IPL தொடரின் நடப்பு சாம்பியனான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (RCB) அணியை விற்பனை செய்வது குறித்து அதன் உரிமையாளர்கள் ஆராய்ந்து வருவதாக அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் வெளியாகி உள்ளன.
அணியின்
தாய் நிறுவனமான Diageo, இது குறித்து "மூலோபாய மறுஆய்வை" தொடங்கியுள்ளதாக
இந்தியப் பங்கு சந்தைக்கு தெரிவித்துள்ளது.
Diageo
Plc, தங்கள் இந்திய துணை நிறுவனமான யுனைடெட் ஸ்பிரிட்ஸ் லிமிடெட் (USL) மூலம் இந்த
அணியை நடத்தி வருகிறது.
RCB
அணியை வைத்திருக்கும் யுனைடெட் ஸ்பிரிட்ஸ் லிமிடெட் (United Spirits Ltd - USL), ராயல்
சேலஞ்சர்ஸ் ஸ்போர்ட்ஸ் பிரைவேட் லிமிடெட் (RCSPL) மீதான முதலீட்டை மறுஆய்வு செய்வதாக
அறிவித்துள்ளது.
ஆர்.சி.எஸ்.பி.எல்.
ஒரு மதிப்புமிக்க மற்றும் மூலோபாய சொத்தாக இருந்தாலும், இது எங்கள் ஆல்கஹோல் வணிகத்தின்
மையப் பகுதி அல்ல," என்று USL நிறுவனத்தின் நிர்வாக இயக்குநரும் தலைமைச் செயல்
அதிகாரியுமான பிரவீன் சோமேஸ்வர் பங்குச் சந்தை அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
அணி
உரிமையாளர்கள் RCB-க்கு சுமார் 2 பில்லியன் அமெரிக்க டாலர் (இந்திய மதிப்பில் சுமார்
₹16,600 கோடி) மதிப்பீடு கோருவதாக தகவல்கள்
தெரிவிக்கின்றன.
இந்த
மறுஆய்வு செயல்முறை மார்ச் 31, 2026-க்குள் முடிவடையும் என்று USL தெரிவித்துள்ளது.
சமீபத்தில்
ஐபிஎல் (ஆடவர்) கிண்ணத்தை வென்றதன் மூலம்,
ஆர்.சி.பி. அணியின் வர்த்தக மதிப்பு பல மடங்கு உயர்ந்துள்ள நிலையில், இந்த விற்பனை
குறித்த செய்திகள் வெளியாகி உள்ளன.
வரலாற்றில் இது மிக பெரிய விற்பனையாக இருக்கும் என்று
எதிர்பார்க்கப்படுகிறது.
RCB-யை
வாங்குவதற்கு பல முக்கிய நிறுவனங்கள் ஆர்வம் காட்டி வருவதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
அதில்
சில:
ஆதர்
பூனாவாலா- சீரம் இன்ஸ்டிடியூட் ஆஃப் இந்தியாவின் தலைமைச் செயல் அதிகாரி.
JSW
Group- டெல்லி கேப்பிடல்ஸ் அணியில் பங்கு வைத்திருக்கும் பார்த் ஜிண்டால் தலைமையிலான
குழு.
அதானி
குழுமம்.
ஐ.பி.எல்.
அணியின் உரிமையாளரை மாற்றும் இந்த முடிவு, ஐபிஎல் 2026 மெகா ஏலத்துக்கு முன்னதாக வீரர்களை
தக்கவைப்பது (Retention) மற்றும் அணியின் மேலாண்மை குறித்து கேள்விகளை எழுப்பியுள்ளது.
இருப்பினும்,
ஆர்.சி.பி. அணியின் ஐகான் வீரரான விராட் கோலி தொடர்ந்து அணியில் நீடிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

No comments:
Post a Comment