Saturday, April 29, 2023

டில்லியில் பஞ்சாயத்து தீர்ப்பை மாற்றிய நாட்டாமை


அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்துக்கும், தமிழக பாரதீய ஜனதாக் கட்சித் தலவர் அண்ணாமலைக்கும் இடையிலான பிரச்சனைக்கு டில்லியில் பஞ்சாயம் நடந்தது. தமிழகத்தில் உணர்ச்சி வசப்பட்டுப் பேசியவர்கள் அமித் ஷாவின் முன்னிலையில் பெட்டிப் பாம்பாக அடங்கி ஒடுங்கினர்.

தமிழகத்தின் எதிர்க் கட்சியாக அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்  இருக்கிறது.  ஆனால்,   கூட்டணிக்  கட்சியான  பாரதீய ஜனதாக் கட்சி    எதிர்க் கட்சி இடத்தைப் பிடிக்கப் போட்டி போட்டது. மிழக பாரதீய ஜனதாக் கட்சியின் தலைவராக அண்ணாமலை  நியமிக்கப்பட்டதன் பின்னர் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்துக்குக் குடைச்சல் கொடுக்கத் தொடங்கினார். திராவிட முன்னேற்றக் கழகம், அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் ஆகிய  இரண்டு கட்சிகளையும் எதிர்ப் பதில்  அண்ணாமலை  ஆர்வம் காட்டினார்.

அண்ணா திராவிட முன்னேற்றக் ககத்தின் இரண்டாம் கட்டத் தலைவர்கள் மட்டுமல்லாது   எடப்பாடி பழனிச் சாமியும் நேரடியாக அண்ணாமலையை தாக்கிப்  பேசினர். முடிவெடுக்கும்  உரிமை அண்ணாமலைக்கு இல்லை. டெல்லிதான் முடிவு செய்யும் எனச் சொல்லிய எடப்பாடி இப்போது அமைதியாகி விட்டார்.

அண்ணா திராவிட முன்னேற்றக் கழகப் பொதுச் செயலாளரான  பின்னர்  எடப்பாடி பழனிசாமி டெல்லியில் அமித் ஷா, நட்டா ஆகியோரை  சந்தித்தபோது அண்ணாமலையும் உடன் இருந்தார். கடந்த சில வாரங்களாக அண்ணாமலைக்கும் அண்னா திராவிட முன்னேற்றக் கழாக்த் தலிவர்களுக்கும் இடையே   கருத்து மோதல்கள் நிகழ்ந்து வந்த நிலையில், எடப்பாடி பழனிசாமி, அண்ணாமலை இருவருக்கும் அமித் ஷா சில அறிவுறுத்தல்களை வழங்கி சமரசம் செய்து வைத்திருப்பதாகக் கூறப்படுகிறது.

 டெல்லியில் நடைபெற்ற இந்த சந்திப்பில் முன்னாள் அமைச்சர்கள் எஸ்.பி.வேலுமணி, தங்கமணி, சி.வி.சண்முகம், ஜெயக்குமார், கேபி முனுசாமி ஆகியோர் உடனிருந்தனர். இந்தச் சந்திப்பின்போது தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலையும் உடன்  இருந்தது கவனத்தை ஈர்த்துள்ளது.

 அண்ணா திராவிட முன்னேற்றக் கழக்த்திடன் கூட்டணி வைத்தால் பதவிய இராஜினாமாச் செய்வேன். தமிழகத்தில் பாரதீய ஜனதாக் கட்சி தனித்துப் போட்டியிட வேண்டும். நான் தலைவர்.  ஏஜெண்ட் அல்ல என அலறிய அண்ணாமலை அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத் தலைவர்களுடன்  ஒன்றாக  இருந்தார்.

கூட்டணி  பற்றி முடிவு செய்வது  டில்லி, அண்ணாமலை அல்ல சவால் விட்ட எடப்பாடி, டில்லியில் அண்ணாமலையுடன்  சகஜமாகச் சிரித்துப் பேசினார்.  கூட்டணியை பாரதீய ஜனதாத் தலைமையே முடிவு செய்யும் என எடப்பாடி அறிவித்த போது   அமித் ஷாவும், அதனை ஆமோதிப்பதுபோல அண்ணா திராவிட முன்னேற்றக் கூட்டணியில் இருப்பதாகத் தெரிவித்திருந்தார். ஆனால், அண்ணாமலை அப்போதும் விடாமல் அரசியலில் எதுவும் கல்லில் எழுதப்பட்டவை அல்ல எனச் சீறியிருந்தார். அதற்கு எடப்பாடி பழனிசாமி, அதிமுக-பாஜக கூட்டணி தொடர்கிறது என்பதை தெளிவாகச் சொல்லிவிட்டோம். கூட்டணியை நிர்ணயம் செய்யக் கூடியவர்கள் டெல்லியில் இருக்கிறார்கள். மேலே பாஸ் இருக்கும் போது கீழே இருப்பவர்கள் குறித்து எதற்குப் பேச்சு என சீண்டலாகவே சொன்னார் எடப்பாடி பழனிசாமி.

கர்நாடக சட்டசபைத் தேர்தலுக்காக  எட்ப்பாடி பழனிச்சாமியை    தேர்தல் ஆணையம் அங்கீகரித்தது.  கர்நாடகத்தில் பாரதீய ஜனதாவை எதிர்த்து தனது கட்சி வேட்பாளரை நிறுத்தினார் எடப்பாடி. பாரதீய ஜனதாவை எதிர்க்க எடப்பாடி துணிந்துவிட்டார் என அரசியல் ஆய்வாளர்கள் வியந்தபோது தனது வேட்பாளரை வாபஸ் வாங்கினார் எடப்பாடி.  பாரதீய ஜனதாவின் வேண்டுகோளுக்கமைய வேட்பாளரை வாபஸ் வாங்கியதாகத் தெரிவித்ததால் எடப்பாடி யாருடைய கட்டுப் பாட்டில் இருக்கிறார் என்பது வெளிச்சத்துக்கு வந்தது.

இந்த நேரத்தில்  அமித் ஷாவை எடப்பாடி சந்திப்பதர்கு நேரம்  ஒதுக்கப்பட்டது. தமிழகத்துக்கு விஜயம் செய்த அமித் ஷாவை எடபாடி சந்திக்கவில்லை. பத்திரிகையாளர்கள் அதுபற்ரிக் கேட்ட போது  அமித் ஷா தமிழகத்துக்கு வரும் போதெல்லாம் சந்திக்க வேண்டுமா என  கேள்வி எழுப்பிய எடப்பாடி டெல்லிக்கு காவடி எடுத்தார்.

மோடியும் , அமித்  ஷாவும் தமிகத்துக்கு விஜயம் செய்தபோது காணாமல் போன அண்ணாமலை, டெல்லியில் ஆஜரானார். கர்நாடக தேர்தலில்  பிஸியாக  இருந்த அண்ணாமலை டெல்லி பஞ்சாயத்தில் கலந்து கொண்டார்.

 இந்த சந்திப்பின் போது, தமிழ்நாட்டில் அதிமுக - பாஜக கூட்டணியை குழப்பமில்லாமல் செயல்படுத்துவது பற்றி ஆலோசிக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. நாம் பிரிந்திருந்தால் எதிரிகளுக்கு வெற்றி எளிதாகிவிடும், பொது எதிரியான திராவிட முன்னேற்றக் கழகத்தை  ஒன்று சேர்ந்து எதிர்க்க வேண்டும் என அமித்ஷாவிடம் எடப்பாடி பழனிசாமி கூறியதாக தகவல் வெளியாகியுள்ளது.

