Wednesday, May 10, 2023

ஏட்டிக்குப் போட்டியான‌ வாக்குறுதிகளால் திண்டாடும் கர்நாடகம்


  சட்டசபைத் தேர்தலால்  கர்நாடகம் களைகட்டியுள்ளது. மாநிலத் தலைவர்களும், டில்லித் தலைவர்களும் சந்திக்குச் சந்தி, மூலைக்குச் மூலை வாக்குறுதிகளை அள்ளி வீசுகிறார்கள். கர்நாடகாவில் 224 சட்டசபை தொகுதிகளுக்கான தேர்தல் ஒரே கட்டமாக நடக்கிறது. கர்நாடகா சட்டசபை பதவி காலம் மே 24 ஆம் திக‌தியுடன் முடிவடைகிறது. அங்கு மே 10ல் ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடக்கிறது.  தேர்தலில் பதிவான வாக்குகள் மே 13ஆம் திக‌தி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும்.

பாரதீய ஜனதாக் கட்சியின் ஆட்சியில் உள்ள கர்நாடகத்தைக் கைப்பற்றுவதற்கு  காங்கிரஸ் சபதம் செய்துள்ளது. கர்நாடகத்தை ஆட்சி செய்தபோது செய்த சாதனைகள் எவற்றையும்  பாரதீய ஜனதாக் கட்சி  பட்டியலிடவில்லை. பாரதீய ஜனதாக் கட்சியின்  தவறுகளை காங்கிரஸ் பட்டியலிடவில்லை இரண்டு தேசியக் கட்சிகளும் இலவச வாக்குறுதிகளைப் பட்டியலிட்டுள்ளன.

இலவசங்களுக்கு  பரம எதிரியாகத் தன்னைக் காட்டிக்கொள்ளும் பாரதீய ஜனதாக் கட்சி இலவசங்களை   விதைத்துள்ளது. குஜராத் சட்டசபை தேர்தலில் ஆத் ஆத்மி இலவசங்களைக்  கொடுக்க வாக்குறுதியளித்தது. ஆம் ஆத்மியின்  இலவச வாக்குறுதியால் கலங்கிய பாரதீய ஜனதாக் கட்சி இலவச வாக்குருதியளித்து வெற்றி பெற்றது.

குஜராத் சட்டசபை தேர்தலுக்காக  "ஆக்ரெசர் Gஉஜரட் ஸன்கல்ப் Pஅட்ர 2022" என்ற பெயரில் பாரதீய ஜனதா தேர்தல் வாக்குறுதியை வெளியிட்டது.

அதில் இலவச கல்வி கொடுப்போம், பெண்களுக்கு கிண்டர் கார்டன் முதல் பிஜி வரை கல்வி இலவசம் ,  இலவச மருத்துவம், இரண்டு இலவச சிலிண்டர்கள், சன்னா குறைந்த விலையில், குறைந்த விலையில் எண்ணெய், கல்லூரி செல்லும் மாணவிகளுக்கு இலவச மின்சார பைக் ஆகியவை வழங்கப்படும் என்று   அறிவித்தது.

தமிழ்நாட்டு இலவசத் திட்டங்களை குஜராத்தில் பாரதீய ஜனதா அறிமுகப் படுத்தியது.

  இமாச்சல பிரதேச சட்டசபை தேர்தலில் ஆட்சியில் இருந்த பாரதீய ஜனதாவை  வீழ்த்தி காங்கிரஸ் ஆட்சியை பிடித்தது. குடும்ப தலைவிக்கு நிதி கொடுக்கும் திட்டத்தை அங்கே  காங்கிரஸ் தேர்தல் வாக்குறுதியாக அறிவித்தது. Hஅர் Gகர் ளxமி Cஅம்பைக்ன் என்ற பெயரில் 1500 ரூபாயை எல்லா மாதமும் பெண்களுக்கு வழங்குவோம் என்று தேர்தல் பிரச்சாரத்தில் பிரியங்கா காந்தி தெரிவித்தார். இந்த வாக்குறுதி பெண்களின் வாக்குகளை கவர மிக முக்கியமான காரணமாக அமைந்தது. இமாச்சல பிரதேச தேர்தலில் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றது.

குஜராத் வெற்றியால்  மகிழ்ச்சியடைந்த பாரதீய ஜனதாக் கட்சி கர்நாடகாவிலும்  இலவச வாக்குறுதியுடன்  களம்  இறங்கியுள்ளது. இமாசலப் பிரதேச  வெற்றி கொடுத்த  உந்துதலால்  காங்கிரஸ் கர்நாடகாவில் இலவச வாக்குறுதியுடன் கால் பதித்துள்ளது.

  காங்கிரஸ் பல்வேறு சமூக நீதி கொள்கைகளையும், மாநில உரிமை கொள்கைகளையும், பல்வேறு இலவசங்களையும்  கர்நாடக சட்டசபை தேர்தல் வாக்குறுதிகளாக கொடுத்துள்ளது. தமிழ்நாட்டில் அமுலான‌ பல திட்டங்களை   காங்கிரஸ் வாக்குறுதிகளாக கொடுத்துள்ளது. நிலையில் தமிழ்நாட்டில் கொடுக்கப்பட்ட வாக்குறுதி போல் ஸ்டாலின் பாணியில் சில முக்கியமான வாக்குறுதிகளை காங்கிரஸ் அங்கே வெளியிட்டுள்ளது.

திராவிட மாடல் என்றால் சமூக நீதி கொள்கைகளும், இடஒதுக்கீட்டு கொள்கைகளும் முக்கிய இடம்பெறும். அதை தற்போது கர்நாடகாவில் காங்கிரஸும் கையில் எடுத்துள்ளது.  பெண்  உரிமை, பெண்களுக்கான  முன்னுரிமை என்பனவற்றை காங்கிரஸ் வாக்குறுதிகளாகக் கொடுத்துள்ளது.

திராவிட மாடல் என்றால் சமூக நீதி கொள்கைகளும், இடஒதுக்கீட்டு கொள்கைகளும் முக்கிய இடம்பெறும். அதை தற்போது கர்நாடகாவில் காங்கிரஸும் கையில் எடுத்துள்ளது.

கர்நாடகாவில் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் இடஒதுக்கீட்டை 50 சதவிகிதத்தில் இருந்து 70 சதவிகிதமாக உயர்த்தும். எல்லா தகுதி வாய்ந்த ஜாதிகளுக்கு இடஒதுக்கீடு அளிக்கப்படும். எல்லா பிரிவினருக்கும் ஏற்ப இடஒதுக்கீடு வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.


 தமிழ்நாட்டில் இருப்பது போலவே தமிழ்நாட்டை பின்பற்றி அவர் அளித்துள்ள வாக்குறுதி பெரிய வரவேற்பை பெற்றுள்ளது. சிறப்பு அதிகாரம் மூலம் தமிழ்நாடு மட்டும் 69 சதவிகிதம் இடஒதுக்கீடு கொண்டு உள்ளது. அதை கர்நாடகாவும் பின்பற்றி உள்ளது.

அதிலும் இதில் தமிழ்நாட்டை சித்தராமையா நேரடியாக எடுத்துக்காட்டி உள்ளார்.

சமீபத்தில் ஜாதி ரீதியிலான கணக்கெடுப்பு கர்நாடகாவில் எடுக்கப்படும் என்று ராகுல் காந்தி தெரிவித்து இருந்த நிலையில்தான் இந்த இடஒதுக்கீடு தொடர்பான அறிவிப்பை அவர் வெளியிட்டு உள்ளார்.

தமிழ்நாட்டில் திராவிட கட்சிகள் மாநில சுயாட்சி பற்றி பேசும் நிலையில், கர்நாடகாவிலும் காங்கிரஸ் இதை கையில் எடுத்துள்ளது. முக்கியமாக மாநிலங்களுக்கு பகிர்ந்து கொடுக்கும் வரி பங்கீட்டில் கர்நாடகாவிற்கு பெருவாரியான பங்கீட்டை திருப்பி கொடுக்க வேண்டும் என்று காங்கிரஸ் வாக்குறுதியில் தெரிவித்து உள்ளது.

இது தமிழ்நாட்டில் திமுக வைத்து வரும் கோரிக்கை ஆகும். இதே விஷயத்தை அங்கே காங்கிரஸ் வாக்குறுதியாக கொடுத்துள்ளது.

தமிழ்நாட்டில் 100 யூனிட் இலவச மின்சாரம் இருப்பது போலவே, அனைத்து வீடுகளுக்கும் 200 யூனிட் மின்சாரம் இலவசம் என்ற வாக்குறுதி அங்கே அளிக்கப்பட்டு உள்ளது. விவசாயிகளுக்கு பகலில் மும்முனை மின்சாரம் 8 மணிநேரம் வழங்கப்படும். கர்நாடகாவின் Kஸ்ற்TC,BMTC பேருந்துகளில் பெண்களுக்கு இலவச அனுமதி போன்றவை தமிழ்நாட்டில் ஏற்கனவே நடைமுறையில் உள்ளவை.

பேருந்துகளில் பெண்களுக்கு இலவச அனுமதி தமிழ்நாட்டில் ஹிட் அடித்த திட்டம் இதை அப்படியே காங்கிரஸ் கர்நாடகாவில் கொண்டு வந்துள்ளது.

தமிழ்நாட்டில் ரோல் மாடலாக திகழும் திட்டங்களை தற்போது கர்நாடகாவில் காங்கிரஸ் வாக்குறுதிகளாக அறிவித்து உள்ளது.

நந்தினி நிறுவனத்தின் பால் அரை லிட்டர் இலவசமாக ஏழைகளுக்கு வழங்கப்படும்,கர்நாடகாவில் உள்ள பழமையான கோவில்களை புணரமைக்க ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்படும்,

வறுமைக்கோட்டுக்கு கீழ் உள்ள குடும்பங்களுக்கு ஆண்டுக்கு 3 இலவச காஸ் சிலிண்டர்கள், தினமும் அரை லிற்ற‌டர் இலவச பால், மாதந்தோறும் இலவச உணவு தானியம்,ஒவ்வொரு வார்டிலும் மலிவு விலை உணவகம் அமைக்கப்படும்,  5 கிலோ அரிசி, பருப்பு இலவசமாக வழஙப்படுமென  பாரதீய ஜனதா  வாக்குறுதியளித்துள்ளது.

கர்நாடகத்தில் 20 தொகுதிகளின்  வெற்றி தோல்வியைத் தீர்மானிக்கும் சக்தியாக தமிழர்கள்  உள்ளனர். காங்கிரஸுக்கு ஆதர‌வாக  திராவிட முன்னேற்றக் கழகம் அறிக்கை விட்டுள்ளது. திருமாவளவன், கமல் ஆகியோர்  தேர்தல் பரப்புரை செய்கின்றனர். கர்நாடகாவில்  முன்பு நடைபெற்ற  தேர்தல்களில் திராவிட முன்னேற்றக் கழகமும், விடுதலைச் சிறுத்தைகளும் தேர்தல் பரப்புரையில்  கலந்துகொள்ளவில்லை.

எம்.ஜி.ஆர் கால‌த்திலும், ஜெயாலிதாவின்  காலத்திலும்  அண்ணா திராவிட முன்னேற்றக் கழக வேட்பாளர்கள் கர்நாடகத் தேர்தலில் வெற்றி பெற்றனர்.

கர்நாடகத் தேர்தலில் வேட்புமனுத் தாக்கல் செய்த எடப்பாடியின் ஆதர்வாளரும், பன்னீர்ச்செல்வத்தின் ஆதரவாளரும் தமது வேட்புமனுவை   வாபஸ் பெற்றனர். பாரதீய ஜனதாக் கட்சி கேட்டுக்கொண்டதால்  வேட்புமனுவை  வாபஸ் பெற்றதாக எடப்பாடி  அறிவித்தார்.  வாபஸ் பெற்றதற்கான காரணம் எதனையும் பன்னீர்ச்செல்வம் தெரிவிக்கவில்லை.   பன்னீர்ச்செல்வத்தைன்  முடிவு இரகசியமானதல்ல.  யாருக்காக பன்னீரின் வேட்பாளர் வாபஸ் பெற்றார் என்பது அனைவருக்கும் தெரிந்த  உண்மை.

கர்நாடகத் தேர்தல் களம் அண்ணாமலையின் அரசியலை நோட்டம் பார்க்கும்  இடமாகவும் உள்ளது.  கர்நாடக  தேர்தல் பொறுப்பாளராக அண்ணாமலை  நியமிக்கப்பட்டுள்ளார். தமிழக பாரதீய ஜனதாக் கட்சியின் தலைவரான அண்ணாமலை,  கர்நாடக தேர்தல் பொறுப்பாளராக  நியமிக்கப்பட்டது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. கருத்துக் கணிப்புகள்  காங்கிரஸுக்குச் சாதக‌மாக உள்ளது.

கர்நாடகத் தேர்தல் முடிவு  அடுத்து வரும் சட்டசபைத் தேர்தல்களிலும் ஆதிக்கம் செலுத்தும் என்பதை மறுக்க முடியாது.

No comments: