வரலாற்றை
மாற்றி உசுப்பேற்றும் ஆதவ்
அமைதியாக
ரசித்து சிரித்த விஜய்
கரூர்
சம்பவத்தில் இருந்து தவெக மெது மெதுவாக இயல்பு நிலைக்குத் திரும்புகிறது. கரூரில் நடந்த வரலாரு காணாத துயர சம்பவத்தால் வெளிச்சத்துக்கு
வராத விஜயும் அவரது நிர்வாகிகளும் தமிழக அரசுக்கு
சவால் விடும் அளவுக்கு தெம்படைந்துள்ளனர்.
மாமல்லபுரத்தில்
உள்ள தனியார் விடுதியில் தமிழக வெற்றிக் கழக
சிறப்பு பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. கரூர் சம்பவம் நடந்து 38 நாட்களுக்கு
பின், கட்சி நிர்வாகிகளுடன், பொதுக்குழு கூட்டத்தில் விஜய் பங்கேற்றார். இக்கூட்டத்தில்
மாநில நிர்வாகிகள், மாவட்ட செயலர்கள், பொதுக்குழு உறுப்பினர்கள் என 1,400க்கும் மேற்பட்டவர்கள்
பங்கேற்றனர்.
சிறப்புப்
பொதுக் குழுக்கூட்டத்தில் பேசியவர்கள் கரூர் சம்பவத்துக்கு தமிழக அரசே காரணம் என்றார்கள்.
விஜயின் பேச்சுத்தான் எப்பவும் காரசாரமாக இருக்கும். ஆனால், மாமல்லபுரக் கூட்டத்தில் ஆதவ்
அர்ஜுனவின் பேச்சு வழமையை விட ஆக்ரோஷமாக இருந்தது.
துரைமுருகன், ஸ்டாலின்,உதயநிதி என அனைவரையும் விட்டுவைக்காமல் ஒருமையில் சவால் விட்டுப்
பேசினார். ஆதவ் அர்ஜுனவின் பேச்சு எல்லை மீறும் வகையில் இருந்தது. அந்த உரையை விஜய் ரசித்துக்கொண்டிருந்தார். கூட்டத்தில்
பங்கேற்றவர்கள் பலத்த கரகோஷத்துடன் ஆதவ் அர்ஜுனவின் உரையை ஆமோதித்தார்கள்.
ஆதவ்
அர்ஜுனவின் பேச்சு வன்முறையைத் தூண்டும் வகையில் இருந்தது.
கரூர்
விவகார விசாரணைக்கும் தமிழக அரசுக்கும் எதுவித சம்பந்தமும் இல்லை. அந்த விசாரணை சிபிஐயின்
கைகளுக்குச் சென்றுட்டது. சிபிஐ மத்திய அரசின் கைப்பொம்மை என ஒரு காலத்தில் விஜய் அறிக்கை விட்டார். கரூர் விசாரனையை
தமிழக அரசு மேற்கொள்ளக்கூடாது ஐபிஐ விசாரிக்க வேண்டும் என தவெக விரும்பியது. விஜயின்
விருப்பம் போலவே ஐபிஐ விசாரணையை ஆரம்பித்து
விட்டது. இந்த உண்மைதெரிந்துகொண்டும் ஆதவ்
அர்ஜுன தமிழக அரசுக்குச் சவால் விடுகிறார்.
தைரியம்
இருந்தால் என் தலைவர் விஜய் மீது கைவையுங்கள் பார்ப்போம். முதலில் அவர் வீட்டுக்குச் செல்லுங்கள் பார்ப்போம்
ஒட்டுமொத்த மாணவர்களும் உங்கள் வீட்டுக்கு வருவார்கள் என உணர்ச்சிகரமாக ஆதவ் அர்ஜுன பேசினார்.
கல்லூரி மாணவர்கள் உசுப்பேத்தும் ஆதவ் அர்ஜுனவின் பேச்சை சமூக ஆர்வலர்கள் கடுமையாக எதிர்க்கிரார்கள்.2026 இல் மாணவர் புரட்சி வெடிக்கும் என்கிறார் ஆதவ் அர்ஜுன. தனது டுவிற்றரில் மாணவர் புரட்சி வெடிக்கும் எனப்பதிவிட்டு உடனடியாக அதனை டிலீட் பண்ணியவர்தான் இந்த ஆதவ் அர்ஜுன. இப்போது மீண்டும் மாணவர் புரட்சி பற்றி பேசி உள்ளார்.
இலங்கை,பங்களாதேஷ்,
நேபாளம் ஆகிய நாடுகளில் நடந்த புரட்சி போல் தமிழகத்திலும் மாணவர் புரட்சி வெடிக்கும் என ஆதவ் அர்ஜுன அடிக்கடி கருத்துத் தெரிவிக்கிறார்.
அந்த நாடுகளில் புரட்சி ஏற்பட்டதன் பின்னணி என்ன என்பதை ஆதவ் அர்ஜுன நன்கு அறிவார். தமிழகத்தில்
அப்படி இரு நிலை இல்லை என்பதும் அவருக்குத் தெரியும். உசுப்பேத்தி கைதட்டல் வாங்க வேண்டும் என்பதற்காகவே ஆதவ் மேடையில் தனது ஆதங்கத்தைக் கொட்டித் தீர்த்தார்.
ஜெயலலிதாவின்
ஆட்சிக் காலத்தில் நள்ளிரவு கலைஞர் கைது செய்யப்பட்டபோது ஸ்டாலின்
ஓடி ஒழித்ததாக ஆதவ் அர்ஜுனா கதை விட்டார். அதற்கும் தவெக தொண்டர்கள் கைதட்டி
ஆரவாரம் செய்தார்கள். அந்தச் சம்பவம் நடந்தபோது பெங்களூரில் நின்ற ஸ்டாலின் மறுநாள்
நீதிமன்றத்தில் சரணடைந்து தன்னைக் கைது செய்யும்படி கேட்டார். அன்று ஸ்டாலின் பிணையில் விடுதலை செய்யப்பட்டார். குற்றப் பத்திரம்
தாக்கல் செய்யப்படாமலே கலைஞரும், ஸ்டாலினும்
விடுதலை செய்யப்பட்டார்கள்.
ஸ்டாலினைப்
போல் நாங்கள் ஓடுபவர்கள் அல்ல என்ற ஆதவ் அர்ஜுனவின்
பேச்சு சமூக வலைத்தலங்களில் பேசு பொருளாக மாறி உள்ளது. கரூர் சம்பவத்தின் பின்னர் தலை
தெறிக்க ஓடியது யார் என சமூக வலைத்தளங்கள்
கேள்வி எழுப்பி உள்ளன.
1000
ரூபா மகளிருக்கான உதவித்தொகை வேண்டாம், மகளிருக்கு இலவச பஸ் சேவை வேண்டாம் என தவெக சிறப்பு
பொதுக்குழுவில் பேசப்பட்டது. திராவிட முன்னேற்றக் கழகத்தின் வெற்றிக்குக் காரணமான இரண்டு திட்டங்கலையும் தமிழக வெற்றிக் கழகம் எதிர்ப்பது
ஆச்சரியமாக உள்ளது. தமிழகத்தைப் பின்பற்றி
வேறு மாநிலங்கலிம் இந்தத் திட்டங்களைப் பின்பற்றப்போவதாக அறிவித்துள்ளன.
முதல்வர்
வேட்பாளர் விஜய் என்ற தீர்மானம் எடப்பாடிக்கு பலத்த அடியாக விழுந்துள்ளது. விஜயுடன்
கூட்டணி வைத்து அடுத்த முதல்வராகலாம் என்ற
கனவில் இருக்கும் எடப்பாடி சித்தம் கலங்கி உள்ளார்.
25
சதவீத வாக்கு இருப்பதாக தவெக கணக்குப் போட்டுள்ளது.
தமிழகத்தில் ஆட்சியைப் பிடிக்க 25 சத வீத வாக்கு வங்கி போதுமானதல்ல. முறைந்தது 10 சதவீத வாக்கு உள்ள கடியுடன் அல்லது
கட்சிகளுடன் கூட்டணி சேர்ந்தால்தான் விஜயின் கனவு நனவாகும்.
ரமணி
9/11/125


No comments:
Post a Comment