Wednesday, January 22, 2025

அல்கராஸை வீழ்த்தி அரையிறுதிக்குள் நுழைந்தார் ஜோகோவிச்

  அவுஸ்திரேலிய ஓபன் 2025 10வது நாள் ஆட்டத்தில் ஆடவர் ஒற்றையர் காலிறுதி ஆட்டத்தில் ஸ்பெயினின் கார்லோஸ் அல்கராஸை எதிர்த்து சேர்பியாவின் நோவக் ஜோகோவிச் எதிர்கொண்டார்.டென்னிஸ் ரசிகர்களால் எதிர் பார்க்கப்பட்ட இப் போட்டி பெரும் விருந்தாக அமைந்தது.

கடந்த செவ்வாய்க்கிழமை நடைபெற்ற அவுஸ்திரேலிய ஓபன் அரையிறுதி கிளாடியேட்டர் போரில் நோவக் ஜோகோவிச் 4-6, 6-4 ,6-3, 6-4 என்ற செட் கணக்கில் இளம் போட்டியாளரான கார்லோஸ் அல்கராஸை தோற்கடித்து 25வது கிராண்ட்ஸ்லாம் சாதனைக்கான வேட்டையில் இருக்கிறார்.

கடந்த ஆண்டு பரிஸ் ஒலிம்பிக்ஸ் தங்கப் பதக்கம் போட்டி உட்பட, மிகப்பெரிய  போட்டிகளில் முத்திரை பதித்த  ல்கராஸ் மீது தனது ஹார்ட்கோர்ட் ஆதிக்கத்தைச் செலுத்தினார்  ஜோகோவிச்.

பிரெஞ்ச் ஓபன் , விம்பிள்டன் ஆகியவற்றின் ச‌ம்பியனும், இளம் வயதில் கிராண்ட்ஸ்லாம் பட்டம் வென்றவருமான‌ 21 வயதான ஸ்பானிய  அல்கராஸுக்கு தோல்வி பலத்த அடியாகஉள்ளது.  ஜோகோவிச்சிடம் மூன்றாவது முறை  தோல்வியடைந்துள்ளார்.

10 முறை அவுஸ்திரேலிய ஓபன் சம்பியனான ஜோகோவிச், அரையிறுதியில் இரண்டாம் நிலை வீரரான ஜேர்மனிய வீரரான  அலெக்சாண்டர் ஸ்வெரேவை எதிர்கொள்கிறார்.

டென்னிஸ்,அவுஸ்திரேலியா,கிராண்ட்ஸ்லாம்,ஜோகோவிச், அல்கராஸ்,விளையாட்டு

No comments: