டென்னிஸ்ஸில் இருந்து சுமார் 23 வீரர்கள் ஓய்வு பெற்றனர். அவர்களில் கிராண்ட்ஸ்லாம் சம்பியன்கள் ஐவரும் அடக்கம். அந்த ஐந்து வீரர்கள் பற்றிய தொகுப்பு
ரபேல் நடால்
மலகாவில் நடைபெற்ற டேவிஸ்
கிண்ண இறுதிப்
போட்டியில் விளையாடிய பின்னர் ரபேல் நடால் ஓய்வு
பெற்றார்.
ஸ்பெய் வீரரான 8 வயதுடைய நடால் நான்கு
முறை டேவிஸ் பட்டத்தை வெல்ல உதவி
இருந்தார். 22 கிராண்ட்ஸ்லாம்
ஒற்றையர் பட்டங்களை வென்ற நடாலுக்கு டென்னிஸ் போட்டிகள் விளையாடும் மைதானமாக இருந்தது.
ரோலண்ட் கரோஸில் நடால் 14 பட்டங்களை வென்றார். யுஎஸ் ஓபனில் நான்கு முறை சம்பியனாகவும், விம்பிள்டன் , அவுஸ்திரேலிய ஓபன் இரண்டிலும் இரண்டு முறை சம்பியனாகவும் திகழ்கிறார்.அவரது 22 வெற்றிகளுடன், அவர் மேலும் எட்டு பெரிய இறுதிப் போட்டிகளை எட்டினார்.
ஆண்டி முர்ரே
ஆடவர்
இரட்டையர் பிரிவில் கடைசி எட்டு தோல்விக்குப் பிறகு டென்னிஸிலிருந்து வெளியேறிய , முன்னாள்
கிராண்ட்ஸ்லாம் வெற்றியாளர்களில் முர்ரேவும் ஒருவர்.
முதல் நான்கு முக்கிய இறுதிப் போட்டிகளில் தோல்வியடைந்த முர்ரேக்கு டென்னிச்
வாழ்க்கை வாழ்க்கை எளிதானதாக இருக்கவில்லை.
இருப்பினும்,
அவர் 2012 இல் அமெரிக்க ஓபனை வென்றார். 76 ஆண்டுகளில்
ஸ்லாம் ஒற்றையர் பட்டத்தை வென்ற முதல் பிரிட்டிஷ் வீரர் ஆண்டி முர்ரே.
முர்ரே விம்பிள்டனில் மே 2013 இல் பட்டத்தை வென்றார் 2016 இல் மீண்டும் சம்பியனானார். எட்டு ரன்னர்-அப் முடிவுகளுடன் டென்னிஸ்ஸில் இருந்து வெளியேறினார்.
ஏஞ்சலிக் கெர்பர்
பரிஸ்
2024 ஒலிம்பிக்குடன் ஓய்வு
பெற்ற இரண்டு டென்னிஸ் ஜாம்பவான்களில் ஒருவர்
ஏஞ்சலிக் கெர்பர்.
கெர்பர்
2016 இல் அவுஸ்திரேலிய ஓபன் பட்டத்தை வென்றதன் மூலம் டென்னிஸ் உலகை அதிர்ச்சிக்குள்ளாக்கினார்.
பின்னர் அந்த ஆண்டின் பிற்பகுதியில் விம்பிள்டன் இறுதிப் போட்டியில் வெற்றி பெற்று உலக நம்பர் 1 ஆனதோடு மட்டுமல்லாமல் யுஎஸ் ஓபனையும் வென்றதன் மூலம் கொடிகட்டிப் பறந்தார்.
கார்பைன் முகுருசா
முகுருசா
தனது கடைசி போட்டியில் 2023 இல் விளையாடிய போதிலும், ஸ்பெயின் வீராங்கனை ஏப்ரல் மாதத்தில் விளையாட்டிலிருந்து ஓய்வு பெறுவதை அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தினார்.
2016 ஆம் ஆண்டு
பிரெஞ்ச் ஓபன் பட்டத்தை வெல்வதன் மூலம் முதல் முறையாக கிராண்ட்ஸ்லாம் வெற்றியை ருசித்த போதிலும், முன்னாள் உலகின் முதல் நம்பர் 1 வீரர் 2015 ஆம் ஆண்டில் விம்பிள்டன் இறுதிப் போட்டியை எட்டினார்.
முகுருசா
2017 இல் தனது இரண்டு முக்கிய பட்டங்களில் இரண்டாவது முறை வென்றார்,
அவர் 2020 ஆஸ்திரேலியன் ஓபனில் நான்காவது மற்றும் கடைசி கிராண்ட்ஸ்லாம் இறுதிப் போட்டியை எட்டினார்.ஓய்வு பெற்றபோது, அவர் விளையாட்டை முழுமையாக விட்டுவிடவில்லை வரவிருக்கும் WTA இறுதிப் போட்டிகளில் அவர் போட்டி இயக்குநராக உள்ளார்.
டொமினிக் தீம்
வியன்னா
ஓபனில் தனது தொழில் வாழ்க்கையின் இறுதிப் போட்டியில் விளையாடி, சொந்த
மண்ணில் டென்னிஸுக்கு இறுதி விடை கொடுத்தார் உலகின் முன்னாள் நம்பர் 3 தீம்.
2018 ஆம் ஆண்டு
பிரெஞ்ச் ஓபனில் தனது முதல் கிராண்ட்ஸ்லாம் இறுதிப் போட்டியை அடைந்த ஆஸ்திரியர், 2019 பிரெஞ்ச் ஓபன் மற்றும் 2020 அவுஸ்திரேலியன் ஓபனில் இறுதிப் போட்டியை எட்டினார்.
இருப்பினும்,
அவர் இறுதியாக 2020 இல் யுஎஸ் ஓபனில் ஸ்லாம் பட்டத்தை வென்றார், விளையாட்டின் மிகப்பெரிய பட்டங்களுக்கான அவரது காத்திருப்பு முடிவுக்கு வந்தது.
அடுத்த
ஆண்டு அவருக்கு ஏற்பட்ட குறிப்பிடத்தக்க மணிக்கட்டு காயத்திலிருந்து மீளத் தவறியதால் ஓய்வு பெற்றார்.
No comments:
Post a Comment