அமெரிக்கா,கனடா,மெக்சிகோ ஆகிய மூன்று நாடுகள் 2026 ஆம் ஆண்டு இணைந்து நடத்தும் உலகக்கிண்ண உதைபந்தாட்ட இறுதிப் போட்டி நியூயார்க்கில் உள்ள மெட்லைஃப் ஸ்டேடியத்தில் நடைபெறும் என்று பீபா அமைப்பாளர்கள் ஞாயிற்றுக்கிழமை அறிவித்தனர்.
ஜூன் 11 ஆம் திக தி மெக்ஸிகோ சிட்டியின் அஸ்டெகா ஸ்டேடியத்தில் ஆரம்பப் போட்டி நடைபெறும். அட்லாண்டா,டல்லாஸ் ஆகிய மைதானங்களில்
அரையிறுதிப் போட்டிகளும், மியாமியில் மூன்றாவது இடத்திற்கான போட்டிகளும்
நடைபெறும்.
பீபாவின் தலைவர் கியானி இன்ஃபான்டினோ, நகைச்சுவை நடிகரும் கெவின் ஹார்ட், ராப்பர் டிரேக், பிரபல நடிகை
கிம் கர்தாஷியன் ஆகியோர் கலந்து கொண்ட நேரடி தொலைக்காட்சி ஒளிபரப்பில் முடிவுகள்
அறிவிக்கப்பட்டன.
நியூ ஜெர்சியின் கிழக்கு ரதர்ஃபோர்டில் உள்ள ஹட்சன் ஆற்றின் குறுக்கே 82,500 இருக்கைகள் கொண்ட மெட்லைஃப் ஸ்டேடியம், ண்Fள் இன் நியூயார்க் ஜயண்ட்ஸ், நியூயார்க் ஜெட்ஸின் தாயகமாகும்.2016 கோபா அமெரிக்கா போட்டியின் இறுதிப் போட்டி உட்பட பல சர்வதேச உதைபந்தாட்டப் போட்டிகல் அங்கு நடைபெற்றன.
No comments:
Post a Comment