2025 ஆம் ஆண்டு உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் தொடருக்கான இறுதிப் போட்டியில் விளையாட தென் ஆபிரிக்கா தகுதி பெற்றுவிட்டது. இருதிப் போட்டியில் தென் ஆபிரிக்காவ்புடன் விளையாடுவதற்கு அவுஸ்திரேலியா,இந்தியா, இலங்கை ஆகிய மூன்று நாடுகள் களத்தில் உள்ளன.
2021,
2023 ஆகிய இரண்டு இறுதிப் போட்டி சயன்ஷிப்களில்
விளையாடி தோல்வியடைந்த மூன்றாவது முறையும் இறுதிப்[ போட்டியில் விளையாடும் என எதிர் பார்க்கப்பட்டது.
அவுஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் தோல்வியடைந்ததால் இரண்டாவது இடத்தில் இருந்த இந்தியா முன்ன்றசவது
இடத்துக்குத் தள்ளப்பட்டது.
அவுஸ்திரேலிய அணி 61.46 வெற்றி சதவீதத்துடன் இரண்டாவது
இடத்தில் இருக்கிறது.அவுஸ்திரேலியாவுக்கு இன்னும்
மூன்று டெஸ்ட் போட்டிகள் எஞ்சி இருக்கிறன. . இதில் இந்தியாவிற்கு எதிராக சிட்னி டெஸ்ட்
போட்டியும் பின் இலங்கையில் இரண்டு டெஸ்ட்
போட்டிகளும் உள்ளன. இந்த மூன்று டெஸ்ட் போட்டிகளில் அவுஸ்திரேலியா ஒன்றில் வெற்றி பெற்றால் கூட இறுதிச்சுற்றுக்கு
செல்ல முடியும். இதனால் அவுஸ்திரேலியா இரண்டாவது
இடம் பிடிக்கவே அதிக வாய்ப்பு இருக்கிறது.
இந்த
பட்டியலில் மூன்றாவது இடத்தை இந்தியா பிடித்திருக்கிறது. இந்தியா தற்போது 52.78 வெற்றி
சதவீதத்துடன் மூன்றாவது இடத்தில் உள்ளது. இந்தியா இறுதி சுற்றுக்கு செல்ல வேண்டுமென்றால்
அவர்களுக்கு சாதகமான முடிவுகள் அமைய வேண்டும்.
புத்தாண்டில் தொடங்கும் சிட்னி டெஸ்ட் போட்டியில்
இந்திய அணி கண்டிப்பாக வெற்றி பெற வேண்டும். இல்லையெனில் இந்தியா பைனலுக்கு செல்லும்
வாய்ப்பு இருக்காது. அது மட்டுமில்லாமல் அவுஸ்திரேலியா
இலங்கை அணிகள் மோதும் டெஸ்ட் போட்டியில் இலங்கை அணி குறைந்தபட்சம் ஒரு போட்டியிலாவது
வெல்ல வேண்டும். இல்லையெனில் இரண்டு போட்டியும் சமனில் முடிய வேண்டும். இது நடந்தால்
மட்டுமே இந்திய அணி பைனலுக்கு செல்லும்.
இந்த பட்டியலில் நான்காவது இடத்தில் நியூசிலாந்து அணி இருந்தாலும் பைனலுக்கு செல்லும் வாய்ப்பை ஏற்கனவே இழந்து விட்டது. ஐந்தாவது இடத்தில் இலங்கை அணி இருக்கிறது. இலங்கை அணி 45.45 வெற்றி சதவீதத்துடன் உள்ளது. இலங்கை அணி பைனலுக்கு செல்ல வேண்டும் என்றால் இந்தியா அவுஸ்திரேலியா மோதும் சிட்னி டெஸ்ட் போட்டி சமனில் முடிய வேண்டும். அது மட்டும் இல்லாமல் சொந்த மண்ணில் அவுஸ்திரேலியாவை இலங்கை இறுதிப் போட்டிக்குச் செல்ல முடியும்.
No comments:
Post a Comment