Saturday, February 10, 2024

2026 உலகக் கிண்ணத் திருவிழா

 3   நாடுகள்

  16   நகரங்கள்

 104  போட்டிகள்

 48   அணிகள்

38  நாட்கள்

  11    ஜூன் ஆரம்பம்

  19   ஜூலை முடிவு

 

அமெரிக்கா,கனடா,மெக்ஸிகோ ஆகிய மூன்ரு நாடுகள்  இணைந்து நடத்தும் உலகக்கிண்ண  உதைபந்தாட்டத் திருவிழா 

 2026 ஆமாண்டு ஜூன்மாதம் 11 ஆம் திகதி ஆரம்பமாகி  ஜுலய் மாதம் 19 ஆம் திகதி முடிவடையும். உலகக்கிண்ண  உதைபந்தாட்ட  இறுதிப் போட்டி   நியூயார்க்கில்  உள்ள மெட்லைஃப் ஸ்டேடியத்தில் நடைபெறும் என்று  பீபா அமைப்பாளர்கள்   அறிவித்தனர்.

2026 உலகக் கிண்ணத்தொடரில் 48 அணிகள் பங்கேற்கவுள்ளன. இதற்கான தகுதிச்சுற்று போட்டிகள் ஏற்கனவே தொடங்கி நடைபெற்று வருகின்றன. அமெரிக்கா,கனடா, மெக்ஸிகோ ஆகிய நாடுகலில் உள்ள16 நகரங்களில் உலகக்கிண்ணப் போட்டிகள் நடைபெற  ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதுஅரையிறுதி போட்டிகளை அட்லாண்டா , டாலஸில் நடத்தவும், 3வது இடத்திற்கான போட்டியை மியாமியில் நடத்தவும் முடிவு செய்யப்பட்டுள்ளதுகாலிறுதி போட்டிகள் லொஸ் ஏஞ்சலஸ், கன்சாஸ் சிட்டி, மியாமி  ,பாஸ்டன் ஆகிய நகரங்களில் நடக்கவுள்ளன. லீக் சுற்று உட்பட மொத்தமாக 104 போட்டிகளை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளதால், உலகின் மிகப்பெரிய விளையாட்டு திருவிழாவாக  பீபா   உலகக்கோப்பை தொடர் இருக்கும் என்று பார்க்கப்படுகிறது.

இதற்கு முன்பாக 1994 பீபா உலகக் கிண்ணத் தொடர் அமெரிக்காவில் நடத்தப்பட்டது. அப்போது லொஸ் ஏஞ்சலஸ் அருகே உள்ள ரோஸ் பவுல் மைதானத்தில் இறுதிப்போட்டி நடந்தது. தற்போது இறுதிப்போட்டி நடத்த முடிவு செய்யப்பட்டுள்ள மெட் லைஃப் மைதானம் 2010ஆம் ஆண்டு திறக்கப்பட்டது. மொத்தமாக 82,500 பேர் அமர்ந்து பார்க்கும் வகையில் பிரம்மாண்டமாக உருவாகியுள்ள இந்த மைதானத்தில் 2016ஆம் ஆண்டு கோபா அமெரிக்கா இறுதிப்போட்டி நடத்தப்பட்டது.

No comments: