அரசாங்கத்தின் புலனாய்வும், கண்காணிப்பும் எதிரி நாட்டின்மீதுதான் இருக்க வேண்டும். ஆனால், சில அரசாங்கங்கள் தமது நாட்டின் எதிர்க் கட்சித் தலைவர்களை வேவு பார்ப்பதில் கண்ணும் கருத்துமாக இருக்கின்றன. மோடியின் அரசாங்கம் தமது நடவடிக்கைகளைக் கண்காணிப்பதாக இந்திய எதிர்க் கட்சித்தலைவர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
ஐபோன்களில்
இருந்து எச்சரிக்கை வெளியான பின்னரே
தாம் கண்காணிக்கப்படுவதாக எதிர்க் கட்சித்தலைவர்களுக்குத் தெரியவந்துள்ளது. இஸ்ரேல்
பெகாசஸ் விவகாரத்தை இந்தியர்கள் யாரும் மறந்திருக்க முடியாது.
இந்தியாவில் உள்ள பிரபலங்கள், பல்வேறு
துறைகளை சேர்ந்தவர்களின் செல்போன்களை ஹேக் செய்து மத்திய
அரசு உளவு பார்த்ததாக குற்றம்சாட்டப்பட்டது.
இதேபோல் ஒரு சம்பவம் தற்போது
வெடித்துள்ளது. எதிர்க்கட்சி தலைவர்களின் ஐபோன்களை மத்திய அரசு உதவியுடன்
ஹேக்கர்கள் கண்காணித்து வருவதாக காங்கிரஸ் தலைவர்
ராகுல் காந்தி பரபரப்பு குற்றச்சாட்டை
முன்வைத்துள்ளார். அதாவது, ஐபோனில் பேசுவதை
ஒட்டுக் கேட்பதாகவும், இ-மெயில் பரிமாற்றங்கள்
கண்காணிக்கப்படுவதாகவும் கூறப்படுகிறது.
இதுதொடர்பாக
எச்சரிக்கைச் செய்திகள் அப்பிள் நிறுவனத்திடம் இருந்து
சம்பந்தப்பட்டவர்களின் மொபைலுக்கு வந்துள்ளது. ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன்களை
பொறுத்தவரை பாதுகாப்பு விஷயத்தில் மிகவும் மேம்பட்ட வசதிகளை
செய்திருக்கிறது. மேற்குறிப்பிட்ட வகையில் ஒட்டுக்கேட்பு விஷயங்கள்
நடந்தால் உடனே எச்சரிக்கைச் செய்தியை
அனுப்பிவிடும்.
எதிர்க்கட்சிகளை
சேர்ந்த எம்பிக்கள் உள்பட பல்வேறு பொறுப்புகளில்
உள்ள தலைவர்களின் ‛அப்பிள்' ஐபோன்களுக்கு ‛எச்சரிக்கை' செய்தி ஒன்று
சென்றது. அந்த செய்தியில்,
‛‛'ஸ்டேட் ஸ்பான்சர்டு அட்டாக்கர்ஸ்' மூலம் உங்கள் செல்போன் குறிவைக்கப்படுகிறது. உங்களின் ஐபோனை வேறு இடத்தில் இருந்து இயக்க முயற்சிக்கிறார்கள்.அரசு உதவியுடன் இயங்கும் இந்த ஹேக்கர்கள் ஹேக் செய்துவிட்டால், அதன் பின் எங்கிருந்தும் ஐபோனையும், அதில் உள்ள தகவல்களையும் பயன்படுத்த முடியும். இது தவறான அலர்ட்டாக கூட இருக்க வாய்ப்பு இருக்கிறது. கவனமாக இருங்கள்'' என தெரிவிக்கப்பட்டு இருந்தது.
காங்கிரஸ் தேசிய தலைவர் மல்லிகார்ஜூன
கார்கே, காங்கிரஸ் கட்சியின் சசிதரூர், பவன் கேரா, கேசி
வேணுகோபால், சுப்ரியா ஸ்ரீநாத், டிஎஸ் சிங்டியோ, பூபிந்தர்
சிங் ஹூடா, திரிணாமுல் காங்கிரஸ்
எம்பி மஹூவா மொய்த்ரா, இந்திய
கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி, சமாஜ்வாதி கட்சியின் தலைவர் அகிலேஷ் யாதவ்,
டெல்லி முதல்வரும், ஆம்ஆத்மி தலைவருமான அரவிந்த் கெஜ்ரிவால், சிவசேனா (உத்தவ் அணி) எம்பி
பிரியங்கா சதுர்வேதி, ஆம்ஆத்மி கட்சியின் எம்பி ராகவ் சதா,
ஏஐஎம்ஐஎம் தலைவர் அசாதுதீன் ஓவைசி,
ராகுல் காந்தியின் சில உதவியாளர்களுக்கு சென்றுள்ளது.
