பற்றி எரிகிறது பங்களாதேஷ்
மாணவர்கள் போராடம்
வன்முறையாக வெடித்தது
அமுல்படுத்தப்படது ஊரடங்குச் சட்டம்
பங்களாதேஷில்
ஞாயிற்றுக்கிழமை நடந்த போராட்டத்தில் சுமார் 100 பேர்
கொல்லப்பட்டனர். நூற்றுக்கும் மெஏற்பட்டோர்
காயமடைந்தனர்.இது வரை நடைபெற்ற தொடர் போராட்டங்களில் பங்குபற்ரிய 11, 000 பேர் கைது செய்யப்பட்டனர்.
பங்களாதேஷின் முன்னணி
பெங்காலி மொழி நாளிதழான புரோதோம் அலோ, வன்முறையில் குறைந்தது 14 பொலிஸ் அதிகாரிகள் உட்பட குறைந்தது 95 பேர் இறந்ததாகக் கூறியது. சேனல் 24 செய்தி நிறுவனம் குறைந்தது 85 பேர் இறந்ததாக அறிவித்தது.
தலைநகர்
டாக்கா மற்றும் பிற பிரதேச மற்றும் மாவட்ட தலைமையகங்கள் உட்பட பல
பகுதிகளில் காலவரையற்ற ஊரடங்கு
சட்டத்தை இராணுவம் அறிவித்தது டாக்கா
மற்றும் பிற இடங்களில் சில விதிவிலக்குகளுடன் அரசாங்கம் முன்னதாக ஊரடங்கு உத்தரவை தளர்த்தியது. ஞாயிறு நடந்த போராட்டத்தினால் ஊரடங்குச் சட்டம் கடுமையாக அமுல் படுத்தப்பட்டது.
1971 ஆம் ஆண்டு
பாகிஸ்தானுக்கு எதிராக நடைபெற்ற சுதந்திரப் போரில் போராடிய வீரர்களின் குடும்பங்களுக்கு அரசு வேலைகளில் 30% த்தை அரசாங்கம் ஒதுக்கியது. இந்த இட
ஒதுக்கீட்டு முறையை நிறுத்தக் கோரி மாணவர்கள் கடந்த மாதம் போராட்டங்களைத் தொடங்கினர்.
, படைவீரர்களின்
ஒதுக்கீட்டை 5% ஆகக் குறைக்க வேண்டும் என்றும், 93% வேலைகள் தகுதியின் அடிப்படையில் ஒதுக்கப்பட வேண்டும் என்றும் உச்ச
நிதிமன்றம் தீர்ப்பளித்தது. மீதமுள்ள 2% சிறுபான்மை இன உறுப்பினர்கள் மற்றும்
திருநங்கைகள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு ஒதுக்கப்படும் எனவும் நீதிம்மன்றம் தனது தீர்ப்பில் குறிப்பிட்டது. அரசாங்கம்
இந்த முடிவை ஏற்றுக்கொண்டது, ஆனால்பங்களாதேஷ் அரசாங்கத்தின்
பலத்தைப் பயன்படுத்தியதால் வன்முறைக்கு பொறுப்பேற்க வேண்டும் என்று மாணவர்கள்
தொடர்ந்து கோரிக்கை விடுத்துள்ளனர்.
பங்களாதேஷில்போராட்டத்தில்
ஈடுபட்ட மாணவர்களுக்கும் ஆளும் கட்சி ஆதரவாளர்களுக்கும் மோதல் ஏற்பட்டதாகவும் இதுவே உயிரிழப்புகளுக்குக் காரணம் என்றும் கூறப்பட்டுள்ளது. இட ஒதுக்கீடு விவகாரத்தில்
மாணவர்களுக்குச் சாதகமாக தீர்ப்பு கிடைத்துவிட்டது. ஆனாலும்,
பிரதமர் ஷேக் ஹசீனா பதவி விலகக் கோரி அங்கே பல ஆயிரம் மாணவர்கள்
தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். மேலும், இந்த போராட்டத்தில் உயிரிழந்தோருக்கு நீதி வேண்டும் என்றும் போராட்டம் மாணவர்கள் கோரிக்கை
விடுக்கின்றனர்.
கண்ணீர்ப் புகைக் குண்டுகள் வீசியும், தடியடி நடத்தியும் மாணவர்கள்
போராட்டத்தை ஒடுக்க பங்களாதேஷ் அரசு செய்யும் முயற்சிகளால் வன்முறை தீவிரமடைகிறது.
போராட்டங்கள்
வன்முறையாக மாறுவதால் பங்களாதேஷ் அரசு நிலைமையை
சமாளிக்க அங்கே மறு அறிவிப்பு வரும் வரை ஊரடங்கு அமலில் இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஊரடங்கு சட்டத்தி
மீறிம் போராட்டத்தில் ஈடுபடுவோர் மீது மிகக் கடுமையான நடவடிக்கை எடுக்க அந்நாட்டு அரசு திட்டமிட்டுள்ளது.
