அரசியல்வாதிகள்,
கோடீஸ்வரர்கள், முக்கிய பிரமுகர்கள்
ஆகியோரைக் குறிவைத்து வருமானவரி அதிகாரிகள் சோதனை நடத்துவது வழமையானது.
மாநிலத் தேர்தல்கள் நடைபெறும்போது நடைபெறும் சோதனைகள் சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தேர்தல்
என்றால் பணப்புழக்கம் அதிகரிப்ப்தைத்
தடுக்க முடியாமல் அதிகாரிகள் தடுமாறுவது ஒன்றும் புதிதல்ல.
எதிர்க் கட்சித்தலைவர்களை முடக்குவதற்கு அரசுகள் இதனை ஒருஆயுதமாகப்
பயன்படுத்துவதும் எழுதாத சட்டமாக உள்ளது.
அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்
,பாரதீய ஜனதாக் கட்சி ஆகியவற்றுக்கு
எதிராக திராவிட முன்னேற்றக் கழகம்
நடத்தும் பிரசாரம் மக்கலைக் கவர்ந்துள்ளது. ஸ்டாலினை குழப்புவதற்காக அவரது மகள் வீட்டில்
கடந்த 2 ஆம் திகதி சோதனை
நடைபெற்றது. அதேநாள் அண்ணா திராவிட
முன்னேற்றக் கழகப் பிரமுகர்களின் வீடுகளிலும்
வருமானவரிச் சோதனை நடைபெற்றது. ஆனால்,
ஸ்டாலினின் மகள் செந்தாமரை, மருமகன்
சபரீசன் ஆகியோரின் வீட்டில் நடைபெற்ற சோதனை முக்கியமான பேசுபொருளானது.
சென்னை, நீலாங்கரையில் உள்ள ஸ்டாலின் மகள் செந்தாமரை -வீடு, கணவர் சபரீசன் அலுவலகம்; அண்ணா நகர் தி.மு.க. வேட்பாளர் மோகனின் மகன் கார்த்தி வீடு, அலுவலகம்; 'ஜி ஸ்கொயர்' கட்டுமான நிறுவன உரிமையாளர் பாலா வீடு, சேத்துப்பட்டு அலுவலகம் என, சென்னையில், ஏழுக்கும் மேற்பட்ட இடங்களில், காலை, 7:00 மணி முதல் சோதனை துவங்கியது.இதே போல திருவண்ணாமலையில், தி.மு.க., - எம்.பி., அண்ணாதுரை வீடு உட்பட, தமிழகம் முழுதும், 28க்கும் மேற்பட்ட இடங்களில் சோதனை நடந்தது.இதில், 150க்கும் மேற்பட்ட அதிகாரிகள், பல குழுக்களாகப் பிரிந்து, சோதனையில் ஈடுபட்டனர்.
கரூர்
தொகுதியில், அ.தி.மு.க., சார்பில் போக்குவரத்து
துறை அமைச்சர் விஜயபாஸ்கரும், தி,மு.க.,
சார்பில், போக்குவரத்து துறை முன்னாள் அமைச்சர்
செந்தில் பாலாஜியும் போட்டியிடுகின்றனர்.இந்நிலையில், செந்தில் பாலாஜியின், கரூர், ராமேஸ்வரப்பட்டி வீடு;
அவரது தம்பி அசோக்குமாரின், கரூர்,
ராமகிருஷ்ணாபுரம் வீடு; தி.மு.க., மேற்கு நகர
பொறுப்பாளர் தாரணி சரவணனின், ராயனுார்
வீடு உட்பட, கரூரில் ஆறு
இடங்களில் சோதனை நடந்தது.
தஞ்சாவூர்,
தி.மு.க., வடக்கு
ஒன்றிய செயலரும், திருவையாறு தொகுதி தி.மு.க., வேட்பாளர் சந்திரசேகரன்
ஆதரவாளருமான, முரசொலி என்பவரின் வீடுகளிலும், சோதனை
நடந்தது. தஞ்சாவூர், அருளானந்த நகரில் உள்ள வீடு,
சீனிவாசபுரம் அருகே மல்லிகைபுரத்தில் உள்ள
முரசொலியின் வீடுகளில், நேற்று சோதனை நடத்தினர்.
தொடர்ந்து, திருவையாறு தொகுதிக்குட்பட்ட, அவரது சொந்த ஊரான
தென்னங்குடி கிராமத்தில் உள்ள வீட்டிலும், 5 மணி
நேரமாக சோதனை நடத்தினர்.
சிவகாசியில், அமைச்சர் ராஜேந்திர பாலாஜியின், கார் டிரைவர் வீட்டில், வருமான வரி துறையினர் சோதனை நடத்தினர். சிவகாசி, திருத்தங்கலில் வசிக்கும், அமைச்சர் ராஜேந்திர பாலாஜியின், கார் டிரைவர் சீனிவாச பெருமாள் வீட்டில், மதுரையை சேர்ந்த, 6 பேர் கொண்ட வருமான வரி துறை அதிகாரிகள் குழுவினர், நேற்று சோதனை நடத்தினர். ஒன்றரை மணி நேரம் நடந்த சோதனையில், எதுவும் சிக்கியதாக தெரியவில்லை. சென்னை வருமான வரி துறை தலைமை அலுவலகத்திற்கு வந்த புகாரின் படி, சோதனை நடத்தியதாக, அதிகாரிகள் தெரிவித்தனர்.
ஸ்டாலின் பரப்புரை செய்யும் இடங்களிலும் சோதனைகள் நடைபெறுகின்றன. திருவண்ணாமலையில் ஸ்டாலின் பரப்புரை செய்தபின்னர். எவ. வேலுவின் வீடு, அலுவலகங்கள் அவருக்குச்சொந்தமான கல்லூரி, நிறுவனங்கள் ஆகியவற்றில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். சோதனைகள் முடிந்தபின்னர் பலகோடி ரூபா ,ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாக செய்திகள் வெளியாகும் அவற்றின் உண்மைத்தன்மை என்ன வென்று யாருக்கும் தெரியாது.
ஸ்டாலினின் மகள் செந்தாமரையின் வீட்டில் ஒரு இலட்சம் ரூபா கைப்பற்றப்பட்டதாகவும் வங்கியில் எடுக்கப்பட்ட ஆவணத்தைக் காட்டியபின்னர் பணத்தைத் திரும்ப ஒப்படைத்ததாகவும் திராவிட முன்னேற்றக் கழகத்தின் செய்தித் தொடர்பாளர் பாரதி தெரிவித்தார். இந்தச் சோதனைகள் ஸ்டாலினைப் பாதிக்கவில்லை. அவர் தனது வழமையான கடமையைச் செய்தார். ராஜாத்தி அம்மாளின் வீட்டில் வருமான வரிச் சோதனை நடைபெற்றபோது தொண்டர்களுக்கு கடிதம் எழுதியவர் கருணாநிதி. ஸ்டாலினின் மகன் ஒருபடி முன்னேபோய் உதயநிதி எனது வீட்டில் சோதனை செய்யுங்கள் என சவால் விட்டுள்ளார்.
2016 ஆம் ஆண்டு
தேர்தலின் போது 60 கோடி ரூப
கைப்பற்றப்பட்டது அதற்கு என்ன நடந்தது
எனத் தெரியாது. உரிய ஆவனங்கள் இன்றி
கன்டெய்னரில் கைப்பற்றப்பட்ட
பணம் பாதுகாப்பாக வங்கியில்
வைப்பிலிடப்பட்டது. அண்ணா
திராவிட அமைச்சரின் வீட்டில் கைப்பற்றப்பட்ட டைஅய்ரியில் பனம் கொடுக்கப்பட்டவர்களின் பெயர் விபரம்
இருந்தது. அந்த டயரி இப்போ
எங்கே இருக்கிறதெனத் தெரியாது.
இந்தச் சோதனைகள் மத்திய, மாநில அரசுகளின் மீது எதிர்ப்பலைகளை உருவாக்கும் என்பதில் சந்தேகமில்லை. யாருக்கு வாக்களிக்கலாம் என முடிவு செய்யாதவர்களின் மனநிலை மாற்றம் ஏற்பட வாய்ப்பு உண்டு.
No comments:
Post a Comment