Wednesday, August 7, 2024

இடைக்கால அரசங்கத்துக்காகக் காத்திருக்கிறது பங்களாதேஷ்


   இடைக்கால அரசங்கத்துக்காகக் காத்திருக்கிறது பங்களாதேஷ் 

இராணுவத் தளபதியைச் சந்திக்கிறார்கள்  மாணவர்கள்

பங்களாதேஷ் பிரதமர் ஷேக் ஹசீனா பிரதமர் பதவியை இராஜினாமா செய்த பின்னர் இந்தியாவில் தஞ்சமடைந்ததைத்  தொடர்ந்து இடைக்கால அரசாங்கத்தை அமைப்பதாக இராணுவம் அறிவித்துள்ளது. இதற்கிடையில் பங்களாதேஷின்  மாணவர் போராட்ட இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர்கள் இராணுவத் தலைவர் ஜெனரல் வாக்கர்-உஸ்-ஜமானைச் சந்திக்கத் திட்டமிட்டுள்ளனர்.

ஹசீனாவின் ஆளும் அவாமி லீக் கட்சியைத்  தவிர - முக்கிய அரசியல் கட்சிகளின் தலைவர்களுடன் தான் பேச்சுவார்த்தை நடத்தியதாக ஜமான் கூறினார்.

2018 ஆம் ஆண்டு ஊழல் வழக்கில் தண்டிக்கப்பட்ட ஹசீனாவின் எதிரியான பங்களாதேஷ் தேசியவாதக் கட்சியின் தலைவரும், ஹசீனாவின் எதிரியுமான பேகம் கலீதா ஜியாவை உடனடியாக விடுவிக்க "ஒருமனதாக முடிவு செய்யப்பட்டது" என்றும்  ஜமான் கூறினார்.

பங்களாதேஷ்  இராணுவத்தின் செயற்பாட்டை  அமெரிக்கா பாராட்டியது. "பங்களாதேஷில் ஜனநாயக உரிமைகளை மதிக்க வேண்டும் என்று அமெரிக்கா நீண்ட காலமாக அழைப்பு விடுத்து வருகிறது, மேலும் இடைக்கால அரசாங்கத்தை உருவாக்குவது ஜனநாயகமாகவும் அனைவரையும் உள்ளடக்கியதாகவும் இருக்க வேண்டும் என்று நாங்கள் வலியுறுத்துகிறோம். இன்று இராணுவம் காட்டிய நிதானத்திற்காக நாங்கள் பாராட்டுகிறோம், ”என்று வெள்ளை மாளிகை செய்தித் தொடர்பாளர் கூறினார்.

ஜனவரி மாதம் எதிர்க்கட்சிகள் புறக்கணித்த தேர்தலில் ஹசீனா நான்காவது முறையாக வெற்றி பெற்றார் . தேர்தல்கள் சுதந்திரமாகவும் நியாயமாகவும் நடைபெறவில்லை என்று அமெரிக்க வெளியுறவுத்துறை ஜனவரி மாதம் கூறியது, வாஷிங்டன் வாக்குப்பதிவு முறைகேடுகள் மற்றும் வன்முறைகள் பற்றிய அறிக்கைகளால் கவலையடைந்துள்ளது.

மாணவர் போராட்டத்தின் ஒருங்கிணைப்பாளர்கள், நோபல் அமைதிப் பரிசு பெற்ற முஹம்மது யூனுஸ் தலைமை ஆலோசகராக புதிய இடைக்கால அரசாங்கத்தை அமைக்க அழைப்பு விடுத்துள்ளதாக பேஸ்புக்கில் வெளியிட்ட காணொளியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாணவர் இயக்கத்தின் முக்கிய அமைப்பாளர்களில் ஒருவரான நஹிட் இஸ்லாம், மேலும் மூன்று அமைப்பாளர்களுடன் ஒரு வீடியோவில், “நாங்கள் பரிந்துரைத்த அரசைத் தவிர வேறு எந்த அரசாங்கமும் ஏற்றுக்கொள்ளப்படாது. "இராணுவ ஆதரவு அல்லது இராணுவம் தலைமையிலான எந்த அரசாங்கத்தையும் நாங்கள் ஏற்க மாட்டோம்."

"நாங்கள் முஹம்மது யூனுஸுடனும் கலந்துரையாடினோம், எங்கள் அழைப்பின் பேரில் அவர் இந்த பொறுப்பை ஏற்க ஒப்புக்கொண்டார்" என்று இஸ்லாம் மேலும் கூபிரதமர்  பதவியை இராஜினாமாச்  செய்த பங்களாதேஷ் பிரதமர் ஹெலிகொப்டர் மூலம்  இந்தியாவில் தஞ்சமடைந்ததாகச் செய்திகள் வெளியாகின. ஹசீனா   பங்கலாதேஷில் இருந்து ஹெலியில் புறப்பட்டு இந்தியாவில் தஞ்சமடைந்த அந்த பரபரப்பன திகில் பயணம் பற்றிய விபரங்கள் தற்போது  வெளியாகி உள்ளன.

 ஷேக் ஹசீனாவின் பாதுகாப்புக்காக இந்தியா பெரிய ரிஸ்க் எடுத்துள்ளதாகத் தகவல்  வெளியாகி உள்ளது.

பங்களாதேஷில்  மாணவர்களின் போராட்டம் மிகவும் மோசமான நிலைக்கு சென்றது. மாணவர்கள் பிரதமரின் அதிகாரப்பூர்வ இல்லத்தில் நுழையலாம் என்ற தகவல் கிடைத்தது. இதையடுத்து ஷேக் ஹசீனா தனது பிரதமர் பதவியை இராஜினாமா செய்துவிட்டு உடனடியாக வேறு நாட்டுக்கு தஞ்சமடைய முடிவு செய்தார்.  நாடுகளாக உள்ள பாகிஸ்தான் அவரை எதிர்க்கிறது.  சீனாவுக்கு எதிரான நிலைப்பாட்டை ஷேக் ஹசீனா கொண்டுள்ளார்.   இலங்கையை  அவர் பாதுகாப்பாக நினைக்கவில்லை. இதனால் ஷேக் ஹசீனா நட்பு நாடான இந்தியாவுக்கு செல்லத்  தயாரானார். இதையடுத்து அவர் அந்த நாட்டின் விமானப்படைக்கு சொந்தமான ஹெலிகாப்டரில் இந்தியா நோக்கி புறப்பட்டார். பொதுவாக ஒரு நாட்டின் பாதுகாப்பு படை ஹெலிகாப்டர் இன்னொரு நாட்டின் வான்வெளி பரப்பில் அனுமதியின்றி நுழைய கூடாது. அப்படி பறந்தால் சம்பந்தப்பட்ட நாடு அந்த ஹெலிகாப்டர் அல்லது விமானத்தை சுட்டு வீழ்த்தலாம். இத்தகைய சூழலில் தான் எந்த முன்னறிவிப்பும் இன்றி நேற்று மதியம் 3 மணியளவில் இந்திய வான்வெளி பரப்பை நோக்கி மிகவும் தாழ்வாக  பங்களாதேஷில் இருந்து  ஹெலிகாப்டர் பறந்து செல்வதை இந்திய  விமானப்படையினர் கண்டனர்.  விமானப்படை ரேடார்கள் இதனை கண்டுபிடித்து சிக்னல் செய்தது. மேலும் அந்த ஹெலிகாப்டரில் ஷேக் ஹசீனா இருப்பதை அவர்கள் உறுதி செய்தனர்.

பங்களாதேஷின் நிலைமை மோசமான நிலையில் ஷேக் ஹசீனா  இந்தியாநோக்கி வருவதை  விமானப்படை உணர்ந்தது. இதையடுத்து அவரை பாதுகாப்பாக   தரையிறங்க தேவையான பாதுகாப்பு நடவடிக்கைகளை உடனடியாக இந்தியா செய்ய தொடங்கியது

