இலங்கையில் நடைபெற்ற யுத்தம் முடிவடைந்தது
சுபீட்சமானதொரு வாழ்க்கை கிடைகும் என எதிர் பார்த்த மக்களுகு ஏமாற்றமே மிஞ்சியது. முன்னேற்றப் பாதையில் செல்ல வேண்டிய
இங்கையின் பொருளாதாரம் கீழ் நோக்கி விழுந்தது. பொருளாதார நிபுணர்களின் ஆலோசனைகள் புறம் தள்ளபட்டன. சர்வ கட்சி மாநாட்டை நடத்தினால்
பிரச்சினைகளுக்குத்த் தீர்வு காணலாம் என முன்னாள்
ஜனாதிபதி மைத்திரி சொன்னதால் இன்றைய ஜனாதிபதி கோட்டா சர்வ கட்சி மாநாட்டை நடத்தினார்.
மக்களின் கோபப்பார்வை அரசின் மீது இருந்த போது சர்வகட்சி மாநாடு பேசுபொருளாகவில்லை.. அரசியல் அவதானிகள் எதிர் பார்த்தது போல் சர்வகட்சி மாநாடு பொய்த்துப் போனது. நாடு இருக்கும் நிலையைச் சீரமைப்பதற்கு சகல கட்சிகளும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டியது அவசியம். ஆனால், அரசாங்கத்துடன் இணைந்து செயற்பட கூட்டணிக் கட்சிகளே தயாராக இல்லாதபோது எதிர்க் கட்சிகள் சர்வகட்சி மாநாட்டில் பங்கு பற்றுவது சாத்தியமில்லாதது.
சர்வ கட்சிமாநாடு நடைபெறப் போவதாக கதை அடிபட்ட போதே எதிர்ப்பலைகள் ஆரம்பமாகிவிட்டன.பிரதான சிங்கள எதிர்க் கட்சிகள் சந்வகட்சி மாநாட்டைப் புறக்கணித்தன. தமிழ் அரசுக் கட்சியும் சித்தார்த்தனும் சம்பந்தன்,சித்தார்த்தன், சுமந்திரன் ஆகியோர் சர்வகட்சி மாநாட்டில் கலந்துகொண்டனர். இவர்கள் மூவரும் சர்வ கட்சி மாநாட்டில் காரசர்மாகக் கருத்துச் சொன்னார்கள். இவர்களுடன் சேர்த்து ரணிலும் தனது ஆதங்கத்தைக் கொட்டித் தீர்த்தார். ஊடகங்கள் அனைத்தும் இவர்களின் உரைக்கு முக்கியத்துவம் கொடுத்தன.
அங்கீகரிக்கப்பட 27 அரசியல் கட்சிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. சிறிலங்கா பொதுஜன பெரமுன, சிறிலங்கா சுதந்திரக்கட்சி,
லங்கா சமசமாஜக்கட்சி, எமது மக்கள் சக்தி கட்சி, ஈபிடிபி, தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள்
கட்சி, மக்கள் ஐக்கிய முன்னணி, தமிழ் அரசுக்கட்சி, புளொட், ஐக்கிய தேசியக்கட்சி ஆகியன
மாநாட்டில் பங்கேற்றுள்ளன. அரசாங்கத்தின் பங்காளிக் கட்சியான இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ்
சர்வ கட்சி மநாட்டைப் புறக்கணித்தது. சர்வ
கட்சி மாநாடு இலங்கைக்குப் புதியதல்ல. காலத்தை
இழுத்தடித்து பிரச்சினையை மறக்கடிக்கச் செய்வதே முன்னைய அரசுகளின் வேலைத் திட்டமாக
இருந்தது. ஆனால், முன்னைய அரசுகளின் சர்வகட்சி மாநாடுகள் எவையும் உருப்படியான முடிவுகளை
எட்டவில்லை. ஜே.ஆர். ஜயவர்கன, பிறேமதாஸ, ,சந்திரிகா
ஆகியோரின் சர்வகட்சி மாநாடுகள் கூடிக்கலைந்தன.
அன்று அரசியல்வாதிகளின் கருத்துகலுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படவில்லை. பெளத்த மதகுருமாரின் விருப்பங்கள் நிறைவேற்றப்பட்டன.
தலைப்புச் செய்தியாக வரவேண்டிய சர்வகட்சி மாநாட்டுச் செய்திகள் பெட்டிச்செய்தியாகப் பிரசுரமாகின. சர்வகட்சி மாநாட்டுச் செய்திகள் வலுவிழந்த நிலையில் இலங்கையில் இருந்து அகதிகள் தமிழகம் சென்றது உலகின் கவனத்தை ஈர்த்துள்ளது.
உண்மையான உள்வளர்ச்சி இல்லாத போலி பொருளாதாரக் கட்டமைப்பே இலங்கையின் மோசமானநிலை க்குக் காரணம். விவசாயத்தை கைவிட்டு வெளிநாடுகளில் இருந்து வரும் பொருட்களை நம்பி இருப்பது,ஆடம்பரமாக மாற்ற திட்டமிட்டு பொருளாதாரத்தை கடனாக வாங்கி செலவு செய்தது, மதவாத இனவாத அரசாங்கம்
போன்ற பல சம்பவங்கள் இலங்கையின் வீழ்ச்சிக்குக் காரண. இப்போது குடும்ப ரசியல் என்ற குரல் ஓங்கி ஒலிக்கத் தொடங்கிவிட்டது. தமிழ் மக்களியும் அரவனைது புதிய அரசியலைச் செய்ய வேண்டும் என்ற கருத்து முன் வைக்கப்பட்டுள்ளது. சிங்கள இன வாத மனநிலையில் இருப்பவர்கள் மாறினால் இலங்கை சொர்க்கா புரியாக மாறும்.
No comments:
Post a Comment