Sunday, November 2, 2025

பாதிக்கப்பட்டவர்களைக் கூப்பிட்ட விஜய் கேலிக்குள்ளாகும் தவெக அரசியல்

 பாதிக்கப்பட்டவர்களைக் கூப்பிட்ட விஜய்

கேலிக்குள்ளாகும் தவெக அரசியல் 

  கரூரில் கடந்த மாதம் 27ம் திக‌தி  நடந்த தமிழக வெற்றிக் கழகத்தின் பரப்புரையில்விஜய்யைப் பார்ப்பதற்காக  சென்ற கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் ஒட்டுமொத்த தமிழ்நாட்டையும் சோகத்தில் ஆழ்த்தியது.

அந்தத் துயர சம்பவத்தின் பின்னர் விஜய் நடந்துகொண்ட விதம் தமிழகத்தில்  உள்ள அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியது. பாதிக்கப்பட்டவர்களை நேரில் சென்று ஆறுதல் கூறாதது, தார் மீகப் பொறுப்பை ஏற்காதது  போன்றவற்றால் விஜயின் அரசிய‌ல் பயணம்  விமர்சனங்களைச் சந்தித்தது.

  கரூர் சம்பவத்தின் பின்னர்  மூன்று நாட்கள் கழித்து விஜய் வெளியிட்ட வீடியோவும் விமர்சனங்களால் சீண்டப்பட்டது. அதிலும் ஸ்டாலினுக்குச் சவால் விட்டதை பலரும் வன்மையாகக் கண்டித்தார்கள். ஒரு மாதத்தின் பின்னர் பாதிக்கப்பட்டவர்களை அழைத்து ஆறுதல் சொன்னார் விஜய். பாதிக்கப்பட மக்களை அழைத்து ஆறுதல்  சொல்லும்   மோசமான  கலாசாரத்தை விஜய் ஆரம்பித்து வைத்துள்ளார்.

  உயிரிழந்தவர்களின் குடும்பங்களும், பாதிக்கப்பட்டவர்களும்  சிறப்பு  பஸ்களில்  மாமல்லபுரத்திற்கு   அழைத்து  செல்லப்பட்டனர். அங்கு  தனித்தனியாக ரூம்களில்  தங்க வைக்கப்பட்ட அவர்களை விஜய் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். 

மாமல்லபுரத்தில் உள்ள விடுதியில் உயிரிழந்தவர்களின் 41 பேர் குடும்பத்தினரையும் நடிகர் விஜய் தனித்தனியே சந்தித்தார். அவர்களது குடும்பத்தினரிடம் கரூரில் நேரில் வந்து உங்களைச் சந்திக்க முடியாததற்கு மன்னிப்பு கேட்கிறேன் என்று கூறியதாகவும், பாதிக்கப்பட்ட மக்களை நிச்சயம் கரூருக்கு மீண்டும் வந்து நேரில் சந்திப்பதாகவும் விஜய் வாக்குறுதி அளித்ததாகவும் தகவல் வெளியாகியுள்ளது. மேலும், அந்த குடும்பங்களிடம் விஜய் கண்ணீர் விட்டு அழுததாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

விஜயைச் சந்தித்த பின்னர் அவர்கள் கூறிய அனைத்துன்  தமிழகக மக்களால் மட்டுமல்லாது உலக மக்களாலும் ஏற்றுக்கொள்ளமுடியாததாக   இருக்கிறது.

விஜய் கதறி அழுதாராம், காலில் விழுந்தாராம்,  தங்களை விட மிகுந்த துயரத்தில்  விஜய்  இருக்கிறாராம் ஆனாலும் விஜய்தான் தமிழகத்தில் அடுத்த முதல்வர் எனவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

தவெக அரசியல் வரலாற்றில் சோகத்திற்குரிய நாளாக மாறிய அந்த பரப்புரையில் 41 பேர் உயிரிழந்த பிறகு,  விஜய்யின் செயல்பாடுகள்  விமர்சனத்திற்கு ஆளானது. பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணத் தொகை வழங்கினாலும் விஜய் நேரில் வரவில்லை என்ற விமர்சனம் அனைவராலும் முன்வைக்கப்பட்டது. 