ஹசீனா பயணம் செய்த ஹெலிகொப்டர் இந்தியாவுக்குள் நுழைய அனுமதி வழங்கக்ப்பட்டது. ஷேக் ஹசீனாவின் பாதுகாப்புக்காக 2 ரஃபேல் போர் விமானங்களை உடனடியாக இந்திய விமானப்படை அனுப்பி வைத்தது.  மேற்கு வங்க மாநிலம் ஹஷிமாரா விமான தளத்தின் 101வது படைப்பிரிவில் இருந்து 2 ரஃபேல் போர் விமானங்கள் பீகார் மற்றும் ஜார்க்கண்ட் நோக்கி அனுப்பி வைக்கப்பட்டன. அந்த விமானங்கள் ஷேக் ஹசீனாவின் பாதுகாப்பை உறுதி செய்தன. தொடர்ச்சியாக விமானங்கள் வானில் பறந்தபடி தரைக்கட்டுப்பாட்டு மையத்துடன் தொடர்பில் இருந்தது. இந்திய விமானப்படை மற்றும் ராணுவத்தின் தலைவர்களான ஏர் ஷிப் மார்ஷல் விஆர் சவுதாரி மற்றும் ஜெனரல் உபேந்திர திவேதி ஆகியோர் நிலைமையை உன்னிப்பாக கண்காணித்து வந்த நிலையில் ஷேக் ஹசீனாவின் ஹெலிகாப்டர் உத்தர பிரதேச மாநிலம் ஹிண்டன் விமானப்படை தளத்தில் பாதுகாப்பாக மாலை 5.45 மணிக்கு தரையிறங்கியது இந்திய  தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல், ஷேக் ஹசீனாவை சந்தித்து பேசினார். அப்போது அவர் வபங்களாதேஷில்  நிலவும் நிலைமை, ஷேக் ஹசீனாவின் அடுத்தக்கட்ட பிளான் பற்றிய விவரங்களை கேட்டறிந்தார். அதன்பிறகு அஜித் தோவல் அதுபற்றிய விவரங்களை பிரதமர் நரேந்திர மோடியுடன் பகிர்ந்து கொண்டார். டெல்லியில் பிரதமர் மோடி தலைமையில் நடந்த கேபினட் கூட்டத்தில் அஜித் தோவல் இதுபற்றி விளக்கினார். மேலும் ஷேக் ஹசீனாவுக்கு ஏன் இந்தியா அனுமதி வழங்கியது. மேலும் தற்காலிகமாக தங்க அனுமதி வழங்கி உள்ளது? என்று பலருக்கும் கேள்வி எழுந்துள்ளது. அதன் பின்னணியில் ஷேக் ஹசீனா இந்தியாவுடன் தொடர்ந்து நட்பு பாராட்டி வந்தது தான் காரணம்.

பங்களாதேஷில்  கடந்த 2009ம் ஆண்டு முதல் பிரதமராக ஷேக் ஹசீனா தான் இருந்து வருகிறார். அன்று முதல் அவர் தொடர்ந்து   இந்தியாவுடன்  நல்லலுறவில் உள்ளார். 

பங்களாதேஷி இருந்து பயங்கரவாதிகள் மூலம் ந இந்தியாவுக்கு அச்சுறுத்தல் இருந்தது. ஆனால் ஷேக் ஹசீனா ஆட்சி காலத்தில் அந்த அச்சுறுத்தல் இல்லாமல் போனது. இது பாகிஸ்தானுக்கு பிடிக்கவில்லை. அதேபோல்  இந்தியாவுக்கு  எதிரான சதித்திட்டங்களை செய்து வரும் பாகிஸ்தான் மற்றும் சீனாவுடன் அவர் இணக்காம செயல்படவில்லை.

பங்களாதேஷில் நடைபெற்ற‌ வன்முறையின் பின்னணியில் பாகிஸ்தானின் உளவு அமைப்பான ஐஎஸ்ஐ உள்ளதாக கூறப்படுகிறது. அதாவது ஐஎஸ்ஐ என்பது பாகிஸ்தான் நாட்டின் அதிகாரப்பூர்வ உளவு மற்றும் புலனாய்வு அமைப்பாக உள்ளது.இந்த அமைப்பு தான்  மாணவர்களை வைத்து பதற்றத்தை ஏற்படுத்தி

பாகிஸ்தானின் சொல்லைக் கேட்காத  ஷேக் ஹசீனாவின் அவாமி லீக் கட்சியின் அரசை கலைப்பது தான் ஐஎஸ்ஐ அமைப்பின் முக்கிய நோக்கம்  ஷேக் ஹசீனா இந்தியாவை ஆதரிக்கிறார். . இதனை பாகிஸ்தான் விரும்பவில்லை. மாறாக ஷேக் ஹசீனாவுக்கு பதில் பாகிஸ்தான் நாட்டுக்கு ஆதரவு நிலைப்பாட்டில் இருக்கும் ப‌ங்களாதேஷ் தேசியவாதக் கட்சியை (பிஎன்பி) ஆட்சியை கொண்டு வருவது தான் ஐஎஸ்ஐ-யின் நோக்கமாக உள்ளது. இதனால் ஷேக் ஹசீனாவின் ஆட்சியை   கவிழ்த்து பிஎன்பி கட்சியின் ஆட்சியை கொண்டு வருவதன் மூலம் இந்தியாவுக்கும் குடைச்சலை தர முடியும் என பாகிஸ்தான் நம்புகிறது.

ஹசீனா நீண்டகாலம் இந்தியாவில் தங்கமாட்டார். இலண்டனில் தஞ்சமடைய  முடிவு செய்துள்ளார்.

No comments: