Saturday, August 24, 2024

விஜயின் கட்சிக்கொடி சின்னம் அறிமுகம் யானை சின்னத்துக்கு பகுஜன் சமாஜ் கட்சி எதிர்ப்பு

தமிழக அரசியலில் கால் பதித்த நடிகர் விஜய் தனது பட்சிக் கொடியையும், சின்னத்தையும் அதிகாரப்பூர்வமாக   வெளியிட்டுகட்சிப் பாடலையும் அறிமுகப்படுத்தி உள்ளார்.

தமிழ் சினிமாவில் அரசியல் பஞ்ச்  வசனங்களைப் பேசி கைதட்டல் வாங்கிய  நடிகர் விஜய் டந்த பிப்ரவரி இரண்டாம் திகதி தமிழக வெற்றி கழகம் என்ற புதிய கட்சியை தொடங்கினார். விஜயின் ரசிகர்களும்தொண்டர்களும்ஆதரவு வழங்கினர். 2026 ஆம் ஆண்டு சட்டசபைத் தேர்தலே தனது குறி என விஜய் அறிவித்தார்.

  மாநாடு  நடத்தித் தனது பலத்தைக் காட்ட விரும்பும் விஜய் கட்சிக் கொடியையும் , கட்சியின் சின்னத்தையும் அறிமுகப்படுத்தி  தொண்டர்களை  உற்சாகப்படுத்தி உள்ளார்.

 தமிழ்நாட்டின் நலனுக்காக உழைத்து நம் மாநிலத்தின் அடையாளமாகவும் மாறப்போகும் வீரக்கொடியை வெற்றிக் கொடியை   கட்சித் தலைமை செயலகத்தில் அறிமுகப்படுத்தி கட்சி பாடலையும் வெளியிட்டார்தமிழக வெற்றிக் கழகத்தின் கட்சி கொடியை சென்னை பனையூரில் உள்ள கட்சி அலுவலகத்தில் கடந்த வியாளக்கிழமை விஜய்  அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளார்.

 இவ்விழாவில் மாவட்ட தலைவர்கள், நிர்வாகிகள், உள்ளிட்ட 300 சுமார்  பேர்   பங்கேற்றனர்.   விஜய்யின் பெற்றோர் எஸ்.. சந்திரசேகர் - ஷோபா சந்திரசேகரும் நிகழ்ச்சிக்கு வந்திருந்தனர்.

இந்த கட்சி கொடியில் மேலும் கீழும் சிவப்பு மற்றும் நடுவில் மஞ்சள் நிறங்கள் இடம் பெற்றுள்ளன. இந்த  கொடியில் இரண்டு யானைகளுக்கு நடுவில்  பச்சை நிறத்தில் 23 நட்சத்திரங்கள் மற்றும் 5 ஊதா நிற நட்சத்திரங்களும் இடம்பெற்றுள்ளன. இந்த நட்சத்திரங்களுக்கு அனைத்தும் ஒன்று சேர்ந்து வட்ட வடிவில் நடுவில் வெற்றியை குறிக்கும் வாகை மலரும் அமையப்பெற்றுள்ளது. விஜய் என்றால் வெற்றி. அதேபோல் வாகை என்றாலும் வெற்றி. எனவே தமிழக வெற்றிக் கழகத்தின் வெற்றி  என்பது உறுதி  என்பதைக் குறிக்கவே இக்கட்சி கொடியின் நடுவில் வாகை பூ இடம்பெற்றுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

, தமிழன் கொடி பறக்குது.. தலைவன் யுகம் பொறக்குது மூணெழுத்து மந்திரத்தை மீண்டும் காலம் ஒலிக்குது... சிருசும் பெருசும் ரசிக்குது... சிங்கப்பெண்கள் சிரிக்குது... மக்களோட தொப்புள் கொடியில் மொளச்ச கொடியும் பறக்குது.. என்ற பாடல் தற்போது வெளி


யாகி விஜய் ரசிகர்கள் மற்றும் தொண்டர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது

தமிழ் மற்றும் தமிழ் தேசியத்தை முழுமையாக விஜய் கையில் எடுத்துள்ளதை இந்தப் பாடல் பிரதிபலிக்கிறது. புரட்சிகரமான வார்த்தைகள் இந்த பாடலில் இடம்பெற்றுள்ளன. நடிகர் விஜயின் பட பாடலுக்கு எப்படி  வரவேற்பு கிடைத்ததோ அதேபோல விஜயின் கட்சி பாடலுக்கும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. தற்போது இந்தப் பாடல் வைரலாகி வருவதுடன் இந்த பாடலைக் கேட்கும்போதே நம்மை அறியாமல் புரட்சி வெளிப்படுகிறது என ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

விஜய்க்காக மெர்சல் படத்தில் ஆளப் போறான் தமிழன் என்ற பாடலை எழுதிய கவிஞர் விவேக்தான் இந்தப் பாடலையும் எழுதியுள்ளார். இசையமைப்பாளர் தமன் இந்தப் பாடலுக்கு இசையமைத்துள்ளார். விஜய் பாடல்கள் எப்போதுமே மின்னல் வேகத்தில் ஹிட்டாகும். அதே ரீதியில் இந்தப் பாடலும் ஹிட்டடித்துள்ளது.

விஜயின் அரசியல்  கட்சிக் கொடியில் உள்ள யானை படத்தை உடனடியாக நீக்க வேண்டும் என்று பகுஜன் சமாஜ் கட்சி  கோரிக்கை விடுத்துள்ளது.

இந்நிலையில், நடிகர் விஜய் வெளியிட்ட கட்சிக் கொடியில் யானை சின்னம் இருப்பதற்கு, பகுஜன் சமாஜ் கட்சி எதிர்ப்பு தெரிவித்துள்ளது. தேசிய கட்சியான பகுஜன் சமாஜ் கட்சியின் சின்னமான யானை படத்தை  பயன்படுத்துவது தேர்தல் விதிகளின் படி தவறானது எனவும், விஜய் கட்சியின் கொடியில் உள்ள யானை படத்தை உடனடியாக நீக்க வேண்டும் எனவும், உடன்படாத பட்சத்தில் சட்டரீதியாக எதிர்கொள்ள இருப்பதாக பகுஜன் சமாஜ் கட்சியினர் தகவல் தெரிவித்துள்ளனர்.

இதற்கிடையே, யானைச் சின்னம்  கேரள அரசின் இலச்சினையைக் குறிப்பது போல உள்ளதாகவும், பெவிக்கால் விளம்பரத்தில் வருவது போல உள்ளதாகவும் சிலர் சமூக வலைதளங்களில் விமர்சித்துப் பேசி வருகின்றனர்.


“1968-ம் ஆண்டு சின்னம் ஒதுக்கீட்டு சட்டத்தின் அடிப்படையில், இந்திய தேர்தல் ஆணையம் கடந்த ஆண்டு ஒரு சட்டத் திருத்தம் கொண்டு வந்தது. அதன்படி, யானை சின்னத்தை அசாம், சிக்கிம் தவிர வேறு எந்த மாநிலத்திலும் எந்த அரசியல் கட்சிகளும் எந்த வடிவத்திலும் பயன்படுத்தக் கூடாது என தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. தமிழக வெற்றிக் கழகத்தின் கொடியை வடிவமைக்கும்போது இச்சட்டம் தொடர்பாக அவர்களின் கவனத்துக்கு வந்திருக்காது என தெரியவந்தது.

பகுஜன் சமாஜ கட்சியின் கொடியில் ஒரு யானை மட்டும் உள்ளதுகேரள அரசுச் சின்னத்தில் இரண்டு யானைகள்  உள்ளன. ஆனால் , அவற்றின்  வடிவங்கள்  வேறுபட்டவை யானைச் சின்னம் குறித்து பகுஜன் சமாஜ் கட்சி ஆட்சேபனை தெரிவித்திருப்பதால் கொடி டிசைன் மாறுமா அல்லது இதை சட்டப்படி விஜய் சந்திப்பாரா என்று தெரியவில்லை.

ரமணி

No comments: