இந்தியா - தென்னாப்ரிக்கா அணிகளுக்கு இடையேயான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் கடந்த நவம்பர் 14ம் திகதி கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் ஆரம்பமானது.
தென்னாப்ரிக்காவை
சமாளிக்குமா இந்தியா? டெஸ்டில் யார் ஆதிக்கம், கில் படைக்கான சவால் என்ன? போன்ற கேள்விகள்
ரசிகர்களிடம் உள்ளது. தென்னாப்ரிக்கா அணிக்கு எதிராக இரண்டு போட்டிகள்
கொண்ட டெஸ்ட் தொடரில் இந்தியா விளையாடுகிறது. தொடர்ந்து
3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர், 5 போட்டிகள் கொண்ட ரி20 தொடரில் இரண்டு நாடுகளும் விளையாட உள்ளன.
இந்தியாவும்
தென்னாப்பிரிக்காவும் இதுவரை 44 டெஸ்ட் போட்டிகளில் நேருக்கு நேர் மோதியுள்ளன. இதில்
இந்தியா 16 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளது, தென்னாப்பிரிக்கா 18 போட்டிகளில் வெற்றி
பெற்று முன்னிலை வகிக்கிறது. கடைசியாக தென்னாப்பிரிக்க இந்திய மண்ணில் கடந்த
2019-20 டெஸ்ட் போட்டியில் பங்கேற்றது. மூன்று போட்டிகள் கொண்ட அந்த டெஸ்ட் தொடரில், இந்தியா முழுமையாக ஆதிக்கம் செலுத்தி, 3-0 என்ற
கணக்கில் கைப்பற்றியது.
இந்தியாவிற்கும்
தென்னாப்பிரிக்காவிற்கும் இடையிலான டெஸ்ட் தொடர் 2015 முதல் சுதந்திரக் கிண்ணம் என்று
அழைக்கப்படுகிறது. அகிம்சை வழிமுறைகள் மூலம் இந்தியாவிற்கும் தென்னாப்பிரிக்காவிற்கும்
சுதந்திரத்தை அடைவதில் மகாத்மா காந்தி, நெல்சன்
மண்டேலா ஆகியோரின் பங்களிப்பை அங்கீகரிக்கும்
வகையில் இந்த தொடருக்கு சுதந்திர கோப்பை தொடர் என பெயர் சூட்டப்பட்டுள்ளது.தென்னாப்ரிக்காவுக்கு
எதிராக அதிக டெஸ்ட் ஓட்டங்கள் எடுத்த சாதனையை சச்சின் டெண்டுல்கர் வைத்திருக்கிறார்.
25 போட்டிகள் ,45 இன்னிங்ஸ்களில், அவர் 42.46 சராசரியாக 47.72 ஸ்ட்ரைக் ரேட்டுடன்
1,741 ஓட்டங்கள் எடுத்துள்ளார். டெண்டுல்கர் 7 சதங்களையும், 5 அரை சதங்களையும் அடித்துள்ளார். மூன்று முறை மட்டுமே டக்-அவுட் ஆனார். அதிக விக்கெட்
வீழ்த்தியவர்களின் பட்டியலில் தென்னாப்ரிக்காவின் ககிசோ ரபாடா முதலிடம் வகிக்கிறார். 14 டெஸ்ட் போட்டிகளில் 55 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளர்.
உள்ளூரில் அணியை வழிநடத்தாவிட்டாலும், தனது முதல் தொடரையே இங்கிலாந்து அணிக்கு எதிராக அந்நாட்டில் கப்டன் கில் தொடங்கினார். கடும் அழுத்தங்களுக்கு மத்தியிலும், 5 போட்டிகள் கொண்ட தொடரை 2-2 என சமன் செய்தார். போதிய அனுபவம் இல்லாத இளம் வீரர்களைக் கொண்டே, அந்த தொடரை சமன்படுத்தியதே பெரும் வெற்றியாக கருதப்பட்டது. இதையடுத்து உள்ளூரில் நடைபெற்ற மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான தொடர், எந்தவித சவாலும் இன்றி மிகவும் எளிதாக முடிந்தது. இந்நிலையில் தான், வலுவான தென்னாப்ரிக்கா அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் கில் அணி களமிறங்க உள்ளது.

No comments:
Post a Comment