அதிக ஓட்டங்கள் அடிக்க வேண்டும் சதம் அடிக்க வேண்டும் என்பதே கிறிக்கெற் வீரனின் கனவு. ரி20 போட்டியில் அடிக்கும் சதம் மிகவும் பெறுமதியானது. உலகக்கிண்ண ரி20 யில் ஏழு வீரர்கள் எட்டு சதங்களை அடித்துள்ளனர். கிறிஸ் கெய்ல் இரண்டு சதங்களை எடுத்துள்ளதே அரிய விஷயமாகும்.
ரி20 உலகக் கிண்ணப் போட்டியில் முதல் சதத்தை 2007 எடுத்தவர் கிறிஸ் கெய்ல். தென் ஆப்பிரிக்காவுக்கு
எதிராக 57 பந்துகளில் 117 ஓட்டங்கள் அடித்தார். இதில் 7 பவுண்டரிகள் 10 சிக்சர்கள் அடக்கம்.
தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான போட்டியில் விளையாடிய
ரெய்னா 60 பந்துகளில் 101 ஓட்டங்கள் அடித்தார். ஸ்ட்ரைக் ரேட் 160.33.
மஹேல ஜெயவர்தன ஸிம்பாப்வேக்கு எதிராக 64பந்துகளில்
100 ஓட்டங்கள் எடுத்தார்.
பங்களாதேஷுக்கு எதிராக விளையாடிய மெக்கலம் 58 பந்துகளில்
123 ஓட்டங்கள் விளாசினார்.
இங்கிலாந்தின் அலெக்ஸ் ஹேல்ஸ் இலங்கைக்கு எதிராக
64 பந்துகளில் 11 பவுண்டரி 6 சிக்சர்கள் உட்பட
116 ஓட்டங்கள் அடித்தார்.
பங்களாதேஷுக்கு எதிராக பாகிஸ்தானின்
அகமது ஷேஜாத் சதமெடுத்தார்.
ஒமான் அணிக்கு எதிராக பங்களாதேஷ் ஆரம்பத் துடுப்பாட்ட
வீரர் தமீம் இக்பால் 63பந்துகளில் 103 ஓட்டங்கள்
விளாசினார்.
இங்கிலாந்துக்கு எதிராக கெய்ல் 48 பந்துகளில் 100 ஓட்டங்கள் எடுக்க ஓட்டங்கள் எடுக்க மேறு இந்தியா 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வென்றது.
No comments:
Post a Comment