தலைநகர்
டாக்காவின் பல இடங்களைப் போராட்டக்காரர்கள்
ஆக்கிரமித்துள்ளனர். அங்குப் பல முக்கிய இடங்களில்
சிறுசிறு மோதல்களும் நடந்துள்ளன. மேலும், போராட்டக்காரர்கள் முக்கிய நெடுஞ்சாலைகளை முடக்கியுள்ளனர்.. இந்த மாணவர் போராட்டத்திற்கு வங்கதேச எதிர்க்கட்சியின் ஆதரவும் இருப்பதாகச் சொல்லப்படுகிறது. மேலும், அங்கே போராட்டக்காரர்கள் ஒத்துழையாமை போராட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளனர்.. அங்கு பிரதமர் பதவி விலகும் வரை மக்கள் யாரும் வேலைக்குச் செல்லக் கூடாது என்றும் வரி செலுத்தக்கூடாது என வலியுறுத்தியுள்ளனர். அதையும் மீறி
இன்று திறக்கப்பட்ட அலுவலகங்கள் மற்றும் கடைகள் மீது போராட்டக்காரர்கள் தாக்குதல்களை நடத்தினர்.
அங்கு
சில இடங்களில் பெட்ரோல் குண்டு வீச்சு, துப்பாக்கிச் சூடு மற்றும் வாகனங்களுக்கு தீ வைக்கும் சம்பவங்களும்
நடந்ததாக கூறப்படுகிறது.
பிரதான எதிர்க்கட்சியான வங்காளதேச தேசியவாதக் கட்சி மற்றும் இப்போது தடைசெய்யப்பட்ட ஜமாத்-இ-இஸ்லாமி கட்சியால்
போராட்டங்களைத் தூண்டிவிடுவதாக பங்களாதேஷ் அரசாங்கம் குற்றம் சாட்டியுள்ளது.
ஞாயிற்றுக்கிழமை,
திங்கள் முதல் புதன்கிழமை வரை அரசு விடுமுறை அறிவித்தது. நீதிமன்றங்கள் காலவரையின்றி மூடப்படும். மொபைல் இன்டர்நெட் சேவை துண்டிக்கப்பட்டது, பேஸ்புக் மற்றும் வாட்ஸ்அப் உள்ளிட்டசமூக வலைத்தளங்கள் முடக்கப்பட்டன. வன்முறையைத் தடுக்கும் வகையில் இணைய
சேவைகள் சேவைகள் துண்டிக்கப்பட்டதாக தகவல் மற்றும் ஒலிபரப்புத் துறைக்கான இளநிலை அமைச்சர் முகமது அலி அராபத் தெரிவித்தார்.
டாக்காவின்
ஷாபாக் பகுதியில் உள்ள ஒரு பெரிய பொது மருத்துவமனையான பங்கபந்து ஷேக் முஜிப் மருத்துவ பல்கலைக்கழகத்தை ஆர்ப்பாட்டக்காரர்கள் தாக்கினர், பல வாகனங்களை எரித்தனர்.
டாக்காவில்
உள்ள மாஜிஸ்திரேட்
நீதிமன்றத்தில் போராட்டக்காரர்கள் சிறை வானை சேதப்படுத்தினர். தோட்டாக்கள்,
ரப்பர் தோட்டாக்கள் மற்றும் கண்ணீர்ப்புகைக் குண்டுகள் மூலம் பொலிஸார் ஆர்ப்பாட்டக் காரர்களைக் கலைத்தனர். போராட்டக்காரர்கள்
வாகனங்கள் மற்றும் ஆளுங்கட்சி அலுவலகங்களுக்கு தீ வைத்தனர்.
வடமேற்கு
மாவட்டமான சிராஜ்கஞ்சில்13 பொலிஸார் உட்பட 18 பேர்
கொல்லப்பட்டனர்.தென்கிழக்கு பங்களாதேஷில் உள்ள ஃபெனி மாவட்டத்தில் ஹசீனாவின் ஆதரவாளர்கள் போராட்டக்காரர்களுடன் மோதலில் 5 பேர் உயிரிழந்தனர்.
ஃபெனியில்
அரசு நடத்தும் மருத்துவமனையில் இருந்த ஐந்து
உடல்கள் இருந்தன, அவை அனைத்தும் தோட்டாக்களால் தாக்கப்பட்டன. அவர்கள் போராட்டக்காரர்களா அல்லது ஆளுங்கட்சி செயல்பாட்டாளர்களா என்பது தெரியவில்லை.
சட்டோகிராம்,
போகுரா, மகுரா, ரங்பூர், கிஷோர்கஞ்ச் மற்றும் சிராஜ்கஞ்ச் உள்ளிட்ட பத்துக்கும் மேற்பட்ட மாவட்டங்களில் வன்முறை மோதல்கள் நடந்ததாக ஜமுனா தொலைக்காட்சி செய்தி சேனல் தெரிவித்தது, அங்கு பிரதான எதிர்க்கட்சியின் ஆதரவுடன் எதிர்ப்பாளர்கள் காவல்துறை மற்றும் ஆளும் அவாமி லீக் செயல்பாட்டாளர்களுடன் மோதினர்.
சனிக்கிழமையன்று
மாணவர் தலைவர்களுடன் பேச ஹசீனா முன்வந்தார், ஆனால் ஒரு ஒருங்கிணைப்பாளர் மறுத்து அவர் ராஜினாமா செய்ய ஒரு அம்ச கோரிக்கையை அறிவித்தார்.
மரணங்கள்
குறித்து விசாரணை செய்து வன்முறைக்கு காரணமானவர்களை தண்டிப்பதாக ஹசீனா மீண்டும் உறுதியளித்தார்.
15 ஆண்டுகளுக்கும் மேலாக நாட்டை ஆட்சி செய்து வரும் ஹசீனாவுக்கு இந்தப் போராட்டம் பெரும் சவாலாக மாறியுள்ளது. ஜனவரி மாதம் நடந்த தேர்தலில் நான்காவது முறையாக அவர் மீண்டும் ஆட்சிக்கு வந்தார்.
No comments:
Post a Comment