அரசாங்கத்துக்கு எதிரான மக்களின் எதிர்ப்பலை மீரிகானவில் சூறாவளியாக சுழன்றடித்தது.அந்தச் சூறாவளி கோல்பேசில் தர்போது நிலைகொண்டுள்ளது. ஜனாதிபதி கோட்டாபயவுக்கும் ,அன்றைய பிரதமர் மஹிந்தவுக்கும் எதிராகபோராட்டம் சூடுபிடித்தபோது, மஹிந்த ராஜபக்ஷ பதவியை இழக்க வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டார்.
மஹிந்தவுக்குப்
பின்னர் பிரதமர் யார் என்ற
கேள்வி எழுந்தபோது
பலரின் பெயர்கள் உலவின. ரணில் பிரதமராகப்
பதவி ஏற்று அரசியல்
அரங்கை அதிரவைத்தார். கடந்த பாராளுமன்றத் தேர்தலில் படு
தோல்வியடைந்த ஐக்கிய தேசியக் கட்சித்
தலைவரை பிரதமர் பதவி தேடிச்
சென்றது.
தனி
ஒருவனாக பாராளுமன்றத்தில் இருக்கும் ரணிலுக்குப் பின்னால் செல்லப் போகும் எம்பிக்கள் பற்றி அறிவதற்கு பொது
மக்கள் ஆர்வமாக இருந்தனர்.
சமையல் எரிவாயு, மண்ணெண்ணெய் போன்றவற்றை வாங்குவதற்கு மக்கள் மனித்தியாலக் கணக்காக வரிசையில் நிற்கின்றனர். எரிபொருளுக்காக வாகனங்கள் வரிசை கட்டி காந்திருக்கின்றன. பெற்றோல் , டீசல் விலை ஏறியதும் மாட்டு வன்டியில் பாராலுமன்றத்துக்குச் சென்ற கனவான்கள் யாரும் மக்களுடன் மக்களாக வரிசையில் நிற்கவில்லை.
அந்தக் கனவான்கள் ஜனாதிபதியின் முன்னால் வரிசையாக நின்று அமைச்சுப்
பதவியைப் பெற்றார்கள். ஜனாதிபதியை மிக மோசமாஅக்த்
திட்டியவர் தான் ஜனாதிபதியின் முகத்தைப் பார்க்கவில்லை என்றும் சிரிக்கவில்லை என்றும் கதையளந்தார். அவர் ஜானாதிபதியின்
முகத்தைப் பார்த்து வாய் நிறைய சிரிக்கும் படத்தை வெளியிட்ட ஜனாதிபதியின் செயலகம் மூக்கை உடைத்தது.
-
மே 13 அன்று நான்கு, மே 20 அன்று ஒன்பது, மே 23 அன்று எட்டு பேர் அமைச்சரானார்கள்.
ஜனாதிபதியையும், பிரதமரையும் சேர்த்து 23 பேர்
அமைச்சரவையில் உள்ளனர்.இன்றைய பொருளாதார நெருக்கடிக்குக் காரணமானவர்கள் மீண்டும் அமைச்சர்களாக பதவி ஏற்றுள்ளனர். பதவியைக்
காப்பாற்றுவதற்காக மெளனமாக இருந்தவர்கள் எப்படி இலங்கையை மீட்டெடுப்பார்கள் என்ற கேள்விக்கு
பதில் இல்லை.
2019
ஆம் ஆண்டு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ வரிக் கட்டமைப்பை சிதைத்த போது, வருடாந்தம் ஏறக்குறைய
600 மில்லியன் ரூபா பெறுமதியான கருவூலத்தை பறித்த போது, இதற்கு முன்னர் அமைச்சரவை அமைச்சர்களாக
எதிர்ப்புக் குரல் எழுப்ப முதுகெலும்போ தைரியமோ
இலாதவர்கள்தான் இப்பொழுதும் பதவி ஏற்றுள்ளார்கள்.
புதிய அமைச்சர்களில் பலர் நெல் அறுவடையில் நாடு கிட்டத்தட்ட 60% இழந்துள்ள நிலையில் தெருக்களில்; பிரபலமற்ற சர்க்கரை மற்றும் பாமாயில் ஊழல்கள் மற்றும் அதைத் தொடர்ந்து நடந்த பூண்டு ஊழல் ஆகியவற்றில் கருவூலம் கிட்டத்தட்ட ரூ.16 பில்லியனை இழந்தபோது அவர்கள் பார்வையாளர்களாகவே இருந்தனர்; விவசாய அமைச்சகம் 6.7 மில்லியன் அமெரிக்க டொலர்களை அசுத்தமான உரத்திற்கு மாற்றாக ஒரு அவுன்ஸ் உரம் கூட பெறாமல் கொடுத்தபோது அவர்கள் மௌனம் காத்தனர்.
அமெரிக்காவை தளமாகக் கொண்ட புதிய கோட்டையின் துணை
நிறுவனத்துடன் யுகடனவி மின் உற்பத்தி நிலைய ஒப்பந்தம் கையெழுத்தானபோது அவர்கள் ஒரு
வார்த்தை கூட பேசவில்லை அமைச்சரவை ஒப்புதலின் விதிமுறைகளை மீறி எரிசக்தி நிறுவனம்.
இவ்வாறானதொரு பின்னணியில் இந்த அமைச்சர்களால் இம்முறையாவது சிறப்பாகச் செயற்பட முடியுமா
என்ற சந்தேகம் எழுவது தவிர்க முடியாதது.
கட்சித்
தலைமையின் கட்டுப்பாட்டை மீறி ஐக்கிய
மக்கள் சக்தி,
சிலங்கா சுதந்திரக் கட்சி, முஸ்லிம்
காங்கிரஸ் ஆகியவற்ரின் உறுப்பினர்கள் அமைச்சராக பதவி ஏற்றுள்ளனர். கட்சிக்குத்
துரோகம் செய்ஹ இவர்கள் மக்களுக்கு உதவி
செய்வார்கள் என்பதற்கு என்ன உத்தரவாதம்.
பஞ்சம்
,பாட்டிணியால் வாடிய வெளிநாடுகளைப்
பார்த்து பரிதாபப்பட்ட இலங்கை
மக்களைக் காப்பாற்ற வேண்டிய பெரும் பொறுப்பு
அரசாங்கத்திடம் உள்ளது.
No comments:
Post a Comment