இந்த சூழலில், விஜய் பாதிக்கப்பட்ட மக்களை தன்னைப் பார்க்க அழைத்து வந்துள்ளார். இந்த சம்பவம் விமர்சனத்தை உருவாக்கியுள்ளது. உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரை நேரில் சென்று பார்க்காமல், தன்னைப் பார்க்க அழைத்து வரலாமா? என்று அனைத்து தரப்பினரும் விமர்சனத்தை முன்வைத்து வருகின்றனர். இந்த சூழலில், தனது தரப்பு நியாயத்தை ஒவ்வொரு குடும்பத்தினரையும் தனித்தனியே நேரில் சந்தித்து விஜய் விளக்கம் அளித்ததுடன், பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு எப்போதும் உறுதுணையாக இருப்பதாகவும் விஜய் உத்தரவாதம் அளித்துள்ளார். சாட்சிகளை விஜய் கலைத்துவிட்டதாகவும்  பரவலாக குற்றச் சாட்டு வைக்கப்பட்டுள்ளது. சிபிஐ விசாரணைக்கு இது  பின்னடைவை  ஏற்படுத்தலாம் என சட்ட நிபுணர்கள் கருத்துத் தெரிவித்துள்ளனர்.

 கரூர் சம்பவத்தில்   கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்த ஈரோடை சேர்ந்த மோகன் என்பவரின் தந்தை கந்தசாமியை உள்ளே அனுமதிக்கவில்லை.

  கரூர் கூட்ட நெரிசலில் சிக்கி உயிழந்த ஈரோடு மாவட்டத்தை சேர்ந்த மோகன் (19) என்பவரின் தந்தை கந்தசாமியை உள்ளே அனுமதிக்கததால் கந்தசாமி மாமல்லபுரம் நட்சத்திர உணவக வளாக வாசலில் நெடுநேரமாக காத்திருந்தார். உயிரிழந்த இளைஞனின் அம்மா, சித்தப்பா ஆகியோர் உள்ளே அனுமதிக்கப்பட்ட நிலையில் தன்னை உள்ளே விட மறுப்பதாக அவரது தந்தை குற்றம் சாட்டினார்.

பலத்த கெடுபிடிகளின் மத்தியில் பாதிக்கப்பட்டவர்கள்  உள்ளே அனுமதிக்கப்பட்டனர். மரண அத்தாட்சிப் பத்திரம் காட்டியபின்னரே அவர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டதாம். விஜயைச் சந்திக்க வந்தவர்கள் மரண அத்தாட்சிப் பத்திரத்தை ஏன் கொண்டுவந்தார்கள் என்ற‌ கேள்வியும் எழுந்துள்ளது.

 

கரூரில் பாதிக்கப்பட்டவர்களைச் சந்தித்த பின்னர் விஜய் தனது அரசியல் பயணத்தை ஆரம்பித்துள்ளார்.

கட்சியின் நிர்வாகக் குழு கூட்டம்  நடைபெறும் என்று அறிவித்தார்.   தமிழக வெற்றிக் கழகத்தின்  அன்றாடப் பணிகளை ஒன்றிணைக்க 28 பேர் குழுவை  அமைத்தார் விஜய். பொதுச்செயலாளர் ஆனந்த் , ஆதவ் அர்ஜூனா உள்ளிட்டோரை அறிவித்ததோடு தனது வழிகாட்டுதலின் புதிய குழு அமைக்கப்பட்டுள்ளது என்றும் அறிவித்தார். வழக்கமாக தவெக அறிவிப்புகள் பலவற்றை வெளியிடும் போது பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த தலைமையில்  நடைபெறும் என்று தான் அறிவிப்புகள் வெளியாகும் ஆனால் இந்த அறிவிப்பில் தனது வழிகாட்டுதலின் படி புதிய குழு அமைக்கப்பட்டுள்ளது என்று அறிவித்தது அரசியல் களத்தில் பேசுபொருளாகியுள்ளது.

