ஐசிசி தலைவராக பிசிசிஐ செயலாளர் ஜெய்ஷா போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டார். அந்தவகையில் டிசம்பர் 1 ஆம் திகதி ஐசிசியின் புதிய தலைவராக பொறுப்பேற்க உள்ளார் ஜெய்ஷாஇதன் மூலமாக மிக இளம் வயதிலேயே ஐசிசி தலைவர் பொறுப்புக்கு வந்தவர் என்ற சாதனையை ஜெய் ஷா படைத்திருக்கிறார்.
கடந்த
27 வருடங்களாக ஐந்து இந்தியர்கள் பிசிசிஐ தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.
முன்னதாக 1997ஆம் ஆண்டு பிசிசிஐ தலைவராக இருந்த
ஜக்மோகன் டால்மியா ஐசிசி தலைவர் பொறுப்புக்கு வந்தார். தொடர்ந்து 3 ஆண்டுகள்
பொறுப்பில் இருந்தார். கிரிக்கெட் வீரராக அல்லாமல் ஐசிசி தலைவராக அமர்ந்த முதல்
நபர் ஜக்மோகன் டால்மியா தான்.
இவரைத்தொடர்ந்து கடந்த 2010 ஆம் ஆண்டு ஐசிசியின்
தலைவர் பதவிக்கு தேர்வு செய்யப்பட்டார் சரத் பவார். அந்த வகையில் இரண்டு ஆண்டுகள்
அந்த பதவியை அலங்கரித்தார் பவார்.
பின்னர் பிசிசிஐ தலைவராக இருந்த தமிழ்நாட்டைச்
சேர்ந்த என் சீனிவாசன் 2014ஆம் ஆண்டு ஐசிசி தலைவர் பதவிக்கு வந்தார். ஆனால்
வருடாந்திர ஆய்வுக் குழுவில் ஸ்ரீனிவாசனுக்கு எதிராக தீர்மானம்
நிறைவேற்றப்பட்டதால் அந்த பொறுப்பில் இருந்து விலகினார்.
ஷஷாங்க்
மனோகர் 2016 முதல் 2020 வரை ஐசிசி தலைவராக இருந்தார். இச்சூழலில் தான் தற்போது
5வது இந்தியராக ஜெய்ஷா ஐசிசி தலைவர் பொறுப்பை ஏற்க உள்ளார். ஐசிசி தலைவராக
தேர்ந்தெடுக்கப்பட்ட பின்னர் ஜெய்ஷா பேசுகையில், "சர்வதேச கிரிக்கெட்
கவுன்சிலின் தலைவராக நியமிக்கப்பட்டதன் மூலம் நான் தாழ்மையுடன்
இருக்கிறேன்.கிரிக்கெட்டை மேலும் உலகமயமாக்க ஐசிசி மற்றும் எங்கள் உறுப்பு நாடுகளுடன்
நெருக்கமாக பணியாற்ற நான் உறுதிபூண்டுள்ளேன்.
பல வடிவங்களின் கிரிக்கெட்டை சமநிலைப்படுத்துவதும், மேம்பட்ட தொழில்நுட்பங்களை ஏற்றுக்கொள்வதை ஊக்குவிப்பதும் அதிக முக்கியத்துவம் வாய்ந்த ஒரு முக்கியமான கட்டத்தில் நாங்கள் நிற்கிறோம். முன்னெப்போதையும் விட கிரிக்கெட்டை பிரபலமாக்குவதே எங்கள் நோக்கம்"என்று கூறினார்.
No comments:
Post a Comment