இதையடுத்து மத்திய பாஜக அரசு
தங்களை உளவு பார்த்து, ஒட்டுகேட்க
முயற்சிப்பதாகவும், செல்போன் தகவல்களை திருட முயற்சிப்பதாகவும் எதிர்க்கட்சி
தலைவர்கள் குற்றம்சாட்டி வருகின்றனர். இதனை முற்றாக மருத்துள்ள
இந்திய அரசு விசாரணைக்கு
உத்தரவிட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளது.
இந்த விவகாரம் தொடர்பாக பத்திரிகையாளர் சந்திப்பில் பல தகவல்களை ஆதாரங்களுடன் ராகுல் காந்தி வெளிப்படுத்தினார்.
எனது
அலுவலகத்திலும் பலருக்கு இந்த மெசேஜ் வந்துள்ளது.
இளைஞர்களின் கவனத்தை திசை திருப்ப
பாஜக முயற்சிப்பதாக தெரிவித்தார். இதற்கெல்லாம் நாங்கள் பயப்பட மாட்டோம்.
எவ்வளவு வேண்டுமானாலும் உளவு பார்த்து கொள்ளுங்கள்.
எங்களுக்கு கவலையில்லை என்று ராகுல் காந்தி
கூறினார்.
இந்த
குற்றச்சாட்டு தொடர்பாக விளக்கம் அளித்துள்ள அப்பிள் நிறுவனம், சுமார்
150 நாடுகளை சேர்ந்த ஐபோன் வாடிக்கையாளர்களுக்கு
இத்தகைய தகவல்கள் அனுப்பப்பட்டுள்ளன. வெவ்வேறு காலங்களில் இதுபோன்ற தகவல்கள் பல காரணங்களுக்காக அனுப்பப்படுவது
வழக்கம் தான் எனக் குறிப்பிட்டுள்ளது.
இந்திய
மத்திய அரசை எதிர்க்கும் முக்கிய
அரசியல் பிரமுகர்களுக்கும், செயற்பாட்டாளர்களுக்கும் எச்சரிக்கை விடுக்கப்பட்டதால் சந்தேகம் ஏற்பட்டுள்ளது. ஆளும் கட்சியின் அரசியல்வாதிகளும், பிரமுகர்களும் இதனால்
பாதிக்கப்படவில்லை.
எந்த
ஒரு குறிப்பிட்ட அரசையும் நாங்கள் குற்றம்சாட்டவில்லை. State-sponsored attackers என்றால் அதிகப்படியான நிதி,
அதிநவீன தொழில்நுட்ப வசதிகள், காலத்திற்கு ஏற்ப அட்டாக்கிங்கில் மேம்பட்டு
காணப்படுவர். இவர்களின் அட்டாக்குகளை கண்டறிவது அச்சுறுத்தல் சார்ந்த உளவுத்துறை சிக்னல்களை
பொறுத்தே அமையும். ஆனால் அது எல்லா
நேரங்களிலும் சாத்தியமில்லை. சில எச்சரிக்கை மெசேஜ்கள்
தவறாக கூட இருக்கலாம்.
ஆனால்
அதன் பின்னணி காரணங்களை சொல்ல
முடியாது. அப்படி சொன்னால் அட்டாக்கர்கள்
உஷாராகி தங்களது அட்டாக்கிங் ஸ்டைலை
வருங்காலத்தில் மாற்றிக் கொள்வர் என்று கூறப்பட்டுள்ளது.
இந்நிலையில் எதிர்க்கட்சி தலைவர்களின் செல்போன் ஒட்டுக்கேட்பு விவகாரம் தொடர்பாக உரிய விசாரணை நடத்த
மத்திய அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.
விசாரணைக்கு அனைவரும் ஒத்துழைக்க வேண்டும் என்று மத்திய அமைச்சர்
அஸ்வினி வைஷ்ணவ் கோரிக்கை விடுத்துள்ளார்.
இதுதொடர்பாக அப்பிள் நிறுவனத்திற்கும் கடிதம்
அனுப்பப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
இந்தியாவின்
26 எதிர்க் கட்சிகள் ஒன்றிணைந்து மிகப்
பெரிய கூட்டணியை அமைத்துள்ளன. தொடர்ந்து
மூன்றாவது முறை பிரதமராகும்
மோடியில் கனவுக்கு இந்தியக் கூட்டணி சவாலாக உள்ளது. ஆட்சிஅயித் தக்க
வைப்பதற்காக மோடியின் அரசு எந்த எல்லைக்கும்
செல்ல வாய்ப்பு உள்ளது என்பது கடந்தகால
வரலாறு.
ரமணி
No comments:
Post a Comment