அண்ணாமலிக்கு, அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்துக்கும்    அதிமுக இடையே நிகழ்ந்து வரும் மோதல் போக்கு குறித்து விவாதித்து அண்ணாமலை- எடப்பாடி பழனிசாமி இடையேயான பிரச்சனைகளை அமித் ஷா - நட்டா ஆகியோர் சமரசம் செய்து வைத்துள்ளதாக கூறப்படுகிறது. இருவருக்கும் அமித் ஷா சில அறிவுறுத்தல்களையும் வழங்கியுள்ளாராம். இதனை உறுதி செய்யும் விதமாக சந்திப்பு நடந்த சிறிது நேரங்களிலேயே அண்ணாமலை தனது ட்விட்டர் பக்கத்தில், "தமிழக சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவர், பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி மற்றும் அதிமுகவின் தலைவர்கள், நமது பாஜக தேசிய தலைவர் ஜேபி நட்டா, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை டெல்லியில் சந்தித்தனர்" என புகைப்படங்களைப் பகிர்ந்தார். அதேபோல, எடப்பாடி பழனிசாமியும்  செய்தியாளர்களைச் சந்தித்தபோது, அதிமுக - பாஜக கூட்டணி தொடர்ந்து கொண்டு தான் இருக்கிறது என்றும், தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையுடன் எந்த தகராறும் இல்லை, திட்டமிட்டு அதிமுக - பாஜகவை பிரிக்க நினைக்கிறார்கள் எனத் தெரிவித்துள்ளார்.

தமிழ்நாடு முதலமைச்சர் மு..ஸ்டாலின்  டெல்லி சென்று குடியரசு தலைவர் திரவுபதி முர்முவை சந்தித்தார்.  மறைந்த தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான கருணாநிதியின் நினைவாக, அவர் பிறந்த திருவாரூர் மாவட்டத்தில் கலைஞர் கோட்டம் அமைக்கப்பட்டுள்ளது. இதற்கும் சென்னை கிண்டியில் அமையவிருக்கும் பன்னோக்கு அரசு மருத்துவமனை உள்ளிட்ட திமுகவின் முக்கிய திட்டங்களுக்கு திறப்பு விழாவை நடத்த குடியரசு தலைவர் திரௌபதி முர்முவிற்கு முறைப்படி அழைப்பு விடுக்க முதலமைச்சர் மு..ஸ்டாலின் டெல்லி சென்றார்.

 இந்த சந்திப்பின் போது, ஆளுநர் ஆர்.என் ரவியின் செயல்பாடுகள் தொடர்பாகவும், மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்க கால நிர்ணயம் செய்வது, நீட் விலக்கு மசோதாவுக்கு ஒப்புதல் வழங்குவது, மதம் மாறிய பட்டியலினத்தவருக்கு இடஒதுக்கீடு அளிப்பது உள்ளிட்டவை குறித்து குடியரசுத் தலைவரிடம் முதலமைச்சர் வலியுறுத்துனார். கூறப்படுகிறது. இதையடுத்து முதலமைச்சர் மு..ஸ்டாலின் காங்கிரஸ் தலைவர்களையும் சந்திப்பார்.

தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியும் டெல்லியில் உள்ளார். தமிழக அரசுடன் மோதல் போக்கையே கடைபிடித்து வரும் ஆளுநர் ரவி, அன்மையில் ஆன்லைன் விளையாட்டு தொடர்பான சட்ட மசோதாவிற்கு ஒப்புதல் அளித்தார். இந்த சூழலில் தான்  காலையிலேயே சென்னையில் இருந்து விமானம் மூலமாக 3 நாள் பயணமாக ஆளுநர் டெல்லி புறப்பட்டார். இந்த பயணத்தின் போது குடியரசு தலைவர் திரவுபதி முர்மு, உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆகியோரை சந்திப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக ஆளும் திமுக தொடர்பாக எதிர்க்கட்சியினர் அளித்த பல்வேறு புகார்கள் குறித்து, உள்துறை அமைச்சரிடம் தெரிவிக்கப்படும் எனவும் கூறப்படுகிறது.

ஆளுநர் ஆர்.என்.ரவி, எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் டெல்லியில் முகாமிட்டுள்ள நிலையில், முதலமைச்சர் மு..ஸ்டாலினும் டெல்லி சென்றுள்ளார்.

தமிழக   அரசியல் தலைவர்களின் டெல்லி விஜயம் அரசியலில் அதிர்வலைகளை ஏற்படுத்தும் என்பது  உறுதியானது.

No comments: