Wednesday, January 1, 2025

ஒரே டெஸ்ட்டில் 4 சதங்கள், 2 இரட்டை சதங்கள்

  கிரிக்கெட் உலகில் அறிமுகமாகிய சில ஆண்டுகளிலேயே டெஸ்ட் அங்கீகாரம் பெற்ற ஆப்கானிஸ்தான் அணிக்கும், நீண்ட ஆண்டுகளாக கிரிக்கெட் ஆடும் ஸிம்பாப்வே அணிக்கும் இடையேயான  டெஸ்ட் போட்டி விறுவிறுப்பாக நடைபெற்றது.

ஸிம்பாப்வே நாட்டில் நடக்கும் முதல் டெஸ்ட் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய  ஸிம்பாப்வே அணிக்காக சீன் வில்லியம்ஸ் 154  ,  கேடன் கிரெக் எர்வின் 104   , ப்ரையன் பென்னெட்டும் 110 ஓட்டங்கள்  அடித்தனர். ஸிம்பாப்வே அணி 586 ஓட்டங்கள் அடித்தது.

முதல் இன்னிங்சில் இமாலய ரன்களை குவித்த ஸிம்பாப்வே அணி ஆப்கன் விக்கெட்டுகளை எளிதில் வீழ்த்திவிடலாம் என்று எண்ணியது. தொடக்க வீரர் அடல் 3 , அப்துல் மாலிக் 23  ஓட்டங்களில் ஆட்டமிழந்தனர்.  அடுத்து வந்த ரஹமத் - கேப்டன் ஷாகிதி ஜோடி நங்கூரம் போல நின்றது.

அபாரமாக ஆடிய இருவரும் சதம் விளாசினார். சதம் விளாசிய பிறகும் பவுண்டரிகளாக விளாசினார். இவர்களைப் பிரிக்க கப்டன் கிரெக் எர்வின் எடுத்த எந்த முயற்சியும் பலன் அளிக்கவில்லை. சதம் விளாசி அசத்திய ரஹமத் இரட்டை சதம் விளாசினார். 64 ஓட்டங்களில் சேர்ந்த இந்த ஜோடி 428 ஓட்டங்களில்தான் பிரிந்தது.   ரஹமத் 424 பந்துகளில் 23 பவுண்டரி 3 சிக்ஸருடன் 234 ஓட்டங்கள் எடுத்து வெளியேறினார்.

அடுத்து வந்த ஷஷாயும் ஸிம்பாப்வே அணியைச் சோதித்தார். அவரும் ஸிபாப்வே பந்துவீச்சைச் சிதைக்க மறுமுனையில் கப்டன் ஷாகிதி இரட்டை சதம் விளாசினார். அவர் இரட்டை சதம் விளாசிய சிறிது நேரத்தில் ஷஷாய் சதம் அடித்தார்.  சிறப்பாக ஆடிய ஷஷாய் ஆப்கானிஸ்தான் 639 ஓட்டங்கள் எடுத்தபோது 113 ஓட்டங்களில் ஆட்டமிழந்தார்.

 250 ஓடன்ங்கள் அடிப்பார் என  எதிர்பார்த்தபோது       ஷாகிதி 246  ஓட்டங்களில் ஆட்டமிழந்தார். 474 பந்துகளில் 21 பவுண்டரியுடன் 246 ஓட்டங்கள் எடுத்திருந்தார். இறுதியில் ஆப்கானிஸ்தான் அணி 197 ஓவர்களில் 699 ஒட்டங்கள் எடுத்தது. 

No comments: