிதா உயிருடன் இருக்கும் போது கட்டிய அதே பணிவை சசிகலாவுக்கு காட்டுவது ஏன் என்ற கேள்விக்கு விடை இல்லை.
 பலகோணங்களில் இருந்து புறப்படும் சந்தேகக் கேள்விகளுக்கு உரிய பதிலை  அறிவதற்கு தமிழகம் மட்டுமல்ல உலகமே காத்திருக்கிறது.
வர்மா  



No comments: