Friday, September 24, 2021

உடைந்தது ரெய்னாவின் கிரிக்கெட் மட்டை மட்டுமல்ல ரசிகர்களின் மனதும்தான்


சென்னை-மும்பை அணிகளுக்கு இடையிலான கிரிக்கெட் போட்டியில் சென்னை அணியின் ரெய்னா  நான்கு  ஓட்டங்கள் அடித்து தெம்பூட்டினார். டுபிளஸி ஓட்டம் எடுக்காது  ஆட்டம் இழந்ததால்  ரெய்னாவின் பவுண்டரி ரசிகர்களை உற்சாகப்படுத்தியது.

அடுத்த பந்தை ரெய்னா ஓங்கி அடித்தபோது  பந்துடன் உடைந்த கிரிக்கெட் மட்டையின் துகள்களும் சேர்ந்து காற்றில் பறந்தது.ஆனால் அவர் அடிந்த பந்தை மும்பை அணி வீரர் பிடித்ததால் அவர் ஆட்டம் இழந்தார்.

அந்த நேரம் ஸ்டார் டி.வி.,தமிழ் சேனலில் கிரிக்கெட் பார்த்துக் கொண்டிருந்தவர்களுக்கு ஒரு வர்ணனை வந்து விழுந்தது

உடைந்தது கிரிக்கெட் மட்டை மட்டுமல்ல சென்னை சிஎஸ்கே அணி ரசிகர்களின் மனசும்தான்' என்று ரெய்னா ஆட்டமிழந்ததை சோகத்துடன் வர்ணனையாளர் ஒருவர் பதிவு செய்தார்.

அந்த வர்ணனையாளர் பெயர் முத்து, போட்டி முடியும் வரை இப்படியான அவரது வர்ணனை தொடர்ந்த காரணத்தால் போட்டியின் சுவராசியம் கூடியது.

நேரடி வர்னனை செய்வதும் ஒரு கலை அதனை முத்து மிகவும் சிறப்பாகச் செய்கிறார். முத்துவுடைய  வர்னனையால் கவரப்பட்ட பலர் அவரது ரசிகர்கலாக இருக்கின்றனர். அவருடன் புகைபப்டம் எடுக்க கையெழுத்துவாங்க பலர் ஆர்வமாக இருக்கிறார்கள்.

சென்னையைச் சேர்ந்த முத்து கல்லுாரி படிப்பை முடித்துவிட்டு பல ஊடகங்களில் பணியாற்றினார்.இந்த நிலையில் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தமிழ் னலுக்கு ஒரு வர்ணனையாளர் தேவை என்பதை அறிந்து விண்ணப்பித்தார், பலவித  சோதனைகளின் பிறகு வர்ணனையாளராக தேர்வு செய்யப்பட்டார்.கடந்த நான்கு வருடங்களுக்கு மேலாக அந்த னலின் தமிழ் வர்ணனையாளராக இருந்து வருகிறார்.

வர்ணனைக்கு போவதற்கு முன்பாக அன்று நடைபெறும் விளையாட்டு வீரர்களின் வரலாறு மைதானத்தின் தன்மை கடந்த காலங்களில் நடந்த போட்டிகளின் விவரம் என்று முழுமையாக தெரிந்து கொண்டு செல்கிறார் இதற்காக இரண்டு நாள் கூட செலவிடுகிறார்,கூடவே மொழி அறிவும் செறிவும் இருப்பதால் எளிதாக சாதிக்கிறார். ஆரம்பத்தில் இங்கிலாந்தில் நடந்த போட்டியை மைதானத்திற்கு நேரிடையாக சென்று வர்ணனை செய்தார் அதன்பிறகு மும்பையில் உள்ள அலுவலகத்தில் அமர்ந்து நாம் எப்படி தொலைக் காட்சியைப்  பார்க்கிறோமோ அதே போல தொலைக் காட்சியைப்  பார்த்து வர்ணனை செய்கிறார்.

முதன்மை வர்னனையாளராக முத்து செயற்படுகிறார். முன்னாள் கிரிக்கெட் வீரர்களானஸ்ரீகாந்த்,சடகோபன் ரமேஷ்,பத்திரிநாத் போன்றவர்கள்  முத்துவுடன் இணைந்து வர்ணனை செய்வார்கள்.

No comments: