Saturday, April 7, 2012

தடம் மாறிய தமிழ்ப்படங்கள் 27

சந்தர்ப்ப சூழ்நிலையால் சிறு வயதில் பிரிந்த அண்ணனும் தங்கையும் ஒரே கல்லூரியில் படித்து காதலித்து மண மேடையில் இருக்கும் விபரீத கதையுடன் 1955 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் நல்லவன். விபரீதமான திரைக்கதையைக் கொண்ட இப்படம் மிகவும் நிதானமாகப் படமாக்கியதால் விமர்சனங்களிலிருந்து தப்பியது.
தாய் தந்தையற்ற அண்ணனும் தங்கையும் ஊர் ஊராக அலைந்து வாழ்கின்றனர். விதி இருவரையும் பிரிக்கிறது பாதிரியார் வீட்டில் அடைக்கலம் புகுகிறார். கண்ணப்பன் என்ற அண்ணனுக்கு பீற்றர் என்று பெயர் சூட்டுகின்றார் பாதிரியார். செல்வந்தர். வி.கே. ராமசாமி அநாதையான சிறுமியைத் தத்தெடுக்கிறார். மரகதம் என்ற சிறுமிக்கு சுந்தரி என்று பெயரிடுகிறார். வி.கே.ராமசாமி.
அண்ணன் தங்கை இருவரும் வளர்ந்து ஒரே கல்லூரியில் படிக்கின்றனர். பீற்றராக ஆர்.எஸ்.மனோகரும் சுந்தரியாக ராஜ சுலோசனாவும் நடித்தனர். மனோகரும் ராஜசுலோசனாவும் ஒருவர் மீது ஒருவர் மிகுந்த அன்பு வைத்தனர். நட்பு காதலாக மாறுகிறது. ராஜசுலோசனா மனோகரை விரும்புவதை வி.கே.ராமசாமியின் மனைவி விரும்பவில்லை தனது தம்பிக்கு ராஜ சுலோசனாவை திருமணம் செய்ய வேண்டும் என்று முயற்சி செய்கிறார்.
பைத்தியக்காரன் எம்.என்.நம்பியாரின் மனைவி மனோகரின் மீது ஆசைப்படுகிறாள். அவள் திருமணம் முடியாதவள் என நினைத்த மனோகர் நம்பியாரின் மனைவியின் வலையில் விழுகிறார். ஒரு நாள் இரவு இருவரும் ரகசியமாகச் சந்திக்கும் போது அகப்பட்டு விடுகின்றார்கள். அவமானத்தினால் மனோகர் ஊரை விட்டு ஓடி விடுகிறார். ஊரை விட்டு ஓடிச் சென்ற மனோகர் வி.கே.ராமசாமியின் தொழிற்சாலையில் வேலைக்குச் சேர்கிறார். தனது கடும் உழைப்பினால் அரிசி ஆலையை உயர்த்துகிறார். தனது மகளுக்கு மனோகரைத் திருமணம் செய்து வைக்க ஏற்பாடு செய்கிறார். வி.கே.ராமசாமி
மனோகரை வளர்த்த பாதிரியாருக்கு தகவல் அனுப்பப்படுகிறது. திருமண மேடையில் மனோகரும் ராஜசுலோசனாவையும் மணக்கோலத்தில் இருக்கும் போது அங்கு வந்த பகதூர் என்பவர் திருமணத்தை நிறுத்தச் சதி செய்கிறார். அப்போது தான் மனோகரும் ராஜசுலோசனாவும் சகோதரர்கள் என்ற உண்மை தெரிய வருகிறது. அதனால் திருமணம் நடைபெறவில்லை. உண்மைய உணர்ந்து அனைவரும் ஒற்றுமையாகின்றனர்.
ஏ.கே.துரை எஸ்.ராகவன் ஆகியோர் இணைந்து கதை எழுத ஏ.எஸ்.நாராயணன் வசனம் எழுதினார். இசை எம்.எஸ்.ஞானமணி ஒளிப்பதிவு ஜி.சந்திரன் ச‌ன்னாஸ் புரடக்ஷன் தயாரிப்பில் இப் படத்தை திருவேங்கடம் இயக்கினார்.
ரமணி
மித்திரன்08/04//12

No comments: