ஐபிஎல் தொடரில் சிஎஸ்கே அணி மூன்று முறை சம்பியனாகியதிலும் பிளே ஆஃப் சுற்றுக்குத் தகுதி பெற்றதிலும் ரெய்னாவின் பங்களிப்பு மகத்தானது.சென்னை அணியின் வெற்றி நாயகர்களில் ஒருவரான சின்னதல ரெய்னா துடுப்பெடுத்தாடுவதில் தடுமாறுவதால் தொடர்ந்தும் சென்னை சூபர் கிங்ஸில் நீடிப்பாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.
சிஎஸ்கே அணியின் நட்சத்திர வீரர் அதிக முறை 400 ஓட்டங்கள் எடுத்த சின்ன தல ரெய்னா, ஐபிஎல்
2021-ல் வான்கடேயில் டெல்லி அணிக்கு எதிராக அரைசதம் எடுத்ததோடு சரி. அதன் பிறகு இரட்டை
இலக்க எண்ணிகையை நெருங்கவில்லை. 12 போட்டிகளில் ரெய்னா 160 ஓட்டங்களுடன் படுமோசமான
சராசரியான 17.77-ல் எடுத்துள்ளார். ஸ்ட்ரைக் ரேட் 125.
ரெய்னாவை அணியில் இருந்து
வெளியேற்றும் திட்டம் இடுப்பதாக சிலர் தெரிவிக்கின்றனர்.
அவர் திரும்பி வருவார் என்கின்றனர் சில விமர்சகர்கள்.
ஆனால் மைக்கேல் வான் இது தொடர்பாக
கூறும் ஒரு விஷயம் ஆச்சரியமாக உள்ளது, “மற்ற அணியாக இருந்திருந்தால் ரெய்னா கதை இந்நேரம்
முடிந்திருக்கும். ஆனால் சென்னை அணியில் ஒரு வீரருக்குப் பதில் மற்றொரு வீரரை உடனே
மாற்ற மாட்டார்கள். அதே அணியுடன் தான் ஆடுவார்கள். ஒரு வீரருக்கு போதிய வாய்ப்பளித்து
அவருக்கு ஆதரவு அளிப்பார்கள். நாம் இதை ஷேன் வாட்சன் ஆடும்போதே பார்த்தோம்.
பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெற்று விட்டதால் மற்ற வீரர்களுக்கு வாய்ப்பு வழங்கும் விதமாகவே உத்தப்பா விளையாடியதை நான் பார்க்கிறேன். ஆகவே இது சுரேஷ் ரெய்னாவின் இறுதி அல்ல, மீண்டும் அவர் வருவார் என்றே நினைக்கிறேன். ரொபின் உத்தப்பாவுக்கு ஒரு வாய்ப்பு வழங்கினர். சென்னையா மாற்றம் செய்தது என்பது எனக்கு ஆச்சரியமளித்தாலும் ரெய்னாவின் பார்மினால் எனக்கு நீக்கம் ஆச்சரியமளிக்கவில்லை” என்கிறார் மைக்கேல் வான்.
No comments:
Post a Comment