  கரூர் விவகாரத்திற்கு பிறகு புஸ்ஸி ஆனந்த் மீது விஜய் கடும் அதிருப்தியில் இருக்கிரார். கடந்த சில நாட்களுக்கு முன்னர் பனையூர் அலுவலகத்திற்கு வந்த புஸ்ஸி ஆனந்திற்கு அளிக்கப்பட்ட வரவேற்பு சமூக வலைதளிங்களில் சர்ச்சையை கிளப்பியுளது. கரூர் விவகாரத்தில் பாதிக்கப்பட்ட மக்களை சந்திப்பதற்கு கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழ ந்தவர்களுக்கு ஒரு நிமிடம் அஞ்சலி கூட செலுத்தாமல் புஸ்ஸி ஆனந்திற்கு உற்சாக வரவேற்பு அளித்து மாலை அணிவித்து அவருடன் பல்வேறு மாவட்ட செயலாளர்களும் புகைப்படம் எடுத்து அதை சமூக வலைதளங்களிலும் பகிர்ந்திருந்தனர். இதனால் தவெக தொண்டர்களே கடும் அப்செட்டானர்கள். பாதிக்கப்பட்ட மக்கள் வேதனையில் இருக்கும் சூழலில் ஒரு பொதுச்செயலாளர் செய்யும் வேலையா இது என்று ஆனந்திற்கு எதிராக போர்க்கொடி தூக்கினார்கள். அதேபோல், புஸ்ஸி ஆனந்தை பொதுச்செயலாளர் பொறுப்பில் இருந்து தூக்க்குங்கள் விஜய் என்று பதிவிட்டு வந்தனர். இல்லை என்றால் கட்சியின் முழு பொறுப்பையும் உங்கள் நேரடி கட்டுப்பாட்டிலேயே வையுங்கள் என்றும் கூறி இருந்தனர்..இந்த நிலையில் தான் தொண்டர்களின் இந்த கோரிக்கை தவெக தலைவர் விஜயின் காதுகளுக்கு சென்ற நிலயில் அனைத்து செயல்பாடுகளையும் தனது நேரடிக்கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவந்துள்ளதாக சொல்கின்றனர். புஸ்லி ஆனந்தின் செயற்பாடுகள் பற்றிய அறிக்கைகள் விஜயின்  கைகளுக்குச் சென்றுள்ளன. சில அதிரடி நடவடிக்கைகளை விஜய் எடுப்பப்போவதாக செய்திகள் வெளியாகிஉள்ளன.

எடப்பாடியும் பகையாளையான செங்கோட்டையன்  ஓ.  பன்னீர்ச்செல்வத்துடன் கைகோர்த்துள்ளார்.  இது எடப்பாடிக்கு மிகப் பெரிய அடியாக விழுந்துள்ளது.

அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தை ஒருங்கிணைக்க வேண்டும் என்று  முன்னாள் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன்,முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகிய இருவரும் வலியுறுத்தி வந்த நிலையில், தேவர் ஜெயந்தியை முன்னிட்டு இருவரும் ஒரே காரில் பயணம் செய்த‌து பேசுபொருளாக மாறியுள்ளது

மதுரையில் இருந்து ஒரே காரில்  இருவரும்  பசும்பொன்னை நோக்கிச் சென்றனர். முன் சீட்டில் ஓபிஎஸ்ஸும் பின் சீட்டில் செங்கோட்டையனும் அமர்ந்துள்ள காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.

அதாவது பசும்பொன்னில் ஓ.பன்னீர் செல்வம், கே.ஏ.செங்கோட்டையன்,  டிடிவி தினகரன்  ஆகிய மூவரும் ஒன்றாக இணைந்து தேவருக்கு அஞ்சலி செலுத்த்கினர்.  இவர்கலுடன் சசிகலாவும்  இணைவார் எகன் கூறப்பட்டது. அவர் அங்கு செல்ல வில்லை. 

போர்க்கொடி தூக்கியதால், அண்ணா திராவிட முன்னாற்றக் கழகத்தில் இருந்து டிடிவி தினகரன் முதலில் நீக்கப்பட்டார்.  பின்னர்  பன்னீர்ச்செல்வம் நீக்கப்பட்டார்.  பிரிந்தவர்களை ஒருங்கிணைத்து வலிமையான அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தை உருவாக்க வேண்டும் என்று பேசிய செங்கோட்டையனின் கட்சிப் பொறுப்புகள் அனைத்தையும் பறித்தார்   எடப்பாடி பழனிசாமி.

முத்துராமலிங்கத் தேவரின் 118-வது பிறந்த நாள், 63ஆம் குருபூஜை ஆகியன   பசும்பொன்னில் அமைந்துள்ள அவரது நினைவிடத்தில்  நடை பெற்றது.

  பன்னீர், செங்கோட்டையன் தினகரன் ஆகிய மூவர் கூட்டணியால் எடப்பாடி கடுப்பாகி உள்ளார். செங்கோட்டையன் மீது அவரது கோபப்பார்வை விழலாம் என்ற‌ எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

 

ரமணி

9/11/25 

 

 

  

No comments: